பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991)

new currency Re1

Written by London swaminathan

Date:21 July 2016

Post No. 2991

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பவிஷ்ய புராணம் என்றவுடன் , எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அதில் கூறப்பட்ட செய்திகளே நம் மனக்கண்ணுக்கு முன் வரும். ஆனால்ல் அதில் வேறு பல சுவையான விஷயங்களும் உள.

 

அதில் ஒன்று பணம் பற்றிய ஸ்லோகம்:-

 

அர்த்தானாமார்ஜனே துக்கம் ஆர்ஜிதானாம் து ரக்ஷணே

நாஸேதுக்கம் வ்யயே துக்கம் கிமர்த்தம் துக்கபாஜனம்

 

பணத்தினால் எல்லா வகையிலும், எப்போதும் துக்கம்தான்;

பணத்தைச் சம்பாதிக்கும்போதும் துக்கம்;

காப்பாற்றுவதிலும் துக்கம்:

அதைச் செலவழித்தாலும் துக்கம்:

 

துக்கத்துக்கெல்லாம் உறைவிடம் பணம்தான்

 

(அர்த்த= செல்வம், பணம்)

 

எவ்வளவு அருமையான பாடல்; மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; நகை, ஷேர் (பங்கு மார்க்கெட்), ரொக்கம் — எது இருந்தாலும் அதை ரக்ஷிப்பது அதைவிட துன்பம்;

 

லாக்கரில் நகைகளை வைத்தால் வைக்கப்போகும்போதும் எடுக்கப்போகும்போதும் திருடர் பயம்;

லாக்கர் வைத்திருப்பவனே ஓடிவிடுவானோ என்றபயம் (வெளிநாட்டில் பிரைவேட் லாக்கர்கள் உண்டு); சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அரசாங்கம் மாறும் போது எல்லாம் பயம்; பங்கு மார்க்கெட்டில் போட்டவர்களுக்கு பங்கு மார்க்கெட் சரியும் போது பயம்; இவை அனைத்தும் துக்கத்தில் முடிகிறது. வெளி நாடுகளில் அண்மைக்கலத்தில் இரண்டு மூன்று வங்கிகள் திவால் ஆனபோது, பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பலர் சேமிப்பை இழந்தனர். துக்கம் அடைந்தனர்.

 

செலவழித்தால், பிற்காலத்தைப் பற்றி பயம்; அதிகம் செலவழிதால் கடன் வாங்கும் துன்பம்; ஆக பணமே துன்பத்தின் உறைவிடம்!

 

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்)

 

இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்)

 

உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

 

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

 

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

KATTU KATTU CURRENCY

கவிஞர் ஹேமாத்ரி சொன்னது:–

ந்யாயார்ஜிதஸ்ய வித்தஸ்ய த்வ வனார்த்தௌ ப்ரகீர்த்திதௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரேர்தாபதிபாதனம்

 

பணம் என்பது தகுதியற்றவர்களுக்கே கிடைக்கும்; தகுதியுடையோருக்கு கிடைப்பதில்லை

 

பணமிருந்தால் குணமிருக்காது

குணம் இருந்தால் பணம் இருக்காது – என்ற தமிழ் வசனமும்

 

லெட்சுமி இருக்குமிடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள் என்ற பழமொழியும் இதனுடன் ஒட்டிவருவதைக் காண்க.

 

–Subham–