லத்தின் மொழிக் கவிஞர் வர்ஜில் (Post.9711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9711

Date uploaded in London – –9 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

VIRGIL

(70 – 19 BC)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புகழ்மிக்க ரோமானிய கவிஞர் வர்ஜில் VIRGIL

ஏனீட் (AENEID) என்ற காவியத்தின் கர்த்தா இவர்.

     ஸிசால்பின் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை குடியானவர் என்று தோன்றுகிறது. மிலன் நகரிலும் ரோமாபுரியிலும் இவர் கல்வி கற்றார். சிறுவயதிலேயே கிரேக்க கவிஞர்கள் வாழ்க்கையைப் பயின்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவது தொழி லானது. ‘நமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற பாரதியின் வாக்கு இவர் வாழ்க்கையில் உண்மையானது

வர்ஜில் லத்தின் மொழிக்  கவிஞர்; மிகவும் கூச்சம்முடையவர். ஏனைய ரோமானியப் பெரும்புள்ளிகளைப் போல ராணுவத்திலோ அரசியலிலோ ஈடுபட்டவரல்ல. இருந்தபோதிலும் இவரது நண்பர்கள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்தார். அவை இவரது கனிதைகளில் எதிரொலித்தன.

VIRGIL மூன்று பெரிய நூல்களை லத்தின் மொழியில் எழுதினார். அவை THE ECLOGUES, THE GEORGICS, THE ANENEID என்பன.

ECLOGUES என்ற நூலில் இயற்கை, நாட்டுப்புறம் தொடர்பான கிராமிய பாடல்களைக் காணலாம். கி மு 42 – கி மு 37க்கு இடைப்பட்ட காலத்தில் மலர்ந்த கவிதைகள் அவை. வர்ஜில் VIRGILக்கு முதல்  வரிசையில் இடம்பெற்றுக் கொடுத்தவை இவை. சிறிது காலத்திற்கு ரோமானிய அரச வட்டாரத்திற்கு நெருக்கமாகி இருந்த இவர் ரோமில் வாழ்ந்தார். பின்னர் தெற்கு இதாலியிலுள்ள CAMPANIAவுக்குச் சென்று தனது வாழ்நாள் இறுதிவரை நேப்பிள்ஸ் NAPLES நகரில் தங்கினார்.

பண்ணைத்தொழில் பற்றிய இவரது கவிதைகள் கி மு 37 – கி மு 30க்கு இடைப்பட்டவை. என்ற நூலில் இவை உள்ளன.

கி மு 30 முதல் இறுதிநாள் வரையுள்ள காலத்தில் இவர் படைத்ததுதான் AENEID காவியம்.

ஹோமரின் காவியங்கள் அவரது நடையில் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

AENEID  நூலில் 12 காண்டங்கள் உண்டு. TROY நகர வீழ்ச்சிக்குப் பின்னர் AENEASக்கு என்ன ஆகியது என்பதை விளக்கும் காவியம் இது.

கி மு 19-இல் அவர் இதை எழுதி முடிக்கவில்லை. கிரேக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கி இதை முடிக்க எண்ணியிருந்தார். ஆனால் பயணம் துவங்கிய சிலநாட்களில் நோய்வாய்ப்பட்டார். இதாலிக்குத் திரும்பினார். BRINDISI என்னுமிடத்தில் உயிர்நீத்தார்.    

–subham—

Tags – வர்ஜில், ஏனிட் , லத்தின் மொழி , கவிஞர்

உண்மை வைஷ்ணவன் யார்?(Post No.9648)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9648

Date uploaded in London – –  –26 May   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்!

உண்மை வைஷ்ணவன் யார்?

ச.நாகராஜன்

11 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்த ஒரு யூ டியூப் பதிவு! 124 நாடுகளில் உள்ளோர் இந்தப் பாட்டைப் பாடுவதாக அபூர்வமான காட்சி அமைப்பு உள்ளது. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அனைவரும் பார்க்க வேண்டிய அவசியமான் வீடியோ பதிவு இது. 5 நிமிடம் 44 வினாடிகள் மட்டும் ஒதுக்குங்கள் போதும்!

எந்தத் தொடுப்பில் பார்க்கலாம்? இதோ இருக்கிறது தொடுப்பு:

பாடல் என்ன பாடல்? இதோ விவரம்:-

மஹாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் அது. நரசிம் மேத்தா என்ற மகான் எழுதிய ஒரு குஜராத்தி பாடல் அது. அதில் உண்மையான வைஷ்ணவன் யார் என்பதை கவிஞர் விளக்குகிறார். பாடல் இது தான்:-

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே

ஜே பீட பராயே ஜானேரே

பரதுக்கே உபகார் கரே தோயே

மன் அபிமான் ந ஆனே ரே (வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே

நிந்தா ந கரே கேனீ ரே

வாச் கச்ச மன் நிஸ்சல ராகே

தன் தன் ஜனனீ  தேனே ரே (வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகி

பரஸ்த்ரீ ஜேனே மாத ரே

ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே

பர தன் நவ் ஜாலே ஹாத் ரே (வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே

த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே

ராம் நாம் சூன் தாலீ லாகீ

சகல தீரத் தேனா தன்மாம் ரே (வைஷ்ணவ)

வண லோபீ  நே கபட-ரஹித சே

காம க்ரோத நிவார்யா ரெ

பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா

குல் ஏகோதேர் தார்யா ரே

இதைத் தமிழில் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அழகுற மொழிபெயர்த்துத் தந்துள்ளார் இப்படி:-

வைஷ்ணவன் யார்?

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்                                                         வகுப்பேன் அதனைக் கேட்பீரே                                                                                                               பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும் அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்;

நாயக னாகிய ஸ்ரீராமன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இனி வைஷ்ணவ ஆசாரியரான நஞ்ஜீயர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அவர் எப்போதும் கூறுவது இது:- “ எந்த ஒருவனும் தன்னை உண்மையான வைஷ்ணவன் தானா என்பதை எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து எப்போது அவன் இரக்கத்தால் கிளர்ச்சியுறுகிறானோ, “ஓ” என்று கத்துகிறானோ அப்போது அவன் உண்மையான வைஷ்ணவன் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது அவனது நெஞ்சம் மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து இறுகி இருக்கிறதோ, அதைப் பார்த்து இன்புறுகிறானோ அப்போதே அவன் வைஷ்ணவன் என்ற சொல்லுக்கு உரியவருடன் சேர்ந்தவன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு வைஷ்ணவனாய் இருப்பது என்பது கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பது என்று அர்த்தம். கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பவன் என்றால் அவன் வைஷ்ணவனாய் இருக்கிறான் என்று அர்த்தம். அது அவன் எதை நம்புகிறானோ அதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான் என்று அர்த்தம். அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்பதே அந்த இலட்சியங்களுள் ஒன்றாகும்.

விடுமின் என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இது:

வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே

இதை விளக்க வருகையில் நஞ்சீயரைப் பற்றிய இந்த விஷயத்தை பகவத் விஷயம் நூல் தருகிறது.

முக்கியக் குறிப்பு: இந்தப் பாடலைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு சுவாமிநாதன் இதே ப்ளாக்கில் (www.tamilandvedas.com) எழுதியுள்ளார். கட்டுரை எண் 2133. பதிவான தேதி 7-9-2015 கட்டுரை தலைப்பு: அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

***

tags- உண்மை , வைஷ்ணவன் , கவிஞர், வெ.ராமலிங்கம் பிள்ளை, நரசிம்ம  மேத்தா

  •  

ஆங்கிலக் கவிஞர் ஜெஃப்ரி சாசர் (Post.9583)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9583

Date uploaded in London – –9 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவிஞர் ஜெஃப்ரி சாசர்.

CHAUCER GEOFFREY யார்?

ஆங்கிலக் கவிஞர்களில் முன்னணியில் நிற்கும் கவிஞர் ஜெப்ரி சாசர். இவர் வாழ்ந்த காலம் 1340 முதல் 1400 வரை என்று கருதப்படுகிறது. ஆங்கில மொழிக்கு ஒரு பாதை , வகுத்துக் கொடுத்தவர் இவர். இவருக்குப்பின் வந்த ஆங்கிலக் கவிஞர்கள் ஒவ்வொருவரும் இவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் கடன் பட்டவர்களே. சாசர் வகுத்த உத்திகளில் ஒன்றையாவது அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சாசர் எழுதிய புகழ் பெற்ற நூல் CANTERBURY TALES.

லண்டனில் ஒரு மதுபான வியாபாரியின் மகனாகப் பிறந்த சாசர் எங்கு கல்வி கற்றார் யாரிடம் கல்வி கற்றார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரது கவிதைகள் இவரது மேதாவிலாசத்தை காட்டுகின்றன.

17 வயதானபோது சாசர் கிளாரன்ஸ் நகர பிரபுவின் DUKE OF CLARENCE மனைவி LADY ELIZABETHக்கு பணிவிடை செய்பவராக அமர்ந்தார். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் படைவீரனாகச் சேர்ந்து பிரான்ஸுக்குச் சென்று பல போர்களில் பங்கு கொண்டார். பிரெஞ்சுக்காரர்கள் இவரைப் பிடித்து ஓராண்டு காலத்துக்கு கைதியாக வைத்திருந்தனர். 1360ஆம் ஆண்டில் இவரைப் பணயத்தொகை கொடுத்து மீட்டு வந்தனர்.

1366இல் இவர் JOHN OF GAUNTஇன் மூன்றாவது மனைவியின் சகோதரிகளில் ஒருவரை மணந்தார். இதன் பின்னர்தான் அவர்கள் இருவருக்கும் புரவலராக இருந்து ஆதரித்தார்.

1367ஆம் ஆண்டில் அரசவையில் VALET பதவி கிடைத்தது. அப்போது இவருக்கு வயது 27. விரைவிலேயே அரசரின்  ESQUIREஆக மாறினார். 1369ஆம் ஆண்டில் மீண்டும் பிரான்ஸுடன் மோத போர்க்களம் ஏகினார்.

அடுத்த பத்தாண்டுக்காலம் — பொறுப்பேற்று ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

ஒருமுறை GENOA நகருக்குச் சென்றபோது இவர் இதாலியக் கவிஞர்கள் பொக்கஸியொவையும் பெட்ராக்கையும், சந்தித்ததாகத் தெரிகிறது.

1377ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இரண்டாவது ரிச்சர்டு பதவிக்கு வந்தார். அவர் பிரென்ச் இளவரசி மேரியை மணமுடிக்க விருன்பினார். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ய சாசர் தூது சென்றார்.

1382ஆம் ஆண்டில் லண்டன் துறைமுகத்தில் சுங்க அதிகாரியாக பதவி ஏற்றார். 1386இல் அவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். (KNIGHT OF THE SHINE OF KENT)

சாசருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வந்த JOHN OF GAUNT வெளிநாடு சென்றபோது, சாசரின் எதிரிகள் அவரிடம் இருந்த அனைத்துப் பதவிகளையும் பறித்தனர். இருந்த போதிலும் RICHARD மன்னர் —- அரசுப்பொறுப்பினை ஏற்றவுடன் சாசருக்கு ஆண்டுக்கு 20 பவுண்டு வீதம் ஓய்வூதியம் தந்தார். அந்தக் காலத்தில் 20 பவுண்டு என்பது பெருந்தொகை.

லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள வீட்டில் CHAUCER வாழ்ந்தார். அவர் WESTMINSTER கதிட்ரலில் அடக்கம் செய்யப் பட்டார்

–subha–

tags–கவிஞர், ஜெஃப்ரி சாசர். 

கொடையாளியை அலற வைத்த கவிஞர்- இங்கிலாந்தில் நடந்தது! (Post No.5911)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 10 JANUARY 2019
GMT Time uploaded in London – 7-44 am
Post No. 5911
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial கவிஞர், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.5850)

2019 ஜனவரி ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post N.5850)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 December 2018
GMT Time uploaded in London –10-14 am
Post No. 5850


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

விளம்பி வருஷம்- மார்கழி- தை மாதம்

அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

முஹூர்த்த தினங்கள்—23, 27, 30

அமாவாசை- 5

பௌர்ணமி- 20

ஏகாதஸி விரத நாட்கள்-1/2, 17, 31

பண்டிகை நாட்கள்

ஜனவரி 1- புத்தாண்டு தினம், ஜனவரி 12- சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம்- தேசீய இளைஞர் தினம், 14-போகிப் பண்டிகை, 15-மகர சங்கராந்தி- பொங்கல், உத்தராயண புண்ய காலம் , 16- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 21- தைப்பூசம், 25- தியாகப் பிரம்ம ஆராதனை, 26- குடியரசு தினம்.

ஜனவரி 1 செவ்வாய்க்கிழமை

கவீனாம் ப்ரதிபா சக்ஷஹு சாஸ்த்ரம் சக்ஷுர் விபஸ்சிதாம்-ராமாயண மஞ்சரி

புலவர்களுக்கு கண்கள்-நெடுநோக்கு ; அறிவாளிக்குக் கண்கள் -அறிவு

ஜனவரி 2 புதன் கிழமை

காவ்யேஷு நாடகம் ரம்யம்,தத்ர சாகுந்தலம் மதம்- பழமொழி

கவிஞர்களின் படைப்புகளில் சிறந்தது நாடகம்தான், அதிலும் சிறந்தது சாகுந்தலமே (காளிதாஸன் எழுதியது).

ஜனவரி 3 வியாழக்கிழமை

கவீஸ்வராணாம் வசஸாம்வினோதைர் நந்தந்தி வித்யாவித்யோ  ந சான்யே- கஹாவத்ரத்னாகரம்

 கவிஞர்களின் சொற் சிலம்பத்தை அறிஞர்கள் மட்டுமே ரஸிக்க முடியும்; மற்றவர்களால் முடியாது

ஜனவரி 4 வெள்ளிக் கிழமை

கத்யம் கவீனாம் நிகாஷம் வதந்தி- பழமொழி

‘உரை நடையே படைப்பாளிகளின் உரைகல்’ என்று பகர்வர்

ஜனவரி 5 சனிக்கிழமை

மதி தர்ப்பணே  கவீனாம் விஸ்வம் ப்ரதிஃபலதி- காவ்ய மீமாம்ஸா

கவிகளின் அறிவுக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிக்கிறது

(இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி)

ஜனவரி 6 ஞாயிற்றுக் கிழமை

நான்ருஷிஹி குருதே காவ்யம்- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

 தொலை நோக்கு இல்லை என்றால் கவிதையும் இல்லை

ஜனவரி 7 திங்கட் கிழமை

கவயஹ கிம் ந பஸ்யந்தி –சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிகள் கண்களுக்கு புலப்படாததும் உண்டோ!

ஜனவரி 8 செவ்வாய்க்கிழமை

நாடகாந்தம் கவித்வம் – பழமொழி

ஒரு கவிஞனின் திறமை, நாடகத்தில் உச்சத்தைத் தொடுகிறது

ஜனவரி 9 புதன் கிழமை

கஸ்மை ந ரோசதேநவ்யா நவோதேவ கதாசுதா- கஹாவத்ரத்னாகரம்

புதிய சுவையான கதையும் புதுமனைவியும் யாருக்குத்தான் இன்பம் தராது?

ஜனவரி 10 வியாழக்கிழமை

வாதாதிஹா ஹி புருஷாஹா கவயோ பவந்தி – சூக்திமுக்தாவளி

புதிய எண்ண அலைகளே கவிஞனை உருவாக்குகிறது

ஜனவரி 11 வெள்ளிக் கிழமை

வான் கலந்த மாணிக்க வாசக! நின்வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.-

இராமலிங்க சுவாமிகள்

ஜனவரி 12 சனிக்கிழமை

க வித்யா கவிதாம் விநா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிதை இல்லாமல் அறிவா?

ஜனவரி 13 ஞாயிற்றுக் கிழமை

சப்தாயந்தே ந கலு கவயஹ  ஸன்னிதௌ துர்ஜனானாம்-ஹம்ஸ ஸந்தேச

தீயோர் ஆட்சியில் புலவர்கள் எழுப்பும் குரல் வெற்று வேட்டு அல்ல

ஜனவரி 14 திங்கட் கிழமை

கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை“-பாரதி

ஜனவரி 16 புதன் கிழமை

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை- பாரதி

ஜனவரி 17 வியாழக்கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்- பாரதி

ஜனவரி 18 வெள்ளிக் கிழமை

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்- குறள் 394

ஓரிடத்தில் சந்தித்து, மனமகிழ்ச்சி தருமாறு உரையாடி, இப்படி மீண்டும் என்று சந்திப்போம் என்று ஏங்குவது புலவரின் செயல் ஆகும் (புலவர்= கற்றோர்)

ஜனவரி 19 சனிக்கிழமை

கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவி கொள்ளார்க்கு அவகீர்த்தி- தமிழ்ப்பழமொழி

ஜனவரி 20 ஞாயிற்றுக் கிழமை

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்– தமிழ்ப்பழமொழி

ஜனவரி 21 திங்கட் கிழமை

கவி கொண்டார்க்கும் கீர்த்தி, கலைப்பார்க்கும் கீர்த்தியா?

ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை

கவீந்திராணாம் கஜேந்திராணாம்- பழமொழி (கவிகள், வழி நடத்திச் செல்லும் தலைவர்கள்)

ஜனவரி 23 புதன் கிழமை

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.- கவிமணி தேசிக விநாயகம்

ஜனவரி 24 வியாழக்கிழமை

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! – அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! – கவி

துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !

கல்லும் கனிந்துகனி யாகுமே,அடா ! – பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!- கவிமணி தேசிக விநாயகம்

ஜனவரி 25 வெள்ளிக் கிழமை

“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு

தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு

வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ”

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை ((கம்பன் பெயரை இணைத்து)) தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்)

ஜனவரி 26 சனிக்கிழமை

வாங்க அரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீம் கவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் – வால்மீகி பற்றி கம்பன் சொன்னது; பால காண்டம், கம்பராமாயணம்

ஜனவரி 27 ஞாயிற்றுக் கிழமை

புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்

‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று

ஜனவரி 28 திங்கட் கிழமை

முது மொழி நீரா, புலன் நா உழவர்

புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68

அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள்  பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!

ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்

ஜனவரி 30 புதன் கிழமை

கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)

‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).

ஜனவரி 31 வியாழக்கிழமை

‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235

Tags- ஜனவரி 2019 காலண்டர், கவிஞர், கவிகள், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்

–SUBHAM–

கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

Written by S NAGARAJAN

Research Article No.1868; Dated 16 May 2015.

Uploaded in London at 6-35 am

By ச.நாகராஜன்

கவியுளம் காண்க!

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்                            ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

 

என மஹாகவி பாரதியார் பாடியிருப்பது எத்துணை ஆழ்ந்த பொருள் படைத்தது!

ஆயிரம் காவியம் கற்பார்கள்; ஆனால் கவிஞன் என்ன சொல்ல வந்தான், எப்படிச் சொல்லி உள்ளான் என்பதைப் புரிந்து  கொள்ளாமல் தன் மனதில் தோன்றியதைக் கவிஞன் கூறியதாக நினைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களின் ‘மனத்தடைகள்’ பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த ‘மனத்தடைக்காரர்கள்’ கவியரசு கண்ணதாசனைக் கொண்டாட நினைக்கும் போது சங்கடம் தான் ஏற்படுகிறது; ஏற்படும்.

தனக்குப் “பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களைக்’ கவியரசு கண்ணதாசன் கூறும் போது ஒன்று, அதை மறைத்து விடுகிறார்கள், இல்லை, மாற்றி விடுகிறார்கள்! இரண்டுமே தவறு!

காலத்தை வென்ற ஒரு கவிஞனாக ஒருவன் எப்படி மிளிர முடியும்? சமகாலத்தவரான இந்தத் தலைமுறையினர் தன்னை என்ன சொல்வார்கள், அடுத்த தலைமுறையினர் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைத்து பயந்தா கவிஞன், கவிதை எழுதுகிறான்!

எல்லா குறுகிய எல்லைகளையும் மீறி அவன் படிப்படியாக வளர்கிறான்; பல்வேறு பரிமாணங்களைக் கொள்கிறான்.

பக்குவம் வாய்ந்த இறுதி வடிவமே அவனது முகிழ்ச்சி.

 

தன்னைப் பற்றிக் கண்ணதாசன்

உண்மையைச் சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும்! அதுவும் தன்னைப் பற்றி விமரிசித்து உண்மையைச் சொல்வதென்றால் இன்னும் அதிக தைரியம் வேண்டும்!

காந்திஜியின் சோதனை, அதனால் தான், ‘சத்திய சோதனை’ ஆனது.

கவியரசு கண்ணதாசனும் இந்த சத்தியத் தீயில் தன்னைப் புடம் போடவே நினைத்தார். அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னைப் பற்றி இப்படிக் கூறியுள்ளார்:-

“கவிஞன் ஒருவன் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துக்கள் எவ்வளவு முரண்படும் என்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று.

யார் யாரைப் போற்றியிருக்கிறேனோ அவர்களைக் கேலி செய்தும் இருக்கிறேன்.

யார் யாரைக் கேலி செய்திருக்கிறேனோ அவர்களைப் போற்றியும் இருக்கிறேன்…

கருத்து எதுவாயினும் கவிதை என்னுடையது .. ..

கருத்து உங்களைக் குழப்பும்; கவிதை உங்களை மயக்கும். .. ..

என்னை மையமாக வைத்தே எல்லோரும் சண்டை போட்டுக் கொள்ளலாம்.

எந்தத் தலைவரையும் பழிப்பதிலும் புகழ்வதிலும், என் தமிழ் எப்படி விளையாடி இருக்கிறதென்பதை இப்போது படியுங்கள். விமர்சனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள்.”

கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள் நூலுக்கு  25-9-1968 இல் அவர் தந்த ‘என்னுரை’யில் உள்ள சில பகுதிகளே மேலே தந்திருப்பவை.

ஒரு தலைமுறையை சுமார் 30 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் இந்த முன்னுரையை எழுதியே ஒன்றரை தலைமுறைகள் கடந்தாகி விட்டது. (கவிதைகள் இன்னும் முன்னாலேயே படைக்கப்பட்டிருக்க வேண்டும்)

ஆனால் இன்றைய விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சி எதுவுமற்ற தேசிய தமிழ் கவிஞராக அவர் ஒளிர்கிறார்.

தனது கவிதைகளை அப்படியே மாற்றாமல் அவரே வெளியிட்டு அதனை விமரிசிப்போர் விமரிசிக்கட்டும் என்று அவரே கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ஆக நமக்குப் ‘பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை” – புராணங்கள், ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள், சம்ஸ்கிருதம், அதில் தோன்றிய நூல்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை அவரே கூறியிருக்கும்போது அதை மறைக்கக் கூடாது; மாற்றக் கூடாது.

கவிஞனின் வழியில் சென்று அவன் கூறும் சாசுவத உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

செம்மொழி என்ற சிறப்பு அடைமொழிக்கும் மேலான தெய்வ மொழியாம் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள சங்க இலக்கியம் மற்றும் அதற்குப் பின்னால் தோன்றிய பக்தி இலக்கியம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

அதில் தோய்ந்திருக்கும் மனம் கண்ணதாசனை அணுகும் போது ஆனந்தப்படும்; மகிழ்ச்சிக் கூத்தாடும்.

அங்கே ராமனும், கண்ணனும்,தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால், “மஞ்சள் பத்திரிக்கையே” கண்ணுக்குப் புலப்படும்!

கண்ணதாசனோ திறந்த வெள்ளைக் காவியம்! அவரை அணுக வெள்ளை மனம் – பிள்ளை மனம் – வேண்டுமல்லவா!

01kannadasan

கண்ணதாசனை –

அனைத்துக் குறுகிய எல்லைகளையும் மீறி, தடை கடந்த நிலையில் திறந்த மனதுடன் அணுகுவோம்; புரிந்துகொள்வோம்; ஆனந்திப்போம்!

***********