சுக்கு பற்றிய 6 பழமொழிகளைக் கட்டத்தில் காண்க (Post 8654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8654

Date uploaded in London – –9 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால் கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும் .

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

1.சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

2.சுக்கு கண்ட இடத்திலே முக்கிக் குழந்தை பெறுவாளா?

3.சுக்கு கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச்  சூரியநாராயணன் என்று பெயரிடுவாள்

4.சுக்கும் பாக்கும் வெட்டித்தாரேன்  சுள் சுள் என்று வெயில் எறி

5.சுக்கு கண்ட இடத்தில் பிரசவமா?

6.சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லைசுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை

tags சுக்கு, கஷாயம் ,பழமொழி

-subham–

தவளைக் கஷாயம் (Post No.5691)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –7-00 AM
Post No. 5691

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

picture from Wikipedia

பிளினி மூத்தவர் ( PLINY THE ELDER ) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தார். அவர் நம் நாட்டு வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போல வானவியல் முதல் பிராணிவியல் வரையுள்ள எல்லா விஷயங்களையும் எழுதி நேச்சுரல் ஹிஸ்டரி- NATURAL HISTORY இயற்கை வரலாறு-என்ற பெயரில்37 தொகுதிகளாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியிலுளது. இதை 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெனிஸ் நகரில் பதிப்பித்தனர். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போன்ற நூல்கள் ஏராளமான விஞ்ஞான பூர்வ விஷயங்களை உடைத்தாய் இருக்கிறது. பிளினி எழுதிய மருத்துவ விஷயங்கள் ஒரே அபத்தக் களஞ்சியமாக உளது. நமது சரகர், சுஸ்ருதர் போன்றோர் எழுதிய நூல்கள் இவருக்கும் சில அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முந்தியவை. இவைகளை ஒப்பிடுகையில் ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டி வைத்தியத்தைக் கடைப்பிடித்தது தெரிகிறது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:-

ஒருவருக்கு இடது பக்கம் கண் நோய் இருந்தால் ஒரு தவளை அல்லது தேரையின் இடது கண்ணை நோயாளியின் இடது தோளில் இருந்துத் தொங்க விடுக; இதே போல வலது கண் நோய்க்கு வலப்பக்கம் செய்க.

யாருக்காவது காதில் நோய் இருந்தால் தவளைக் கொழுப்பைக் காதில் திணிக்கவும். நோய் பறந்தோடும்.

பல் வலியா? தவளையை புளிச்ச காடி எனப்படும் விநிகரில் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தால் வாயைக் கொப்புளிக்கவும்.

இருமல், தொண்டையில் வியாதி இருந்தால் குட்டித் தவளையை வாயில் போட்டுத் துப்பி விடவும்.

இது போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பாவில் 1600 ஆண்டுகளுக்கு நீடித்தமைக்கு  அநதக் காலத்தில் வெளியான சில ஆங்கில நூல்களும் சான்று பகர்கின்றன.

1658ல் ஸர் கே.டிக்பி (SIR K DIGBY எழுதிய டிஸ்கோர்ஸ் ஆன் சிம்பதி (DISCOURSE ON SYMPATHY) என்ற நூலில் காணும் விஷயம்:

நீங்கள் பிரயாணம் செய்கிறீர்களா? குறிப்பாக நோய் இருக்கும் பகுதிக்குச் செல்வதானால் தவளை அல்லது தேரையைப் பொடி செய்து டப்பாவில் கொண்டு செல்லவும். அல்லது உயிருடன் உள்ள தவளை அல்லது சிலந்திப் பூச்சிகளையோ ஆர்ஸெனிக் என்னும் விஷத்தையோ கொண்டு சென்றால் நோய்கள், அவைகளுக்குப் போய்விடும் உங்களை விட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

1665ல் ஆலின் லெட்டர்  என்பவர் எழுதிய விஷயம்:-

‘பிளேக்’ போன்ற கொடிய கொள்ளை நோய் இருந்தால்  அப்பகுதிக்குச் செல்லுகையில் தவளை விஷம் கொண்ட தாயத்துகளை அணிக. நோய் வந்தாலும் அது உங்களைக் கொல்லாது.

இப்படி தேரை, தவளை வைத்தியம் 1800 ஆம் ஆண்டுவரை பரப்பப்பட்டு வந்துளது.

தமிழ் ஸம்ஸ்க்ருத நூல்களில் உள்ள மூலிகை மருத்துவம் நாம் எவ்வளவு முன்னேறி இருந்தோம் என்பதற்கு எடுத்துக் காட்டுகள்.

Tags– தவளை, கஷாயம், தேரை, வைத்தியம்

–SUBHAM–