கஷ்டம் அகற்றும் 108 அஷ்டகங்கள் (Post No.9483)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9483

Date uploaded in London – –  –12 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THIS TALK WAS BROADCAST ON 11TH APRIL IN GNANA MAYAM CHANNEL VIA ZOOM AND FACEBOOK

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!  இப்போது வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.

இந்தக் ‘கலிகால கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.

அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.

சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.

நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.

சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.

எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பெயரை உடனே கூற முடியும்! அவற்றைப் படிக்கலாம்; பயன் பெறலாம்.

சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!

சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.

ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||

என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை  சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.

மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.

தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு  பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,

“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த நிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம

பவ சங்கர தேசிக மே சரணம் ||

என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

நடேசாஷ்டகம்:  மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.

அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.

நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:

ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்

ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்

பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்

அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத

கதம்பக விடம்பக கலம்

சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்

பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!

சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.

லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.

ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும்.  இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.

மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.

அதரம் மதுரம் வதனம் மதுரம்

நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்

என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே

பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள்.  அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.

ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா

ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா

ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ

கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |

என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.

முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!

 சுதர்சனாஷ்டகம் :- 8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.

கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.

திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.

அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.

ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.

100 அஷ்டகம்

சூர்யாஷ்டகம்

ராகவாஷ்டகம்

தோடகாஷ்டகம்

நடேசாஷ்டகம்

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

கணேச அஷ்டகம்

கிருஷ்ணாஷ்டகம்

சரஸ்வதி அஷ்டகம்

துர்காஷ்டகம்

லிங்காஷ்டகம்

பவானி அஷ்டகம்

ரங்கநாதாஷ்டகம்

காளிகாஷ்டகம்

ராமாஷ்டகம்

ராமாஷ்டகம்

அச்யுதாஷ்டகம்

ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்

விஸ்வநாதாஷ்டகம்

நவக்ரஹ மங்களாஷ்டகம்

சுதர்ஸனாஷ்டகம்

வில்வாஷ்டகம்

துளஸி அஷ்டகம்

ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்

ராஜபுர கங்காஷ்டகம்

நிர்வாணாஷ்டகம்

ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்

ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்

கங்காதாராஷ்டகம்

ஹம்ஸாஷ்டகம்

பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்

ஹரிஹராஷ்டகம்

மனோரதாஷ்டகம்

ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்

சிவராமாஷ்டகம்

ப்ரஷ்டாஷ்டகம்

நர்மதாஷ்டகம்

புஷ்கராஷ்டகம்

ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்

ஹனுமத் அஷ்டகம்

கங்காஷ்டகம் –

கங்காஷ்டகம் – வால்மீகி

கங்காஷ்டகம்

யமுனாஷ்டகம்

யமுனாஷ்டகம்

வித்யார்த்திதாஷ்டகம்

ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்

சங்கராசார்ஷ்டகம்

விஹாரிணோஷ்டகம்

குர்வஷ்டகம்

ஜகன்னாதாஷ்டகம்

ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்

ஸ்ரீ கோபாலாஷ்டகம்

ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்

பாண்டுரங்க அஷ்டகம்

ரகுநாதாஷ்டகம்

ராமசந்த்ராஷ்டகம்

சாரதாஷ்டகம்

ஷீதலாஷ்டகம்

பகவத் அஷ்டகம்

சங்கடா நாமாஷ்டகம்

அம்பாஷ்டகம்

சரஸ்வத்யஷ்டகம்

தேவியஷ்டகம்

பாதாவ்ஷாஷ்டகம்

வாராஹிநிக்ரஹாஷ்டகம்

தாராஷ்டகம்

ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்

சிவாஷ்டகம்

சந்த்ரசூடாலாஷ்டகம்

காலபைரவாஷ்டகம்

விஸ்வரேஷ்வராஷ்டகம்

மஹாதேவ்யாஷ்டகம்

வைத்யநாதாஷ்டகம்

பசுபத்யஷ்டகம்

சிவநாமாவல்யஷ்டகம்

ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்

ரமாபத்யாஷ்டகம்

விஷ்ணோரஷ்டகம்

ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்

ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்

ருத்ராஷ்டகம்

மதுராஷ்டகம்

கணநாயகாஷ்டகம்

சௌர்யாஷ்டகம்

நடராஜாஷ்டகம்

சிவநாமாவளியஷ்டகம்

அகஸ்த்யாஷ்டகம்

ஜம்புநாதாஷ்டகம்

ஸதாசிவாஷ்டகம்

சோணாத்ரிநாதாஷ்டகம்

பரமாத்மாஷ்டகம்

கோஷ்டேஸ்வர அஷ்டகம்

சாஸ்தா அஷ்டகம்

தேவராஜ அஷ்டகம்

யமாஷ்டகம்

அமிலாஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவா

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

சாரதாபுஜங்காஷ்டகம்

அட்டால சுந்தராஷ்டகம்

அஷ்டகங்களை ஓதுவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம். நன்றி, வணக்கம்!

—-subham —–

tags – கஷ்டம் ,108 அஷ்டகங்கள்,

5 கிரகம் உச்சம் ! பின்னர் ஏன் ராமன் கஷ்டப்பட்டான்?-1(POST 8646)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8646

Date uploaded in London – –8 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏன்? ஏன்? ஏன்? நாட்டை விட்டு காட்டுக்கு போனார் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ???

Gnanamayam – Home | Facebookwww.facebook.com › … › Religious OrganizationGnanamayam · 17 hrs ·. *Significance of Tree Plantation as in Sastras & Ancient Indian Treatises-Book Release*. His Holiness released a book on …You visited this page on 07/09/20.

ZOOM BROADCAST VIA GNANAMYAM ON MONDAY 7-9-2020

FACE BOOK.COM/GNANAMAYAM

அனைவருக்கும் கத்துக்குட்டி அன்பான மாலை வணக்கம்.

ஒரு அன்பரின் கேள்வி

மிக மிக உயர்ந்த்தான, பூஜிக்கத் தகுந்த ,5 கிரகங்கள் உச்சம்

பெற்றிருக்கிற ஜாதகம் ஶ்ரீ ராமருடையதாக இருந்தும் ஏன் 14

வருடங்கள் காட்டில் இருக்கும்படி நேரிட்டது????

அவரது மனைவி சீதையும் சகோதரன் லட்சுமணனும் ஏன் கூடவே

இருந்து கஷ்டப்பட நேர்ந்தது????

முதலில் ஶ்ரீ ராமருடைய ஜாதகத்தைப் விரிவாக பார்ப்போம்.

ஶ்ரீ ராமர் புனர்பூச நட்சத்திரத்தில், கடக ராசியில், கடக

லக்னத்தில், உச்சம் பெற்ற குருவும், ஆட்சி பெற்ற சந்திரனும்

சேர்ந்திருந்ததினால் , ராஜ களையுடனும் அஞ்சா நெஞ்சம்

பெற்று மன உறுதியுடன் பகைவரை வெல்லும் ஆற்றல்

பெற்றவானார்.

இரண்டாம் பாவத்திற்குரிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று

சூரிய குல திலகமாக திகழ்ந்தார், வாழ்ந்தார்

மூன்றாம் பாவத்திற்குரிய புதன் சூரியனுடன் சேர்ந்து

“ புத ஆதித்ய யோகம்”பெற்றிருப்பதினால் ஆய கலைகள்

அறுபத்தி நான்கும் அவரை தஞ்சம் புகுந்ததென்றால் மிகையாகாது.

சனி 4 ம் பாவத்தில் உச்சம் பெற்று 10 பார்வையாக லக்னத்தைப்

பார்ப்பதினால் எல்லோரையும் கவரக்கூடிய நீல வண்ணத்தில்

பிரகாசித்தார்.

6-ம் பாவத்தில் உள்ள ராகு எதிரிகளை எளிதில் வெல்லும்

ஆற்றலை அளித்திருக்கிறார்

9-ம் பாவத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் அழகான மனைவியை

சயம்வரத்தில் வென்றார்

7-இடத்து அதிபதியான சனி அவர் வீட்டிலேயே உச்சம் பெற்ற

உச்சம் பெற்ற செவ்வாயும் இருந்ததினால் அன்னிய நபர்களாலும்

நல்ல நண்பர்களாலும் உதவி கிடைத்தது.

இற்கெல்லாம் மேலாக 33 சிறப்பான ராஜ யோகங்கள் காணப்

படுகின்றன இவர் ஜாதகத்தில் !!!!!

இவ்வளவு சிறப்புகள் பெற்று 5 கிரகம் உச்சமான ஜாதகம்

பெற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பல.

முதலில. ஓர் உண்மையை தெரிந்து கோள்வோம். ஶ்ரீ ராமருக்கு

முடி சூட்டு விழா நாளைக்கே !!! என்று அறிவித்தவர்

தசரதர்தான் ,,,,,,,,குல குரு வசிஷ்டர் சொல்ல வில்லை.

இந்த நாள் இனிய நாள் இல்லை என்று குல குரு

வசிஷ்டடர் ஏன் தசரதனிடம் சொல்ல வில்லை????

ஒன்று தசரத சக்ரவர்த்தியே அனைவர் முன்னிலையிலும்

அறிவித்கு விட்டார்.இரண்டாவதாக முக்காலமும் உணர்ந்த

முனி சிரேஷ்ட்டர் வசிஷ்டர்.. அவருக்குத் தெரியாதா ஶ்ரீ ராமரின்

அவதார நோக்கம்???. அவர் நினைத்திருந்தால் கைகேயியின்

வரங்களையும் ராமர் காட்டுக்கு போவதையும் தடுத்திருக்கலாம்.

அவதார நோக்கம் அறிந்த அவர் அவ்வாறு

செய்ய வில்லை……..

இரண்டாவதாக உச்சம் பெற்ற சூரியனும் உச்சம் பெற்ற சனியும்

சம சப்தமமாக ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டதினால்

உச்சனை உச்சன் பார்த்தால் மிச்சம் ஏதும் இல்லை” என்றவாறு

தந்தைக்குப் பிடித்த பிள்ளையாக ஶ்ரீ ராமர் இருந்த போதும் ,அவர்

சொல்லை மீறாமல் காட்டுக்கு செல்ல நேர்ந்தது. அவருக்குக்

“கர்மம்” கூட செய்ய முடியாத நிலையும் ஆகிவிட்டது.

மூன்றாவதாக 6 – ல் இருந்த ராகு நிறைய விரோதிகளை உண்டு

பண்ணுயிருக்கிறார்………அதிலும் பெண்கள் பங்கு அதிகம்!!!

முதலில் தாடகை , ராமரைகாட்டுக்கு அனுப்பிய கைகேயி

கைகேயியடம் ராமரைப் “போட்டுக் கொடுத்த” கூனி, வனவாசத்தின்

போது வந்து “வம்பு “ பண்ணிய சூர்ப்பனகை,இதற்கெல்லாம்

மேலாக சொந்த மகன்களாகிய லவன், குசனிடமும் சண்டை!!!!!

4 வதாக மிக மிக முக்கியமான பாயிண்ட் POINT  என்னவென்றால்

கிரகங்கள் எல்லாம் நல்ல நிலைமயில் இருந்தாலும்

நல்ல   திசைகள்” அவருக்கு நடக்கவில்லை……..

அவர் பிறந்த புனர் பூச நடசத்திரத்தின் 4 வது பாதமாக இருந்ததினால்

 குரு திசை கர்ப்ப செல்லு போக 4 வருடங்கள்

இருந்ததிருக்கும். அதற்கு பிறகு சனிதிசை 19 வருடங்கள்!!!!

சனி திசை முடிந்த உடன் 3 ஆம், 12 ஆம் இடத்திற்குரிய

புதனின் திசை அவரை வன வாசத்திற்கே அனுப்பியது அவரது

23 வது வயதில்!!!

7 ம் அதிபதியான சனி 12 ம் இடத்து அதிபதியான புதனைப்

பார்ப்பதிதினால் மனைவியைப் பிரிய நேரிட்டது.

இதற்கெல்லாம் மேலாக அயன, சயன, சுக, போக பாக்ய

ஸ்தானமான 12 ம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து

எதையுமே அனுபவிக்க முடியாதபடி செய்து விட்டார்!!!

நேயர் கேட்ட கேள்வியின் இரண்டாவது பகுதி

ஶ்ரீராமரின் மனைவியான சீதையும் சகோதரனான லசுமணனும்

காட்டில் கஷ்டப்பட நேரிட்டது ஏன்????

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் இது ஒரு “மில்லியன் டாலர்

கொஸ்டின்” MILLION DOLLAR QUESTIN என்றே சொல்லுவார்கள்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து பம்பாய்க்கு

ஒரு விமானம் 128 பயணிகளுடன் பறந்து சென்று கொண்டிருந்த போது

நடு வானில் வெடித்து சிதறியது.அதில சென்ற 128 பயணி

களும் இறந்தார்கள். அந்த செய்தி கேட்ட நண்பர் ஒருவர்

“என்ன சார், உங்களுக்குத்தான் ஜோதிடம் தெரியுமே……..

அந்த விமானத்தில் பயணம் செய்த 128 பேருக்குமா ஒரே

சமயத்தில் மரண யோகம் வரும்???”

அதற்கு என்னுடைய பதில்

பயணம் சென்ற 128 பேருக்கு மரண யோகமா இல்லையா என்பது

அவர்களப் படைத்த பிரும்மனுக்குத் தான் தெரியும்! ஆனால் அந்த

விமானத்திற்கு மரணயோகம் . அது பிறந்த நேரம் பறந்த நேரம்

அதன்படி விழுந்து நொறுங்கியது.!!

TO BE CONTINUED…………………………………………

Gnanamayam – Home | Facebookwww.facebook.com › … › Religious OrganizationGnanamayam · 17 hrs ·. *Significance of Tree Plantation as in Sastras & Ancient Indian Treatises-Book Release*. His Holiness released a book on …You visited this page on 07/09/20.

to be continued…………………………………

tags — ராமர் ஜாதகம், 5 கிரக உச்சம், கஷ்டம், ஏன்

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

problems

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

 

Article written by London swaminathan

 

Date: 21 May 2016

 

Post No. 2828

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bee happy

நம் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள் சிதை, சிந்தை; இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள்; இவைகளை வைத்து ஒரு கவிஞன் அழகான பாடல் யாத்துள்ளான்.

சிதைத் தீ, ஒருவர் இறந்த பின்னர் வெறும் உடலை மட்டும்தான் எரிக்கும்; சிந்தனையில் சோகமிருந்தால் அது நீங்கள் உயிருடன் இருக்கும்போதே உங்களை எரித்துக் கொன்றுவிடும்!

சிதா சிந்தா சமாக்ஞேயா சிந்தா வை பிந்துநாதிகா

சிதா தஹதி நிர்ஜீவம், சிந்தா தஹதி சஜீவகம்

பொருள்:–

சிதை, சிந்தனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; இரண்டும் அழிக்கக்கூடியதே. ஆனால் சிதைத் தீயைவிட, சிந்தனை ஒரு சொட்டு (கொஞ்சம்) அதிகம்தான். ஏனெனில் சிதைத் தீ, செத்த பிறகு நம்மை எரிக்கும்; சிந்தனையோ/ கவலையோ உயிருள்ளபோதே நம்மை அழிக்கும்!

 

கொன்றழிக்கும் கவலை: பாரதி

இப்போது இதை பாரதி பாடலுடன் ஒப்பிடுவோம்:–

 

சென்றது இனி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.

 

இதற்குப் பொருள் எழுதத் தேவையே இல்லை; தூய தமிழ்; எளிய தமிழ்; போனதைப் பற்றி கவலைப் படாதே; ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்த்து போல எண்ணி அனுபவி (பழைய கஷ்டங்களை எண்ணி கவலைப் படாதே; பயப்படாதே)

 

கவலை – ஒரு பகைவன்!

 

மொய்க்கும் கவலைப் பகை போக்கி

முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி

உடலை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மொய்க்கும் கிருதயுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே.

positive-quotes-61

பாரதி பாடல் முழுதும், வேதங்களைப் போல பாஸிட்டிவ்/ ஆக்கபூர்வ எண்ணங்களே இருக்கும்.

கவலையை ஒழித்து, உள்ளத்தையும் உடலையும் எஃகு போல வலிமைப் படுத்தி, கிருத யுகத்தையே உண்டாக்குவேன் என்று சொல்கிறான் பாரதி. அவன் உடல் எரிக்கப்பட்டுவிட்டது; ஆனால் அவனது சொற்கள் நமக்கு ஒளியூட்டுகின்றன.

 

சங்கடம் வந்தால்

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;

சக்தி சக்தி சக்தியென்று சொல்லி – அவள்

சந்நிதியிலே தொழுது நில்லு

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு;

சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்

தண்ணருளென்றே மனது தேறு.

 

கவலையைக் கொல்; அப்படியும் சங்கடம் நீடித்தால், ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் இதுவும் என்று உணருங்கள் என்கிறான்.

 thinking

சஞ்சலக் குரங்குகள்

கவலை, யோஜனை, பயம் ஆகியன குரங்குகள் போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவித்தாவி நம்மை கலக்கும் என்பதால்,கலைமகளை வேண்டுதல் என்ற பாடலில் ‘சஞ்சலக் குரங்குகள்’ (மனம் ஒரு குரங்கு) என்ற அருமையான பதப் பிரயோகம் செய்கிறான். அவன் ஒரு சொல் தச்சன்!

 

கவலையைக் கொல்லுவோம்; எல்லா நலன்களையும் வெல்லுவோம்; அனைவருக்கும் இதைச் சொல்லுவோம்!

 

–சுபம்–