பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம்! (Post No.7913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7913

Date uploaded in London – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரூபா, அணா , பைசா, காசு, பணம், நாணயம் முதலிய எதுவுமே தமிழ் சொற்கள் இல்லை!!!!

உலகம் வியக்கும் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர்  பாணினி . இதன் பெயர் ‘அஷ்டாத்யாயி’ . தமிழில் ‘எட்டு அத்தியாயங்கள்’ என்று மொழி பெயர்க்கலாம். பாணினி  எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் செப்புவர் .அவர் பிறந்த லாகூர் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்த லாகூர் , சாலத்துறை (சால துரா / சாலத்தூர்)   என்று அழைக்கப்பட்டது . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்குச் சென்ற சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் , தான் கேட்ட எல்லா விஷயங்களையும் அப்படியே நமக்கு எழுதி வைத்துள்ளார் .

பாணினி எழுதிய 4000 சூத்திரங்களும் சின்னச் சின்ன வரிகள் . அவற்றின் மூலம் அவர் செப்பியதோ இமய மலை அளவுக்கு !! அவர் எழுதிய எல்லாவற்றையும் அச்சிட்டால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு போய்விடலாம். திருக்குறள் புஸ்தகத்தை விடச்  சின்னது. ஆனால் ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’. எப்படி குட்டையான, சின்ன பிராஹ்மணப் பையன் வாமனன் , திரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி ‘உலகளந்த உத்தமன்’ ஆனானோ அதுபோல  பாணினி புஸ்தகமும் த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கும். உலகின் முதல் இலக்கண (Grammar) புஸ்தகம் இதுதான். உலகின் முதல் மொழியியல் (Linguistics)  புஸ்தகமும் இதுதான்.

இரண்டு அதிசய விஷயங்கள் என்னவென்றால் ,

1.இவர் மிளகு பற்றி ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். ஆகையால் இவருக்கு கேரளா பற்றித் தெரியும். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாடு இருந்த செய்தி நமக்கு மகிழ்ச்சி தரும் . கோதாவரி நதிக்கரையில் இருந்த அஸ்மாக தேசம் பற்றியும் விளம்புகிறார். ஆப்கானிஸ்தானம் துவங்கி அஸ்ஸாம் மாநிலத்தைத் தொட்டுவிட்டு கேரள மிளகு வரை கதைக்கிறார்.

2.இரண்டாவது அதிசய விஷயம் –ஸம்ஸ்க்ருதம் என்ற சொல்லையே இவர் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் தெரிந்த பாஷை ஒன்றுதான். ஆகையால் பாஷா என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறார். அதைவிட வியப்பான விஷயம் இவர் வேத கால சம்ஸ்க்ருத இலக்கணத்தையும் ஒப்பிட்டுக் கொண்டே போகிறார். இதனால் இவர் வேதகால இலக்கியத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது உலக மஹா அறிஞர்களின் துணிபு. பாஷா இலக்கணத்தைச் செப்பிவிட்டு, சந்தஸி (வேத கால கவிதை) இலக்கணத்தைச் செப்புவார். இதனால் முற்கால, நிகழ் கால இலக்கணத்தை ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.

தொல்காப்பியர் ‘என்மனார்’ புலவர், ‘என்ப’ , ‘மொழிப’ என்று தமக்கு முந்தி இருந்த இலக்கண கர்த்தாக்கள் சொன்னதை நான் தொகுத்து அளிக்கிறேனே தவிர ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை என்பதை சொல்லாமல் சொல்லுவார். ஆனால் பாணினியோ இது வடக்கத்திய வழக்கு, இது கிழக்கத்திய வழக்கு என்று சுட்டிக்காட்டிக் கொண்டே செல்கிறார். இதனால் இவருக்கு 2000 மைல் அகலத்துக்கு நாட்டில்  வழங்கிய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அவருக்கு முன் வாழ்ந்த ஆபிசாலி , சாகடாயான , சாகல்ய, கார்க்ய , காலவ, பாரத்வாஜ , காஸ்யப, சேனக, ஸ்போடாயன , சக்ரவர்மன என்று பத்து இலக்கண வித்தகர் பற்றி உரைக்கிறார்.

உலகின் முதல் சொற்பிறப்பியல் (Etymology)  நூல் (நிருக்தம்) எழுதிய யாஸ்கருக்கும், பாணினீயம் மீது பேருரை – ‘மஹா பாஷ்யம்’ எழுதிய பதஞ்சலிக்கும் இடையே 600 முதல் 800 ஆண்டு இடைவெளி இருந்தது. இந்த கால கட்டத்துக்குள் 64 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியல் மாக்ஸ்முல்லர் எழுதிய ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு (பக்கம் 142) நூலில் இருக்கிறது.

****

பாணினீயத்தில்/ அஷ்டாத்யாயியில்  உள்ள நாணயம்- காசு – பணம் பற்றிய செய்திகள், இவரை கௌடில்யருக்கு முன்னவர் என்பதைக் காட்டுகிறது  கௌடில்யர் காலம் கி.மு .நாலாம் நூற்றாண்டு.

பாணினி சொல்லும் நிஷ்கா , சுவர்ண, சாண, சதமான என்ற நாணயங்களை கௌடில்யர் அறியார்.  ஆகையால் இருவருக்கும் இடையே பல நூறு ஆண்டு இடைவெளியாவது இருக்க வேண்டும். பொருளாதார நூல் எழுதிய கௌடில்யருக்கே தெரியாத காசு, பண விஷயத்தை ஒரு இலக்கண ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்றால் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நாமே ஊகிக்கலாம்.

மேலும் ‘அஷ்டாத்யாயீ’-யில் காணப்படும் ‘விம்சதிகா’ (20) , த்ரிம்ஸ்தக( 30)’  நாணயங்களை கௌடில்யர் குறிப்பிட்டதே இல்லை இந்த நாணயங்கள் நமக்கு கிடைத்துள்ளதால் இவை உண்மையிலேயே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்

பாணினி காலத்தில் வழங்கிய முக்கியக் காசு ‘சதமான’  ஆகும். 100 என்பது இதன் பொருள்.  இதை சதபத பிராமண நூல் குறிப்பிடுகிறது. அந்த நூலின் காலம் கி.மு 2100 முதல் 1000 வரை என்பர் அறிஞர் பெருமக்கள்.

மற்றொரு முக்கிய நாணயம் ‘கார்ஷா பணம்’ . இது 20 மாஷா அல்லது 40 ரத்தி எடை கொண்ட கனமான நாணயம் . இதன் மற்றோரு பெயர் ‘விம்சதிகா (20)’. ஆனால் மௌர்ய கால வெள்ளி நாணயம் 16 மாஷா எடையுடையதே. இதை  அர்த்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது. கார்சா பணம் என்னும்  வழக்கமான நாணயமும் அதிக எடையுள்ள விம்சதிக்காவும்  பாணினிக்குத் தெரியும். மனுவும் கார்ஷா பணத்தைக் குறிப்பிடுகிறார். இதன் எடை 32 ரத்தி  ஆக இருக்கக்கூடும் . கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நந்த வம்ச ராஜாக்கள்தான், முதல்முதலில் எடைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர்.

பிம்பிசாரன் காலத்தில் ராஜக்ருஹத்தில் 20 மாஷா எடையுள்ள கனமான காசு புழக்கத்தில் இருந்தது. பல்வேறு ஜனபதங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.

இதனால் கௌடில்யருக்கு முந்தையவர் பாணினி என்பது உறுதியாகிறது. நந்த வம்ச மன்னர் காலத்திலோ அதற்கு முன்னரோ அவர் வாழ்ந்திருப்பார்.

****

மருத்துவ நூல்களில் ‘கலிங்கமான’ , ‘மாகத மான’ என்று வேறு வேறு நாணயங்கள் காட்டப்படுகின்றன.

நந்த வம்ச ஆட்சியில் காணப்படும் புதிய அம்சங்கள் :–

20 மாஷா விம்சதிகாவுக்குப் பதில் , 16 மாஷா எடையுள்ள நாணயம் ;

நாணயத்தின் இரு பக்கங்களிலும் முத்திரை குத்தப்படும்;

4 முத்திரைக்குப் பதிலாக 5 முத்திரைகள் குத்தப்படும்;

முந்திய விம்சதிகா-வில் 4 முத்திரைகளே  இருந்தன.

5 முத்திரைகளில் சூரியன் மற்றும் ஆறு கோடுகள் உள்ள ‘ஷடரா’ பொறிக்கப்படும்.

32 ரத்தி நாணயங்கள் மெல்லிதாக பெரிய தட்டு போல இருக்கின்றன.

இதற்குப்பின்னர் மௌரியர் அச்சிட்ட கனமான நாணயங்களில் மயிலும்  பிறையும் காணப்படுகின்றன.

****

நிஷ்கா

இது உலகிலேயே மிகப் பழைய கவிதை நூலான ரிக் வேதத்தில் அடிக்கடி வரும் சொல். பெரும்பாலும் கழுத்தில் அணியும்   ஆபரணங்களைக் குறிக்கும் . ‘நிஷ்க கண்ட’ , ‘நிஷ்க க்ரீவ’ என்ற தங்கக் காசு மாலை அணிந்து சென்றனர் வேதகாலப்  பெண்கள்   .

வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரப்பி வந்த அரை வேக்காடுகளின் முகத்திரையைக் கிழிக்கும் துதிகள் இவை – RV.  2-33-10; 8-47-15 மற்றும் பல இடங்கள் .

நிஷ்கா கண்ட , நிஷ்கா க்ரீவ என்ற சொற்களை காணலாம்.

அதர்வ  வேதத்திம் உளது – 5-14-3; 7-99-1; 20-131-8

இவை தங்கக் காசுகள் என்பதை ரிக் வேதம் RV 1-126-2 உறுதிப்படுத்துகிறது.. ஒரு புலவர் தனக்கு 100 நிஷ்காக்களும், 100 குதிரைகளும் பரிசாகக் கிடைத்ததை பாடுகிறார்.

இதற்குப்பின்னர் இவை காசுகளை மட்டுமே குறித்ததை அதர்வ வேதம் 20-127-3 காட்டுகிறது. பிராஹ்மண  நூல்களில்  எண்ணற்ற குறிப்புகள் உள . எக்ளிங் (Eggeling)  , கெல்ட்னர் (Geldner) , ஸிம்மர் (Zimmer) ஆகியோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் குறித்துளர் .

பஞ்ச விம்ச பிராஹ்மண நூலில் வெள்ளி நிஷ்காவும் காணப்படுகிறது.

****

ரூபா (Rupa)

ரூபாய் என்று இன்று நாம் வழங்கும் சொல் ‘ரூப= உருவ’ என்ற சொல்லிலிருந்து வந்தது . முத்திரை குத்தப்பட்ட தகட்டு நாணயங்களில் ‘ரூபம்’ (symbols) இருந்ததால் அவை ரூபாய் எனப்பட்டது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ‘சிக்னடி அர்ஜெண்டி’ Signeti argenti — வெள்ளி முத்திரை – என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பெயர் — க்விண்டஸ் கர்டியஸ் Quintus Curtius

ஒரு பெரிய தகட்டை , தேவையான எடைக்கேற்ப வெட்டி எடுத்து முத்திரை அடையாளங்களை குத்தினார்கள் .

பாணினி 5-2-120

ரூபா என்பதை ஒருமையில் பாணினி பயன்படுத்துவதால் அவர் காலத்தில் ஒவ்வொரு  முத்திரையாக  குத்தப்பட்டதை அறியலாம். மஹா சுபின ஜாதகத்தில் ‘ரூபா’ நாணயம் வருகிறது.கௌடில்யர் காலத்தில் நாணய தரக் கட்டுப்பாடும் இருந்தது. ‘ரூப தர்சக’  என்ற அதிகாரியை அர்த்த சாஸ்திரமும், ‘ரூபா தர்க்க’ என்ற அதிகாரியை பதஞ்சலியும் எழுதியுள்ளனர்

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …

tamilandvedas.com › 2017/09/26 › ர…

  1.  

26 Sep 2017 – சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை … ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட …


வேதத்தில் தங்கமும் … – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com › blog-…

  1.  

23 Apr 2015 – வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்! Compiled by London swaminathan. Date: 23 April 2015; Post No: 1822. Uploaded in London 9-28 காலை. ரிக் வேதம் கி.மு 1700 …


ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ரத்தி…

  1.  

16 Nov 2019 – வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன. 1.வேத …

tags – பாணினி, நாணயங்கள், நிஷ்கா, ரூபா , கார்ஷாபண, பணம், காசு



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

காசு மேலே காசு வரும்! வாஸ்து சாஸ்திரம்!! (Post No.5068)

Written by S NAGARAJAN

 

Date: 2 JUNE 2018

 

Time uploaded in London –  7- 11 am  (British Summer Time)

 

Post No. 5068

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வளமான வாழ்க்கைக்கு வாஸ்து

 

காசு மேலே காசு வரும்!

 

ச.நாகராஜன்

வாஸ்து சாஸ்திரம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அது பொய்க்காது.

வாஸ்து சாஸ்திரத்தின் பெருமை எல்லையற்றது. அதன்  பெருமைகளைக் கேட்பதை விட உடனடி பலன்களை எதிர்பார்ப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

எப்படி மின்சாரத்தின் தியரி பகுதியை அனைவரும் அறிய விரும்பாமல் ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிவதை மட்டும் விரும்புகிறார்களோ அது போல, வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அதன் பயனை உடனடியாக அனுபவிக்கத் துடிப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஒம்’ஸ் லாவும் (Ohm’s Law) கிர்சாஃப்ஸ் லாவும் (Kirchoff’s Law) யாருக்கு வேண்டும். ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும்; ஃபேன் சுற்ற வேண்டும்.

சரி, நேரடியாக அனைவருக்கும் பிடித்த விஷயத்திற்கு வருவோம்.

காசு மேலே காசு வரும்!

அது தானே வேண்டும்.

‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”

 

அதாவது குற்றமுற்ற பூமியில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கின்ற பொருளை அடைந்து விட்டால் அறமும் இன்பமும் தானே வரும் என்பது ஆன்றோர் வாக்கு.

சரியாகத் தான் சொன்னார்கள்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

வாஸ்து மூலம் காசு மேலே காசு வர வழி என்ன?

சுலபமானது; அதிகம் செலவில்லாதது – ஒரு வழி!

வடக்கு திசையைக் கவனியுங்கள் என்பது தான் அது.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.

செல்வம் வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய திசை அது.

வடகிழக்கு மூலையில் – ஹாலில் –  தினமும் ஒரு நல்ல பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி வைக்க வேண்டும்; அதை மறு நாள் காலையில் அகற்றி விடவேண்டும். மறுபடியும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.

வடக்கு திசையில் – ஹாலில் – முக்கியமாக குப்பை கூளங்கள் இருக்க கூடாது.

வடக்கு திசையில் ஸ்டோர் ரூம் இருக்க கூடாது.

வடகிழக்கில் டாய்லட் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் அங்கு கல் உப்பை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். அது ஈரமாகப் போனவுடன் அதை அகற்றி புதிய உப்பை வைக்க வேண்டும்.

வடக்கு திசை செல்வத்தின் திசை என்பதால் அங்கு காசு, பணம் உள்ள பீரோவை வைக்கலாம்.

வடக்கில் செய்யக் கூடாத ஒன்று – வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது தான். அது மூளையின் செயல் இயக்கத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

வடக்கு நீரின் திசை.

இந்தத் திசை வீட்டில் சுத்தமாக இருந்தால் அந்தஸ்து உயரும்; உயர் பதவி வரும்; செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும்.

இது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டால் – ஸ்டோர் ரூம், அழுக்கு மூட்டைகள், குப்பைகள் சேர்தல், செருப்புகளை வைத்தல் ஆகியவற்றால் பலவீனப்படுத்தப்பட்டால் – வீட்டில் செல்வம் வந்தாலும் அது உடனடியாக அகன்று விடும். இல்லத்தில் இருப்பவர் நோய்வாய்ப்படுவர். சொத்துக்கள் வில்லங்கமாகி விடும்.

ஆகவே வடக்கு திசையைக் கவனித்து வடகிழக்கு மூலையில் ஒரு பேஸினில் நீரை வைத்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் கவனியுங்கள்.

நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி தோன்றும்.

உடனடியாக இந்தப் பழக்கத்தை பலப்படுத்துங்கள்.

 

 

 

நீரில் ரோஸ் வாட்டர், பன்னீர், கங்கை ஜலம் போன்றவற்றை ஊற்றி வரவை அதிகமாக்கலாம்.

இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவுடன் உங்கள் பணவரவைப் பாருங்கள்.

வடக்கில் Clusterஐ அகற்றுங்கள்.

வாஸ்து தரும் காரண்டி – காசு மேலே காசு வரும்!

***

பயனடைந்தவுடன் அன்பர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி அனுப்ப மறக்க வேண்டாம்!

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள் (Post No.3862)

மே மாத 2017 காலண்டர்

ஹேவிளம்பி சித்திரை- வைகாசி 2017

 

Written by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 8-12 am

Post No. 3862

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Festival/ Holidays: மே 1- மே தினம், மே 10- சித்திரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா

 

ஏகாதசி— 6, 21

பௌர்ணமி- 10

அமாவாசை-  25

சுபமுகூர்த்த தினங்கள்-  7, 12, 17, 18, 29

 

மே 1 திங்கட் கிழமை

பணம் பத்தும் செய்யும்

 

மே 2 செவ்வாய்க்கிழமை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

 

மே 3 புதன்கிழமை

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

 

மே 4 வியாழக்கிழமை

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 

மே 5 வெள்ளிக்கிழமை

பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?

 

 

மே 6 சனிக்கிழமை

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும், வட்டிக்கு ஈடல்ல

 

மே 7 ஞாயிற்றுக்கிழமை

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

 

மே 8 திங்கட் கிழமை

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

 

மே 9 செவ்வாய்க்கிழமை

பணம் பார்த்துப் பண்டங் கொள், குணம் பார்த்துப் பெண் கொள்

 

மே 10 புதன்கிழமை

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

 

 

மே 11 வியாழக்கிழமை

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

 

மே 12 வெள்ளிக்கிழமை

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

 

மே 13 சனிக்கிழமை

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

 

மே 14 ஞாயிற்றுக்கிழமை

பணம் என்ன பாடாணம் சுகுணம் ஒன்றே போதும்

 

மே 15 திங்கட் கிழமை

காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன ?

 

மே 16 செவ்வாய்க்கிழமை

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டார்கள்

 

மே 17 புதன்கிழமை

காசுக்கு ஒரு புடவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்

 

மே 18 வியாழக்கிழமை

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் (கம்மாளன்)குஞ்சு ஆகாது

 

மே 19 வெள்ளிக்கிழமை

துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும், துலுக்கக்குட்டி மட்டும் ஆகாது

 

மே 20 சனிக்கிழமை

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

 

 

மே 21 ஞாயிற்றுக்கிழமை

கால் காசுக்கு குதிரையும் வேணும் கொள்ளும் தின்னக் கூடாது, சிட்டாவும் பறக்கனும்

 

மே 22 திங்கட் கிழமை

காசுக்கு இரண்டும் பிசுக்குக்கு (பீசுக்கு) ஒன்றும்

 

மே 23 செவ்வாய்க்கிழமை

துட்டுக்கு இரண்டு, துக்காணிக்கு மூன்று

 

மே 24 புதன்கிழமை

சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்

 

மே 25 வியாழக்கிழமை

செட்டி போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்

 

 

மே 26 வெள்ளிக்கிழமை

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ , திட்டு வந்து விழுந்ததோ?

 

மே 27 சனிக்கிழமை

காசுக்கு லோபி கழுதையினிடத்திற் போனால் போல

 

மே 28 ஞாயிற்றுக்கிழமை

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

 

மே 29 திங்கட் கிழமை

செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் நூலைக் குறைத்தான்

 

மே 30 செவ்வாய்க்கிழமை

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

 

 

மே 31 புதன்கிழமை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 

xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

xxxxx

 

செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆலமரத்தில் பேய் இருக்கிறது.

 

–Subahm–