ஆதிவாசிகளின் சிகை அலங்காரம்

kampti-woman

Written by London Swaminathan

 

Date: 3 October 2016

 

Time uploaded in London: 9-01 AM

 

Post No.3214

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

பெண்கள்,  பிறந்த நாள் முதலே,  தங்களை அலங்கரிக்கத் துவங்கி விட்டார்கள். இதற்கு ஆதிவாசிப் பழங்குடிகளும் விலக்கல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் பல நூற்றுக்கணக் கான பழங்குடி இன மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் வெவ்வேறு வகை திருமணச் சடங்குகள், ஈமச் சடங்குகள், நடை, உடை, பாவனை கொண்டு வாழ்கின்றனர். இப்பொழுது நாகரீகம் வேகமாகப் பரவி வருவதால் அவர்களும் மாறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மைத் திட்டுவதற்காக எழுதி வைத்த பல குறிப்புகள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

 

கருப்புத் தோல் உடைய அவ்வளவு பெயரும் “திராவிடர்கள்” என்றும் அவர்கள் உயரிய நாகரீகம் வாய்ந்தவர்கள் என்றும், அவர்களைக் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் விரட்டி அடித்ததாகவும் வெள்ளைக்காரன் பொய்யுரைகளை பரப்பி இருந்தான். ஆனால் இந்த “திராவிடப் பழங்குடியினரோ” கொஞ்சமும் நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பழக்க வழக்கங்கள் இருப்பதுமாராய்ச்சி செய்வோருக்கு வெள்ளிடை மலையென விளங்கும். இந்த திராவிட– ஆரிய கதைகள் எல்லாம் நல்ல கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்.

 

இதோ சில சிகை அலங்காரங்கள்:

 

பர்மா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் காம்டி இன மக்கள் வசிக்கின்றனர். அந்த இனப் பெண்கள் திருமணமானவுடம் தலைமுடியை உயர்த்தி ‘கொண்டை’ போடுவர். திருமணமாகாத பெண்கள் முடியைக் கழுத்தின் பின்புறத்தில் தொங்கவிட்டு முடித்து வைப்பர்! ஆக ஒரு பார்வையிலேயே யார் திருமணமானர் என்று கண்டுபிடித்துவிடலாம்!

 

ஒரிஸ்ஸா, ஆந்திரா, மத்தியப்பிரதேச எல்லைகளில் காடுகளில் வசிக்கும் கோண்டு இன ஆண்களும் பெண்களும் முடியைப் பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவர். மான் கொம்புகளினால் ஆன பெரிய கொண்டை ஊசியைத் தலையில் குத்திக்கொள்வர். மலர்களையும் சூடுவர். திருமணமாகாத பெண்கள் காதில் விளக்கு மாற்றுக்குச்சியை சொருகிக் கொள்வர். திருமணமானபின்னர் நிறைய தோடுகளை அணிவர்.

 

காதுகளைப் பார்த்துதான் காதலிக்க வேண்டும்!!!

 

நாயர் இனப் பேரழகிகள்

nayars-of-kerala-wiki

கேரளத்தில் வசிக்கும் நாயர் இனப் பெண்கள் பற்றி ஆர்தர் மைல்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் எழுதியது:-

“இந்தியாவிலேயே பேரழகிகள் நாயர் இனப் பெண்களே. அவர்கள் தலை முடி பிசுக்கில்லாமல் பள பள என்று இருக்கும் . எப்போதும் சிகைக்காய் பொடியால் கழுவி சுத்தமாக வைத்து மலர் சூடுவர். தோலில் ஒரு பருவோ கொப்புளமோ வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். மற்ற இனப் பெண்கள் போலல்லாது இடது மூக்கில் மூக்குத்தி அணிவர். குளிக்காமல் எதையும் செய்யார். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதை அறிந்த இனம். ஒரே ஒரு உடற்குறை! காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே!”

 

இங்கிலாந்துக்கு வரும் திருப்பதி முடி

 

ஆர்தர் மைல்ஸ் 1933ல் எழுதியது:–

 

ஒருமுறை என் வீட்டுத் தோட்டக்காரன் மீசை, தலை முடி எல்லாவற்றையும் சிரைத்துவிட்டு வெழுமூன பள பள என்று வேலைக்கு வந்தான். எனக்கோ அதுபற்றிக் கேட்கத் தயக்கம். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனே சொல்லத் துவங்கினான். நேர்த்திக் கடனுக்காக் கடவுளுக்கு முடியைக் கொடுத்ததாகச் சொன்னான்.

 

இந்தியாவில் பணக்காரகளுகுச் சமமாக ஒரு ஏழையும் தானம் செய்யக்கூடியது தலை முடி ஒன்றே. அதில் அவர்களுக்குப் பரம திருப்தி. அதுவும் பெண்கள் தனது  தலை மயிரை கொடுப்பது பெரிய தியாகமே. இப்படி அவர்கள் திருப்பதியிலும் பழனியிலும் முடி காணிக்கை செலுத்தாவிடில் நாம் ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும் முடிகளால் ஆன மெத்தைகளில் உறங்க முடியுமா?

 

பிராமணப் பெண்கள், கணவனை இழந்து விட்டால் தலை முடியை எடுத்துவிட்டு தலையை புடவையால் மறைத்துக் கொள்ளுவர். ஆனால்  ஐயங்கார்களில் தென்கலை சம்பிரதாயத்தினர் இப்படிச் செய்வதில்லை என்றும் ஆர்தர் மைல்ஸ் எழுதியுள்ளார்.

 

(இப்போது முடியைக் களையும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டது)

vv-anni-5

Nilgris:-Toda Tribal woman

பெண்கள் வகிடு எடுப்பது — ஒரு புறம் சக்தியையும் மறுபுறம் சிவனையும் குறிக்கும் என்றும் இது பாசிட்டிவ், நெகட்டிவ் POSITIVE & NEGATIVE சக்திகளை இணைக்கிறது என்றும் 1926ல் ஒருவர் ஆற்றிய உரையையும் மைல்ஸ் விரிவாக கொடுத்துள்ளார் ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க).

vv-aani-4

–subham——