ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)
Written by London Swaminathan
Date: 27 NOVEMBER 2017
Time uploaded in London- 11-55 AM
Post No. 4437
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
டிசம்பர் மாத (ஹேவிளம்பி- கார்த்திகை/மார்கழி) காலண்டர், 2017
இந்த மாதக் காலண்டரில், 31 அபூர்வ ராமன் இருக்கும் இடத்தில் இடம் பெறுகின்றன.
முக்கிய நாட்கள்: – டிசம்பர் 2 -கார்த்திகை தீபம்; 3- ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம், பாஞ்சராத்ர தீபம்; 11-பாரதியார் பிறந்த நாள்; 16- மார்கழி/ தனுர் மாத துவக்கம்; 25-கிறிஸ்துமஸ்; 29-வைகுண்டஏகாதசி;
அமாவாசை – 17; ஏகாதசி – 13, 29; பௌர்ணமி— 3
முகூர்த்த நாட்கள்: 7, 13
XXXXXXXXXXXX
டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை
யத்ர ராமோபயம் நாத்ர நாஸ்தி தத்ர பராபவஹ — வால்மீகீ ராமாயணம் 4-49-15
ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை; தோல்வியும் இல்லை
XXXXXX
டிசம்பர் 2 சனிக்கிழமை
அமோகோ தேவதானாஞ்ச ப்ரஸாதஹ கிம் ந சாதயேத்?
கடவுளின் கருணை இருந்தால் எது சாத்யமில்லை? –கதாசரித் சாஹரம்
XXXXXXX
டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை
அசிந்தனீயோ மஹிமா பரேசிதுஹு –கஹாவத்ரத்னாகர்
கடவுளின் மஹிமை அளபற்கரியது
XXXXXX
டிசம்பர் 4 திங்கட்கிழமை
லோகோ ஹி சர் வோ விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41
பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்
XXXXXX
டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை
ஈஸ்வராணாம் ஹி விநோதரஸிகம் மனஹ — கிராதர்ஜுனீய
கடவுளரின் மனது விநோதரசனையில் திளைக்கிறது.
XXXXXX
டிசம்பர் 6 புதன்கிழமை
ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே
இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
XXXXXX
டிசம்பர் 7 வியாழக்கிழமை
ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே
இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
XXXXXX
டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை
ந ஹி ஈஸ்வரவ்யாஹ்ருதயஹ கதசித்புஷ்னந்தி லோகே விபரீதமர்தம் – — குமார சம்பவம் 3-63
இந்த உலகில் இறைவனின் சொற்கள் பொய்த்ததில்லை
XXXXXX
டிசம்பர் 9 சனிக்கிழமை
தாதுஹு கிம் நாம துர்கதம் –ப்ருஹத்கதாமஞ்சரி
படைத்தவனுக்கு இயலாதது என்ன?
XXXXXX
டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை
ந சந்தி யாதார்த்யவிதஹ பிநாகினஹ –குமார சம்பவம் 5-77
சிவனின் உண்மை நிலையை அறிந்தவர் எவருமிலர்
XXXXXX
டிசம்பர் 11 திங்கட்கிழமை
மதுரவிதுரமிஸ்ராஹா ஸ்ருஷ்டயஹ சம்விதாதுஹு –பிரஸன்ன ராகவ `
இனிப்பையும் கசப்பையும் கலந்தளிப்பவன் இறைவன்
XXXXXX
டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமை
லோகோ ஹி சர்வே விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41
பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்
XXXXXX
டிசம்பர் 13 புதன்கிழமை
த்வந்த்வாத்மகோஅயம் சம்சாரஹ விதினா நிர்மிதோ அத்புதஹ
பிரம்மாவின் படைப்பில்தான் எத்தனை முரண்பாடுகள்? –கஹாவத்ரத்னாகர்
XXXXXX
டிசம்பர் 14 வியாழக்கிழமை
ந சக்யம் லோகஸ்யாதிஷ்டானபூதம் க்ருதாந்தம் வஞ்சயிதும்— பாலசரித
மரணதேவனை ஏமாற்ற எவராலும் முடியாது. உலகின் ஆதாரமே அவன்தான்
XXXXXX
டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை
நாராயணபராஹா சர்வே ந குதஞ்சன பிப்யதி — பாகவதபுராண 6-17-28
நாராயண பக்தர்கள் அஞ்சுவது யாதொன்றுமில
XXXXXX
டிசம்பர் 16 சனிக்கிழமை
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து- விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
நாராயணன் என்ற நாமம் கேட்ட உடனே துக்கங்கள் பறந்தோடும்
XXXXXX
டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை
ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிசர்கோ அதிகாதிகஹ——– கதாசரித் சாஹரம்
பிரம்மாவின் படைப்புகள் அற்புதம், அதி அற்புதம்!
XXXXXX
டிசம்பர் 18 திங்கட்கிழமை
நித்யம்ப்ரயதமனானாம் சஹாயஹ பரமேஸ்வரஹ
கடமையைச் செய்பவனின் வலதுகை ஆண்டவன்
XXXXXX
டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை
பதஹ ச்ருதேர்தர்ஸயிதார ஈஸ்வரா மலீமசாமாத்ததேந பத்ததீம்
குறுக்கு புத்தி கொண்டவர்களின் சதிகளை இறைவன் மூடிமறைப்பதில்லை அவர்களே, வேதம் சொல்லும் அறவழிப்பாதையில் செல்லக் கட்டளையிடுபவர்கள் –காளிதாஸரின் ரகுவம்சம் 3-46
XXXXXX
டிசம்பர் 20 புதன்கிழமை
ப்ராஜானாம் தைவதம் ராஜா பிதரௌ தைவதம் சதாம்-
ராமாயண மஞ்சரி
மக்களுக்கு தெய்வம் போன்றவர் ராஜா; நல்லோருக்கு தெய்வம் போன்றவர் அவரவர் பெற்றோர்.
XXXXXX
டிசம்பர் 21 வியாழக்கிழமை
ப்ரசன்னே ஹி கிம் ப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே
ஆண்டவன் மகிழ்ந்தால், நாம் அடைய முடியாததுதான் என்ன? —–கதாசரித் சாஹரம்
XXXXXX
டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை
விஷமப்யம்ருதம்கஸ்சித்பவேதம்ருதம் வாவிஷ்மீஸ்வரேச்சயா– காளிதாஸரின் ரகுவம்சம் 8-46
ஆண்டவன் நினைத்தால் விஷம் அமுதமாக மாறும்; அமுதம், விஷமாக மாறும்
XXXXXX
டிசம்பர் 23 சனிக்கிழமை
அஹம் த்யாகி ஹரிம் லபேத்
அஹம்காரத்தை விட்டவன் கடவுளை அடைவான் -கஹாவத்ரத்னாகர்
XXXXXX
டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை
வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஷ்ணேன தேஹோத்தரணாய சேஷஹ —-குமார சம்பவம் 3-13
ஆதி சேஷன் எனும் பாம்பு பூமியையே தாங்குவதைப் பார்த்த கிருஷ்ணன், அதைத் தனக்கு மெத்தையாகப் போட்டுக்கொண்டான்
XXXXXX
டிசம்பர் 25 திங்கட்கிழமை
சுதுஷ்கரமபி கார்யம் ஸித்யத்யனுக்ரஹவதீஷ்விஹ தேவதாசு -கதாசரித் சாஹரம்
ஆண்டவன் அருள் இருந்தால் நடக்கமுடியாத செயல்களும் நடந்துவிடும்
XXXXXX
டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை
சுசிகாமா ஹி தேவதாஹா—– பாரதமஞ்சரி 3-32
சுத்தம் விஷயத்தில் தெய்வங்கள் மிகவும் அலட்டிக்கொள்ளும்
XXXXXX
டிசம்பர் 27 புதன்கிழமை
ஸ்வல்பகாரணமாஸ்ரித்ய விராட் கர்ம க்ருதம் மஹத் – கஹாவத்ரத்னாகர்
சொல்பத்தைக் கொண்டு மஹத்தானவைகளைப் படைத்துவிட்டார் பிரம்மா
XXXXXX
டிசம்பர் 28 வியாழக்கிழமை
தேவோ துர்பலதாதகஹ —– சுபாஷித ரத்ன பாண்டாகார 3-136
பலவீனமானவருக்கு இறைவன் உதவமாட்டான்
XXXXXX
டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை
கோ தேவதா ரஹஸ்யானி தர்கயிஷ்யதி
இறைவனின் லீலைகளை அறிபவர் யார் ?—— விக்ரமோர்வஸீயம்
XXXXXX
டிசம்பர் 30 சனிக்கிழமை
சர்வதா சத்ருசயோகேஷு நிபுணஹ கலு ப்ரஜாபதிஹி – பாததாதிதக 115-2
ஒருமித்த கருத்துடையோரை ஒன்று சேர்ப்பதில் இறைவன் திறமைசாலி
XXXXXX
டிசம்பர் 31 ஞாயிற்றுக்கிழமை
ஸர்வதேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி
நாம் செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனை அடைகிறது
First January MONDAY 2018, Happy New Year
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX