
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8285
Date uploaded in London – 4 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பனைக் ‘காப்பி’ (copy) அடித்தாரா காந்திஜி ?
காந்திஜி சொன்ன ராம ராஜ்யம்!
மஹாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுதும் ராம ராஜ்யம் ஒன்று அமைக்க கனவு கண்டார். ஆனால் அவர் கண்ட கனவு நனவாகவில்லை அது அரசியல் விஷயம் . இங்கு விவாதிக்க விரும்பவில்லை.

ராம ராஜ்யம் என்றால் என்ன?
ஒரு இளம்பெண் தைரியமாக, பயமே இல்லாமல் , நள்ளிரவிலும் நடமாடக் கூடிய நாடு அது. அதாவது உண்மையான சுதந்திரம் பெற்ற நாடு அது என்றார். இந்துக்கள் ரிக் வேத கல்யாண மந்திரத்தில் – (RV.10-85 ) சொல்லும் முதல் வரி ‘உண்மையே பூவுலத்தைத் தாங்கி நிற்கிறது ‘ – என்ற அடிப்படையில் அமைந்த நாடு அது.
ராம ராஜ்யம் பற்றி வால்மீகியை விட அழகாக வருணிக்கிறான் கம்பன் .
அயோத்தியில் தானம் செய்ப்பவர்களே இல்லை.
இது என்னடா , அவ்வளவு கருமிகளா அந்த மக்கள் ?
இல்லை!
அந்த நாட்டில் பிச்சைக் காரர்களே இல்லை!!
பிச்சை கேட்க ஆள் இருந்தால்தானே தானம் தருமம், நன்கொடை எல்லாம்.
கார்ல் மார்க்ஸும் (Karl Marx) நம்மைக் காப்பி அடித்தே ‘கம்யூனிசம்’ பற்றிப் பேசினார் போலும்.
ஆனால் அவர்கள் குத்து வெட்டு கொலை வன்முறை என்பதையும் சேர்த்துக் கொண்டதால் ரொம்ப விலகிப் போயினர் (Ends justify Means)
‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே’ — என்று சமதர்ம சமுதாயத்தைக் கம்பன் படம்பிடித்துக் காட்டுகிறான்.
இப்படி ஒரு சமுதாயம் அம்மைந்துவிட்டால் பின்னர் கிருதயுகம் வந்து விடும் !
அதைத்தான் பாரதியும் கனவு கண்டான் –
“இடிபட்ட சுவர் போல கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ” — என்று இடி முழக்கம் செய்தான் .
“பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்குங் கிருதயுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே”
அதே பாட்டில்
“கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன் ; வெற்றி
தருஞ் சுடர் விநாயகன் தாளிணை வாழியே”– என்கிறான் .
வாழ்க பாரதி!!

XXXX
இதோ கம்பன் பாடல் –
“கல்லாது நிற்பர் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர் அ ல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையர்களும் இல்லை மாதோ”
—கம்ப ராமாயணம், பால காண்டம், நகரப் படலம்
பொருள்-
கல்வியில் பல பிரிவுகள் உண்டு; இவர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றவர். இவர் இலக்கியத்தில் டாக்டர் (D.Litt.) பட்டம் பெற்றவர் என்று யாருமே அயோத்தி யுனிவர்சிட்டியில் (University of Ayodhya) இல்லை . ஏனெனில் எல்லோரும் எல்லாத் துறைகளிலும் டாட்டர் பட்டம் வாங்கிவிட்டனர் . இவர்தான் சிறந்தவர், அவர்தான் சிறந்தவர் என்றும் சொல்லமுடியாது .
மக்கள் அனைவரும் எல்லா வகை செல்வங்களையும் பெற்றிருப்பதால் அங்கே ஏழைகளே இல்லை.; மில்லியனர், பில்லியனர் (Millionaire, Billionaire) என்று கோடீஸ்வரர், லட்சாதிபதி பட்டியலையும் ஆண்டுதோறும் பத்திரிகைகள் பிரசுரிப்பதில்லை.
“கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்ல்லை மாதோ”
குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்று எழுதி இருக்கிறான். வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது என்கிறான் . திருடர்கள் இல்லை; ஆகையால் காவலும் இல்லை. பிச்சைக் கார்களையே பார்க்க முடியவில்லை என்று மற்ற யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். இதுதான் ராமராஜ்யம் .
ராம ராஜ்யம் வாழ்க! கிருத யுகம் எழுக மாதோ!!
Tags – ராம ராஜ்யம், கம்பன், கிருத யுகம், காந்தி, பாரதி, கார்ல் மார்க்ஸ்
tags — ராம ராஜ்யம், கம்பன், கிருத யுகம், காந்தி, பாரதி, கார்ல் மார்க்ஸ்