31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

Written by London Swaminathan 

 

Date: 25 FEBRUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4785

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் 2018  ‘நற்சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)

இந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ;  14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி முடிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’;  30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.

பௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17  ; ஏகாதஸி விரதம்-13, 27;

சுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30

 

 

 

மார்ச் 1 வியாழக்கிழமை

 

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)

மார்ச் 2 வெள்ளிக்கிழமை

 

நின்றன நின்றன நில்லாவென உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)

 

மார்ச் 3 சனிக்கிழமை

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)

 

மார்ச் 5 திங்கள் கிழமை

வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)

மார்ச் 6 செவ்வாய்க் கிழமை

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்

செய்ததெனினுஞ் செருப்பும்தன் காற்கேயா

மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)

 

மார்ச் 7  புதன் கிழமை

 

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)

 

மார்ச் 8 வியாழக்கிழமை

 

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

யிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)

 

மார்ச் 9 வெள்ளிக்கிழமை

நுண்ணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)

 

மார்ச் 10 சனிக்கிழமை

காம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே

ஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு

நிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)

 

மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை

 

பாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே

ஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும் நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)

 

மார்ச் 12 திங்கள் கிழமை

கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி

விடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)

 

மார்ச் 13  செவ்வாய்க் கிழமை

 

அருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்

பொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)

மார்ச் 14  புதன் கிழமை

நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்த்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)

 

மார்ச் 15 வியாழக்கிழமை

 

தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்

தெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)

 

மார்ச் 16 வெள்ளிக்கிழமை

 

வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)

 

மார்ச் 17 சனிக்கிழமை

கடையெலாங் காய்பசி யஞ்சுமற்றேனை

இடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )

 

மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை

 

புறங்கடை வைத்தீவர் சோறு மதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)

 

மார்ச் 19 திங்கள் கிழமை

 

உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)

 

மார்ச் 20  செவ்வாய்க் கிழமை

வாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)

 

மார்ச் 21 புதன் கிழமை

கலா அற் கிளிகடியுங் கானக நாட

இலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா! செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)

மார்ச் 22 வியாழக்கிழமை

 

இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)

மார்ச் 23 வெள்ளிக்கிழமை

 

இரவலர் கன்றாக வீவார வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)

 

 

மார்ச் 24 சனிக்கிழமை

அட்டதடைத்  திருந்துண்டொழுகு  மாவதின் மாக்கட்

கடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)

 

 

மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை

ஓதியுமோதா ருணர்விலா ரோதாதும்

ஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)

 

மார்ச் 26 திங்கள் கிழமை

வலவைகளல்லாதார் காலாறு சென்று

கலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)

 

மார்ச் 27 செவ்வாய்க் கிழமை

செல்வம் பெரிதுடையாராயினுங் கீழ்களை

நள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)

மார்ச் 28 புதன் கிழமை

 

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும்  புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)

மார்ச் 29 வியாழக்கிழமை

 

கடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்

படாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)

 

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

 

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)

மார்ச் 31 சனிக்கிழமை

 

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம்

(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

–SUBHAM–

 

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)


Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 11-55 AM

 

 

Post No. 4437

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

டிசம்பர் மாத (ஹேவிளம்பி- கார்த்திகை/மார்கழி) காலண்டர், 2017

இந்த மாதக் காலண்டரில், 31 அபூர்வ ராமன் இருக்கும் இடத்தில் இடம்  பெறுகின்றன.

 

முக்கிய நாட்கள்:  – டிசம்பர் 2 -கார்த்திகை தீபம்; 3- ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம், பாஞ்சராத்ர தீபம்; 11-பாரதியார் பிறந்த நாள்; 16- மார்கழி/ தனுர் மாத துவக்கம்; 25-கிறிஸ்துமஸ்; 29-வைகுண்டஏகாதசி;

அமாவாசை – 17; ஏகாதசி – 13, 29; பௌர்ணமி—  3

முகூர்த்த நாட்கள்: 7, 13

 

XXXXXXXXXXXX

டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை

யத்ர ராமோபயம் நாத்ர நாஸ்தி தத்ர பராபவஹ — வால்மீகீ ராமாயணம் 4-49-15

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை; தோல்வியும் இல்லை

XXXXXX

 

டிசம்பர் 2 சனிக்கிழமை

அமோகோ தேவதானாஞ்ச ப்ரஸாதஹ கிம் ந சாதயேத்?

கடவுளின் கருணை இருந்தால் எது சாத்யமில்லை? –கதாசரித் சாஹரம்

 

XXXXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை

அசிந்தனீயோ மஹிமா பரேசிதுஹு –கஹாவத்ரத்னாகர்

கடவுளின் மஹிமை அளபற்கரியது

XXXXXX

 

டிசம்பர் 4 திங்கட்கிழமை

லோகோ ஹி சர் வோ விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை

 

ஈஸ்வராணாம் ஹி விநோதரஸிகம் மனஹ  — கிராதர்ஜுனீய

கடவுளரின் மனது விநோதரசனையில் திளைக்கிறது.

XXXXXX

டிசம்பர் 6 புதன்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 7 வியாழக்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை

ந ஹி ஈஸ்வரவ்யாஹ்ருதயஹ கதசித்புஷ்னந்தி லோகே விபரீதமர்தம் – — குமார சம்பவம் 3-63

இந்த உலகில் இறைவனின் சொற்கள் பொய்த்ததில்லை

XXXXXX

 

டிசம்பர் 9 சனிக்கிழமை

தாதுஹு கிம் நாம துர்கதம் –ப்ருஹத்கதாமஞ்சரி

படைத்தவனுக்கு இயலாதது என்ன?

XXXXXX

 

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை

ந சந்தி யாதார்த்யவிதஹ பிநாகினஹ –குமார சம்பவம் 5-77

சிவனின் உண்மை நிலையை அறிந்தவர் எவருமிலர்

XXXXXX

டிசம்பர் 11 திங்கட்கிழமை

மதுரவிதுரமிஸ்ராஹா ஸ்ருஷ்டயஹ சம்விதாதுஹு –பிரஸன்ன ராகவ `

இனிப்பையும் கசப்பையும் கலந்தளிப்பவன் இறைவன்

XXXXXX

 

டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமை

லோகோ ஹி சர்வே விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

 

 

டிசம்பர் 13 புதன்கிழமை

த்வந்த்வாத்மகோஅயம் சம்சாரஹ விதினா நிர்மிதோ அத்புதஹ

பிரம்மாவின் படைப்பில்தான் எத்தனை முரண்பாடுகள்? –கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 14 வியாழக்கிழமை

ந சக்யம் லோகஸ்யாதிஷ்டானபூதம் க்ருதாந்தம் வஞ்சயிதும்— பாலசரித

மரணதேவனை ஏமாற்ற எவராலும் முடியாது. உலகின் ஆதாரமே அவன்தான்

XXXXXX

 

டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை

நாராயணபராஹா  சர்வே ந குதஞ்சன பிப்யதி — பாகவதபுராண 6-17-28

நாராயண பக்தர்கள் அஞ்சுவது யாதொன்றுமில

XXXXXX

டிசம்பர் 16 சனிக்கிழமை

ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து- விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

நாராயணன் என்ற நாமம் கேட்ட உடனே துக்கங்கள் பறந்தோடும்

XXXXXX

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிசர்கோ அதிகாதிகஹ——– கதாசரித் சாஹரம்

பிரம்மாவின் படைப்புகள் அற்புதம், அதி அற்புதம்!

XXXXXX

 

டிசம்பர் 18 திங்கட்கிழமை

நித்யம்ப்ரயதமனானாம் சஹாயஹ பரமேஸ்வரஹ

கடமையைச் செய்பவனின் வலதுகை ஆண்டவன்

XXXXXX

டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை

பதஹ ச்ருதேர்தர்ஸயிதார ஈஸ்வரா மலீமசாமாத்ததேந பத்ததீம்

 

குறுக்கு புத்தி கொண்டவர்களின் சதிகளை இறைவன் மூடிமறைப்பதில்லை அவர்களே,  வேதம் சொல்லும் அறவழிப்பாதையில் செல்லக் கட்டளையிடுபவர்கள் –காளிதாஸரின்  ரகுவம்சம் 3-46

 

XXXXXX

டிசம்பர் 20 புதன்கிழமை

 

ப்ராஜானாம் தைவதம் ராஜா பிதரௌ தைவதம் சதாம்-

ராமாயண மஞ்சரி

மக்களுக்கு தெய்வம் போன்றவர் ராஜா;  நல்லோருக்கு தெய்வம் போன்றவர் அவரவர் பெற்றோர்.

XXXXXX

டிசம்பர் 21 வியாழக்கிழமை

 

ப்ரசன்னே ஹி கிம் ப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஆண்டவன் மகிழ்ந்தால், நாம் அடைய முடியாததுதான் என்ன? —–கதாசரித் சாஹரம்

XXXXXX

 

டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை

விஷமப்யம்ருதம்கஸ்சித்பவேதம்ருதம் வாவிஷ்மீஸ்வரேச்சயா– காளிதாஸரின்  ரகுவம்சம் 8-46

ஆண்டவன் நினைத்தால் விஷம் அமுதமாக மாறும்; அமுதம், விஷமாக மாறும்

XXXXXX

டிசம்பர் 23 சனிக்கிழமை

அஹம் த்யாகி ஹரிம் லபேத்

அஹம்காரத்தை விட்டவன் கடவுளை அடைவான் -கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஷ்ணேன தேஹோத்தரணாய சேஷஹ —-குமார சம்பவம்  3-13

ஆதி சேஷன் எனும் பாம்பு பூமியையே தாங்குவதைப் பார்த்த கிருஷ்ணன், அதைத் தனக்கு மெத்தையாகப் போட்டுக்கொண்டான்

XXXXXX

 

டிசம்பர் 25 திங்கட்கிழமை

சுதுஷ்கரமபி கார்யம் ஸித்யத்யனுக்ரஹவதீஷ்விஹ தேவதாசு -கதாசரித் சாஹரம்

ஆண்டவன் அருள் இருந்தால் நடக்கமுடியாத செயல்களும் நடந்துவிடும்

XXXXXX

 

டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை

சுசிகாமா ஹி தேவதாஹா—– பாரதமஞ்சரி 3-32

சுத்தம் விஷயத்தில் தெய்வங்கள் மிகவும் அலட்டிக்கொள்ளும்

XXXXXX

 

 

டிசம்பர் 27 புதன்கிழமை

ஸ்வல்பகாரணமாஸ்ரித்ய விராட் கர்ம க்ருதம் மஹத் – கஹாவத்ரத்னாகர்

சொல்பத்தைக் கொண்டு மஹத்தானவைகளைப் படைத்துவிட்டார் பிரம்மா

XXXXXX

 

டிசம்பர் 28 வியாழக்கிழமை

தேவோ துர்பலதாதகஹ —– சுபாஷித ரத்ன பாண்டாகார 3-136

பலவீனமானவருக்கு இறைவன் உதவமாட்டான்

XXXXXX

 

டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கோ தேவதா ரஹஸ்யானி தர்கயிஷ்யதி

இறைவனின் லீலைகளை அறிபவர் யார் ?—— விக்ரமோர்வஸீயம்

XXXXXX

 

டிசம்பர் 30 சனிக்கிழமை

சர்வதா சத்ருசயோகேஷு நிபுணஹ கலு ப்ரஜாபதிஹி – பாததாதிதக 115-2

ஒருமித்த கருத்துடையோரை ஒன்று சேர்ப்பதில் இறைவன் திறமைசாலி

XXXXXX

டிசம்பர் 31  ஞாயிற்றுக்கிழமை

ஸர்வதேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

நாம் செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனை அடைகிறது

 

First January MONDAY 2018,  Happy New Year

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

31 பொய்கை ஆழ்வார் பொன்மொழிகள் (Post No.4037)

ஜூலை 2017 நற்சிந்தனை காலண்டர்

(ஹேவிளம்பி வருடம் ஆனி- ஆடி)

 

Written by London Swaminathan
Date: 29 June 2017
Time uploaded in London- 21-47
Post No. 4037

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

விழா நாட்கள்:- விவேகாநந்தர் நினைவு தினம்-4; குரு பூர்ணிமா-8;

தட்சிணாயன புண்யகாலம்-17;  ஆடி அமாவாசை-23; ஆடிப் பூரம்-26;

நாக பஞ்சமி- 27

 

அமாவாசை-23; பௌர்ணமி-8; ஏகாதசி- 4, 19.

சுபமுகூர்த்த நாட்கள்- 3, 16

ஜூலை 1 சனிக்கிழமை

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை

இடர் ஆழி நீங்குகவே

 

ஜூலை 2 ஞாயிற்றுக் கிழமை

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?

ஒன்றும் அதனை உணரேன் நான்

 

ஜூலை 3 திங்கட் கிழமை

பார் அளவும் ஓர் அடிவைத்து, ஓர் அடியும் பார் உடுத்த

நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே

 

ஜூலை 4 செவ்வாய்க் கிழமை

ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த

ஆலம் அமர் கண்டத்து அரன்

ஜூலை 5 புதன் கிழமை

அரன் நாரணன் -நாமம்; ஆன் விடை, புள்- ஊர்தி

உரை-நூல், மறை; உறையும் கோயில் -வரை, நீர்

ஜூலை 6 வியாழக் கிழமை

கரு அரங்கத்துள் கிடந்து கை தொழுதேன், கண்டேன்

திருவரங்கம் மேயான் திசை

 

ஜூலை 7  வெள்ளிக் கிழமை

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம் – அசைவு இல் சீர்க் கண்ணன்

 

 

ஜூலை 8 சனிக்கிழமை

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்

விண்ணும் விழுங்கியது மெய் என்பர்- உலகு அளவும் உண்டோ உன் வாய்?

 

 

ஜூலை 9 ஞாயிற்றுக் கிழமை

வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா;

 

ஜூலை 10 திங்கட் கிழமை

அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி

இவர் இவர் எம்பெருமான் என்று சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர்

 

ஜூலை 11 செவ்வாய்க் கிழமை

முதல் ஆவார் மூவரே; அம்மூவருள்ளும்

முதல் ஆவான் மூரி நீர் வண்ணன்

ஜூலை 12 புதன் கிழமை

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி

அழுதேன்; அரவணைமேல் கண்டு தொழுதேன்

 

ஜூலை 13 வியாழக் கிழமை

வடி உகிரால்

ஈர்ந்தான் இரணியனது ஆகம்

 

ஜூலை 14  வெள்ளிக் கிழமை

தாமரை மலர்ச் சேவடியை வானவர் கைகூப்பி

நிரைமலர் கொண்டு ஏத்துவரால் நின்று

 

ஜூலை 15 சனிக்கிழமை

படை ஆழி; புள் ஊர்தி; பாம்பு- அணையான் பாதம்

அடை; ஆழி நெஞ்சே, அறி

ஜூலை 16 ஞாயிற்றுக் கிழமை

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு, ஆய்ச்சி

உரலோடு உறப் பிணித்த நான்று, குரல் ஓவாது ஏங்கி

 

ஜூலை 17 திங்கட் கிழமை

தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே- வானோர்

மனச் சுடரைத் தூண்டும் மலை

 

ஜூலை 18 செவ்வாய்க் கிழமை

 

மலையால் குடை கவிழ்த்து, மா வாய் பிளந்து

சிலையால் மராமரம் ஏழ் செற்று, கொலையானை

போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்

 

ஜூலை 19 புதன் கிழமை

ஆறிய அன்பு இல அடியார் தம் ஆர்வத்தால்

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ

 

ஜூலை 20 வியாழக் கிழமை

இரணியனைப் புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால்

நீ மண் இரந்து கொண்ட வகை

ஜூலை 21  வெள்ளிக் கிழமை

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே – வெண் சங்கம்

ஊதிய வாய் மால் உகந்த ஊர்

 

ஜூலை 22 சனிக்கிழமை

மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே – மேல் அசுரர்

கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று

 

ஜூலை 23 ஞாயிற்றுக் கிழமை

புறன் உரையே ஆயினும், பொன் ஆழிக் கையான்

திறன் உரையே சிந்தித்திரு

 

ஜூலை 24 திங்கட் கிழமை

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்

திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்?

 

ஜூலை 25 செவ்வாய்க் கிழமை

மன மாசு தீரும்; அரு வினையும் சாரா;

தனம் ஆய தானே கைகூடும்

 

ஜூலை 26 புதன் கிழமை

 

தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம்தானே

தமர் உகந்தது எப் பேர், மற்று அப்பேர்

ஜூலை 27 வியாழக் கிழமை

 

மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை

பாதம் – அத்தால் எண்ணினான் பண்பு

 

ஜூலை 28  வெள்ளிக் கிழமை

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்

சேரி திரியாமல் செந்நிறீஇ, கூரிய

மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே

 

ஜூலை 29 சனிக்கிழமை

சுழல் ஒன்று எடுத்து, ஒரு கை சுற்றி, ஓர் கைமேல்

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்

செரு ஆ ழி ஏந்தினான்

 

ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை

எண்மர், பதினொருவர், ஈர் அறுவர், ஓர் இருவர்

வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி

 

ஜூலை 31 திங்கட் கிழமை

சென்றால் குடை ஆம்; இருந்தால் சிங்காசனம் ஆம்

நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் புணையாம் (ஆதிசேடன்)

 

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; வியவேன்.

 

—Subham–

 

 

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.