காளிதாசன் காவியங்களில் பெண் கல்வி (Post No.3694)

Written by London swaminathan

 

Date: 5 March 2017

 

Time uploaded in London:- 14-20

 

Post No. 3694

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணவ மாணவியர் கல்விப் பயிற்சி பற்றி காளிதாசன் கூறும் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. இந்த அளவுக்கு உயரிய கருத்துகள், இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இருந்ததா என்பது கேள்விக்குறியே. நமக்கு இணையாக அருகில் வருவது கிரேக்க பண்பாடு ஒன்றுதான். சாக்ரடீஸ் (Socrates), பிளாட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) ஆகியோர் இது பற்றிச் சிந்தித்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உபநிஷத்துகளின் முன்னால் — அவர்கள் மலைகளுக்கு முன் நின்று கொசுக்கள் போலவே காணப்படுவர். கேள்வி கேட்டு அதற்குப் பதில் சொல்லும் முறைக்கு — தடை எழுப்பி விடை காணும் பாணிக்கு — சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்று பெயர் சூட்டீனர் வெள்ளையர். ஆனால் அது உபநிஷதத்திலேயே உள்ளது!

 

காளிதாசன் கருத்துக்களைக் கண்போம்:

யார் நல்ல ஆசிரியர் என்பதை அவன் மாளவிகாக்னிமித்திரம் (மாளவிகா+ அக்னிமித்ரம்)  நாடகத்தில் செப்புவான்:-

நல்ல ஆசிரியர்க்கு அறிவும் அதைக் கற்பிக்கும் திறனும் வேண்டும் என்பான்.

 

“சிலர் நன்றாக நடிப்பார்கள்; இன்னும் சிலர் அந்தக் கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பர்; இவ்விரு திறமைகளிலும் யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்களே ஆசிரியர்களிடத்தில் முதலிடம் பெறுவர் (1-16)

 

ஸ்லிஷ்டா க்ரியா கஸ்யசித் ஆத்மசம்ஸ்தா

சங்க்ராந்திர் அன்யஸ்ய விசேஷயுக்தா

யஸ்யோபயம் சாது ச சிக்ஷகாணாம்

துரி ப்ரதிஷ்டாபயிதவ்ய ஏவ

–மாளவிகாக்னி மித்ரம் 1-16

 

பாத்திரம் அறிந்து தானம் செய் – என்பது  தமிழ்ப் பழமொழி. இது கல்வி கற்பிப்பதிலும் பொருந்தும்.

புத்திசாலி மாணவர்களுக்குப் போதிக்கும் விஷயங்கள் கடலில் முத்துச் சிப்பியின் வாயில் விழுந்த மழைத்துளிகளுக்குச் சமம் என்பான்.

(சுவாதி நட்சத்திரத்தன்று முத்துச் சிப்பிகளின் வாயில் விழும் மழைத் துளிகள் முத்து ஆகும் என்பது இந்தியர் நம்பிக்கை; முத்து பற்றிய எனது கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்)

 

பாத்ர விசேஷம் ந்யஸ்தம்

குணாந்தரம் வ்ரஜதி சில்பமாதாதுஹு

ஜலமிவ சமுத்ர சுக்தௌ

முக்தா பலதாம் பயோதரஸ்ய

–மாளவிகாக்னி மித்ரம் 1-6

சாதாரண இடங்களில் மழை விழும்போது அதனால் பயன் குறைவு. வறண்ட  நிலத்தில் விழுந்தாலோ பூமி உறிஞ்சிவிடும். எங்கு மழை விழுகிறதோ அதைப் பொறுத்தே பலன். இதே போல ஆசிரியரும் ஒரு வகுப்பிலுள்ள 30, 40 பேருக்குப் பாடம் போதிக்கிறார். அவர் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி. இருந்தபோதிலும் புத்திசாலியான ஓரிருவரிடத்தில் அது முத்துக்களை உண்டாக்குகின்றது.

 

நல்ல அருமையான உவமை. மழையிடமோ ஆசிரியரிடமோ பாரபட்சம் இல்லை; பெறுவோரின் நிலையைப் பொறுத்து அதன் பயன் அமையும்.

கல்வியின் நோக்கம் என்ன?  

கல்வியின் நோக்கம் என்ன?  மேலை நாட்டு மாணவனிடம் கேட்டால் நல்ல சம்பளம் வாங்க நல்ல கல்வி என்பான். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்; கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு; “உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு” என்பான். ஆனால் உண்மையில் கல்வி என்பது சாகாவரம் தருவதற்காகும். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவனும் காளிதாசனும் சொல்வர்:-

 

சைசவே அப்யஸ்த வித்யானாம் யௌவனே விஷயைஷிணாம்

வார்த்தகே முனிவ்ருத்தீனாம் யோகேனாந்தே தனுத்யஜாம்

–ரகுவம்சம் 1-8

 

“இளம் வயதில் கற்கப்பட்ட கல்வியை உடையவர்களும், வாலிபப்  பருவத்தில் சுகத்தை விரும்புபவர்களும் வயோதிகப் பருவத்தில் முனிவர்களின் தொழிலை (தவம்) உடையவர்களும் முடிவில் ஈசுவர தியானத்தினால் உடலை விடுபவர்களுமான ரகுவம்சவத்தரின் சரிதத்தை கூறப்போகிறேன்”.

 

இளமையில் கற்கும் கல்வி, மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே காளிதாசன் கண்ட உண்மை.

 

பெண்களின் கல்வி

குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றிக் காளிதாசன் கூறுவதால் அக்காலத்தில் பெண்களின் கல்வி பற்றி அறிய முடிகிறது.

“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.

(இரவு நேரத்தில் ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் காளிதாசன் பல இடங்களில் பாடியுள்ளான்).

 

தாம் ஹம்சமாலாஹா சரதீவ கங்காம்  மஹௌஷதிம் நக்தமிவாத்ம பாசஹ

ஸ்திரோபதேசாமுபதேசகாலே ப்ரபேதிரே ப்ராக்தன ஜன்மவித்யாஹா (1-30)

 

காளிதாசன் படைத்த பெண்களில் சகுந்தலை, இயற்கையிடமிருந்தும், கண்வ முனிவரிடமும் கல்வி கற்றாள்.

 

மேகதூதத்தில் யக்ஷனின் மனைவி ஓவியம் தீட்டல், கவிதை புனைதல், சங்கீதம் ஆகியவற்றில் வல்லவள்!

 

மாளவிகாக்னிமித்ரத்தில், மாளவிகா ஒரு சிறந்த நர்தகி, பாடகி.

 

பொதுவாகப் பெண்கள் விவேகமும், பகுத்தறிவும் உடையவர்கள் என்பது காளிதசனின் கணிப்பு:

 

நிசர்கநிபுணாஹா ஸ்த்ரியஹ (மா.அ. 2)

 

பெண்கள் லட்சுமியின் அவதாரம்; அவர்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் அவனுடைய பொன்மொழிகள்:

லக்ஷ்மீரிவ குணோன்முகீ (ரகுவம்சம் 12-26)

மனைவி என்பவள் இல்லுறை தெய்வம், ஒரு அமைச்சர், நம்பிக்கைக்குரிய ரஹசியங்களைப் பகிரும் நண்பன், கணவனின் சிஷ்யை, தூய்மையின் உறைவிடம், வீரத் தாய் என்றெல்லாம் புகழ்வான். இவை எல்லாம் பெண்களை மிகப் பெரிய மேதாவிகளாகக் காட்டுகின்றன:-

 

க்ருஹிணீ சசிவஹ சகீ மிதஹ ப்ரியசிஹ்யா லலிதே கலாநிதௌ

கருணாவிமுகேன ம்ருத்யுனா ஹரதா த்வாம் வத கிம் ந மே ஹ்ருதம்

–ரகுவம்சம் 8-67

 

நீ எனக்கு மனைவியாகவும் மந்திரியாகவும், தனிமையில் துணைவியாகவும், மனோஹரமான கலைகளின் பிரயோஹத்தில் அன்பிற்குகந்த மாணவியாகவும் இருந்தாய்; ஆகையால் உன்னைக் கவருகின்ற யமன் என்னிடமிருந்து எதைத்தான் பறிக்கவில்லை? சொல் (இந்த எல்லா விஷயங்களையும் நான் இழப்பேன்)

 

 

பத்ரார்சி வீரபத்னீனாம் ஸ்லாக்யாயாம் ஸ்தாபிதா துரி

வீரசூரிதி சப்தோயம் தனயாத்வாம் உபஸ்திதஹ

-மாளவிகா. 5-16

“உன்னுடைய கணவன் காரணமாக வீரர்களின் மனைவியர் வரிசையில் நீ முதலிடம் பெறுகிறாய்; ஆனால் உன் மகன் தான் உனக்கு வீரத்தாய் என்ற பட்டத்தைத் தருகிறான்”

 

–SUBHAM–

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654)

Written by London swaminathan

 

Date: 20 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-54

 

Post No. 3654

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பழைய அரச வம்சம் (Old Kingdom) முடிந்தவுடன், கி.மு.2200 வாக்கில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன; கடவுள் என்று கருதப்பட்ட மன்னனின் அதிகாரங்கள் குறைந்து மனிதன் என்ற நிலையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். மன்னரின் கால்களை முத்தமிடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாக கருதப்பட்ட நிலை மாறி, மன்னரைக் கவிழ்க்கும் முயற்சிகள் பெருகின. இதை நேரில் கண்ட ஒரு புலவர் நமக்காக எழுதிவைத்துச்  சென்றுள்ளார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு பின்னர் படித்தாலும் அதிலுள்ள கவிநயம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல காளிதாசனும் ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி சில அ ரசர்கள் பற்றிப் புலம்பியுள்ளார். காஷ்மீரின் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்ற நூலாக எழுதிய கல்ஹணரும் இதே போல காஷ்மீரில் இந்து சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது என்று கவி பாடியுள்ளார். கவிஞர்கள் என்றுமே உண்மை விளம்பிகள்!

 

இந்தக் கவிஞரின் பெயர் இபுவேர் (Ipuwer) அல்லது அய்புவேர. அவருடைய கவிதை சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆதிகால எகிப்திய இலக்கியத்தில் சிறந்த ஒரு பகுதி என்று கருதப்படுகிறது. இபுவேர் சொல்கிறார்:

 

“அரசன் கிழவன் ஆகிவிட்டான்; அரண்மனைக்குள் பாதுகாப்பாக உள்ளான். அவனுக்குத் தெரியுமா மக்கள் படும்பாடு! அவனைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அவனுக்கு இதுபற்றித் தெரியாமல் மறைத்துவிட்டனர். எகிப்தைப் பீடித்துள்ள நோய்கள் இரண்டு; அதிகமான வெளிநாட்டினர் தங்கு தடையின்றி உள்ளே வந்துவிட்டனர். அத்தோடு பழைய சமூக நிலை தலை  கீழாக மாறிவிட்டது

இதைப் பற்றித்தான் எல்லோரும் புகார் செய்கின்றனர். வேலைக்காரிகள், மஹாராணிகளின் இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்; அதிகாரிகள் சட்டவிரோத ஆட்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. இளவரசர்களின் குழந்தைகளை சுவரில் மோதி கொல்கின்றனர்”.

கடவுள்- அரசன் தொடர்பு மாறியவுடன் அரசன்–மக்கள் தொடர்பும் மாறிவிட்டது நாலாவது (Fourth Dynasty) அரச வம்ச மன்னன் ஒருவன், தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை தனது காலை முத்தமிட அனுமதித்தான். அதை அந்த அதிகாரி பெரிய பாக்கியமாகக் கருதினார். இவையெல்லாம் பிறகாலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாதவை

 

எகிப்தியர்களே இதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளைப் பொற்காலம் (Golden Age) என்று வருணித்தனர். ரே (Re) என்னும் கடவுளே அக்காலத்தில் ஆண்டதாகக் கருதினர். ஆனால் இபுவேர் என்ற கவிஞர் சொல்கிறார்:

 

“ரே- வுக்கு வயதாகிவிட்டது! அவருடைய எலும்புகள் வெள்ளி ஆகிவிட்டன; சதை தங்கம் ஆகிவிட்டது; அவருடைய தாடி நீலநிறக் கற்களாகிவிட்டன.”

 

கஷ்டகாலத்திலும் கூட கவிஞரின் கற்பனைக்கு யாரும் தடை போட முடியவில்லை. அவர் வருணித்த பொருள்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து எகிப்துக்குள் வந்தவை.

 

இபுவேர் கி.மு.2000ல் வாழ்ந்தவர் என்றும் அவர் வருணிப்பது அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவரது கவிதையை தவிர வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

 

காளிதாசன் புலம்பல்

உலகப் புகழ்பெற காளிதாசனும் ரகு வம்சத்தை துவக்கத்தில் புகழ்கிறான்; பிற்காலத்தில் அது க்ஷீண திசையை அடந்தபோது இகழ்கிறான். மக்களை மதிக்காத மன்னன் ஜன்னல் வழியே கால்களை நீட்டித் தெரியும்படி வைத்து மக்களை அவமானப் படுத்துகிறான்.

 

ரகுவம்சத்தில் 19-ஆவது சர்கத்தில் அக்னிவர்ணன் என்ற மன்னன் பற்றிக் காளிதாசன் கூறுவதாவது:-

 

அழகான ஸ்த்ரீக்களுடன் வசிக்கும் அக்காமுகனது வீட்டில் எப்போதும் மிருதங்க ஒலி கேட்டது. முதல் நாள் கொண்டாட்டத்தை விஞ்சும் அளவுக்கு இரண்டாம் நாள் கொண்டாட்டம் இருக்கும். அந்தப் புரத்தை விட்டு அவன் நகரவில்லை.  ஜனங்களைக் காண விரும்பவில்லை.

மந்திரிகள் கெஞ்சியதால் ஒரு முறை மக்களுக்கு தரிசனம் தந்தான். எப்படி என்றால் ஜன்னல் வழியே கால்களை மட்டும் நீட்டினான. அப்பாதத்தையே வணங்கி மக்கள் பேறுபெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். மதுவிலும் மாதுவிடத்திலும் காலம் கழித்தான். அவனே மிருதங்கம் வாசித்து ஆடல் அழகிகளை ஆடச்செய்தான். வேலைக்கரிகளிடம் காதல் கொண்டான்.. இறுதியில் நோய்வாய்ப்படு இறந்தவுடன் அவன் மனைவி அரசாண்டாள்.

 

எகிப்திய கவிஞர் புலம்பல் போலவே காளிதாசனும் புலம்பியது குறிப்பிடத்தக்கது.

 

இதே போல இலங்கையில் நடந்த தீய செயல்களை மஹாவம்சமும் காஷ்மீரில் நடந்த தீய செயல்களை கல்ஹணரின் ராஜதரங்கிணியும் விளக்கமாகத் தந்துள்ளன.

 

சுபம்–

 

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)

Research Article Written by London swaminathan

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 9-50 am

 

Post No.3426

 

 

Pictures are taken by Tamil Conference Booklet.

 

contact; swami_48@yahoo.com

 

(English version of this research article is also posted)

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.

 

இப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.

இதோ காளிதாசன் பாடல்:

 

காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.

சசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்

அமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்

ரகுவம்சம் 13-10

அமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள்,  விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை,  ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.

(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்தது போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)

தமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale

Whales

இதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு  மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.

 

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;

திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்

பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி

போர் அமை கதவப் புரைதொறும் தூவ,

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்

…………………

நற்றிணைப் பாடல் 132

 

பெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்;  அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.

Sperm whale

கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-

 

நீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு

குப்பை வெண்மணல் ஏறி, அரைசர்

ஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்

தண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு

……………….

 

இது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம்  வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில் குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.

 

நற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.

Sperm Whale

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்

கொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும்……………

 

கம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்

அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்

பண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்

மன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்

கண்டனன்  துந்துபி கடல்  அனான் உடல் அரோ

 

தென்புலக் கிழவன்  ஊர் மயிடமோ திசையின் வாழ்

வன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா

அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்

 

துந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

மிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.

 

அதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா? திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ! மகரம் என்னும் பெரிய  மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா? என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.

Whale Bone

உடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.

இங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.

 

—subham–

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

 

புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859)

கம்ப1

Article written by London swaminathan

 

Date: 1 June 2016

 

Post No. 2859

 

Time uploaded in London :–  8-03 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

kalidasa_20405

Poet Kalidasa

அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

 

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

 

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்

ரகுவம்சம் 1-4

 

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

cat

கம்பன் ஒரு பூனை!

கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

valmiki

தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.

raguvamsam_b

–சுபம்–

 

காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!(Post No.2815)

kalidasa-

Kalidasa Statue in China

Written  BY S NAGARAJAN
Date: 16 May 2016

 

Post No. 2815

 

 

Time uploaded in London :–  5-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!

ச.நாகராஜன்

abhijnanasakuntalam_of_kalidas

World Famous Drama Sakunatala of Kalidasa

மாபெரும் மன்னனான போஜன் சிறந்த அறிவாளியும் கூட.

அவன் காளிதாஸன் மீது வைத்திருந்த அன்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. என்றாலும் கூட அந்த மாபெரும் மன்னன் காளிதாஸன் மீது தான் கொண்டிருக்கும்  அன்பை தன் வார்த்தைகளிலேயே விளக்குகிறான் இப்படி:

 

கச்சதம் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வதோபி வா

மா மூன்மன: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே

 

போஜ மஹாராஜன் காளிதாஸனைப் பார்த்து நேரில் கூறுவது இந்தக் கவிதையாக மலர்ந்துள்ளது.

 

“ஓ, கவிஞரே! நடக்கும் போதும் சும்மா இருக்கும் போதும், விழித்திருக்கும் போதும் அல்லது தூங்கும் போதும் எனது மனம் உன்னை விட்டு ஒரு பொழுதும் விலகி இருக்காது.”

 

எப்படி ஒரு அருமையான நட்பு மன்னன் – கவிஞன் நட்பு!

அறிவுக்கு மன்னன் கொடுத்த மதிப்பு அந்த அரிய நட்பு!

 

இதை S.B.Nair  அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் இப்படி:

 

When walking or keeping still, when waking or sleeping may my mind never remain far away from you, O, the Poet!

 

இந்த அரிய கவிதைக் கூற்று பல்லகரின் போஜ ப்ரபந்தத்தில் 158வது செய்யுளாக அமைகிறது!

 

வரலாறு கூறும் ஒரு அரிய நட்பு போஜ – காளிதாஸன் நட்பு!

 

xxxxxx

 

சமஸ்கிருத செல்வம்

இறந்ததற்குச் சமம்!

ச.நாகராஜன்

 

கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை இவற்றின் மதிப்பை எப்படி அறிவது?

 

சாணக்யர்  தெளிவாகக் கூறுகிறார் இப்படி:

 

கங்கா ஹீனோ ஹதோ தேஷோ வித்யா ஹீனம் ஹதம் குலம்

அப்ரசுதா ஹதோ நாரீ   ஹதோ யக்ஞஸ்த்வ தக்ஷிணா:

 

இதன் பொருள் என்ன?

 

கங்கை இல்லாத தேசம் இறந்த சுடுகாடு தான்!

ஞானம் அல்லது படிப்பறிவு இல்லாத குடும்பம் செத்த குடும்பம் தான்!

 

குழந்தை இல்லாத பெண் இருந்தும் இறந்தவளே!

யக்ஞ தட்சிணை தராத யக்ஞம் பயனற்ற யக்ஞமே!

 

இதை எஸ்.பி. நாயர் (S.B.Nair)  ஆங்கிலத்தில் அழகுற இப்படி மொழியாக்கம் செய்கிறார்:

 

Dead is a land without Ganga:

Dead is a family without wisdom:

Dead is a barren woman;

Dead is a sacrifice not followed by gifts (to the Brahmanas)

 

சுருக்கமாகச் சொல்லும் போதே அழுத்தமாகச் சொல்வது கவிஞர்களின் இயல்பு. இப்போது கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை ஆகியவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் நன்கு புரிகிறது, இல்லையா!

*********

 

நான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்

பணிவு

Written by London swaminathan

Post No.1851; Date: 7 May 2015

Uploaded at London time: 19-51

புலவர்கள் பணிவும் அடக்கமும்!!

வாய் ஆறாக வயிறு களனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நிற்கும். செவி ஆறாகச் சிந்தை களனாக உணரத் தக்க கவிச் சுவையோ தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்.

வால்மீகி முனிவர் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தவர். பின்னர் முனிவர் ஆனவர். காட்டில் வசித்த அவர் ஒருநாள், ஒரு வேடனைக் கண்டார். ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் பறவையை வில்லால் அடித்துக் கொன்றான் வேடன். பெண் பறவையோ சோகத்துடன் தனது கணவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே வால்மீகி, அவனைச் சபித்தார். அந்த சாபம் பாடல் வடிவில் வெடித்தது. அட! இது என்ன ஆச்சர்யம்! நான் சபித்த சாபம் “அனுஷ்டுப் சந்தஸ்” என்ற யாப்பில் ஒரு பாடலாக வந்ததே என்று வியந்தார். அதாவது, “சோகத்திலிருந்து ஸ்லோகம்” பிறந்தது.

அந்த நேரத்தில் பிரம்மதேவன் அவர் முன்னிலையில் தோன்றி சகல குண சம்பன்னனான, சத்ய பராக்ரமனான இராமபிரானின் தெய்வீகக் கதையைப் பாடச் சொன்னார். அப்படிப் பிறந்ததே ராமாயணம்.

இப்பேற்பட்ட வால்மீகியின் அற்புதமான ராமயணத்தைப் பாடவே தான் தமிழில் ராமாயணத்தை இயற்ற முயன்றதாக கவிச் சக்ரவர்த்தி கம்பன் கூறுகிறான்:

“வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

இதற்கு முன் தனது செயலானது, ஒரு பெரிய பாற்கடலை பூனை நக்கி, நக்கி குடிக்க முயற்சிப்பது போலத்தான் தன் முயற்சியும் என்று அவை அடக்கத்துடன் கூறுகிறார்:

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

பூசை=பூனை, காசு இல் கொற்றம்= குற்றமற்ற வெற்றியை உடைய

கவிதை என்பது என்ன?

உள்ளத்திலிருந்து பீறிட்டெழும் உணர்ச்சியே கவிதை. இந்த உணர்ச்சி இரக்கத்தின் காரணமாகவோ, அன்பின் காரணமாகவோ , அழகை ரசிப்பதன் காரணமாகவோ, தார்மீக கோபத்தின் காரணமாகவோ எழக்கூடும்.

காளிதாசன் எழுதிய மாளவிகா அக்னி மித்ரம் என்ற நாடகத்தில் சொல்லுகிறார்:

பழையதெல்லாம் நல்லது; புதியது எல்லாம் பயனற்றது என்று ஒதுக்கி விடாதீர்கள். அறிவுள்ள விமர்சகர்கள் தக்க முறையில் ஆராய்ந்து முடிவு எடுப்பர். மூடர்களோவெனில் மற்றவர் முடிவைச் சார்ந்து நிற்பர் என்கிறார்.

ரகுவம்ச காவியத்துவக்கத்தில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படது போல சூர்ய வம்சப் பேரரசர்கள் பற்றித் தான் எழுத முயற்சிப்பதாகவும், இது ஒரு பெரிய சமுத்திரத்தை சிறிய படகின் மூலம் கடப்பதற்குச் சமம் என்றும் சொல்லுவார்.

ஆயினும் முன்னோர்கள் (வால்மீகி போன்ற ஆதி கவிகள்) ஏற்கனவே துளைத்த வைரத்தில் நூலை நுழைப்பது தனக்கு சிரமமான பணியல்ல என்றும் பணிவோடு பேசுகிறார்.

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி

இந்தியில் ஒரு பழமொழி உண்டு:

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி—என்று. சூரியன் (ரவி) பூக முடியாத இடத்திலும் கவி(ஞன்) புகுந்து விடுவான் என்பது இதன் பொருள். இதற்கு உதாரணமானவர்கள்: வால்மீகி, காளிதாசன், கம்பன், இளங்கோ, பாரதி முதலியவர்கள் ஆவர்.

பெரிய கலைக் களஞ்சியத்தை – ப்ருஹத் ஜாதகம் – ப்ருஹத் சம்ஹிதா முதலிய நூல்களை எழுதிய வராஹமிகிரர்,

சோதிட சாத்திரம் என்னும் பாற்கடலை, எனது புத்தி என்னும் மந்தர மலையால் கடைந்து, உலகிற்கு சந்திரன் போல ஒளியூட்டக்கூடிய சாத்திரத்தைக் கொடுக்கிறேன். முன்னோர் சொன்ன எல்லாவற்றையும் சுருக்கித் தந்துள்ளேன். அவற்றுடன் எனது நூலை ஒப்பிட்டு, தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுங்கள் என்று அடக்கமாக வாசிக்கிறார்.

கவிஞர்கள் மாபெரும் அறிவாளிகள்; அதே நேரத்தில் மிக மிகப் பணிவுடையோர்.

கவிஞர்கள் இறக்கலாம்; கவிதைகள் இறக்காது; அவை அமரத்துவம் வாய்ந்தவை!

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

pen painting

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1404; தேதி 11 நவம்பர், 2014.

உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!

Seattle_Skyline_2112
That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

gujarati

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)

most-beautiful-cities-101
This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

–சுபம்–

காளிதாசன் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

1.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13-9-2014)
2.நால்வகைப் படைகள்:மஹாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை (13-8-2014)
3.தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (22-7-2014)
4.அரசனின் குண்நலன்கள்: கம்பனும் காளிதாசனும் (21-7-2014)
5.அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் (7-7-2014)
6.ராவணந்-பாண்டியர் சமாதான உடன்படிக்கை (24-6-2014)
7.மாரி, பாரி, வாரி:காளி, கம்பன், கபிலன் (23-6-14)
8.ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே! (18-6-2014)
9.கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் (16-6-2014)
10.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் (8-5-2014)
11.காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழ்லும் உண்டு
12.கடலில் மர்மத் தீ – பகுதி 2
13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் (29-1-2012)

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5.Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle (June 24, 2014)
8.Agastya in Jataka Tales and Kalidasa June 13, 2014.

contact swami_48@yahoo.com