Q & A ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது? (Post.10,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,621

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Question

V. C.

To:swami_48@yahoo.com

Mon, Jan 31 at 3:29 PM

அப்பர் தரும் …

அதிசயத் தகவல்

[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.  

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். 

அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?  

கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]  

?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்

சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.  

எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்  

அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்  

“ஆயிரம் மாமுக கங்கை”  

என்று பாடி உள்ளார் என்பதய்த்   

தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.  

நன்றி, வணக்கம்.  

G.V.  

Answer given by London Swaminathan

ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?

அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)

Behold  His grace for His loving servitors

Behold  the moon on His flawless hirsutorufous crest

Behold  His receiving of alms , so natural to Him

Behold  His neck dark with the oceanic venom

Behold  the flow of Ganga .. the river of a thousand fords

That falls from the heaven like a downpour

Into His widely spread matted hair

With all its abundant and  rolling  kayal fish

Such is He , the holy One of Poovanam girt with gardens  

xxxx

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

பாடல் 909

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே

English translation by  DR T N RAMACHANDRAN

Beholding  Her concordantly concorporate with Him

She burst amain to devastate ( the earth)  with a thousand

Currents He caused her to flow in His matted hair

Where the opulent One sports a hooded serpent and a moist crescent

There are servitors ( of deluding senses )who do not

Rectify their mental kinks; yet if you before your bodies wilt

And you go about with a stick to walk with, but chant;

Poonthuruththi O Poonthuruththi , you can forever do away

With your cruel fleshy embodiment working like a bellows -909,

–Sixth Tirumurai of Appar Tevaram

Xx xxxx

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

Xxxxx

கங்கை காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

–subham—

Tags- ஆயிரம் மாமுக, கங்கை, அப்பர், தேவாரம் கோதாவரி ,  காவிரி

Also read

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

7 Oct 2017 — கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் … -நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்.

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்

முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31

old-tamilnadu

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஆகஸ்ட் மாத காலண்டர்
(( முக்கிய 31 சிலப்பதிகார மேற்கோள்கள் ))

Post No. 1195 Date: 26 July 2014
Prepared by London swaminathan (copyright)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதி போற்றிய சிலப்பதிகாரக் காவியத்தில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஆகஸ்ட் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: ஆகஸ்ட் 8 வெள்ளி-வரலெட்சுமி நோன்பு; 10 ஞாயிறு – ஆவணி அவிட்டம்/ ரக்ஷா பந்தன், பௌர்ணமி
ஆகஸ்ட் 11-காயத்ரி ஜபம்; 15 வெள்ளி- இந்திய சுதந்திர தினம்; 17 ஞாயிறு ஜன்மாஷ்டமி 19- கிருஷ்ண ஜயந்தி; 29 வெள்ளி- கணேஷ் சதுர்த்தி;
சுபமுஹூர்த்த நாட்கள்:– 20, 22, 29, 31; பௌர்ணமி – 10; அமாவாசை– ஆகஸ்ட் 24,; ஏகாதசி 7 & 21.

ஆகஸ்ட் 1 வெள்ளி
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 2 சனி
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 3 ஞாயிறு
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீ இய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை- –மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 4 திங்கள்
வான் ஊர் மதியம் சகடு அனைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வத் காண்பார் கண் நோன்பு என்னை!
-மங்கல வாழ்த்துப் பாடல்
kannaki andkovalan

ஆகஸ்ட் 5 செவ்வாய்
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!– மனையறம்படுத்தகாதை

ஆகஸ்ட் 6 புதன்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை –அரங்கேற்றுக் காதை

ஆகஸ்ட் 7 வியாழன்
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித்தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி — இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 8 வெள்ளி
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 9 சனி
சிமையத்து இமையமும், செழுநீர்க் கங்கையும்
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்க விளையுள்
காவிரி நாடும், காட்டிப் பின்னர் — கடல் ஆடு காதை

tolkappian katturai

ஆகஸ்ட் 10 ஞாயிறு
நெடியோன் குன்றமும் தொடிதோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் – வேனிற் காதை

ஆகஸ்ட் 11 திங்கள்
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப — நாடுகாண் காதை

ஆகஸ்ட் 12 செவ்வாய்
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! — காடுகாண் காதை

ஆகஸ்ட் 13 புதன்
இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து;
ஒருமாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப — வேட்டுவ வரி

ஆகஸ்ட் 14 வியாழன்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வால்வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா –
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு — புறஞ்சேரி இறுத்த காதை
tamil-penkal

ஆகஸ்ட் 15 வெள்ளி
அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்— புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 16 சனி
உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக் கொடி —
‘புனல்யாறு அன்று; இது பூம் புனல்யாறு’ – – புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 17 ஞாயிறு
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 18 திங்கள்
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத் துன்பம் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 19 செவ்வாய்
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து —- அடைக்கலக் காதை

A_SCENE_FROM_SILAPADHIKARAM
ஆகஸ்ட் 20 புதன்
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்— அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 21 வியாழன்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 22 வெள்ளி
என்னொடு போந்த இளங்கொடி நங்கை – தன்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்; — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 23 சனி
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

Riverkaveri
Picture of River Kaveri

ஆகஸ்ட் 24 ஞாயிறு
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.

ஆகஸ்ட் 25 திங்கள்
பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே? –ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 26 செவ்வாய்
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே! — ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 27 புதன்
“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே! — ஆய்ச்சியர் குரவை
vaigai-river_6972
Picture of Vaigai River and Dam

ஆகஸ்ட் 28 வியாழன்
தேரா மன்னா ! செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடதான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர் புகார் என்பதியே— வழக்குரை காதை

ஆகஸ்ட் 29 வெள்ளி
அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே — வழக்குரை காதை

ஆகஸ்ட் 30 சனி
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை

ஆகஸ்ட் 31 ஞாயிறு
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்.
Silappathikaram-AG_12825
Pumpukar now.

Contact swami_48@yahoo.com