கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 943 தேதி 30 March 2014
பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. அதில் அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள், அவைகளின் பொருள் என்ன என்று பார்ப்போம். ஒரே நூலில் கண்ட பெயர்கள் இவை.
நாம் எல்லோரும் நம் நண்பர்களைப் பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்போம். அதில் முக்கால்வாசி அர்த்தம் இல்லாத கேலிப் பெயர்களாகவே இருக்கும். நாம் பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு வைத்த பெயர்களோ வெளியே சொல்ல முடியாது!! ஆனால் அர்ஜுனனும் கண்ணனும் நண்பர்கள் தான். எவ்வளவு அழகாக ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்!
ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:
ஹ்ருஷீகேசன் = இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன் = தன் நிலையிலிருந்து வழுவாதவன்
கிருஷ்ணன் = கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம் துடைப்பவன்
கேசவன் = அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்
கோவிந்தன் = ஜீவர்களை அறிபவன்
மதுசூதனன் = மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன் = மக்களால் துதிக்கப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
மாதவன் = திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன் = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன் = எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷூதனன் = கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன் = வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன் = பரம புருஷன்
பகவான் = ஷட்குண சம்பன்னன்
யோகேச்வரன் = யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு = எங்கும் வியாபகமாய் இருப்பவன்
ஜகந்நிவாசன் = உலகுக்கு இருப்பிடம்
யாதவன் = யதுகுலத்தில் தோன்றியவன்
அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:
அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்
தனஞ்ஜயன் = அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் = குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி = கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = இடது கையால் அம்பு எய்பவன்
ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் தந்த பட்டியல் இது. நான் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் இணைத்திருக்கிறேன்.
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.