
Compiled by London swaminathan
Post No.2214
Date: 4 October 2015
Time uploaded in London: காலை 13-30
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்
1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி
ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி
நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.
Xxxx
2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:
தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:
வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.
Xxx
3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்
திரிசங்கு போல அந்தரத்தில் நில்
Xxx
4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

தபால்தலைகளில் குயில்
Xxx
5).நக்ன க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி
எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?
Xxx
6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி
ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி
உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.
ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது
ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு” (குறள் 786)
Xxx
7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி
வீண் உறுதி மொழி எடுக்காதே
Xxx

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்
நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது
Xxx
9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:
வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்
எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;
யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.
Xxx
10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்
மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.
ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
Xxx
11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:
–ரகுவம்சம்
யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.
Xxx
12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.
மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.
ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.
–சுபம்–
You must be logged in to post a comment.