பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம் !(Post No.8789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8789

Date uploaded in London – –8 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகின் முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’. இதன் பொருள் ‘எட்டு அத்தியாயம்’. இதை ‘அஷ்டகம்’ என்றும் அழைப்பர் . இதை பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் அழைப்பர். இந்த இரண்டு உத்திகளையும் தமிழர்கள் கடைப்பிடித்தனர். ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்று சங்க நூல்களுக்கு ‘நம்பர்’ Numbers களை பயன்படுத்திப் பெயரிட்டனர். அஷ்டகம் போலவே எடுத்த தொகை என்ற தொகுப்பையும் உருவாக்கினார்கள் . பாணினீயம் போலவே தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்று பெயரிட்டனர்.

பாணினி எழுதியது வெறும் இலக்கண நூல்தான். அதிலுள்ள விஷயங்களையும் அதன் மீது எழுந்த வார்த்திகம் , மஹா  பாஷ்யம் , காசிகா ஆகிய உரைகளையும் படித்தால் இந்திய சரித்திரத்தையே அறியலாம். இலக்கணத்தில், மொழி இயலில், இவ்வளவு முன்னேற்றத்தை சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. பாணினி தோன்றி 2700 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த கோல்ட்ஸ்டக்கரின் (Goldstucker)  வாதம் .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம் போலவே பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஒரு கபிஸ்தலம் இருப்பது பற்றி சில தினங்களுக்கு முன்னர் எழுதினேன். இப்பொழுது இன்னும் ஒரு மர்மம் பற்றி துப்பு துலக்குவோம்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா பெயரில் ஒரு காண்டமே இருப்பதால் உலகம் முழுதும் கிட்கிந்தையை அறியும். இந்தப் பெயரே ஒரு வினோதமான பெயர். சம்ஸ்க்ருதத்தில் இது போன்று ஒலிக்கும் பெயர்கள் அதிகம் இல்லை. .மேலும் கிஷ்கிந்தா என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகரம் இருந்த பகுதி என்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது . அவர் பாணினி நூலுக்கு உரை எழுதினார். அதன் பெயர் ‘பேருரை’  சம்ஸ்க்ருதத்தில் ‘மஹா பாஷ்யம்’ . பதஞ்சலியும் இந்த விநோதப் பெயரைக் குறிப்பிடுவதும் அதை நாட்டின் வடமேற்கு மூலையில் காட்டுவதும் வியப்பை ஏற்படுத்தும்.

அவர் சொல்கிறார்.

பல வகை சூத்திரர்கள் ஆர்யவர்த்தத்துக்கு வெளியே வசித்தனர் . அவர்களில் கிஷ்கிந்த -காப்திகம் , சக-யவனம், சவுர்ய- க்ரவுஞ்சம் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

இதை விளக்கும் அக்ரவாலா தனது புஸ்தகத்தில் சொல்கிறார் –

இவர்களில் கிஷ்கிந்தா என்பதை பாலி மொழியிலுள்ள குகுந்த்தோ என்று சொல்லலாம். அது கோரக்பூரில் உள்ளது. கோரக்பூர் என்பது தற்போதைய உத்தரபிரதேசத்தில் இருக்கிறது.அயோத்தி நகரிலிருந்து 135 கிலோமீட்டர்.

ராமாயண கிஷ்கிந்தையோ துங்கபத்ரா நதியின் வடகரையில் — கர்நாடகத்தில் இருக்கிறது. எப்படி தொ லை தூரத்தில் இப்படி அதிசய பெயர் வந்தது ? ராமாயணம், பாணினி காலத்திற்கு வெகு முன்னர் நடந்தது . பதஞ்சலியும் பிற்கால சமண சமய நூல்களும் செப்புவது போல வடக்கில் ஒரு கிஷ்கிந்தை இருந்ததா னால் அது வட-தென் நாட்டின் தொடர்பைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

சமண மத நூல்களிலும் கிஷ்கிந்தா இடம்பெறுகிறது ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்த  ஆவார். அவர் பிறந்த ஊர் காகந்தி. ; இதன் மற்றோரு பெயர் கிஷ்கிந்தா. அவருடைய தந்தை பெயர் சுக்ரீவன் தாயார் பெயர் ராமா . இதிலும் ராமாயண கிஷ்கிந்தா தொடர்பு தெரிகிறது. சம்ஸ்க்ருதத்தில் ராம என்ற குறில் ஒலி இராம  பிரானைக் குறிக்கும்; ராமா என்று நெடில் ஒளி பெண்ணைக் குறிக்கும்.

இவையெல்லாம் ராமாயணத்துக்குப் பின்னர்தானே  ஏற்பட்டிருக்கவேண்டும்?

இதில் இன்னும் ஒரு சுவையான  விஷயமும் வருகிறது. காகந்திதான் கிஷ்கிந்தா என்று சமண நூல்கள் இயம்பும் தருணத்தில், அது பூம்புகார் நகரின் மற்றொரு பெயர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்

இந்த மர்மத்துக்குச் சுலபமான விடை :–

மலைகள், ஆறுகள், நகரங்கள்  முதலிய பல இடங்கள் இந்தப் பெயரைக் கொண்டிருந்தன என்பதேயாம்.

Hampi

xxx

யவனர்கள் சூத்திரர்கள் !

யவனர்கள் என்பது எல்லா ‘வெள்ளைத்தோல் படைத்த’ வெளிநாட்டினரையும் குறிக்கும் என்பதை தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தாலி நாட்டின் தலைநர் ரோம். அங்கிருந்து கப்பலில் வந்தவர்களை சங்கத் தமிழ் இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களை வன்சொல் யவனர் என்றும் சாடுகிறது .அவர்கள் காமதேனுவின் ஆசன வாய்ப் பகுதியிருந்து வந்த பல இன  மக்களிலில் ஒரு இனம் என்று ராமாயண மஹாபாரத இதிகாசங்கள் வருணிக்கின்றன. இது பற்றி முன்னர் எல்லாக் குறிப்புகளையும் பல கட்டுரைகளில் தந்து விட்டேன். காளிதாசரோ பாரசீக ‘தாடிவாலா’க்களை யவனர்கள் என்று கூறுகிறார். சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த தமிழ் நூல்கள் ‘யவனத் தச்சர்’ என்று இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்  வசித்த கலைத்திறன் வல்ல தச்சர்களைக் குறிப்பிடுகிறது. ‘யவன, தச்ச’ ஆகியன எல்லாம் சம்ஸ்க்ருதம் சொற்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அலெக்ஸ்சாண்டர் படையெடுப்புக் காலத்திலிருந்து யவனர்கள் என்பது ‘கிரேக்கர்’களைக் குறித்தது. குதிரை விற்ற அராபியர்களை சில இடங்களில் யவன என்றும் பெரும்பாலான இடங்களில் யோன/ ஜோன என்றும் குறிப்பிட்டனர்.

பதஞ்சலி, கிஷ்கிந்தா, மர்மம்,யவனர்கள், சூத்திரர்,

—subham—

சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!! (Post.6016)

Research article written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 9-05 am
Post No. 6016
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.