கூஜா, குடை, தயிர்சாதம், ஊறுகாய் பயணம் (Post No.5674)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 November 2018

GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.

அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.

யாத்திரைக்கு அழகு!

தண்டுல ,மிளகின் றூள் புளியுப்பு

தாளிதம் பதார்த்த மிதேஷ்டம்

தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடை

சக்கிமுக்கி கைராந்தல்

கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபு

கழல் குடை யேவல் சிற்றுண்டி

கம்பளி யூசி நூலடைக் காயிலையைக்

கரண்டகங் கண்ட கேற்றங்கி

துண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்

தட்டன் பூட்டுமே கத்தி

சொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்

தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்

பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்ப

பெருநிலை நீர்நிழல் விறகு

பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு

புறப்படல் யாத்திரைக் கழகே.

–விவேக சிந்தாமணி

பொருள்

அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான  நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.

Tags– விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகு

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx

குடை பிடித்திருப்போர் நியாயம் !

umbrella

Written by எஸ்.நாகராஜன்

Research Article no. 1710; dated 12 March 2015

Up loaded at 9–28 London time

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

22. வரியை ஏய்க்க நினைத்தவன் கதை!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

घट्टकुटीप्रभातन्यायः

ghattakutiprabhata nyayah

கட்டகுடிப்ரபாத நியாயம்

காலை நேரத்தில் வரி வசூலிப்பவனின் குடிசை முன்னால் வருவது பற்றிய நியாயம் இது.

இந்த நியாயத்திற்கு அடிப்படையான கதை இது தான்:

ஒரு நாள் இரவு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவன் வரியைக் கொடுக்காமல் ஏய்ப்பதற்காக வரி வசூலிப்பவன் இருக்கும் குடிசை இருக்கும் வழியே செல்லாமல் சாமர்த்தியமாக மாற்று வழி ஒன்றில் செல்ல ஆரம்பித்தான். இரவெல்லாம் வழி நடந்த அவன், காலை நேரத்தில் தன் எதிரே இருக்கும் ஒரு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அது தான் வரி வசூலிப்பவனின் குடிசை.

property-tax-bill

எதைத் தவிர்க்க எண்ணி அவன் வேறு ஒரு வழியில் சென்றானோ அது பலிக்காமல் அதே இடத்திற்கு அவன் வந்து சேர்ந்தான்.

வரி கொடுக்காமல் ஏய்க்க முடியுமா, என்ன?

இன்றோ, நாளையோ ஏதோ ஒரு நாள் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

வரியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!

er uzavan

चित्रपटन्यायः

citrapata nyayah

சித்ரபட நியாயம்

சித்ரபடம்ஓவியம்

ஓவியம் பற்றிய நியாயம் இது. ஒரு ஓவியத்தின் மதிப்பு அது பார்ப்பவரின் கண்களுக்கு குளுமையை ஊட்டுவதில் தான் இருக்கிறது.

ஒரு நல்ல அழகிய தோற்றம் உடையவன் வேறு குணநலன்கள் இல்லாமல் இருந்தால் அப்போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.

அவன் பார்க்கத் தான் நல்ல அழகு; வேறு எந்த வித குணங்களும் அவனிடம் இல்லை’, என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் இது பயன்படுகிறது.

umbrella2

छत्रीन्यायः

chatri nyayah

சத்ரி நியாயம்

குடை பிடித்திருப்போர் பற்றிய நியாயம் இது.

ஒரு கூட்டத்தில் பலர் குடைகளைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அனைவருமே குடை பிடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.

ஒருவனுக்கு இருக்கும் சில குணநலன்கள் அவனுடன் சேர்ந்து இருக்கும் மற்றவருக்கும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுவது வழக்கம். சேர்க்கையினால் ஏற்படும் நன்மையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.

பப்பட்

जामात्रर्थंश्रपितस्य सूपादेरतिथ्युपकारकत्वम्

jamatrartham shrapitaasya supaderatithyupakarakatvam

ஜாமாத்ரர்தம் ஷ்ரபிதஸ்ய சூபாதேரதித்யுபகாரகத்வ நியாயம்

மாப்பிள்ளைக்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பற்றிச் சொல்லும் நியாயம் இது.

மாப்பிள்ளை வருகிறார் என்பதற்காக வீட்டில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை மாப்பிள்ளைக்கு மட்டுமா பரிமாறப்படுகின்றன? சாப்பிட உட்காரும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.

ஒரு விஷயம் சிறப்பாக ஒருவரை உத்தேசித்துச் செய்யப்பட்டாலும் கூட, அது மற்ற அனைவரையும் சேரும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bird-nest-in-ash-tree-branch

तिर्यगधिकरणन्यायः

tiryagadhikarana nyayah

திர்யகதிகரண நியாயம்

பறவைகளின் கூடு பற்றிய நியாயம் இது.

பறவைகள் தங்கி வாழும் கூடுகள் பறவைகள் வசிக்க மட்டும் உதவுமேயன்றி மனிதர்கள் வசிக்கப் பயன்படாது.

ஒரு விஷயம் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்றால் அது அப்படிப் பயன்படக்கூடிய சூழ்நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நினைத்த பயனை அது அனைவருக்கும் கொடுக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பறவைக் கூடுகளின் நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

*****************