வேதத்தில் சுவையான குதிரைக் கதை! (Post No.3134)

horsehead

Translated by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 9-36 AM

 

 

Post No.3134

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதம் என்பதற்கு மறை என்று பொருள்; அதை வெளிநாட்டுக்காரர்கள் -மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்திருக்கிறரார்கள். இவர்களில் 5 வகை உண்டு:–

 

1.மதத்தைப் பரப்ப வந்தவர்கள்

  1. நாடு பிடிக்க வந்தவர்கள்

3.குறைகூறுதல் மூலம் பெயர் பெற விரும்புவோர்

  1. அறியாமையில் ஆராய்ச்சி செய்யும் அரை வேக்காடுகள்

5.சர்வதேச நிறுவனங்கள், புத்தகம் வெளியிடும் கம்பெனிகளிடம் பணம் வாங்குவோர்; அதாவது கூலிக்கு மாரடிப்போர்.

 

ஆகையால் இவர்கள் எழுதிய புத்தகங்களை முதலில் படிக்காதீர்கள். இந்தியர்கள் எழுதிய நூல்களை — திராவிட/மார்கஸீய பேத்தல்  — இல்லாதோர் நூல்களை முதலில் பயிலுங்கள்.

 

பகவத் கீதையையே படிக்காமல், எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்கத் துவங்காதீர்கள்!

 

ராமாயணத்தையே படிக்காமல் வாலியை ராமன் கொன்றது சரியா? – என்று பட்டிமன்றம் பேசாதீர்கள்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்தையே கற்காமல் தமிழின் பெருமையை, தமிழர்தம் பெருமையைப் பேசாதீர்கள்!

 

எந்த ஒரு விஷயத்தையும் அதன் முழுப் பொருளில், அது வந்த கால கட்டத்தில், அதே காலத்தில் மற்றவர் இருந்த நிலையில் வைத்து எடை போட வேண்டும்.

 

polands

இதோ மறை பொருள் உடைய ஒரு வேதக் கதை:–

சுபாஷ் கக் என்பவர் ஆங்கிலத்தில் அஸ்வமேத யக்ஞம் பற்றி எழுதிய புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்த குதிரைக் கதை:–

 

அதர்வணனின் மகன் தத்யாங்க் (பிற்கால இலக்கியத்தில் ததீசி). அவரைப் பற்றி ரிக் வேதத்தில் 1-117-22, 1-84 துதிகளில் செய்திகள் உள.

அவருக்கு யாகத்தின் ரஹசியம்- உட்பொருள்– மறை பொருள் தெரியும்.

 

சதபதப் பிராமன்ணத்தில் (14-1-18/24) இந்தக் கதை வருகிறது:-

 

“தத்யாங்கனுக்கு ஒரு ரகசியம் தெரியும் யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, எப்படி அதன் மூலம் யாகம் நிறைவு பெறும் – என்பது தெரியும்’

 

இந்திரன் சொன்னான்: “இந்த ரஹசியத்தை நீ யாருக்காவது சொன்னால் உன் தலையை வெட்டி விடுவேன்”  என்று

 

அஸ்வினி தேவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

 

அவர்கள் தத்யாங்கனிடம் சென்று, எங்களை மாணவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் -என்றனர்

 

அவர் கேட்டார், எதைக் கற்க வந்திருக்கிறீர்கள்?

 

அஸ்வினி தேவர்கள் இருவரும் சொன்னார்கள்:- அதுதான்; யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, அதன் மூலம் யாகம் எப்படி நிறைவு பெறும்– என்ற ரஹசியம்.

 

தத்யாங்கன் சொன்னார்: இதை நீ வேறு யாருக்காவது கற்பித்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என்று இந்திரன் சொன்னான் ; எனக்கு பயமாக இருக்கிறது. என் தலை போய்விடும்; ஆகையால உங்களை நான் மாணவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.

 

அஸ்வினிதேவர்கள் சொன்னார்கள்: நாங்கள் இருவரும் உங்களைக் காப்பாற்றுவோம்

எப்படிக் காப்பாற்றுவீர்கள்?

எங்களை நீங்கள் மாணவர்களாக ஏற்றுக் கொண்டவுடன் உங்கள் தலையை வெட்டி ஒளித்து வைத்து விடுவோம். ஒரு குதிரையின் தலையைக் கொண்டுவந்து பொருத்துவோம்; ஆதன் மூலம் கற்பியுங்கள்; இந்திரன் வந்து குதிரைத் தலையை வெட்டுவான். பின்னர் உங்களுடைய பழைய தலையை எடுத்து வந்து பொருத்தி விடுவோம்”;அதை ஏற்று தத்யாங்கன் அவர்கள் இருவருக்கும் கற்பித்தார்.

அவரும் கற்பித்தார்; உண்மைத் தலை போய் குதிரைத் தலை வந்தது; இந்திரன் வந்தான்; தலையை வெட்டினான்; பின்னர் நிஜ தலையை தத்யாங்கனுக்கு அஸ்வினி தேவர்கள் பொருத்தினர்.

 

island-horse

தத்யாங்கன் சொல்கிறார் (சதபத பிராமன்ணம் 6-4-2-3:

 

யாகத்தின் முக்கிய வாஹனம் “பேச்சு”; சொற்களுக்குதான் மாற்றம் செய்யும் சக்தி உண்டு; அது பேசுபவரையும் மாற்றிவிடும்; ஒருவர் பேசியவுடன் அதே ஆளாக இருப்பதில்லை.; யாகமானது ஒருவரின் தலையை இழக்கச் செய்துவிடும்; குதிரைத்தலை என்பது இந்த அபூர்வ ஞானத்தின் ஆதாரம் ஆகும்.

 

அதாவது குதிரைத்தலை என்பது அடையாளம்தான். குதிரைத் தலை மாறி உண்மைத் தலை வரும் என்பது பேசுபவர் , மற்றவர்களை மாற்றுவதோடு தானும் மாறிவிடுவார் என்பதாகும். யாகம் என்பது ஒருவர் “தலையை” இழக்கச் செய்துவிடும்.

 

–சுபம்–