வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

Boy Magnet காந்தப் பையனும் Counting Horse கணிதக் குதிரையும் (Post No.8142)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8142

Date uploaded in London – 10 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சில அதிசயச் செய்திகள்

காந்தப் பையனும் கணிதக் குதிரையும்

உலகில் காந்த சக்தியுள்ள மனிதர்கள் பத்துப் பதினைந்து பேர் இருக்கிறார்கள் .

ஆயினும் இவர்கள் பிற்காலத்தில் காந்த சக்திகளை இழந்து விடுகிறார்கள் போலும்; ஏனெனில் இவர்களின் பிற்கால வாழ்வு பற்றி செய்திகளே வருவதில்லை. கூகுள் google செய்து பார்த்தபோதும் இது கிடைக்கவில்லை. மத்திய பிரதேச சாகர் நகர் முதல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை ஸ்பூன் மேன் Spoon Man, அயன் மேன் Iron man, நெயில் மேன் Nail Man, பேன் மேன் Pan Man  என்று பலர் காணப்படுகின்றனர்.

சிலர் இவர்களின் உடலில் இருப்பது காந்த சக்தி அல்ல; இவர்களின் தோல் கோந்து, பசை போல ஓட்டும் தோல் உடையோர்த்தான் (Sticky Skin)  ; ஏனெனில் இவர்களின் உடம்பில் பிளாஸ்டிக் பொருட்களும் ஒட்டுகின்றன என்பர். இன்னும் சிலர் , இவர்கள் உடம்பை வைத்துக்கொள்ளும் முறையால் பொருட்களை (Knacks) நிறுத்தி வைப்பதாகச் சொல்லுவர் . இவற்றில் கொஞ்சம் உண்மை  இருக்கலாம். ஆயினும் மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயமே .

2011ம் ஆண்டு மெட்ரோ பத்திரிகையில் வந்த செய்தி இதோ —

ஐ வான் ஸ்டோய்கோவிச் (Ivan Stoiljkovic) குரோவேஷியா நாட்டில் வசிக்கிறான். வயது ஆறு; ஆயினும் 25 கிலோ பொருட்களை உடம்பில் ஓட்ட வைத்துக் கொண்டு நிற்கிறான்.

ஐ வான் வசிக்கும் கோப்ரிவனிக்கா கிராமம் வடக்கு குரோவேஷியாவில் உளது . சரியான குண்டன். இவானுடைய சதை மடிப்புகளே 25 கிலோவைத் தாங்குவதாக , குறைகூறுவோர் செப்புவர்.

ஐ வானைப் பற்றிய அதிசயச் செய்திகள்

1. ஐ வான் 50 கிலோ சிமெண்ட் மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு கிராமத்தை வளம் வருவான்

2. ஐ வான் தொட்ட இடத்தில் காயங்கள் ஆறும்; வலி பறந்தோடிப் போகும்.

3. வீட்டில் பாட்டி, கதவுக்கு உடம்பு வலி என்றால் இவான் போய் தொடுவான்; வலி குட் பய் சொல்லிவிட்டுப் பறந்தோடிவிடும்.

4. கிராமத்தில் ஒருவருக்கு டிராக்டர் விபத்தால் காலில் கடும் வலி உண்டானது ; ஐ வான், அந்த ஆள் பக்கத்தில் போனவுடன் வலி மறைந்தது; அவன் வெளியே போனவுடன் அந்த ஆளுக்கு மீண்டும் வலி வந்தது; பின்னர் ஐ வானை அழைத்தபோது வலி ஓடி விட்டது. அபோது முதல் சிறுவனின் மஹிமை பரவத் தொடங்கியது. உடனே உலக மஹா ஊடககங்கள் ஐ வனை உலகெங்கிலும் காட்டின.

எங்கள் மதுரையில் யாருக்கேனும் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு வந்தால் இரட்டைக் குழந்தை பெற்றவளோ அல்லது இரட்டைக் குழந்தையில் ஒருவர் தொட்டாலோ சுளுக்கு போய்விடும் என்பர். அதுவும் உண்மைதானோ ???? !!!

ஆராய வேண்டிய விஷயம்தான்.

மின்சார மனிதர்கள் பற்றி நாம் அறிவோம். காந்த மனிதர்களும் இருக்கத்தானே வேண்டும் !!!

XXXXXXXX

கணக்குப் போடும் குதிரை Horse can Count

2012 மெட்ரோ பத்திரிகையில் கணக்குப் போடும் குதிரை பற்றி ஒரு செய்தி வெளியானது ; அந்த குதிரைக்கு 19 வரை எண்ணத் தெரி   யுமாம்.

நான் சிறு வயதில் மதுரையில்  ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைப் பொருட்காட்சிக்குப் (Chitra Exhibition in Madurai)  போவேன். அங்கு கிளி சர்க்கஸ் Parrot Circus  காட்சிக்கு பெரிய Q கியூ நிற்கும். அவர்களுக்கு நல்ல வசூல் . அங்குள்ள கிளிகள் வண்டி இழுக்கும்; கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும். பத்து வரை கூட்டல், கழித்தல் கணக்குப் போடும்; கடைசியில் ஒரு தீக்  குச்சியைக் கொண்டுபோய் பட்டாசு வெடிக்கும். அத்துடன் ‘ஷோ’ show  முடியும்; 60 ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சிகள் இன்றும் மனக் கண் முன் காட்சி தருகின்றது.

அது போல இதோ கணக்குப் போடும் குதிரை

மெட்ரோ, ஏப்ரல் 20, 2012 செய்தி

குதிரையின் வயதும் 19; அதற்குத் தெரிந்த எண்களும் 1 முதல் 19 வரை.

வசிக்கும் இடம் — கலிபோர்னியா, அமெரிக்கா

குதிரையின் பெயர் – லூகாஸ் (Lucas)  ;

அதை வளர்க்கும் பெண்மணி – கரேன் மர்டோக்.வயது 54.

திருமதி கரேன் மர்டோக் சொல்கிறார் :

“எனக்கு குதிரை சவாரி ரொம்பப் பிடிக்கும். லூக்காசை பார்த்தேன்; எலும்பும் தோலுமாக நின்றது; இனிமேல் பந்தயத்தில் ஓட முடியாது என்று தெரிந்தவுடன் எல்லோரும் ‘அம்போ’ என்று விட்டுவிட்டனர் அதை நான் சுவீகாரம் எடுத்தேன். ; அது மிகவும் புத்திசாலி என்று எனக்குத் தெரியும்; எதையேனும் கொண்டு வா என்று சொன்னால் நாய் போல ஒடி அதை எடுத்துவரும். 1 முதல் 19 வரை எண்களையும் அறியும். உட்கார் என்றால் உட்காரும்; கற்றுக் கொள்வதில் ஆர்ம் காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக shapes வடிவங்கள் numbers நம்பர்களையும் சொல்லிக் கொடுத்தேன்”.

xxxx

tags — காந்த , மனிதன், பையன், கணக்குப்போடும், குதிரை

–subham —

விவசாயி குதிரையும், இரண்டு திருடர்களும் கதை! (Post No.6979)

Written   by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 5 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –6-05 am

Post No. 6979


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 May 2019


British Summer Time uploaded in London – 14-10

Post No. 6354

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

தொல்காப்பியம் | Tamil and Vedashttps://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

1.      

2.      

Translate this page

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

14 Nov 2014 – ‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் … தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் …

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …

தொல்காப்பியர் | Tamil and Vedashttps://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/

1.      

Translate this page

ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!

அகத்தியம் | Tamil and Vedashttps://tamilandvedas.com/tag/அகத்தியம்/

1.      

Translate this page

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

Translate this page

31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by London swaminathan. Research article No. 1789 Date 9th April 2015. Uploaded from London at 10-18 காலை. கட்டுரையின் முதல் பகுதி …

தொல்காப்பியர் கதை | Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கத…

1.      

Translate this page

அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் …

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…

1.      

2.      

Translate this page

9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …

தொல்காப்பியத்தில் வருணன் | Tamil and Vedashttps://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

8 Jul 2013 – தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் …

You’ve visited this page 3 times. Last visit: 05/02/17

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Swami’s Indology …https://swamiindology.blogspot.com/2012/09/1_9.html

9 Sep 2012 – தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் … Labels: ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலம்த்ருணதூமக்கினி …

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 3 …https://swamiindology.blogspot.com/2012/09/3.html

12 Sep 2012 – எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் …

மாமன்னன் அலெக்ஸாண்டரின் குதிரையும் நாயும்!

Stamp_Greece_1968

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1436; தேதி 25 நவம்பர், 2014.

மாமன்னன் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ்பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றவை அவருடைய நாயும் குதிரையும்!

அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் பூசெபலஸ்
அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் பெரிடாஸ்.

கிரேக்க நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்த அலெக்ஸாண்டரை அந்த பூசெபலஸ்தான் சுமந்து வந்தது. ஆனால் கி.மு.326 ஆம் ஆண்டில் நடந்த ஹைடஸ்பஸ் யுத்தத்துக்குப் பின் போரில் பெற்ற விழுப் புண்களால் அது இறந்துவிட்டது. அப்போது அந்தக் குதிரைக்கு வயது 20. அதன் வாழ்நாள் முழுதும் தனக்கு உழைத்த காரணத்தால் அதற்கு நன்றி செலுத்தும் முகத்தான் மாமன்னன் அலெக்ஸாண்டர் அந்தக் குதிரைக்கு ஒரு சமாதி கட்டி அந்த நகருக்கு அலெக்ஸாண்டரியா பூசெபலஸ் என்று நாமகரணம் செய்தார்.

இப்பொழுது அந்த நகர் எது என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். இரண்டு மூன்று நகரங்கள் இந்தக் குதிரையின் புகழ் பாட போட்டியிடுகின்றன. ஆயினும் ஜீலம் நதிக்கரையில் பாகிஸ்தானில் அந்த நகரம் இருக்கிறது எனப்தில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அலெக்ஸாண்டர் தான் வென்ற இடமெல்லாம் தனது பெயரில் அலெக்ஸாண்ட்ரியா என்று 20 நகரங்களுக்கு மேல் ஸ்தாபித்தார். பூசெபலஸ் என்றால் ‘’காளைத் தலையன்’’ என்று பெயர். அதாவது காளை போன்று வீரம் உடைத்து என்பது அதன் பொருள்.

Seleucos_I_Bucephalos_coin

அவருடைய நாய் பெரிடாஸ் பற்றியும் இந்தக் குதிரை பூசெபலஸ் பற்றியும் பிளினி, ப்ளூடார்ச், பெரிப்ளூஸ் என்று பல பழங்கால எழுத்தாளர்கள் சுவை மிகு கதைகளை எழுதி வைத்தனர். பெரிடாஸ் என்ற நாய்க்கும் அவர் ஒரு நகரம் உருவாக்கினார். அந்த நாய் ஒரு சிங்கத்தையும் யானையையும் கொன்றதால் வீரமிகு நாயை அவர் தத்து எடுத்தார் என்றும் அது ஒரு இந்திய அரசனால் கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் எழுதி வைத்தனர். நிற்க.

அது சரி , உங்கள் ‘’இந்தியவியல்– இந்து கலாசார’’ பிளாக்கில் பூசெபலஸ், பெரிடாஸ் புகழை எதற்கு பாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களில் சிலர் எண்ணலாம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த நாய், குதிரை, யானை இவைகளுக்கு எல்லாம் பெயர் வைத்து அவைகளை அன்பாகப் போற்றி வளர்க்கும் கலையையும் பண்பையும் உலகிற்கு கற்பித்தவர்களே நாம்தாம்!!

alexander dog

ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?

1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!

2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.

macedonia

தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!

4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.

Greece 1956 1000 Greek Paper Money Banknote

தமிழ் குதிரை காரி!
5. கடை எழு வள்ளல்களில் ஒருவர் காரி. அவர் வளர்த்த குதிரை பெயரும் காரி. அலெக்சாண்டர் மட்டும்தான் குதிரை வளர்த்தாரா? நாமும் வளர்த்தோம்; அதற்கு நாமகரணமும் செய்தோம்!

6. இது எல்லாவற்றையும் விட யானைதான் அதிகமான பெயர்களுடன் நம் இலக்கியங்களில் அடிபடுகிறது:
முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்
இந்திரன் யானையின் பெயர் ஐராவதம்
மஹாபாரத கால யானையின் பெயர் அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது.
கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் குவலயாபீடம்.
புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.
உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி
சம்ஸ்கிருத நாடகத்தில் வரும் யானையின் பெயர் சந்திரலேகா.
நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.
அஷ்ட திக் கஜங்கள் என்று எண் திசைகளுக்குக் காவலாக இருக்கும் யானைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.

ரிக்வேத காலம் முதல் இன்று வரை வழங்கும் பெயர் சூட்டும் இவ்வழக்கம் நம்மால் உலகம் முழுதும் பரப்பபட்டது என்பதில் இனியும் ஐயம் உண்டோ?

கொடிகள், சின்னங்கள், தேசிய கீதங்கள் என்று எல்லவாற்றையும் சொல்லிக் கொடுத்து மனித குலத்தை நாகரீகப்படுத்தியதற்கு ரிக் வேதம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக சான்றுகள் கிடைக்கையில் இதை மறுப்பதற்கு எவருக்குத் துணிவு வரும்?

பாரத சமுதாயம் வாழ்கவே! வாழ்க, வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய…………. (பாரதியார்)

–சுபம்–

ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்

Please click below for the article

ஆரிய ஜீன்

BenHur2