மல்லி விலை என்ன? (Post No.9000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9000

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் பல பொருளைத் தரக்கூடும். எந்த தருணத்தில், எந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு சொல்லைப்  பயன்படுத்துகிறார் என்பதை அறிபவரே அதன்பொருளை உணர்வார்.

இன்னும் ஒரு விஷயம் ஊர்ப் பெயர்களாகும். அந்தந்த வட்டார மக்கள் அதை சுருக்கெழுத்தில் சொல்லுவார்கள். கே. புதூர் , ஆ.புதூர் என்றெல்லாம் உண்டு.

“மல்லி  விலை ஏறிப் போச்சு” என்று பூக்கடைக்காரர்களோ, பெண்களோ பேசிக்கொண்டால்  அது மல்லிகைப் பூவைக் குறிக்கும். பலசரக்குக்க கடையில் இதே குரல் ஒலித்தால் அது கொத்த மல்லி விதைகளைக் குறிக்கும்.

இதுவே காய்கறிக் கடையானால் கொத்துமல்லி இலையைக் குறிக்கும் . சம்ஸ்க்ருதத்தில் மூன்று வகையான (Swaras) சுரங்கள் வேறு உண்டு. சீன மொழி போல அதிலும் அர்த்தவேறுபாடு வந்து விடும்.

xxxx

கும்போணம் வெத்தலை கிடைக்குமா?

தஞ்சாவூர்காரர்கள் கும்ப கோணம் என்று சொல்ல மாட்டார்கள். ‘கும்போணம்’ என்பர். மகாமகம் என்று சொல்லாமல் ‘மாமாங்கம்’ என்பர். எண்பத்தைத்தந்து (85) என்பதை ‘எண்ப்ளத்தைந்து’  என்பர்.

கீழ்கண்ட ஊர்ப்பெயர்களைப் பாருங்கள்; எப்படி உரு மாறுகிறது என்பது தெரியும்.

திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை

ஐராவத நல்லூர் – அயிலானுர்

சீர்காழி – சீயாழி

ஆரல்வாய் மொழி – ஆராம்பொலி

தரங்கம்பாடி – ட்ராங்கு பார்

மட்டக்கிளப்பு – பட்டிக்கோலா

சோழாந்தகன் – சோழவந்தான்

வாரணாசி – பெனாரஸ்

பாரு கச்சம் – ப்ரோச்

இப்படி நாடு முழுதும் உண்டு.

தற்காலத்தில் மாநில அரசுகள் ஒவ்வொரு ஊரின் உண்மைப்பபெயரை ஆங்காங்கு சூட்டி வருவதை அறியலாம்.

வெள்ளைக்காரர்களும் பிற மொழிக்காரர்களும்  நம் ஊர்ப் பெயர்களை மாற்றியது இமயம் முதல் கண்டிவரை காணப்படுகிறது.

xxx

உம்மாச்சி பட்டர்

உம்மாச்சி பட்டர் என்றால் என்ன என்று திகைத்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு கோவிலில் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்த சம்பவம் ‘தெய்வத்தின் குர’லில் இருக்கிறது; சுவாமிகளுக்கு முன்னர் உம்மா ச்சி பட்டரை க்கு கூப்பிடுங்கள் என்று பட்டர்கள் பேசிக்கொண்டனர். உம்மாச்சியும் வந்தார். அவருடைய பெயரை விஜாரித்தபோது அவருடைய பெயர் உமா மஹேஸ்வர பட்டர் என்று தெரிய வந்தது. மஹா மேதாவியான அவருக்கே அதை விளங்கிக் கொள்ள ஒரு சம்பவம் தேவைப்பட்டது. நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஒப்பில்லாத அப்பனை உப்பிலி அப்பன் ஆக்கி உப்பில்லாத பிரசாதத்தை வழங்குவது போல வேதத்தை வெள்ளைக் கார்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் இப்படி நுணுக்கமான விஷயங்களை மனதிற் கொள்ளாமல் கண்டபடி மொழி பெயர்த்துவிட்டனர். இப்போதுதான் விழிப்புணர்ச்ச்சி ஏற்பட்டுவருகிறது.

xxx

ரிக் வேத மொழிபெயர்ப்புத் தவறுகள்

சங்க இலக்கி யத்தில் பகை மன்னர்களை வென்ற போது போர்க் களத்தில் “ரத்த ஆறு” (River of Blood)  ஓடியதாக வருணனைகள் உண்டு. இதே போல வடக்கில் சர்மண் நதி என்று ஒரு ஆறு உள்ளது . அது இயற்கையிலேயே சீனாவின் மஞ்சள்  நதி போல செம்மண் நிறம் உடையது. அதில் வெள்ளம் வருகையில் அது சிவப்பாக இருக்கும்.

ஒரு புலவர் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி இந்த ஆறு சிவப்பானதற்கு மன்னரின் ‘யாக பலி’ காரணம் என்று பாடி வைத்தார். உடனே ஒரு மார்க்சிஸ்ட் மேதாவி எத்தனை ஆயிரம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டால் இப்படி சர்மண் நதியில் ரத்த ஆறு ஒடி இருக்கும் என்று கணக்குப் போட்டு விட்டார்!!! வேதத்தில் மஞ்சள் வர்ண மக்கள், சப்பை மூக்குக்கார்கள் பற்றி பாடல்கள் உள. இவை வட கிழக்கு  இந்தியாவில் உள்ள சீன , பர்மிய (Mongoloid) மக்களைக் குறிப்பதாக இருக்கவேண்டும் . இதை சப்பை மூக்கு திராவிடர்களைக் குறிப்பதாக வெள்ளையர் எழுதி வைத்துவிட்டனர்.! அவர்களே வேறு இடங்களில் திராவிடர்களை வருணிக்கையில் போண்டா மூக்கு, கோழிமுட்டைக் கண்ணன் என்றும் எழுதி வைத்துள்ளனர். கடைசியில் பார்க்கப்போனால். சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கு கூடுகள் அத்தனையும்  வேதகால மக்களுடையவை!! அதாவது இன்றைய பஞ்சாபியரின்  உடல்வாகைக் கொண்டவர்கள். சங்க இலக்கிய 30,000 வரிகளில் “சிந்து” என்ற பெயரே இல்லை. ஆனால் கங்கை, இமயம் , அருந்ததி, சப்தரிஷி , அத்தனை இந்துக்கடவுளரின் பெயர்களும் இருக்கின்றன. புத்தரோ, மஹாவீரரோ கூட ‘பெயர் அளவில்’ இல்லை!!

tags- கும்பகோணம், மல்லி விலை, உம்மாச்சி , வேதம்

–SUBHAM—

மன்னர் வருகிறார்! கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு; மதுரையில் 3 நாள் தங்கல் (Post 6947)

WRITTEN  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-50

Post No. 6947

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–