குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9072

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச்  சொல்லும்போது  அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.

கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை   பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு  விட் ட  செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை  இழைப் பொலிந்தாங்கு

அறா அ அறு  நகை இனிது பெற்றிகுமே —

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்தன்  தலையே – 378

பொருள் :–

என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்

காதில் பூணத் தக்கவற்றை  விரலில் அணிபவரும் 

இடுப்புக்குரியவற்றை  கழுத்தில் அணிபவரும்

கழுத்துக்குரியவற்றை  இடையில்  அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்

, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது 

அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது

XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி

அரம்பையர் வெறுத்து நீத்த  அவிர்மணிக் கோவை ஆரம்

மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ

–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்

பொருள் :–

தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண்  குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .

இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .

Tags — குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு

–சுபம்–

2 கதைகள்! ஐயர் கதையும் குரங்கு கதையும்!!(Post No.3835)

Written by London swaminathan

 

Date: 20 APRIL 2017

 

Time uploaded in London:- 21-55

 

Post No. 3835

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே! தமிழ் வேதமாகிய திருக்குறள் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இதே போல நாலு வரிப் பாடல்களிலும் – வெண்பாக்களிலும்- அரிய பெரிய கருத்துகளைக் காணலாம். நீதி வெண்பா என்றதோர் நூலை எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன.

 

நல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் வேறுபாடு என்ன? அவர்களால் என்ன நேரிடும் என்ற கருத்தை விளக்க இரண்டு கதைகள் உள்ளன. நான்கு வரிகளேயுள்ள ஒரு வெண்பாவில் அந்த இரண்டு கதைகளையும் புகுத்திவிட்டார் இந்த நூலை யாத்த ஆசிரியர்.

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்

சிறுவன் பகையாம் செறிந்த- அறிவுடைய

வென்றி வனசரன்றான் வேதியனைக் கத்தான் முன்

கொன்றதொரு வேந்தைக் குரங்கு

–நீதிவெண்பா

 

பொருள்:-

முன்னொரு காலத்தில் நல்லறிவு படைத்த வேடன் (வனசரன்) ஒருவன், வேதியனை (பிராமணனைக்) காப்பாற்றினான். குரங்கு ஒரு அரசனைக் கொன்றது. அறிவுடைய ஒருவன் பகைவனானாலும் அன்போடு கூடிய நண்பனாகிவிடுவான். அறிவில்லாதவன் (சிறுவன்) நண்பனாக இருந்தாலும் பகைவனாக ஆய்விடுவான்.

 

பிராமணன் கதை

ஒரு வேதியனுக்கு அரசன் மாணிக்கக் கல்லைப் பரிசாகக் கொடுத்தான். அவரோ நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தது. காட்டு வழியாக தனது சொந்த கிராமத்திற்குப் போக வேண்டி இருந்ததால் இதை இப்பொழுது விழுங்கி விடுவோம். ஊருக்குப் போய் வாந்தி எடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு, வெளியே எடுத்துவிடலாம் என்று எண்ணி அதை வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதை மரத்தின் மீதிருந்த ஒரு வேடன் பார்த்துவிட்டான். உடனே அந்தப் பிராமணனைப் பின்பற்றி நடந்து போய், நடுக்காட்டுக்கு வந்தவுடன் பிராமணனை மிரட்டி ரத்தினக் கல்லைக் கேட்டான். அந்தப் பிராமணனோ தன்னிடம் ரத்தினக் கல் எதுவும் இல்லை என்று சாதித்தான். இருவரும் மாணிக்கக் கல் பற்றி பேசியதை ஒரு வழிப்பறிக்கும்பல் கேட்டுவிட்டது

 

வேடனையும், வேதியனையும் தடுத்து நிறுத்தி மாணிக்கக் கல் எங்கே? என்று கேட்டனர். அவர்கள் தங்களிடம் இல்லை என்று சாதித்தனர். “ஓஹோ, அப்படியா இருவர் வயதையும் கீறிப் பார்த்துவிடுவோம் என்று பெரிய பட்டாக் கத்தியை உருவினர். உடனே அறிவும் அன்பும் மிக்க அந்த வேடன், ஐயோ பாவம்; அந்த மாணிக்கக்கல் உண்மையில் அந்த வேதியனுடையது. அதைப் பெற நான் முயற்சி செய்தது தவறு என்று ஒரு யோஜனை செய்தான்.

 

அந்த வழிப்பறிக் கும்பலை அணுகி, “ஐயன்மீர்! நாங்கள் நீண்ட கால நண்பர்கள் –ஆதலால் விளையாட்டாக மாணிக்கக் கல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இதோ என் வயிற்றைக் கிழித்துப் பாருங்கள்; இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லை என்றால் என் வாக்கை நம்பி அந்த  நண்பனையாவது போக விடுங்கள் என்றான். இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கத்தியை வைத்து வேடன் வயிற்றைக் கீறினர் வழிப்பறிக் கும்பல். ஒன்றும் காணததால் அந்தப் பிராமணனை விட்டுவிட்டனர். அந்த அறிவுள்ள வேடனின் உயிர்த் தியாகத்தை மெச்சியவாறே பிராமணனும் வழிநடைப் பயணத்தைத் தொடர்ந்தான். நல்ல அறிவுள்ளவர்களருகில் இருந்தால் நன்மை கிட்டும்

 

குரங்கு கதை

ஒரு அரசன் ஒரு குரங்கை தனது பிள்ளைபோல வளர்த்து வந்தான். அதுவும் அரசன் என்ன செய்யச் சொன்னாலும் செய்துவிடும். ஒருமுறை அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மிகவு களைப்பாக  இருந்ததால் ஒரு மரத்தடியில் தூங்கச் சென்றான் அப்போது காவலுக்காக குரங்கின் கையில்  கத்தியைக் கொடுத்துவிட்டுத் தூங்கினான்.

 

அந்த நேரத்தில் அரசன் மீது ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. அரசனைக் காவல் காத்த குரங்குக்கு ஒரே கோபம். அரசன் வயிற்றில் உட்கார்ந்த ஈயை விரட்ட கத்தியால் ஓங்கி ஒரு போடு போட்டது. ஈ பறந்தோடிப் போனது; அரசனின் வயிறு இரண்டு துண்டு ஆனது. அறிவற்றவரை நண்பனாக வைத்திருந்தால் நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம்

 

சுபம்–

கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************