குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் (Post No.5223)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –14-49 (British Summer Time)

 

Post No. 5523

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் (Post No.5223)

 

 

நம்மையெல்லாம் வியக்கவைக்கும் அளவுக்குக் குழந்தைகள் புத்திசாலிகளாகி வருகின்றன. பிறக்கும்போதே மொபைல் போன், ஐ-பேட், கம்ப்யூட்டர் சஹிதம் பிறக்கின்றன. பொம்மை மொபைல் போனைக் கொடுத்தால் நம் மீது விட்டெறிந்து, என்னை ‘முட்டாள் பயன் மகன்’ என்று நினைத்தாயா என்ற தொனியில் நம்மை முறைத்துப் பார்க்கின்றன. இன்னும் பேச்சு முழுதும் வராததால் சொல்லாமல் சொல்லுகின்றன. தவறான ‘வெப்; (website) பக்கத்துக்கோ, வழக்கத்துக்கு மாறான பாடலுக்கோ போனால் நம்மைக் கையைப் பிடித்து இழுத்து, ‘அட முட்டாள்! யூ ட்யூபில் (You Tube) இங்கு அல்லவா வரும் என்று காட்டுகின்றன. இது இன்றைய உலகம். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கூட குழந்தைகள் நம்மை விட, அல்லது நாம் அவர்களை எடை போட்டதைவிட புத்திசாலிகளே என்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

 

இதோ சில சம்பவங்கள்:-

 

ஸர் ஜோஸையா ஸ்டாம்ப் (Sir Josiah Stamp) என்பவர் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். அவர் கண்ட, கேட்ட ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

 

ஒரு பார்லிமெண்ட் தேர்தல் வேட்பாளர் ஒரு வீட்டுக்கு ஓட்டு வேட்டைக்காகப் போனார். தேர்தல் வந்து விட்டால், எல்லா அபேட்சகர் முகத்திலும் அசடு வழியும்; ஜொல்லு விடுவார்கள் அல்லவா?

 

அவரும் ஒரு வீட்டின் முன்னால் இரண்டு சிறுவர்களை நோக்கினார். இருவரு ருக்கிடையேயும் ஒருவரை ஒருவர் அச்சு எடுத்து வார்தாற்போல் ஒற்றுமை.

 

பையன்களா, நீங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளா?

 

இல்லை ஐயா– கறாரான பதில்

 

சஹோதரர்களா?

ஆம், ஐயா.

 

உங்கள் வயது என்ன?

இருவருக்கும் ஐந்து வயது- பொட்டில் அடித்தாற் போல் விடை.

 

ஏய்!!!!! அப்படியானால், இருவரும் இரட்டையர்தானே; இருவரும் சஹோதரர் என்று மொழிந்தீர்கள். இருவருக்கும் ஐந்து வயது என்று செப்பினீர்களே!

 

ஐயா; பில்லி, உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறான். நாங்கள் மூவராகப் பிறந்தோம்!

(ஒரே சூலில் மூன்று குழந்தைகள்)

 

வேட்பாளர் ஐயா முகத்தில் அசடு வழிந்தது!

 

xxxxx

தாயாரைத் தவிக்கவிட்ட பெண்

ஒரு வீட்டில் ஒரு சிறுமி தாய் சொல்லைத் தட்டினாள். அவளுக்குத் தண்டனை கொடுக்க தாய் திட்டமிட்டாள்.

 

ரோமன் கத்தோலிக்க குடும்பங்களில் பிராஹ்மணர்கள் போல பரிசேஷன மந்திரம் சொல்லிச் சாப்பிடும் வழக்கம் உண்டு

(பிராஹ்மணர்கள் மூன்று முறை இலையைச் சுற்றி தண்ணீர் விட்டு– எறும்பு முதலிய ஜந்துக்கள் வராமல் இருக்க – சுற்றிவிட்டு— சோற்றைப் புகழ்ந்து இது அமிர்தம் என்று சொல்லிவிட்டுச் சாப்பிடுவர். முடிவில் தீர்த்தம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, ‘அன்ன தாதா சுகீ பவ’– அன்னமிட்ட இந்தப் பெண்மணியின் குடும்பம் நீடூழி வாழ்க– என்று சொல்லிவிட்டு எழுந்திருப்பர்).

 

 

கிறிஸ்தவர் குடும்பங்களில் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ‘டைனிங் டேபிளில்’ அமர்ந்து சாப்பிடுவார்கள். அப்பொழுதுதான் அன்யோன்ய அன்பு வளரும். கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்; இது இல்லாவிடில் பெரும் தண்டனை என்பது தாத்பர்யம்/ பொருள்.

 

ஆகவே தாயார் கொடுத்த தண்டனைப்படி, விஷமம் செய்த சிறுமி ஒரு தனி ‘குட்டி’ மேஜையில் உட்கார வைக்கப்பட்டாள்.

கிரேஸ் (grace) மந்திரம் சொல்லும் தருணம் வந்தது. குட்டிப் பெண்ணை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவளோ வழக்கத்துக்கும் மாறான உரத்த குரலில் முழக்கமிட்டாள்.

 

‘’ஆண்டவனே! இன்று எனக்குப் படி அளந்தமைக்காக, உனக்கு நன்றி செலுத்துகிறேன்.அதுவும் என் எதிரிகளுக்கு  முன்னால் எனக்கு தனியான குட்டி மேஜை போட்டு அன்னம் அளித்தாயே! உனக்கு நன்றி.

 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

 

xxx

கவிஞர் பைரன் கடித்த பீங்கான் தட்டு

 

ஆங்கிலம்  படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் லார்ட் (Lord Byron) பைரன். அவர் சின்ன வயதில் ஒரு ‘மூடி’ moody முத்தண்ணா? அதாவது அவ்வப்பொழுது ‘mood’ மூட் மாறும்; உணர்ச்சி வசப்படுவார். காரணமென்ன வென்றால் அவரைக் கவனித்த தாதி கொடுமைக்காரி. இதனால் பைரனுக்கு அவள் மீது அச்சமும் வெறுப்பும்.

 

பைரனின் அம்மாவோ கோபக்காரி; புயல் போலச் சீறுவாள்; அனல் போலக் கொதிப்பாள்; குதிப்பாள். எவரையும் மதியாள்.

 

பைரன் நாலு வயதிலேயே ஒரு பீங்கான் தட்டைப் பாதிக்க டித்தெடுத்து, துண்டு போட்டவர்.

அவர் பத்து வயது இருக்கும் போது அவருக்கு லார்ட் lord பட்டம் கிடைத்துவிட்டது. பரம்பரையாக வரும் இப்பட்டம் ஒருவர் இறந்த பின்னர் அடுத்த வாரிசுக்குக் கிடைக்கும்.

 

பள்ளிக் கூடத்தில் அவரை வாத்தியார் ‘டோமினஸ்’ (பிரபுவே) என்று அழைத்தவுடன் கண்ணீர் மல்கியது; கன்னத்தில் வடிந்தது.

 

ஆனந்தக் கண்ணீர்!

 

xxx

 

சிறுவர்கள் வாழ்வினிலே

 

தெமிஸ்டோக்ளிஸ் (Themistocles) என்பவர் கிரேக்க நாடு அரசியல்வாதி. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்- புத்தருக்கு  சம காலத்தில்– வாழ்ந்தவர்.

 

அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் சரியான ‘அம்மாக்கொண்டு’ (அம்மாவின் கண்மணி)

 

தெமிஸ்டோக்ளிஸ் புகன்றார்:

இவன்தான் கிரேக்க நாட்டு முழுமைக்கும் மன்னன்.

 

 

அருகில் இருந்த நண்பருக்கு வியப்பு.

 

அண்ணலே! அது எப்படிப் பொருந்தும்? என்று வினவினார்.

 

உடனே அவரோ அவ்வையார் ஸ்டைலில் பதில் சொன்னார்

 

“பெரியது கேட்கின் வரிவடிவேலோய் பெரிது, பெரிது, புவனம் பெரிது, அதனினும் பெரிது…” என்று பாடவில்லை.

 

அவர் செப்பினார்:

அன்பரே. என் மகன் தாய்க்கு இனியன். அவளை ஆளும் அரசன். அந்தப் பெண்மணியோ என்னைப் பிடித்து ஆட்டும் அரசி; நானோ ஏதென்ஸ் மாநகர ஆட்சியாளன். ஏதென்ஸ் நகர அதீனியர்களோ கிரேக்க நாட்டையே கட்டி ஆள்பவர்கள்.

நான் சொன்னது சரிதானே.

 

(அரசியல் வாதிகளுக்கே உண்டான அகந்தை, பெருமிதம், அசாத்திய தன்னம்பிக்கை!)

 

xxxxx

பதப் படுத்தப்பட்ட பாலா இல்லையா?

ஒரு பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. முதல் மகனுக்கு ஆறு வயது. வீட்டில் வேறு எவரும் இல்லை. அவள் கொஞ்சம் ஓபன் (open) ஆக தாய்ப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அந்தப் பையன் வியப்புடன் உற்று நோக்கினான்.

உடனே அம்மா, பையாலஜி (Biology) பாடம் சொல்லிக்கொடுக்க இது நல்ல தருணம் என்று கருதி  பல்லவி பாடினாள்

 

பார்த்தாயா! நீ குழந்தையாக இருந்த போதும் இப்படித்தான் பால் சாப்பிட்டாய்; யானை, குதிரை, பசுமாடு எல்லாம் இப்பத்தான் பால் கொடுத்து குட்டிகளை வளர்க்கும். மனிதர்களும் அப்படித்தான்…. என்று முழக்கமிட்டுக் கொண்டு போனாள்.

ஆறு வயதுப் பையன் இடைமறித்தான்.

அது சரி, அம்மா! இது ‘பாஸ்சரைஸ்டு மில்க்’கா (பாலா) இல்லையா? (Pasteurised or not)

 

பெண்மணி முக்கில் விரலை வைத்தாள்; வாயடைத்துப் போனாள்.

 

ஆகவே, தோழக்ர்ளே; சின்னப் பயல்கலைளைத் தவறாக எடை போடாதீர்கள்.

அவர்கள் அனைவரும் ஆய்ந்தவிடங்கியகொள்கைச் சான்றோர் போல!

ஆய்ந்து+ அவிந்து+ அடங்கிய+ கொள்கை+ சான்றோர்)

 

–சுபம்–