கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப் (Post No.9768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9768

Date uploaded in London – –23 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பதினெட்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் (ALEXANDER POPE ). அவர் நக்கல், கேலி செய்யும் விமர்சனங்களை எழுதுவதில் வல்லவர். போப்பின் காலம் (AGE OF POPE) என்று 1700ம் ஆண்டுகளை அழைக்கும் அளவுக்கு அவர் புகழ் மேலோங்கியது.

போப் (POPE) , லண்டனில் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.பி ரிட்டன் கத்தோலிக்க மதத்தை ஆதரிக்காத நாடு. இதனால் போப் நினைத்த இடத்தில் வசிக்க முடியாது. எல்லா பள்ளிகளிலும் சேர முடியாது . விரும்பிய செயல்களைச்  செய்யவும் இயலாது கஷ்டப்பட்டார். அவருக்கு நல்ல கல்வி அமையவில்லை. தொடர்ச்சியாகப் படிக்கவும் முடியவில்லை.  nஆயினும் அவர் சொந்த முயற்சியில் லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு , இத்தாலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

இளம் வயதில் அவர் முதுகில் , தண்டுவடத்தைப் பாதிக்கும் ஒரு தொற்றுநோய் தாக்கியதால் அவருக்கு கூன் (HUNCH BACK) விழுந்தது. அவர் வளர்ச்சி குன்றியதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் இப்படி ஏற்பட்ட பாதிப்பு, மறுபக்கம் அவருக்கு வேறு வகையில் உதவியது. முழு கவனத்தையும் படிப்பிலும் கவிதை எழுதுவதிலும் செலவிட்டார்.

23 வயதுக்கு முன்னரே எழுதத் துவங்கினார். ஒரு நகைச் சுவை (AN ESSAY ON CRITICISM )கவிதையையும் எழுதி வெளியிட்டார்.

அதில் அவர் எழுதிய “கொஞ்சம் படிப்பது பெரிய ஆபத்து  (A LITTLE LEARNING IS A DANGEROUS THING) ஆகும்”– என்ற புகழ்பெற்ற வாக்கியம் பொன்மொழியாக அமைந்தது .இதில் தாக்குண்ட விமர்சகர்களும் எழுத்தாளர்களும் சினந்து எழுந்தனர். “டேய், கூன் முதுகுத் தவளையே!” (HUNCH BACKED TOAD) என்று அவரை ஏசினர். இதற்குப் பின்னரும் போப் சளைக்கவில்லை. அவருக்கு மிகவும் புகழ் சம்பாதித்துக் கொடுத்த ‘தி ரேப் ஆப் தி லாக்’ (THE RAPE OF THE LOCK)  கவிதையை வெளியிட்டார். இது கிண்டலும் கேலியும் நக்கலும் பகடியும் நிறைந்த படைப்பு. ஒரு இளம் பெண்ணின் அழகிய முடியை ஒருவன் திருடிய பின்னர் தொடுக்கப்படும் வழக்கு பற்றியது இது. அக்கால ஆடம்பரப் பித்தர்களை ஏசும் கவிதை இது.

1715- 1726 இடைப்பட்ட ஆண்டுகளில் கிரேக்க, லத்தீன் மொழி இலக்கியங்களை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஹோமரின் இலியட் (Iliad of Homer) காவியம் இதில் ஒன்றாகும். பின்னர் அங்கத, சிலேடைச் செய்யுட்களை எழுதினார். இதில் முக்கியமானது ‘தி டன்ஸியாட்’ (THE DUNCIAD). மோசமான விமர்சகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளைத் தாக்கும் படைப்பு இது .

போப்-பின்

பிறந்த தேதி மே  21, 1688

இறந்த தேதி – மே 30, 1744

வாழ்ந்த ஆண்டுகள் – 56

படைப்புகள்…..

1711 – AN ESSAY ON CRITICISM

1712 – THE RAPE OF THE LOCK

1728-35 – MORAL ESSAYS

1733-34-  AN ESSAY ON MAN

1733- 38-  IMITATIONS OF HORACE

1735 – OF THE CHARACTERS OF WOMEN

TAGS– கூன் முதுகுக் கவிஞர், அலெக்சாண்டர் போப், ALEXANDER POPE, RAPE OF THE LOCK