குபேரன் கேள்வி-பதில்- QUIZ (Post No.8739)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8739

Date uploaded in London – –26 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.குபேரன் எந்த திக்குக்கு அதிபதி ?


2.குபேரனின் வாகனம் எது


3.குபேரனின செல்வத்திற்குப் பெயர் என்னன்ன ?

4.குபேரனுக்கு அமர  கோசம் நிகண்டுவில் எத்தனை  பெயர்கள் உள்ளன ?

5.அவன் தலைநகர் எது?

6.அவன் தோட்டத்தின் பெயர்?

7.குபேரனின் மகன்கள் யார்?

8.மனைவி பெயர்?

9.குபேரனின் மொத்த நிதிகள் எத்தனை ?

10.குபேரன் முழு செல்வத்தையும் இழந்து சிவனை பூஜை
செய்து மீண்டும்பெற்ற இடம் எது?

******

ANSWERS

 1.வடக்கு, 2. மனிதன், 3.சங்க நிதி, பதும நிதி, 4) 17 பெயர்கள் ,5.கைலாஷ் மலையில் உள்ள அளகாபுரி, 6.சைத்ர ரத,7.நளகூபரன் , மணிக்ரீவன், 8.காவேரி ,9) . ஒன்பது / நவ நிதிகள் அவை– சங்க, பதும, மஹாபத்ம, கச்சப்ப, மகர , முகுந்த, கு ண்ட/நந்த , நீல , கரப; 10. கும்பகோணத்திலிருந்து 18 கிமீ தொலைவிள் உள்ளதிருநள்ளாறு பாதையில் எஸ். புதூர் என்ற திருத் தண்டிகை புரம்.

tags- குபேரன், கேள்வி-பதில், Quiz
—subham—

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  6-48 am (British Summer Time)

 

Post No. 4938

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

கீழ்கண்ட தெய்வீக வசனங்களை யார், எந்த நூலில் சொன்னார்கள்? விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாராமல் பகருங்கள். உங்கள் அறிவினைச் சோதித்துக்கொள்ள அரியதோர் வாய்ப்பு!!!

1.பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

 

 

2.மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர்

ஆட்டுக்கோ நுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ

 

3.ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை

மாற்று அருங்கணிச்சி, மணிமிடற்றோனும்

கடல் வளர் புரி வளை புரையும் மேனி

அடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்

 

4.பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்

பரவு புகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம்

 

5.ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே

 

6.கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவயவே

 

7.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

 

8.உள்ளே உருகி நைவேனை

உளவோ இலளோ என்னாத

கொள்ளைகொள்ளிக் குறும்பனைக்

கோவர்த்தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன் மார்பில்

எறிந்தென் அழலைத் தீர்வேனே

 

9.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்

 

10.கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்

எங்கள் உள்ளம்!

 

11.தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.

 

12.கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

 

விடைகள்

1.இளங்கோ, சிலப்பதிகாரம்

2.காளமேகம்,  தனிப்பாடல்கள்

3.புறநானூறு, நக்கீரனார் பாடல்

4.பாரதி, பாரதியார் பாடல்கள்

5.கம்பன், கம்ப ராமாயணம்

6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

7.திருமூலர் எழுதிய திருமந்திரம்

8.ஆண்டாள், நாச்சியார் திருமொழி

9.திருக்குறள், திருவள்ளுவர்

10.பாரதிதாசன்

11.மாணிக்கவாசகர், திருவாசகம்

 1. சேக்கிழார், பெரியபுராணம்

 

–SUBHAM–

 

உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  5-42 am (British Summer Time)

 

Post No. 4883

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் வாசகங்களை யார் சொன்னார்கள்? எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு! செப்படா, தமிழா!

 

1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்

தோதி யுலகெங்கும் விதைப்பாள்

xxx

2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்

xxxx

3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

xxx

4.ஊன நாடகமாடு வித்தவா

உருகிநானுனைப் பருகவைத்தவா

ஞானநாடகமாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

xxx

5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

xxxx

6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த

வேணியன்  ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே

xxx

7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

xxx

8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

xxx

9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு

xxxx

10.விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே

xxx

 

விடைகள்

1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம்,  தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

 

 

 

 

ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)

ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)

 

Written by London Swaminathan 

 

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London-7-50 AM

 

 

 

Post No. 4594

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

((எனது பிளாக்கில் கடந்த 7 ஆண்டுகளில் 600-க்கும் மேலான கேள்விகளும் பதிலும் பதியப்பட்டுள்ளன. இவைகளைத் தமிழ் இலக்கியத்திலிருந்தும் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் எடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும் அவைகளைத் தந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.))

 

கீழேயுள்ள 25 கேள்விகள் ராமாயண மஹாபாரதத்தில் வரும்  முனிவர்கள், ரிஷிகள் பற்றிய கேள்விகளாகும்; எங்கே உங்கள் இதிஹாஸ அறிவைச் சோதித்துப் பாருங்கள் பார்ப்போம்! விடைகள் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.

1.மஹாபாரதத்தை எழுதியவர் வியாஸர்; அதை எழுத்து வடிவில் ஆக்க அவருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாஸரின் பெயர் என்ன?

 

 

2.அஷ்டாவக்ரர் கதையை யுதிஷ்டிரன் என்னும் தருமனிடம் யார் சொன்னார்? ( அஷ் டாவக்ரன் என்றால் எட்டு கோணல் என்று அர்த்தம்; அவரது தந்தை வேதத்தைத் தவறாக உச்சரித்ததால் கருவிலேயே அஷ்டாவக்ரர் கோணிக் குறுகிப் போனார்)

 

3.பாண்டவர்கள் ‘த்வைத்ய’ வனத்தில் வசித்த காலத்தே, ஒரு ரிஷி விஜயம் செய்து, பிராமணர்கள் சூழ வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினார்; யார் அவர்?

 

4.துராணாச்சார்யாரின் தந்தை யார்?

 

5.துரோணருக்கு அக்னி அஸ்திரத்தை வழங்கியவர் யார்?

6.பாண்டவர் வனவாச காலத்தில் அவர்களுக்கு நள-தமயந்தி கதையைச் சொன்னவர் யார்?

 

7.பாண்டவர்களுக்குச் சமயச் சடங்குகள் பற்றி ஆலோசனை வழங்கும் ரிஷியின் பெயர் என்ன?

 

8.சேவை செய்தமைக்காக இஷ்டப்பட்ட கடவுளை அழைக்கும் மந்திரத்தை குந்தி தேவிக்கு உபதேசித்த முனிவர் யார்?

 

9.மஹாபாரத யுத்தம் நடந்தபொழுது பலராமரைச் சந்தித்த வானசாஸ்திர , ஜோதிட நிபுணர் யார்?

 

 

10.துர்யோதணனைக் கட்டுக்குள் வைக்கும்படி திருதராஷ்டிரனுக்கு புத்திமதி சொன்ன முனிவர் யார்?

 

 1. செத்துப்போன நாகப் பாம்பை ஒரு முனிவர் மீது வீசியமைக்காக பரீக்ஷித் மஹாராஜனைச் சபித்த முனிவர் யார்?

 

 

 1. யார் மீது செத்த பாம்பை பரீக்ஷித் வீசி எறிந்தார்?

 

13.சொந்த பந்தம் என்ற தளைகளில் இருந்து விடுபட திருதராஷ்டிர மன்னனுக்கு உபதேசித்த முனிவர் பெயர் என்ன? அந்த உபதேசம் அடங்கிய நூலின் பெயர் என்ன?

XXX XXX  XXXX

ராமாயண முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ)

14.ராம பிரானுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் யார்?

 

15.எந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை வசித்தாள்?

 

16.ராம பிரானுக்கு புகழ் மிகு சூர்ய ஸ்துதியை சொல்லிக் கொடுத்த முனிவர் யார்?

 

17.ராம லெட்சுமணர்களுக்கு பலா, அபலா (பலை, அபலை) என்ற அதிசய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?

 

18.தசரதனுக்கு வாரிசு உருவாக  எந்த முனிவர் வந்து புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்?

 

19.அகஸ்த்யரின் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் முன் ராமனுக்கு தனது தவத்தை எல்லாம் அளித்த முனிவர் யார்?

20.ஜனக மன்னனின் குரு யார்?

21.இந்திரனுடைய அழைப்பை மறுத்துவிட்டு, ராமனையும் ஸீதையையும் தரிசித்து அக்னியில் (தீ) புகுந்து உயிர்நீத்த முனிவர் யார்?

 

22.பரதனுடன் வந்தவர்களுக்கு தன் தவ வலிமையால் பெரும் விருந்தளித்த முனிவர் யார்?

 

23.ஸீதைக்கு அணிகலன்கள் அளித்த அநசூயை யாருடைய மனைவி?

 1. ராமன் கால்பட்டவுடன் பெண்ணாக உருமாறிய அஹல்யாவின் கணவர் பெயர் என்ன?

25.ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணத்தை எழுதிய மஹரிஷி யார்?

 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 

ANSWERS

1.கிருஷ்ணத் த்வைபாயனர், 2.லோமண ரிஷி, 3.பகதல்ப்ய ரிஷி, 4.பரத்வாஜ மஹரிஷி, 5.அக்னிவேஷ முனிவர், 6. பிருஹதஸ்வ மஹரிஷி, 7. தௌம்ய ரிஷி, 8. துர்வாஸர், 9. கார்காசார்யா, 10. நாரதர், 11.ச்ருங்கி   முனிவர், 12.ஷமிக முனிவர், 13. ஸனத்சுஜாதர்; நூலின் பெயர்- ஸநத் சுஜாதீயம், 14.வசிஷ்டர், 15. வால்மீகி முனிவர், 16. அகஸ்த்யர், துதியின் பெயர்- ஆதித்ய ஹ்ருதயம், 17. கௌஸிகன் எனப்படும் விஸ்வாமித்ரர், 18. கலைக்கோட்டு முனிவர். ஸம்ஸ்க்ருதப் பெயர் ரிஷ்ய ஸ்ருங்கர், 19.சுதீக்ஷ்னர், 20.சதானந்தர்தர், 21.சரபங்கர், 22.பரத்வாஜர், 23.அத்ரி மஹரிஷி, 24. கௌதம முனி, 25.வால்மீகி

 

–SUBHAM–

 

 

சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4340

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘

அதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்!

1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே

சிவபெருமான் செய்த லீலைகள் என்ன? —-16 மதிப்பெண்கள்

 

2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?

அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?

அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?- 21 மதிப்பெண்கள்

 

3.பஞ்ச பூதத் தலங்கள் எவை? –5 மதிப்பெண்கள்

 

4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை? அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்

 

 

5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்

6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .—7 மதிப்பெண்கள்

 

7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்? –25 மதிப்பெண்கள்

8.நால்வர் யார்? – 4 மதிப்பெண்கள்

 

9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன? 10 மதிப்பெண்கள்

திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்குநாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்

 

 

ANSWERS

QUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது

திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது

திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது

திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது

திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது

வழுவூர்- யானையைத் தோலுரித்தது

திருக்குறுக்கை- காமனை எரித்தது

திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது

 

QUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்

திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்

திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்

திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்

திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்

திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்

 

QUESTION 3-

1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)

2.திருவானைக்கா – அப்பு (நீர்)

3.திருவண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காலத்தி -வாயு (காற்று)

 1. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)

 

QUESTION 4-

அசபா தாண்டவம்- திருவாரூர்,

ஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,

ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,

ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்

பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்

 

QUESTION 5-

சபாபதி ஆலயம்- சிதம்பரம்;

தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;

ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;

குமரனாலயம்-திருவேரகம்;

சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;

விடையினாலயம்-திருவாவடுதுறை;

வடுகனாலயம்-சீர்காழி.

 

QUESTION 6-

திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,

திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய் த்தானம்.

 

QUESTION 7-

1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்

4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்

7- சுந்தரர்

8- மாணிக்கவாசகர்

9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்

10-திருமூலர்

11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.

12- சேக்கிழார்

 

QUESTION 8-

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

 

QUESTION -9

திருவாலவாய்- மதுரை

கொடுங்குன்றம்- பிரான்மலை

திருக்கானப்பேர்- காளையார்கோயில்

கோயில்- சிதம்பரம், தில்லை

புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்

குடமூக்கு- கும்பகோணம்

நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்

திருமறைக்காடு–வேதாரண்யம்

கச்சி– காஞ்சீபுரம்

திருமுதுகுன்றம்- விருத்தாசலம்

–SUBHAM–

 

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

IMG_2990

Written by S NAGARAJAN

Post No.2234

Date: 11  October 2015

Time uploaded in London: 16-28

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேவார சுகம்

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

.நாகராஜன்

 

நல்ல கேள்விகள் கேட்பவர் சிலரே! அதற்குச் சரியான விடைகள் தருபவர் நிச்சயமாக வெகு சிலரே!

நமக்குப் புரிய வேண்டிய பல விஷயங்கள் குறித்து நம்மவரில் பலர் பளிச் பளிச் என்று கேள்விகள் கேட்க அருளாளர் அப்பர் பளார் பளார் என பதில்களை அள்ளி வீசுகிறார்.

எங்கே! தேவாரத்தில்!!

 

கேள்விகளும் பதில்களும் இதோ:-

 • ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

 

 • நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

 

 • நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

 

 • துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

IMG_3244

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?                                    

தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்?                                  

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு                                          

எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே

 

 

 • காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்                                    

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்                                   

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து                                               

காக்கைக்கே இரையாகிக் கழிவரே             (ஆக்கைஉடல்)

 

crow2

 • இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/

மாசில் வீணையும் மாலை மதியமும்                                       

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                                   

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                 

ஈசன் எந்தை இணையடி நீழலே!

 

 

 • சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்

 

road-to-heaven-608763_640 (1)

 • மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்

 

 • நண்பன் யார்?அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!

 

 

 • நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சேவக்கரை உறைவானை வணங்கு நீ!!

 

 • ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

 

 

 • நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,

திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

 

 palanest

 • கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?  “நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே! (குறித்துக் கொள்ளுங்கள்)

 

 • இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரைஎன் அத்தாஎன என் இடர் தீருமே!

 

 

 • பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே!                                                  மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

 

 • துயர் கெட வழி?                                            
 • கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

 

 • யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

 

 

 • யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

 

 

 • செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில்                                      

தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்                                

ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில்                                      

 உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்                           

அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்                                    

அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்                                

பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்                              

பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

 

 

 • குறை இல்லாமல் இருப்பது எதனால்?
 • சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,                              
 • ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

 

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

 

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புத இரகசியங்கள்!

 

***********

நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?

புலி

கட்டுரை எண் 1838

தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

தேதி : ஏப்ரல் 30, 2015; லண்டன் நேரம்: 12–02

என் கேள்விக்கென்ன பதில்?

இது போல தமிழ், ஆங்கிலத்தில் முப்பதுக்கும் மேலான க்விஸ், இந்த பிளாக்-கில் உள்ளன.

கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்ப் புலி. 15 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்க் கிளி. 10 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ் எலி. 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் நீங்கள் தமிழுக்குத் தருவது பெரும் வலி. ஒன்றும் சொல்லாவிடில் தமிழ் மொழிக்குப் பிடித்தது கிலி!!!!

கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்:—

1)———————– படித்தவனுடன் சொல்லாடாதே.

2)——————- புலவருக்கு ஔஷதம்

3)—————-உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

4)கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி ————————–

5)—————- முப்பதும் செப்பினாள் வாழிய

6)நெஞ்சை அள்ளும் ————————

7)உச்சிமேற் புலவர்கொள் ————————-

8)ஒல்காப்புகழ் ————————————

9)வாய்மொழிக் ————————-; புலன் அழுக்கற்ற அந்தணாளன்

10)கருணைக்கு —————————

கிளி

11)கற்பனைக்குக் ————————–

12) நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்———————–

13)———————— என்னைப் பாடினான்

14)———————— தன்னைப் பாடினான்

15)———————— பெண்ணைப் பாடினான்

16) ————– வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

17) வேதம் தமிழ் செய்த—————————-

18)பெரியாழ்வார் பெற்றெடுத்த————– வாழிய

19)விருத்தமென்னும் ஒண்பாவிற்கு ———–

20)மஹா கவி—————–

எலி

விடைகள்

1)கல்லாடம் 2) நைஷதம் 3) திருவாசகத்துக்கு 4) குறுகத் தரித்த குறள் 5)திருப்பாவை 6) சிலப்பதிகாரம் 7) நச்சினார்க்கினியர் 8) தொல்காப்பியன் 9) கபிலன் 10)அருணகிரி 11) கம்பன் 12) ஞான சம்பந்தன் 13) அப்பர் 14) சம்பந்தன் 15) சுந்தரர் 16) கம்பன் 17) மாறன் சடகோபன் 18) பெண்பிள்ளை 19) உயர் கம்பன் 20) பாரதி.

இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு?

indra3

தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
தொகுப்பு எண்: 1175; தேதி: 16 ஜூலை 2014.

இதற்கு முந்தைய 24 கேள்வி பதில் வெளியீடுகளும் இந்த ‘பிளாக்’-கில் கிடைக்கும். தமிழ் இலக்கியம், இந்து மதம் தொடர்பாக இதுவரை 400 கேள்விகள் வெளியிடப்பட்டன. அவைகளையும் படித்து உங்கள் அறிவைச் சோதியுங்கள்.

1.இந்திரன் வசிக்கும் இடம் (நாடு) எது?

2.அதனுடைய தலைநகர் எது?

3.இந்திரன் சவாரி செய்யும் குதிரையின் பெயர் என்ன?

4.ஐராவதம் என்பது என்ன?

5.இந்திரனின் தாய் தந்தையர் யாவர்?

indra on elephant

6.இந்திரன் மனைவி யார்?

7.இந்திரனின் மகன் பெயர் என்ன?

8.வஜ்ர என்பது என்ன?

9.இந்திரனின் வாள் பெயர் தெரியுமா?

10.இந்திரனுக்கு பிடித்த ஜூஸ் எது?

Colnect-1292-111-Scepter-of-Indra
Indra’s Weapon on Mongolia Stamp

11.எத்தனை அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும்?

12.இந்திரனுக்கு ஒரு பறவையின் பெயரும் உண்டு? அது எந்தப் பறவை?

13.மஹாபாரதத்தில் குந்திக்கு இந்திரன் அம்சத்துடன் பிறந்த குழந்தை யார்?

14.இந்திரனின் தேரோட்டி யார்?

15.இந்திரனின் வில் எது?

16.இந்திரனின் தோட்டத்துக்கு என்ன பெயர்?

17.வைஜயந்த என்பது என்ன?

art_indra_is_attacked_by_jambasura_1998

கேள்விக்கு பதில்கள்:— 1.வசிப்பிடம்:சுவர்க்கம் 2.தலைநகர்:அமராவதி 3. குதிரை:உச்சைஸ்ரவஸ் 4.ஐராவதம்:இந்திரனின் வெள்ளை யானை 5. இந்திரனின் தந்தை-காஸ்யபர், தாய்-அதிதி 6.இந்திரனின் மனைவி-சசி அல்லது இந்திராணி 7. இந்திரன் மகந்ஜெயந்தன் 8.இந்திரனின் ஆயுதம்:வஜ்ராயுதம் 9.பரம்ஜா என்பது இந்திரனின் வாள் 10. இந்திரனுக்குப் பிடித்த ஜூஸ் சோமரசம் 11.நூறு யாகம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும் 12.உலூக/ஆந்தை என்பது இந்திரனின் பெயர் 13. இந்திரனின் அம்சத்துடன் பிறந்தவன் அர்ஜுனன் 14. தேரோட்டியின் பெயர் மாதலி 15.வானவில் அல்லது இந்திரதனுஷ் அல்லது சக்ரதனுஷ் 16.நந்தனம்/கண்டசாரம்/பாருஷ்ய என்பது இந்திரனின் தோட்டம் 17.வைஜயந்த என்பது இந்திரனின் அரண்மனை.

statue_indra_bali
Indra in Indonesia

இந்திரன் பற்றிய அதிசய விஷயங்கள்:–
உலகிலேயே அதிகமாகப் பாடப்பட்ட பழங்காலக் கடவுள் அல்லது வீரன் இந்திரன் தான். ஜில்காமேஷ், ஹெர்குலீஸ் போன்றவர்களை விட மிக அதிகமாகப் போற்றப்பட்டவன். அவர்களைவிட அதிகமான சாதனைகளைப் புரிந்தவன். உலகில் மிகப் பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் 250 பாடல்கள் இந்திரனைப் பற்றியவை. மேலும் 50 பாடல்களில் அவன் மற்ற கடவுள்களுடன் பாடப்படுகிறான். அதாவது ரிக் வேதத்தில் நான்கில் ஒரு பகுதி!!!

இந்திரன் என்பது ஒரு வரலாற்று நாயகனின் பெயர். இந்திரன் என்பது ஒரு பதவியின் பெயரும் ஆகும்: அதாவது பிரதமர், ஜனாதிபதி, தலாய் லாமா, போப்பாண்டவர், சங்கராச்சார்யார் என்பது போல. இது தெரியாமல் வெள்ளைக்கார “அறிஞர்கள்” உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள். வெளிநாட்டுக் காரர் எழுதியவற்றைப் படிக்காமல் இந்திய சாது சந்யாசிகள் எழுதியதை முதலில் படித்தால் இந்தக் குழப்பங்கள் வராது. உலகில் மிகப் பழமையான கடவுள் இந்திரந்தான். துருக்கி நாட்டில் பொகஸ்கோய் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் கல்வெட்டுகளில் இந்திரன் பெயர் (கி.மு.1400) இருக்கிறது!! இதற்கு முன்னமேயே அவன் இந்தியாவில் வழிபடப்பட்டான். பாரசீக ஜொராஸ்டர் எழுதிய ஜெண்டு அவஸ்தாவில் சில இடங்களில் இந்திரன் பெயர் உண்டு.

இதைவிட மிக அதிசயமான விஷயம் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் எல்லாம் செத்துப்போய் மியூசியங்களில் முடங்கிவிட்டன. ஆனால் இந்திரனோ வேத முழக்கம் கேட்கும் இடங்களில் எல்லாம் இன்றும்—குறிப்பாக கோவில்களிலும், பிராமணர் வீடுகளிலும்—தினமும் வழிபடப்படுகிறான். பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனம் என்னும் அந்திப்பொழுது பிரார்த்தனையில் இந்திரன் வழிபாடு தினமும் வருகிறது.

“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே”– (சுப்ரமண்ய பாரதி)!!!!

Contact :swami_48@yahoo.com