என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி! (Post.9652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9652

Date uploaded in London – –  –27 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி!

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்யசாயி பாபா ஊட்டி, நந்தனவனத்தில் சத்யசாயி இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கிடையே 16-4-1988இல் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது:-

உலகியல் இன்பங்கள் எல்லாமே நிலத்திருப்பவை அல்ல. வந்து செல்பவை அவை. இறைவன் ஒருவனே எல்லையில்லா ஆனந்தம் தருபவன்.

அரசன் ஒருவன் ஏராளமான கலைச் செல்வங்களையும் ஓவியங்களையும் கொண்ட பிரம்மாண்டமான கண்காட்சி ஒன்றை அமைத்தான். அனைத்து மக்களையும் அழைத்த மன்னன், உள்ளே செல்வோர் தங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னான்.

அவ்வளவு தான், கூட்டம் அலைமோதியது. அவரவர் தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை அல்லது இதர பொருளை எடுத்துக் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு பெண்மணி மட்டும் கண்காட்சியிலிருந்து ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் எதையும் எடுக்காமல் வெளியில் வந்தாள். வெளியே நின்றிருந்த அரசன் அவள் எதையும் எடுக்காமல் வந்ததைப் பார்த்தான். அவளை அழைத்தான். “என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா?” என்றான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்றாள் அவள்.

“மிக அழகிய பொருள்கள் உள்ளே உள்ளனவே. அவற்றில் எதுவுமே வேண்டாமா?” என்றான்.

“உள்ளே மிக அழகிய பொருள்கள் இருக்கின்றன” என்று பதில் சொன்னாள் அவள்.

“அப்படியானால் ஒன்று கூட அவற்றில் உங்களுக்கு வேண்டாமா? என்று அரசன் கேட்டான். திட்டவட்டமாக வேண்டாம் என்றாள் அவள்.

“அப்படியானால் உங்களுக்கு என்ன தான் வேண்டும்? அதைச் சொல்லுங்கள் நான் தருகிறேன்” என்றான் அரசன்.

“அரசே! வாக்கு மாற மாட்டீர்களே! நான் கேட்டதைத் தருவீர்களா?” என்றாள் அந்தப் பெண்மணி.

“நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான்” என்று அரசன் உறுதி கூறினான்.

உடனே அந்தப் பெண்மணி, “அரசே! எனக்கு நீங்கள் தான் வேண்டும்” என்றாள்.

தான் கொடுத்த வாக்கின் படியே அரசன் அவளைப் பணிந்து வணங்கி தன்னை அவளுக்குக் கொடுத்து விட்டான்.

அரசனே அவளுக்குச் சொந்தமான பின்னர் அந்தக் கண்காட்சியில் இருந்த அனைத்துமே அவளுக்குச் சொந்தமாகி விட்டது.

இந்த பிரபஞ்சம் ஒரு பெரிய கண்காட்சி. அது இறைவனால் படைக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நுழைபவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வேலை பிடிக்கிறது. சிலருக்கு செல்வம் தேவைப்படுகிறது. ஆனால் எவருமே “ஸ்வாமி! இதில் ஒன்றை எடுத்துக் கொள்வதால் எனக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது. நீங்கள் என்னவராக ஆகி விட்டால் எல்லாமே எனக்குக் கிடைத்து விடுமே” என்று சொல்வதில்லைல்.

பிரபஞ்ச எக்ஸிபிஷனில் (COSMIC EXIBITION) நுழையும் நீங்கள் தெய்வீகத்தை வேண்ட வேண்டும். அப்போது பிரபஞ்சமே உங்களுடையதாகி விடும். எது ஒன்று மாறாததோ எது ஒன்று நிலைத்து நிற்பதோ அதையே நீங்கள் நாட வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றாக ஒன்றின் பின் ஒன்றாக நீங்கள் செல்லக் கூடாது. அதில் எப்போதுமே திருப்தி கிடைக்காது. இன்று கவர்ச்சியாக இருப்பது நாளைக்கு கவர்ச்சியாக இருக்காது. ஆனால் இறைவனைக் கொள்பவர்களுக்கோ அனைத்துமே கிடைத்து விடும்.

ஆசைகளைத் துறக்க மனிதன் தன் மனதை கடவுள் பால் திருப்ப வேண்டும். அதுவே திருப்தி, சந்தோஷம், எல்லையற்ற ஆனந்தம் அடைய வழி வகுக்கும்.

       ஆதாரம் ; Sri Sathya Sai Speaks Volume 21 chapter 11 (ஆங்கிலத்தில் உள்ள உரையின் சுருக்கம் மேலே தமிழில் தரப்பட்டுள்ளது)

ஓம், ஸ்ரீ சாயி சரணம்!

***

tags- அம்மணி, அரசன்,கேள்வி , சத்யசாயி பாபா

கத்துக்குட்டியின் நேற்றைய கேள்விகளுக்குப் பதில்கள் (Post No.8520)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8520

Date uploaded in London – 16 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.சுக்கிரன் (Venus)

2. ராகு, கேது    (rāhu (The point of intersection of ascending node of lunar orbit with the elliptic plane of earth’s orbit) and

Ketú) is the descending (i.e. ‘south’) lunar node .)

3.செப்டம்பர் 22/23, மார்ச் 21

4.டிசம்பர் 21/22

5.ஜூன் 20/21

(ஆஸ்திரேலியா , நியுஜிலாந்து போன்ற தென் கோளார்த்த நாடுகளில் நேர் எதிர் மாறாக நடக்கும்)

6.புதன் (Mercury)

7.குரு (Jupiter) அல்லது வியாழன்

8. எட்டு (8)  நிமிடங்கள்

9. ஒலி (Sound) ஒரு வினாடிக்கு 344 மீட்டர் செல்லும்; ஒரு மணிக்கு 770 மைல் செல்லும்

10.ஒளி (Light) ஒரு வினாடிக்கு 1,86.242  மைல் செல்லும்.

11. பூமியின் வயது 4.543 பில்லியன் ஆண்டுகள்  (சுமார் 454 கோடி ஆண்டுகள்)

12. ஐம்பது லட்சம் முதல் 70 லட்சம் ஆண்டுகள்

13.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

14. சனீஸ்வரன் , பரமேஸ்வரன், கோடீஸ்வரன்

(உண்மையில் சனை: + சரன் = மந்த நடை போடுபவன்;  பேச்சு வழக்கில் ஈஸ்வரன் ஆக்கிவிட்டோம் )

15. ஒரு கண் பார்வை  உடையவன் – சுக்கிரன் (Venus) என்னும் வெள்ளி கிரகம் ;

மந்த  நடை போடும் சனியை (Saturn) நொண்டி என்பர். ஏனெனில் சூரியனைச்

சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது .

16. சூரியன். தமிழ் இலக்கியம் அவனை ‘ஓராழித் தேருடையோன்’ என்று பாடுகிறது

17.ஆஞ்சனேயர்

Tags – கத்துக்குட்டி, கேள்வி, பதில்கள்,

–subham–

கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி! (Post No.3870)

Written by S NAGARAJAN

 

Date: 2 May 2017

 

Time uploaded in London:-  6-23 am

 

 

Post No.3870

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளும் மனிதனும்

 

கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!

ச.நாகராஜன்

 

உலக பிரசித்தி பெற்ற விம்பிள்டன் நட்சத்திர விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு அவருக்குச் செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சையின் போது எய்ட்ஸ் தொற்று பிடித்த ரத்தத்தைச் செலுத்தியதால் அவருக்கு வந்தது இந்த எய்ட்ஸ் நோய்.

 

 

உலகெங்கிலுமிலிருந்து அவரது விசிறிகளிடமிருந்து ஏராளமான கடிதங்கள் அவருக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அதில் அவரது விசிறி ஒருவர் தனது கடிதத்தில், “ கட்வுள் இந்த மோசமான நோயைத் தருவதற்கு உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்டிருந்தார். “உங்களுக்கு ஏன் இந்த வியாதியைக் கடவுள் தர வே” என்ற அன்பரின் ஆதங்கம் ஆஷுக்குப் புரிந்தது.

 

 

அந்த விசிறிக்கு ஆஷ் இப்படி பதிலை அனுப்பினார்:

“உலகெங்குமிலிருந்து 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கின்றனர்.  அதில் 50 லட்சம் பேர்கள் டென்னிஸை எப்படி விளையாடுவது என்று கற்கின்றனர். அதில் ஐந்து லட்சம் பேர்கள் உண்மையாக தொழில் ரீதியாக அதை விளையாடக் கற்கின்றனர். அதில் ஐம்பதினாயிரம் பேர் உள் வளையத்திற்குள் வருகின்ற்னர். அதில் ஐந்தாயிரம் பேர்கள் க்ராண்ட் ஸ்லாம் விளையாட வருகின்றனர். அதில் ஐம்பது பேர் விம்பிள்டனுக்கு வருகின்றனர். அதில் நான்கு பேர்கள் அரை-இறுதிக்கு வருகின்றனர். அதில் இரண்டு பேர் இறுதிப் போட்டிக்கு வருகின்றனர். அதில் ஒருவர் விம்பிள்டன் கோப்பையை வெல்கிறார். விம்பிள்டன் கோப்பையை நான் கையில் பிடித்திருந்த போது கடவுளிடம் ‘என்னை மட்டும் ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தீர்க்ள்?” என்று நான் கேட்கவில்லை. ஆகவே வ்லியில் துடிக்கும் இப்போது மட்டும் நான் கடவுளிட்ம், எதற்காக இது எனக்கு? என்று கேட்கக் கூடாதல்லவா!”

 

 

என்ன அற்புதமான பதில். இறைவனின் உள்ளப் பாங்கை அறிந்த ஒரு பக்குவி ஆர்த்ர் ஆஷ் என்பது தெரிகிறதல்லவா?

ஆதாரம் : கொல்கொத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – 28-4-2017 இதழ்

தமிழ் ஆக்கம் ச.நாகராஜன்

 

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது;

One Paragraph That Explains Life !

 

Arthur Ashe, the legendary Wimbledon player was dying of AIDS caused by infected blood he received during a heart surgery in 1983.

 

From the world over, he received letters from his fans, one of which conveyed: “Why does God have to select you for such a bad disease”.

 

To this, Arthur Ashe replied: The world over fifty million children start playing tennis, five million learn to play tennis, five lakhs learn professional tennis, fifty thousand come to the circuit, five thousand reach the grand slam, fifty reach Wimbledon, four get to the semi-final and two to the finals. When I was holding the Wimbledon Cup, I never asked God, “Why me?” So, today in pain I should not be asking God: “Why me?”

 

நன்றி: TRUTH WEEKLY 28-4-2017 ISSUE