சூரியனே போற்றி! – 2 (Post No.9220)

AKBAR WORSHIPPING SUN
EGYPTIAN KING WORSHIPPING SUN 

சூரியனே போற்றி! – 2 (Post No.9220)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9220

Date uploaded in London – – 3 FEBRUARY 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

               சூரியனே போற்றி! – 2
                  ச.சீனிவாசன்

IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.

சூரியனைப் பற்றிய மற்ற விவரங்கள்
சூரியனின் தாயார்/ தகப்பனார் – அதிதி(தட்சன் மகள்),காஸ்யபர்
முதல் மனைவி -சஞ்சிகை( துவஷ்டாவின் @விஸ்வகர்மாவின் மகள்)
பிறந்த குழந்தைகள் -யமன், யமி என்ற யமுனை,பத்திரை,சாவரணி மனு,அஸ்வினி தேவர்கள்,
சுக்ரீவன்
இரண்டாவது மனைவி- சாயா -க்ருத வர்ஷா, க்ருத ஷர்மா என்ற சனிஸ்வரன், பத்ரை,தபதி,
வைவஸ்வத மனு, காலன்
மூன்றாவது மனைவி -நீளா தேவி@வானவில் – சித்திர குப்தன்
நான்காவது மனைவி – குந்தி – கர்ணன்

SUN TEMPLE AT KONARK

ஜாதி. ஷத்திரியன்
உத்யோகம் ராஜா
காரகன். பிதுர் காரகன், ஆத்ம காரகன்
லிங்கம். ஆண்
வஸ்திரம். செம்பட்டு
குணம். குரூரர்
தன்மை. பாப கிரகம்
திசாதிபதி. கிழக்கு
வடிவம். சமன்
அவஸ்தை. விருத்தர்
பாஷை. சமஸ்கிருதம் & தெலுங்கு
தாது. எலும்பு
நிறம். சிவப்பு
ரத்தினம். மாணிக்கம்
தான்யம். கோதுமை
புஷ்பம். செந்தாமரை
சமித்து. எருக்கு
வாகனம். மயில், தேர்
மிருகம். பெண் ஆடு
நாடி. பித்த நாடி
சுவை. காரம்
உலோகம். தாமிரம்
ஸ்வரம். ஸ
அதி தேவதை. சிவன்/அக்னி
ப்ரத்யதிதேவதை ருத்ரன்
இஷ்ட காலம் பகல்
வஸ்திரம் சிவப்பு
ஆசனம். வட்டம்
தசா காலம். 6 வருடங்கள்
நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சொந்த வீடு. சிம்மம்
உச்ச வீடு. மேஷம்
நீச வீடு துலாம்
நட்பு. சந்திரன், செவ்வாய், புதன், குரு
பகை. சனி, ராகு, கேது,சுக்கிரன்
பகைவீடுகள். ரிஷபம்,மகரம், கும்பம்
பார்வை. 7 ம் பார்வை
சூரிய காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹப் பிரசோதயாத்

SUN AT DELHI AIRPORT 

சூரியனுக்கான ஸ்லோகம்
ஐபாகுஸும சங்காசம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியனின் கோவில்கள் இருக்குமிடம்

  1. சூரியனார் கோவில். மங்கலக்குடி
  2. இந்த கோவிலைப் பற்றிய முழு விரங்களை திருமதி பிரகன் நாயகி சத்ய நாராயணன்
    மிகச் சிறப்பாக விக்கியுள்ளர் tamilandvedas no Dated கண்டு மகிழ்க.
  3. மார்த்தாண்ட சூரியனார் கோவில். காஷ்மீர்
  4. அரசவல்லி சூரியன் கோவில். ஆந்திரா
  5. நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம்
  6. நவ கைலாசங்களில் ஒன்றான பாப நாசம்( அம்பாசமுத்திரம் அருகில்)
    நீங்களனைவரும் சூரியனை வணங்கி கண்ணொளியும், அறிவொளியும் பெற்று
    பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
  7. நன்றி, வணக்கம்!
  8. tags – சூரியன், கோவில்கள், ஸ்தோத்திரங்கள், வழிபாடு ,

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்! (Post No. 2501)

IMG_2231

 

IMG_2232

 

IMG_2240

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2501

 

Time uploaded in London :– 14-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2233

இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.

 

சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.

 

சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.

IMG_8984

பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்.

IMG_8985

IMG_8987

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்

 

சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.

 

இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.

 

கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.

 

IMG_2809

 

IMG_2814

IMG_2815

IMG_2806

IMG_2822

IMG_2818

 

IMG_2811

–சுபம்–

 

பட்சிகள் அருள் பெற்ற அபூர்வ ஸ்தலங்கள்

cock_sidenew
Cock at Trafalgar Square, London (Photo by london swaminathan)

எழுதியவர்: ச.நாகராஜன்
கட்டுரை எண் 1307; தேதி செப்.24, 2014

(This article is written by my brother S Nagarajan and published in the Tamil magazine Jnana Alayam: London swaminathan)
If you want to read similar subject in English please see my posts: 1 Gods and Birds posted on Feb..3,2013 (2). Hindu Eagle Mystery Deepens, posted on Feb.16, 2013 (3). Who rides What Vahana (Animals or Birds)? posted on Oct.26, 2012; Interesting Facts about Vahanas, posted on oct. 2012; (4) Four Birds in One Sloka (5) Kapinjala Bird Mystery (6) Mysterious Vedic Homa Bird: Does it exist) (7) என்ன கடவுளுக்கு என்ன வாகனம்? (8) கா….கா…….கா……கா……

cock1
படைப்பில் அனைவரும் சமம்

“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பாடினார் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். பறவைகளை மனிதருடன் சேர்த்த அத்வைத பாவனையை அவர் ஒரு சிறந்த ஹிந்துவாக இருந்ததனாலேயே பெற முடிந்தது.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில் குயில் ஆச்சுதடி என

சிதாகாச நடனத்தை வள்ளலார் அற்புதமாக்ச் சித்தரித்தார்.

அருணகிரிநாதரோ “ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில்” என்று பிரணவமே மயில்ரூபம் கொண்டு அற்புதமாக ஆடுகிறது என்று (வாதினை அடர்ந்த என்று தொடங்கும் பாடலில்) விளக்குகிறார். இப்படிப்பட்ட அற்புதமான பரவசமூட்டும் ஆன்மீக விளக்கங்களை அறிந்து கொள்ள பரந்த பாரத தேசமெங்கும் பரவிக் கிடக்கும் தலங்களில் தான் எத்தனை பட்சிகள் பற்றிய ஸ்தலங்கள்.

Peacock cry

அன்னை மயிலாக வழிபட்ட மயிலை
அன்னை உமாதேவி, மயிலாக உருக்கொண்டு சிவபிரானை வழிபட்டதால் திரு மயிலை என்ற பெயர் பெற்ற மயிலையின் பெருமையை மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று அருளாளர்கள் கூறுவதால் அறிய முடிகிறது.

ஈக்களும் வண்டுகளும் பூஜிக்கும் தலம்
ஈவேங்கை மலை என்னும் ஈங்கோய்மலை ஈக்களால் பூஜிக்கப் பெற்ற தலம். நக்கீரர் திரு ஈங்கோய்மலை எழுபது என்னும் நூலை இயற்றியதால் மகிழ்ந்த அரசன் ஒருவன் அவரது உருவத்தை இங்கு பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தும் படி நிபந்தம் அமைத்ததை இந்தக் கோவிலின் சிலாஸாசனம் தெரிவிக்கிறது. இதன் இன்னொரு பெயர் மதுகிரி.

பட்டீச்சுரத்தில் இறைவனை வழிபட்ட மதுவல்லி என்ற தாசியும் அவள் வளர்த்த கிளியும் முத்தி பெற்றதாக பட்டீச்சுரப் புராணம் தெரிவிக்கிறது.

பட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று இருக்கிறது. அதற்கு நந்தன் மேடு என்று பெயர். இங்கு ஏழரை லட்சம் பொன் இருப்பதாக அறிவிக்கும், “எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்த தாக” அறிவிக்கும் ஒரு கல்வெட்டைக் கண்டார் சரபோஜி மஹாராஜா. (எழுவான் என்றால் சப்த கன்னிகள் (மேற்கே) இருக்கும் இடம் என்றும் தொழுவான் என்றால் முகமதியர் தொழும் இடம் என்றும் அறிந்து கொண்ட அவர், சோழன் மாளிகையில் புதையல் இருக்கும் இடத்தில் வெட்ட முயல்கையில் கதண்டுகள் (கருவண்டுகள்) வெளிப்படவே தன் முயற்சியைக் கைவிட்டதாக சுவையான செய்தி ஒன்றை வரலாறு தெரிவிக்கிறது. கருவண்டுகள் புதையலைக் காக்கின்ற அபூர்வ தலம் இது..
பட்டீச்சுரமும், திருச்சத்திமுற்றமும் கருடன் பூஜித்த தலங்களாகும்!

Funny animal picturesSource: Fimca Grey fgrey@lancashire.newsquest.co.uk

கழுகு வழிபடும் கழுக்குன்றம்
வேதமே மலையாய் விளங்கியமையால் வேதகிரி என்ற பெயருடன் திகழும் திருக்கழுக்குன்றத்தில் 500 அடி உயரமுள்ள மலையில் தினமும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்வதை அனைவரும் அறிவோம். இதனால் பட்சி தீர்த்தம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இந்த தலத்தில் மார்க்கேண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இல்லாமல் தவிக்க இறைவன் சங்கு ஒன்றைச் செய்து அருளியதையும் இங்குள்ள குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தி ஆவதையும் கோவில் வரலாறு தெரிவிக்கிறது!

ராவணனை எதிர்த்த ஜடாயுவின் இறக்கைகளை அவன் அறுக்க, கீழே விழுந்து இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு ராமரிடம் தன்னை வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூரில் தகனம் செய்யுமாறு வேண்டியதை வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள ஜடாயு குண்டத்தை பக்தர்கள் தரிசிப்பது மரபு.

கல் கருடனின் ஸ்தலம்
கருடனுடன் தொடர்பு கொண்ட தலங்களோ ஏராளம். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் அதிசய வரலாற்றைக் கொண்டவர். சிற்பி ஒருவர் கருடனைச் செதுக்கி பிராணபிரதிஷ்டை செய்த போது அது பறக்க ஆரம்பிக்கவே அதன் மீது ஒரு கல்லை எறிய அது அலகில் பட்டு கருடன் விழுந்த தலம் இது! திருநறையூர் எனச் சிறப்பிக்கப்படும் இந்த தலத்தில் கருடனை மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு வரும் போது நால்வரும் பிரகார வலத்தின் பொது எட்டுப் பேரும் கீழே கொண்டு வரும் போது முறையே 16,32,64, 128 என்ற கணக்கில் தூக்கும் படி கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவது இன்றும் காண முடியும் ஒரு அதிசயம்.

bird then chittu

பட்சிகளின் ஸ்தல பட்டியல்
இப்படி நூற்றுக்கணக்கான தலங்களில் பட்சிகளின் தொடர்பு உள்ளதை அந்தந்த தலத்தின் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதை இன்னும் அதிகமாக நன்கு அறிய விரும்பலாம். அவர்களுக்கு உதவும் ஒரு பட்டியல் (உ.வே.சுவாமிநாதையர் ஓலைச் சுவடிகளிலிருந்து குறிப்படுத்துத் தொகுத்த்து) இதோ:-

பூஜித்த பட்சி தலம்

பெட்டைப் பருந்து வேளூர் தேதியூர்
அன்னம் அம்பர்
மயில் மாயூரம், மயிலை, திருமயிலாடி
சாதகப் புள் திருவஞ்சிக் களம்
எண்காற்புள் திருபுவனம், தாராசுரம்
சக்கரவாகம், திருப்பள்ளியின் முக்கூடல்

12_YT_SPARROW_1391748f

குருவிகள் சேர்ந்து பூஜித்த தலம் குருவி, ராமேஸ்வரம்,முக்கூடல்
வலியான், மதுரை
கூகை கொடுங்குன்றம்
கோழி ஐந்தூர் (திருச்செந்தூருக்கு அருகில் உள்ள இடம்)
காக்கை சிதம்பரம்,அம்பர்மாகாளம்,திருப்பனந்தாள்,
இடைமருதூர்,குரங்கணில் முட்டம்
வண்டு திருவண்டுதுறை
வாவல் புகலூர், ராம நந்தீஸ்வரம்
தேனீ ஈங்கோய்மலை,நன்னிலம், கந்தங்குடி

13TH_ARREST_Swan,Vijayawada
குளவி கோளிலி
சாதகப்புள் திருவஞ்சிக்களம்
நாரை திருநாரையூர்
மாடப்புறா வல்லம்
கிளி கீரனூர், கிளியனூர்

பறவைகளும் முக்தி பெறலாம்

இந்தப் பட்சி ஸ்தலங்கள் உணர்த்தும் உண்மை என்ன? பெறுதற்கு அரியது மனிதப் பிறவி என்றாலும் அதில் பிறந்தால் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது கிடையாது. இறைவன் அருளுக்கு முன் சகல ஜீவராசிகளும் சமம். பட்சிகளாக இருந்து இறைவன் அருள் வேண்டி பூஜித்து முக்தி பெற்ற பட்சிகளும் உண்டு. பட்சிகளைச் சுற்றிப் படரும் திவ்யமான சரிதங்களைக் கேட்கும் போதும் அவற்றுடன் தொடர்புள்ள தலங்களைத் தரிசிக்கும் போதும் சிந்திக்கும் பகுத்தறிவு ஆற்றல் இல்லாமல் இருந்தும் கூட அவை இறைவனின் அருள் பெற்ற அதிசயங்களை உணர்ந்து நம்மை இறையருளுக்குப் பாத்திரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பெற முடிகிறதே, அதற்காகவே இந்தத் தலங்களுக்கு நாம் விஜயம் செய்யலாம். இறைவனை வணங்கி இக பர சௌபாக்கியம் பெறலாம்!

ஞான ஆலயம் செப்டம்பர் 2014 இதழில் பிரசுரமாகி உள்ள கட்டுரை

contact swami_48@yahoo.com
**********************