நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?

புலி

கட்டுரை எண் 1838

தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

தேதி : ஏப்ரல் 30, 2015; லண்டன் நேரம்: 12–02

என் கேள்விக்கென்ன பதில்?

இது போல தமிழ், ஆங்கிலத்தில் முப்பதுக்கும் மேலான க்விஸ், இந்த பிளாக்-கில் உள்ளன.

கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்ப் புலி. 15 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்க் கிளி. 10 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ் எலி. 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் நீங்கள் தமிழுக்குத் தருவது பெரும் வலி. ஒன்றும் சொல்லாவிடில் தமிழ் மொழிக்குப் பிடித்தது கிலி!!!!

கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்:—

1)———————– படித்தவனுடன் சொல்லாடாதே.

2)——————- புலவருக்கு ஔஷதம்

3)—————-உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

4)கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி ————————–

5)—————- முப்பதும் செப்பினாள் வாழிய

6)நெஞ்சை அள்ளும் ————————

7)உச்சிமேற் புலவர்கொள் ————————-

8)ஒல்காப்புகழ் ————————————

9)வாய்மொழிக் ————————-; புலன் அழுக்கற்ற அந்தணாளன்

10)கருணைக்கு —————————

கிளி

11)கற்பனைக்குக் ————————–

12) நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்———————–

13)———————— என்னைப் பாடினான்

14)———————— தன்னைப் பாடினான்

15)———————— பெண்ணைப் பாடினான்

16) ————– வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

17) வேதம் தமிழ் செய்த—————————-

18)பெரியாழ்வார் பெற்றெடுத்த————– வாழிய

19)விருத்தமென்னும் ஒண்பாவிற்கு ———–

20)மஹா கவி—————–

எலி

விடைகள்

1)கல்லாடம் 2) நைஷதம் 3) திருவாசகத்துக்கு 4) குறுகத் தரித்த குறள் 5)திருப்பாவை 6) சிலப்பதிகாரம் 7) நச்சினார்க்கினியர் 8) தொல்காப்பியன் 9) கபிலன் 10)அருணகிரி 11) கம்பன் 12) ஞான சம்பந்தன் 13) அப்பர் 14) சம்பந்தன் 15) சுந்தரர் 16) கம்பன் 17) மாறன் சடகோபன் 18) பெண்பிள்ளை 19) உயர் கம்பன் 20) பாரதி.