Translated by London swaminathan
Date: 24 April 2016
Post No. 2752
Time uploaded in London :– 12-15
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6
87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது
புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்
Xxx
88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.
புரந்த்ரீணாம் ப்ரேம க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த
Xxx
89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.
ப்ரதமம் மரணம் நார்யா பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்
Xxx
90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.
ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்
Xxx
91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.
ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்
Xxx
92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.
ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி
Xxx
93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.
ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி
Xxx
94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.
ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்
Xxx
95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
ப்ராயேண பார்யாத் ஔசீல்யம் ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்
Xxx
96.உயிரையும் விட மேலானவள் மனைவி.
பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்
Xxxx
97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12
அழகான மனைவி – ஒரு எதிரி
Xxx
98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.
ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம் தீனானாம் வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்
Xxx
99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.
யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8
Xxx
100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்
யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்
Xxx
101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று
சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.
Xxx
102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.
ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி
Xxx
103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?
ஸ்மேர சாமர ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி
–சுபம்–