ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–