
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Post No.7765
Date uploaded in London – 31 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சங்கத் தமிழ் இலக்கியத்திலும் திருக்குறளிலும் ‘அந்தணர்கள்’, ‘அறுதொழிலோர்’, ‘மறையவர்’, ‘நான்மறையாளர்’, ‘வேதியர்’,’ பார்ப்பான்’, ‘ஐயர்’ ஆகிய சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சில அரைவேக்காடுகளும், அசத்துக்களும் திராவிடங்களும் மார்கசீயங்களும் , எனக்கு எழுதி வருகின்றன ; அவை என்ன எழுதின? “அந்தணர் என்றால் பிராமணர் இல்லையாமே” என்று.!
சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர்களைத்தான் குறிக்கின்றன என்று பழைய உரைகள் சொல்கின்றன. சில இடங்களில் அந்தணர் என்போர் துறவோருடன் ஒப்பிடப்படுகின்றனர். ஏனெனில் சந்யாசிகள் அனைவரும் அந்தணர்க்குச் சமம்.
ஏறத் தாழ 16 நூல்களும் 75-க்கும் மேலான இடங்களும் இருப்பதால் ஒவ்வொரு நூலுக்கும் ஓரிரு உதாரணங்களை மட்டும் தருகிறேன்.
திருக்குறளிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் வரும் சில பல இடங்களைக் காண்போம் :-

அந்தணர் -தொல்காப்பியம் 1-102, 3-144-15, 615-2
திருமுருகு. 96
சிறுபா . 187, 204
பெரும்பா .315
மதுரை. – 656
குறி. – 225
பதிற்று. – 24-8, 64-5.
பரிபாடல்- 1-13, 40; 2-57, 68;3-14, 4-65, 5-22, 6-45, 11-78, 79, 14-28
பரி.திரட்டு- 1-20, 2-61
கலி .- 1-1, 36-25, 99-2, 119-12, 126-4,
புறம் . க.வா .-6, 2-22, 361-4, 397-20
நான் மணி. 35-1, 87-2,
இன்னா – 2-3,
இனி.நா .- 7-1, 23-2,
குறள் – 30-1, 543- 1.
ஆ .கோவை – 92-3
சிலப் . – 13-141, 15-70, 16-71, 22-8, 23-70, 26-102, 28-222.
மணி .- 5-43, 133, 6- 169, 13-25, 40, 46, 96, 100, 102.
முத்தொ ள் . – 43-1, களவியல் 1-2.
அந்தணர் பள்ளி – மது.474
அந்தணர் வெறுக்கை- திருமுருகு .263.
அந்தணரது – புறம்.122-3
அந்தணன் – பரி.11-7, கலி. 38-1, 69-5, 72-18, அகம்.க.வா . 15, புறம் .200-13, 201-7, குறள் .8-1, சிலப் .15-20, மணி.11-84, 13-27, 70, 15-64
அந்தணன் எரி வலம் செய்வான் – கலி .69-5
அந்தணாளர் – தொல்காப்பியம் .3-617-1, 627-1, புறம் 362-8
அந்தணாளன்- புறம் 126-11, மணி .22-115
அந்தணிர் – ஐங்.-384-1, 387-2, கலி .9-4, மணி. 13-56
Xxx

முதலில் உலகம் போற்றும் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – 543
“அந்தணர்க்கு உரித்தாகிய வேதமும், அவ்வேதத்தில் சொல்லப்பட்ட அறமும், ஆகிய இரண்டும் நிலைபெறுதற்கு அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல் காரணமாகும்” .
— ஏ . அரங்கநாத முதலியார், 1933
‘ஆதி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் கவனிக்கவும்.
xxx
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – 560
“நாட்டைக் காக்க வேண்டிய அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காக்கத் தவறிவிட்டால் பசுக்களும் பால் தராது; அந்தணர்களும் மறை நூலை மறந்து விடுவர் .
சென்ற குறளின் கருத்துதான். இதில் ‘அறுதொழிலோர்’ என்ற மனுவின் வாசகத்தையும் (Manu 1-88), ‘கோப்ராஹ்மண’ஸ்ய சுபமஸ்து நித்யம் (ஆ+அறுதொழிலோர்) என்ற கருத்தையும் காணலாம். இதை “வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்” என்ற தேவாரப்பாடலிலும் காணலாம் .
அத்⁴யாபநமத்⁴யயநம் யஜநம் யாஜநம் ததா² ।
தா³நம் ப்ரதிக்³ரஹம் சைவ ப்³ராஹ்மணாநாமகல்பயத் Manu 1-88
अध्यापनमध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् Manu 1-88
Hints for further research
ஆராய்ச்சியாளர்க்கு —
இக்கருத்துவரும் பிற இடங்கள் – ராஜ தரங்கிணி , பஞ்ச தந்திரம், யாக்ஞ வாக்ய ஸ்ம்ருதி.
வால்மீகி ராமாயணம் – 3-24-21, 1-26-5, 4-17-36, 1-25-15
‘பயஸ்= பால்’ என்பது ஸம்ஸ்க்ருதச் சொல் என்பதையும் கவனிக்கவும்
‘நூல்’ என்றாலேயே வேதம்தான் என்ற கருத்தை கிறிஸ்தவர்களும் நம்மிடமிருந்து திருடிக் கொண்டார்கள். அவர்கள் ஸம்ப்ரதாயத்திலும் “நூல் =பைபிள்=விவிலிய=பிப்லியோ = புஸ்தகம்”தான்.
xxxx

அந்தணர் என்போர் அறவோர் மற்றெ வ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழு கலான் – குறள் 30
“எல்லா உயிர்களிடத்திலும் அருள் காட்டுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவார்” . அதாவது யார் யார் எல்லாம் அருள் மழை பொழிகிறார்களோ அவர்கள் எல்லோரும் அந்தணர். இது பொதுப்படையான வாசகம் என்றாலும் தம்மபதம் 393, 294 ஸ்லோகங்களில் புத்தர் இதை ப்ராஹ்மண ஜாதியின் இலக்கணத்தைக் குறிப்பிடுகையில் பயன்படுத்துகிறார் இந்தக் கருத்து சதபத பிராமண நூலிலும் உளது.
இந்தக் கருத்தை பிற்காலத்தில் நரசிம்ம மேத்தா ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலில் பயன்படுத்துகிறார். அதை மஹாத்மா காந்தி பாடிப்பாடி மகிழ்ந்தார்.
சுவாமி விவேகானந்தர் ‘யார் ஹிந்து’ என்ற பிரசங்கத்தில் இதே பணியில் பேசினார்
xxx
எட்டாவது குறளில் “அறவாழி அந்தணன்” என்ற சொல் வருகிறது. இது விஷ்ணு சஹஸ்ர நாமச் சொல். அது விஷ்ணுவை ‘ப்ராஹ்மணன்’ என்றும் ‘பிராஹ்மணப் பிரியன்’ என்றும் போற்றும். அதாவது நீயே பிரம்மம்; உன்னை நாடுவோர் அனைவரும் பிராமணர்கள்; அவர்கள் எல்லோரும் உன் அருள் மழையில் நனைவர் ; அன்பிற்குப் பாத்திரமாவர் என்பது பொருள்.
ஆழ்வார்களும் கிருஷ்ண பரமாத்மாவை இப்படிப் புகழ்வர்-
“அறவனை ஆழி ப்படை அந்தணனை” — என்று திவ்யப் பிரபந்தத்தில் படிக்கிறோம். புத்தரைக் குறிக்கும் என்றும் சிலர் செப்புவர் . அதுமட்டும் அல்ல. அதே குறளில் வரும் “பிறவாழி நீந்தல்” – என்பது வள்ளுவன் ‘பக்கா ஹிந்து’ என்பதைக் காட்டும். ஏனெனில் ‘சம்சார சாகரம் = பிறப்பு -இறப்பு என்ற கடல்’ (வாழ்க்கை) என்பது ஹிந்துக்கள் பல துதிகளில் சர்வ சாதரணமாய் பயன்படுத்தும் சொல். இதை செமிட்டிக் மதங்கள் (Semitic Religions) மூன்றிலும் காண முடியாது. ஏனெனில் இந்துக்களுக்கு கடல் பயணம், கடல் படை தாக்குதல் தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது.
அடுத்தபடியாக தமிழ் மக்களின் சிறப்பைக் கொடிகட்டிப் பறக்கவிடும் புறநாநூற்றைக் காண்போம்.
Tags –
அந்தணர் , யார், திருக்குறள் , கமிழ், இலக்கியம், சங்கத் தமிழ்
— to be continued………………………….
You must be logged in to post a comment.