வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை (Post No.7119)

Written by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 21 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-13 am
Post No. 7119

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 19-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3

ச.நாகராஜன்

சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை

தலைவன் தலைவியிடம் உன்னை விட்டு ஒருநாளும் பிரியமாட்டேன் என்று சொல்லும் ஒரு காட்சி.

அரக்கில் பதிந்த வைரத்தைப் போல உன்னை விட்டு ஒருநாளும் பிரிய மாட்டேன் என்கிறான் அவன்.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே இன்று பழனி என்று நாம் அழைக்கும் சங்க காலப் பொதினி நகரில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடை பெற்று வந்தது. இங்கு பட்டை தீட்டும் நிபுணருக்கு காரோடன் என்று பெயர். ஒரு குச்சியின் முனையில் அரக்கை வைத்து, அந்த அரக்கின் நுனியில் வைரத்தை வைத்துப் பட்டை தீட்டுவது வழக்கம். ஆக

“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரிந்திலம்” என்ற சங்க இலக்கியத்தின் வரி நமக்குக் காதலின் ஆழத்தை விளக்குகிறது.

‘அரக்குடன் ஒட்டிய பிரிக்க முடியாத வைரத்தைப் போல உன்னுடன் ஒட்டி பிரிய மாட்டேன்’ என்கிறான் காதலன், காதலியிடம்.

அகநானூற்றில் களிற்றியானையில் வரும் முதல் பாடலில் மலரும் காட்சி இது.

இன்னொரு காட்சியை சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கிறது. பாணன் பார்க்கும் காட்சி இது.

கிராமப்புறம் ஒன்றில் உலக்கையால் அரிசியைக் குத்திக் குத்தி உலக்கையின் நுனியில் வைரங்கள் பதிக்கப்பட்ட இரும்புப் பூண் தேய்ந்து விட்டதாம்.

‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த’ என்ற வரி சங்க காலத்தில் வைரமானது அன்றாடத் தமிழரின் வாழ்க்கையில் எத்தகைய சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.

‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ – கவியரசு கண்ணதாசன் பாசமலருக்காக வரைந்த வைர வரி இது.

வளம் வாய்ந்த வைர நாடாக தமிழகம் விளங்கியதை இது போன்ற நூற்றுக் கணக்கான அழகிய பாடல்கள் சித்தரிக்கின்றன.

மஹாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற இதிஹாஸங்கள் வைரம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகின்றன.

வைரத்தின் ஒளிச் சிதறலால் இரவே இல்லையாம் அயோத்தியிலும் இலங்கையிலும்! வைரங்கள் பதிக்கப்பட்ட மதில்களும் மாளிகைகளும் ஒளி வீசுவதை எண்ணிப் பார்த்து பிரமிக்கிறோம். அனைவரும் அணிந்திருக்கும் வைரங்களின் ஒளியால் சூரிய ஒளி மங்கி விடுகிறதாம்!

இது போல இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்கள் வைரத்தின் ஒரிஜினல் பூமியான இந்தியா பற்றி எத்தனை ஆயிரம் செய்திகளைத் தருகின்றன என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.

வைரத்தின் 12 குற்றங்கள்

வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல.

வைரத்தின் குற்றங்கள் 12.

சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம்,இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை 4.

காகபாதம் நாகம் கொல்லும். (காகபிந்து என்றால் கரும்புள்ளி என்று பொருள்)

விந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.

மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும் (மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும்)

கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். (கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர்)

ஐந்து நல்ல குணங்கள்

வைரத்தின் குணங்கள் 5.

பலகை எட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள்.

குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.

சாமானியனுக்குப் புரியும் வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக் கூடாது.

அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்ல பட்டைகளின் ஒளிப் பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப் பயன்.

நல்ல பலன்கள்

நல்ல பலன்கள் என்பவை : அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலை பாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.

கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறுநீரகக் கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீய சக்திகளால் பயம் ஏற்படாது.

கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்தபிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறா

ரஸ ஜல நிதி தரும் உண்மைகள்

ரஸ ஜல நிதி வைரத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறது.

1)   ஆண் (Masculine) 2) பெண் (Feminine) 3) நியூட்ரல் (Neutral)

ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ணஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.

பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது.மெலிதானது. நீளமானது.

முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.

வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்

    உயர் ரக வைரம் இலேசாக இருக்கும்.

அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ் ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். (Flourescence). ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ் ரே பயன்படுத்தப்படுகிறது.

வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். (படத்தில் 58 வெட்டுகளைக் காணலாம். மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்)

ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.

வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.

வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு. 

Table,Star,Templet,Lozene,Quotin,Cross, Skew,Skilt என இப்படிப் பல பெயர்கள்!

வடிவங்களும் கூட இதயம் (Heart), பியர் (piar), ஓவல் (Oval), எமரால்ட் ( Emerald) என இப்படிப் பல பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

பேரமில்லாத வைர வியாபாரம்!

வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான்.  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் எனப்படும் Central Selling Organisation- CSO-க்கு அனுப்புகிறது.

சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் – அனைவரும் வைர நிபுணர்கள் – 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.

நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள்.

வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!

ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள்.

வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.

ஒரு வைரத்தை வாங்கும்போது நம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு C உள்ளது. அது தான் Certificate.   விற்பவர் தானே கொடுத்துக் கொள்ளும் லாபரட்டரி சர்டிபிகேட் அல்லது விற்கும் நிறுவனத்தின் சர்டிபிகேட் அல்ல இங்கு குறிப்பிடப்படுவது. GIA (ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா) போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்களின் சர்டிபிகேட் உள்ளதா என்பதையே பார்க்க வேண்டும்.

சுக்ரனுக்குரியது வைரம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.

கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.

மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்.

நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.

கண்ணிற்கான காண்டாக்ட் லென்ஸில் வைரம், விண்ணில் பறக்கும் விண்கல ஜன்னலில் வைரம் என ஆயிரக் கணக்கில் வைரங்களைப் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.

எம்.எஸ்., பத்மினி, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ

பாரத் ரத்னா இசையரசி எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குச் சென்றவர்கள், குறிப்பாகப் பெண்மணிகள், அவரது இசையை வானளாவப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் அவரது டால் அடிக்கும் வைர மூக்குத்தி பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளில் பத்மினியின் ஜொலிக்கும் முக்குத்தியும் நகைகளும் நாட்டியப் பேரொளியின் நடனம் பேசப்பட்ட அளவு பெரிதும் பேசப்பட்டவை.

இன்னும் எலிஸபத் டெய்லரின் வைர மோதிரம், க்ரேஸ் கெல்லியின் வைர நகை ஆகியவை உலகினரின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பே இல்லை.

எலிஸபத் டெய்லர், “பெரிய பெண்மணிகளுக்கு பெரிய வைரங்கள் தேவை” (Big girls need big Diamonds) என்று ஒரு போடு போட்டார்.

பிரபல அமெரிக்க டி.வி.சீரியல் பிரபலமான நிகோல் ரிச்சி, “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போல – பிரகாசமானவர்கள்.அழகானவர்கள்.மிக்க மதிப்புடையவர்கள், எப்போதும் ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் என்று சொன்ன பொன்மொழி வைர மொழியாக மதிக்கப்படுகிறது.

உலகை மயக்கிய பேரழகி மர்லின் மன்ரோ 1953ஆம் ஆண்டு,’ஒரு பெண்மணியின் உண்மைத் தோழி வைரமே’ என்று பிரகடனம் செய்தார்.

நாரீமணிகளின் உண்மைத் தோழி வைரங்கள் தானே?

எப்போதும் நிலைத்து நிற்பது வைரம் மட்டுமே!

இதற்கான ஆங்கில வாசகங்களான், ‘Diamond’s are girl’s best friend’,  A Diamond is For Ever’ என்ற விளம்பர வாசகங்களை பற்பல கோடி ரூபாய்களைச் செலவழித்து டீ பீர்ஸ் நிறுவனம் உலகத்தில் மறக்க முடியாதபடி நிலை நிறுத்தி விட்டது.

வைரங்கள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையா என்ன?

தரமான வைரம் – நிரந்தரமான சந்தோஷம்.

வாழ்வின் உற்ற துணை வைரமே!

வைரத்துடனான வளமான வாழ்க்கை வாழ்வீராக!

***

வைரங்கள் பற்றிய இந்தப் பகுதி நிறைவடைகிறது.