2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம் ; மெகஸ்தனிஸ் அற்புத தகவல் (Post 9387)

2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம் ; மெகஸ்தனிஸ் அற்புத தகவல் (Post 9387)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9387

Date uploaded in London – –16 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

உலகிற்கு ஜோதிடத்தையும் அது தொடர்பான வானவியலையும் கற்பித்தது இதுக்களே. இதற்கான சான்றுகள்  ரிக் வேதத்தில் இருப்பதை ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் (HERMAN JACOBI AND B G TILAK) நிரூபித்துவிட்டனர்.உலகிலேயே ஜோதிடத்தை பாட திட்டத்தில் சிலபஸில் சேர்த்ததும் இந்தியாதான். வேதத்தைக் கற்போர் அதன் ஆறு அங்கங்களையும் கற்க வேண்டும் இந்த ஆறு ஷட் +

–subham—

tags —ஜோதிடம் , சடங்கு, ஷட் அங்கம், நிமித்தம், பாணினி ,

சடங்கு — விக்கிபீடியா தவற்றைத் திருத்துக (Post No.7701)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7701

Date uploaded in London – 16 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் விக்கிபீடியாவில் (Tamil Wikipedia) சடங்கு பற்றிய தகவலைப் படித்தேன். அது தவறான விளக்கம். அதைத் திருத்த வேண்டும். மேலும் பிராமணர்களைப்  பற்றிய தவறான தகவல், அத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத இடத்தில்  ,கொடுக்கப்பட்டுள்ளது அதையும் நீக்கவேண்டும்.

விக்கிபீடியா பற்றி எச்சரிக்கை !

இது ஒரு கை எழுதுவது அல்ல. பல உள்நோக்கம் படைத்தோரும் அரைவேக்காடுகளும் கூட இதை எழுதுகின்றன. இதில் பல தவறுகளைக் காண்கிறேன். இன்று சடங்கு பற்றி மட்டும் கதைப்போம். பி.பி.சி. போன்ற வெளிநாட்டு

ஒளி/ஒலி பரப்புகள் பொய் சொல்வதில்லை . ஆ னால் விஷமம் செய்யும் . பாதி உண்மையைச் சொல்லி , சந்தேகத்தைக் கிளப்பிவிடும். தங்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டும் தெரிந்தெடுத்து ஒளி/ஒலி பரப்பும். சதா ம் ஹுசைன் அல்லது கடாபி பெட்ரோல் தராவிடில் அல்லது பெட்ரோலிய கான்டராக்ட்டுகள்  தராவிடில் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் கொன்றுவிடும். இதுபோல தமிழ் திராவிடங்கள் விக்கிபீடியாவின் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளன. அதாவது கருணாநிதி , நெடுஞ்செழியன் போன்றவர்கள் எழுதிய தொல்காப்பிய, திருக்குறள் உரைகளை  எழுதிவிட்டு 1000 ஆண்டுகளாக உள்ள பழைய உரைகளை இல்லாமற் செய்து விடுவது ; இதோ விக்கிபீடியாவில் சடங்கின் விளக்கம் :-

சடங்குகள் பெயர்க்காரணம்[தொகு]

சடங்கு எனும் சொல்[தொகு]

சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.

சட்ட + அம் + கு = சடங்கு

‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.

‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது

‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.

பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.

“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”

ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம்.

சடங்கிற்கு இன்னொரு பெயர்[தொகு]

சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:

அரண் – அரணம் – கரணம்

மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர். நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. சான்றோர்களைக் குறிப்பிட்டது இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப் பொருள்படும்.

XXXXX

மூன்று தவறுகள்

தமிழில் “ச” என்ற எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக்  கூடாது என்பது தொல்காப்பிய விதி. இதையும் மீறி சங்க இலக்கியத்தில் சுமார் 20 சொற்கள் உள்ளன. அவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்கள்.

ஆகையால் விக்கி கூறும் ‘சட்டம்’ சங்க இலக்கியத்தில் இல்லை. பிற்காலத்தில் வந்த சொல்; மேலும் அது சம்ஸ்கிருத அடிப்படையானது .

சடங்கு என்ற சொல் ஷட் +அங்கம் , அதாவது வேதத்தின் ஆறு அங்கங்கள் , என்ற சொல்லைக் குறிக்கும். இதை வேதம் கற்கும் அனைவரும் துணைப்பாடங்களாக கற்க வேண்டும். இதில் வல்லவர் ‘சடங்கவித்’ எனப்படுவார். சுந்தர மூர்த்தி நாயனாருக்கு பெண் கொடுத்த சடங்கவி(த்) சிவாச்சாரியாரை ‘சடங்கவி’ என்று சொல்லுவோம். சடங்கு என்ற தமிழ்ச் சொல் இதிலிருந்து வந்ததைக் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 18-10-1932 நிகழ்த்திய சென்னை மைலாப்பூர் சொற்   பொ ழிவில் விளக்கியுள்ளார். பின்னர் இது தெய்வத்தின் குரல் புஸ்தகத்திலும் வந்துள்ளது.

வேதத்தின் 6 அங்கங்கள் ;-

ஜோதிடம் – கண் ASTOLOGY/ ASTRONOMY – EYE

இலக்கணம் – முகம் /வாய் GRAMMAR – MOUTH

கல்பம்/சடங்குகள் – கை MANUAL OF RITUALS -HAND

செய்யுளியல் /சந்தஸ் – கால்கள் PROSODY – FEET

நிருக்தம்/ சொற்பிறப்பியல்- காது ETYMOLOGY/LEXICON – EAR

சிக்ஷை /உச்சரிப்பு – மூக்கு PHONETICS – NOSE

திருவாசகத்துக்கு உரை எழுதியவர்களும் சட்டம் -உடல், அல்லது சிவாகமக் கட்டளைகள் என்று இருந்தாலும் உடல் என்பதே பொருந்தும் என்பர் – காண்க ச.தண்டபாணி தேசிகர் உரை, திருவாவடுதுறை ஆதீனம் , பாடல் 467, திருக்கழுக்குன்றப்  பதிகம்

அதே பாடலில் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சிஷ்டன் -ஒழுங்கு நெறி தவறாதவன் என்பதும் சிஸ்டம் SYSTEM என்னும் ஆங்கிலத் தொடர்புடையது. அதாவது ஆதி மூலம் சம்ஸ்கிருத “ஸ்த” (Sta- Stand, System) என்னும் வேரிலிருந்து பிறந்தது.

xxx

“ஐயர் யாத்தன கரணம் என்ப”

ஐயர் என்ற சொல் ‘ஆர்ய’ என்பது பிராகிருத பேச்சு வழக்கில் ‘அஜ்ஜ’ ஆகி, பின்னர் ஐயர் என மருவியது.

‘ஆ ரி/ர் ய’ என்றால் கற்றவன், பண்பாடு உடையவன், முனிவன் என்று மூன்று பொருள் உண்டு . சங்க இலக்கியத்திலும் ‘ஆ ரிய’ இந்த மூன்று பொருளில் வருகிறது. ‘ஐயர்’ பல இடங்களில் வருகிறது.

‘கரணம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. சங்க இலக்கியத்திலும் இல்லை. தொல்காப்பிய பொருள் அதிகாரம் உருவான ஐந்தாம் நூற்றாண்டில்  புழக்கத்துக்கு வந்தது . பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது  அறிஞர் பெருமக்கள் கருத்து.

இந்தக் ‘கரணம்’ உருவான கதை மஹாபாரதத்தில் உள்ளது . ஒருவனுடைய மனைவியை மறறொருவன் இழுத்துச் சென்றபோது அந்தப் பெண்ணின் மகன் எதிர்ப்புக் குரல் எழுப்பவே கல்யாண சடங்குகள் / கரணம் உருவானது . கரணம் , காரணம் என்பதற்கு 21 விளக்கங்களை விஸ்டம் லைப்ரரி (Wisdom Library) வெப்சைட்டில் காண்க.

ஆக, மு. கருணாநிதி எழுதிய தொல்காப்பிய உரையை விடுத்து உண்மை உரை தருக.

xxx

மூன்றாவது தவறு அந்தணர், வேதியர், மறையோர் , பார்ப்பனருக்கு தேவையில்லாதபடி இவர்கள் ஒரு ஜாதியினரை (பிராமணர்களை)க் குறிக்காது என்று எழுதியிருப்பது, இதை எழுதியவரின் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்கள் –

வேதம் அறிந்தவன் வேதியன் (வேதம் சம்ஸ்கிருதச் சொல் )

அந்தத்தை அணவுபவன் – அந்தணன் (அந்தம் சம்ஸ்கிருதச் சொல்)

மறை – மறைவான பொருளைக் கூறும் வேதம்

பார்ப்பனன் – எப்போதும் உள்ளே உறையும் இறைவனை பார்ப்பவன்.

உண்மையில் இவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்களின் மொழிபெயர்ப்பு.

பிரம்மத்தை நாடுபவன் அல்லது நெஞ்சில் நிறுத்தியவன் பிராமணன்.

வேதம் என்னும் அறிவு பெற்றவன் – வேதவித்

இறைவனுக்கே பிராஹ்மணன் , பிராஹ்மண ப்ரியன் என்று பெயர்கள் உண்டு. விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்போர் இதை அறிவர் .

பிராமணர்கள் நூற்றுக்கு நுறு சதவிகிதம் இந்தக் கருத்தை  ஏற்றதால் இவை அவர்களைக் குறித்தன. இதே போல பிரம்மத்தை நாடிய விஸ்வா மித்ரன் , ஜனகன் போன்ற பிராமணர் அல்லாதோரையும் , துறவியரையும் குறித்தது உண்மைதான்.

ஆயினும் சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இது வேதம் அறிந்த பிராமணர்களைக் குறித்தது என்பதை உ.வே.சாமிநாத ஐயர் , கி.வா ஜகந்நா தனின் சங்க இலக்கிய மற்றும் திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் காண்க (குறள் 543)

சங்க இலக்கியத்தில் பிராமணர் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்கூறிய சொற்களைப்  பயன்படுத்திய இடங்களை இங்கே குறிப்பிட்டால் கட்டுரை விரியும். ஆகையால் அதைத் தனியாகக் காண்போம்.

ஆக மூன்று தவறுகளையும் திருத்துவது விக்கிபீடியாவின் கடமை. தமிழ் பற்றி பிறர் எழுதும் விஷயங்களை அறிஞர் குழுவின் மேற்பார்வைக்கு அனுப்புவது நல்லது.

வாசகர்களுக்கு

தமிழ் பற்றிக் கடந்த 50 ஆண்டுகளாக வெளிவரும் புஸ்தகங்களில் விஷமிகளின் கைவரிசை அதிகம் இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய உரைகளையும் காண வேண்டும். அப்படி மாற்றுரை எழுத விரும்பினால் பழைய உரைகாரர் சொன்னதையும் குறிப்பிடுவது எழுத்து தர்மத்தை நிலைநாட்டும். மேலும் பொய்யுரைகள் தமிழ் மொழியை அழித்துவிடும் .

தமிழ் வாழ்க. பழைய உரைகார்கள் வெல்க

tags —  சடங்கு , விக்கிபீடியா , மூன்று தவறுகள்

–subham–