கல்யாண சமையல் சாதம் , காய்கறிகளும் பிரமாதம்! (Post No.8518)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8518

Date uploaded in London – 16 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவிமார்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்!

kattukutty

என் மனைவி சமைச்ச சாதம்
சாப்பிட பிரமாதம் இந்த கவுரவ ப்ரசாதம்
இதுவே எனக்கு போதும்….
அ ஹ்ஹ ஹ்ஹஹ ஆஹ்ஹ ஹ்ஹா

என்றாவது ஒரு நாள் இந்த மாதிரி பாடி மனைவியை motivate
பண்ணியிருக்கிறீர்களா……..

சமையலறையில்,அல்லது டைனிங் டேபிளில்
என்ன நடக்குதுன்னு நான் சொல்றேன்



“என்ன (டி)பண்ணித் தொலைஞ்சிருக்கே???
ஏண்டா இந்த வீட்ல சாப்பிடறோம்ன்னு இருக்கு”

என்னோட ஆபீஸுல என் friend கோவிந்தன் அவன்
பொண்டாட்டி சமச்ச பிரியாணி ஒரு பிடி போட்டான்
பாரு….. என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட்…..ம்……அவன்
கொடுத்து வச்சவன்……..

‘ஜோக்’கும்   படித்திருக்கிறோம்
“நீ பண்ணின இத நம்ம நாய்க்கு போட்டிறாதே;
செத்து கித்து தொலைக்கப் போவுது;
ஆசையா வளர்த்த நாய்!”

சிலர் சாப்பிடும் போதே, “இத மனுஷன் சாப்புடுவான்?
நா ஒரு சொரணை கெட்டவன். தினம்,தினம் சாப்புடறேன்” என்பர்.
அதற்கு அவன் மனைவி, இந்த பேச்சுக்கொண்ணும் குறச்சலில்ல
தினம் தினம் மூணு வேளை தட்டு நிறையா கொட்டிக்கறதிலே
குறச்சலில்லே ,இதுலே பேச்சு வேற…….” என்று முணுமுணுப்பாள்.


என்னடி அங்க முணுமுணுப்பு…..
உங்களுக்கு பிடிக்லன்னா வைச்சுடுங்க குழந்தைங்க நல்லா
சாப்பிடுங்க…..

சரி, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி  நடக்கப் போவதாவது நல்லனவைகளாக இருக்கட்டும்

****



முதலில் உங்கள் மனைவி என்ன நட்சத்திரம் என்று பாருங்கள்.


அது என்ன ராசி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் சமையலறையில் முடிந்த வரை என்னன்ன
‘Modification’ பண்ண முடியுமோ அதைப் பண்ணி
உங்கள் மனைவியை சமைக்கச் சொல்லுங்கள்



ஏ மேஷ ராசி பெண்களே


உங்களுக்கு கொஞ்சம் ‘ஸ்பீடு’ ஜாஸ்தி…..நீங்க கிழக்கு
பார்த்து தான் சமைக்கணும். உங்க இடதுபக்கம் தண்ணீரும்
வலது பக்கம் உங்க சமையல் பொருள்களை வையுங்க


மிதுன ராசி பெண்களே


துருவித் துருவி நல்ல பொருளைத் தான் எடுத்து சமைப்பீங்க
சிரிக்கப் பேசிக்கிட்டே சமைப்பீங்க…..


உங்க சமையலறை வடக்கு பக்கம் இருக்கணும்..முடியாத
பட்சத்தில் சமையல் அறை எந்த பக்கம் இருந்தாலும்
நீங்க வடக்கு பார்த்தாவது சமையல் செய்யுங்க…இடது புறம்
தண்ணீர் வலது பக்கம் உங்க சாப்பாடு…..



ஏ சிம்ம ராசி பெண்களே


சமையலில் புதுமை தேடும் நீங்கள் மனசு வைத்தால் விதம்
விதமாக சமைப்பீர்கள் இல்லேன்னா ஓட்டல் தான்….
சமையலறை கிழக்கில் அல்லது கிழக்கு பார்த்து சமைக்கவும்
உணவும் தண்ணீரும் வலது பக்கம் ஓ.கே ????

கடக ராசி பெண்களே


அறு சுவை உணவின் அரசியே!!! தென்மேற்கு திசை
அல்லது தெற்கு திசை நோக்கி சமைக்கவும். விதம் விதமாக
சமைக்க தெரியும் உங்களுக்கு. தென் மேற்கே தண்ணீர். தென்
கிழக்கில் உணவுப்பொருள்….



ஏ கன்னி ராசி பெண்களே


கோச்சுக்காதீங்க!  நீங்க ரொம்ப “செல்பிஷ்” உங்களுக்கு
மேற்கே சமையலறை இருந்தால் தான் நல்லது….நீங்க
அருமையா சமைத்த உணவு எல்லாம் இடது பக்கம், தண்ணீர்
வலது பக்கம் தண்ணீர்… சரியா???.?

துலாம் ராசி பெண்களே


மெழுகு போன்ற இளகிய மனம்  படைத்த நீங்க வடமேற்கு
திசையில் அல்லது வடக்கு பார்த்து நின்று வடக்கு பார்த்து
சமையல் செய்யணும். பட படன்னு வேலை செய்யக்கூடாது
மெதுவா பார்த்து சமைக்கணும்….சரியா???
இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம் உணவு.



ஏ விருச்சிக ராசி பெண்களே,


நம்ம ‘டேஸ்டே’ தனி என்று விதம் விதமாக சமைக்கும்
நீங்க தென்கிழக்கு பார்த்து அல்லது கிழக்கு பார்த்து சமைக்கணும்.


இந்த திசையை பார்த்து சமைத்தால சண்டை வராது!!!
உணவு காய் கறிகள் இடது பக்கம், தண்ணீர் வலது பக்கம்
என்ன ….புரிஞ்சதா???? ‘ஸ்டார்ட்…….’

தனுசு ராசி பெண்களே


எனக்கு தெரிகிறது நீங்க ‘ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா’–
என்று பக்தியுடன் பாடிக்கொண்டே சமைப்பது. அப்படியே கொஞ்சம்
கிழக்கு பார்த்து சமைங்க பார்ப்போம். வலது பக்கம் தண்ணீர்
இடது பக்கம் உணவுப்பொருள்


ஏ மகர ராசி பெண்களே


நீங்க ரொம்ப ‘போல்டான’ மேடம்……உங்களுக்கு தென்மேற்கில்
சமைலறை இருக்க வேண்டும், இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம்
உணவு….. இனிப்பான நீங்கள் உங்கள் கணவர்,குழந்தைகள்
உங்களை புகழ வேண்டும் என நினைப்பீர்கள்.

கும்ப ராசி பெண்களே


சமைலறை பிரச்சினைகளை சாதுர்யமாக ‘அட்டாக்’ செய்யும்
நீங்கள் தென் கிழக்கு திசையை பார்த்து சமைக்கணும்.
இனிப்பு பண்டம் செய்வதில் வல்லவர் நீங்கள்….



ஏ மீன ராசி பெண்களே


குங்கும பொட்டும், குழந்தை மனமும் கொண்ட நீங்கள் கொஞ்சம்
அலட்சியம் தான் சமையலில்…தெற்கே சமையலறை இருக்க வேண்டும்.

புதுசு புதுசாக கசப்பு இனிப்பு வகைகள சமைத்து
வெற்றியும காண்பீர்கள்.

பொதுவாக வாஸ்து பிரகாரம் தென் கிழக்கு மூலையான அக்னி
மூலையில் தான் அமைய வேண்டும் சமையலறை. அப்படி முடியாத
பட்சம் வட மேற்கு மூலையில் அமைத்துக் கொள்ளலாம்.
என் அபிப்ராயம் வேறு விதம். ஒவ்வொரு ராசிக்கு தகுந்த மாதிரி
சமயலறை அமைத்து நன்றாக சமைத்து சாப்பிட்டு சிறப்பாக
வாழ்வதை கண்முன் கண்டேன்


அதற்காவே பெண்குலம் தழைக்கவே திரு சாமிநாதனை
கேட்டுக் கொண்டேன் எனது இந்த ஆராய்ச்சி முடிவுகளை
வெளியிட…….


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றும் நினையேன் பராபரமே !!!

tags – ராசி,நட்சத்திரம், சமையலறை,கல்யாண சமையல் , சாதம் ,