Written by London swaminathan
Date: 3 July 2016
Post No. 2940
Time uploaded in London :– 12-48
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா
யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்
மனு 12-33
பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.
வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் (குறள் 850)
உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்
கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–
சம்சயாத்மா விநஸ்யதி சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)
மாணிக்கவாசகரோ ‘நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.
இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.
XXX
மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)
வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:
தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்
மனு 12-31
வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்
XXX
ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:
விஷயோபசேவா ச அஜஸ்ரம் ராஜசம் குணலக்ஷணம்.
தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.
XXX
இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.
தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.
தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே
சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்
மனு 12-38
-SUBAM-
You must be logged in to post a comment.