

Post No. 8708
Date uploaded in London – –19 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இலக்கணம் கற்போரும் பிற மொழி இலக்கணத்தை தமிழ் மொழியுடன் ஒப்பிடும் கட்டுரைகளைப் படிப்போரும் பல இலக்கண சொற்களைக் காண்பார்கள். அவற்றைத் தமிழ்- ஆங்கிலம் – சம்ஸ்க்ருதத்தில் – என்ன சொற்களால் அழைக்கிறார்கள் என்பதை அறிந்தால் இன்னும் எளிதாக, விரைவாக விளங்கிக் கொள்ள முடியும். அதற்காக பல நூல்களில் இருந்து சொற்களைத் தொகுத்து ஒரு அகராதியை வெளியிட முயற்சி செய்கிறேன். இது முழுமை பெற சில காலம் ஆகும்.
தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் இல்லாத சில ஒலிகள் , சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இந்த சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே உச்சரிப்பதா அல்லது தமிழ் முறைப்படி மாற்றி உச்சரிப்பதா என்பதற்கு இரண்டு விதிகள் உள்ளன. அதைத் தற்சமம் , தற்பவம் என்று சொல்லுவார்கள் .

தற்சமம்
இருமொழியிலும் காணப்படும் பொது எழுத்துக்கள் ஒரு சம்ஸ்கிருதத் சொல்லில் இருந்தால் அதை அப்படியே எழுதுவதோ ஒலிப்பதோ தற்சமம்.
உதாரணம்/எடுத்துக் காட்டு
கமலம், காரணம்
தற்பவம்
சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எழுதுகையில் அதைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றுவது தற்பவம் .
உதாரணம்/ எடுத்துக் காட்டு
பங்கஜம் – பங்கயம்
வருஷம் – வருடம்
ஸபா – சபை, அவை
*****
விருத்தி
உதாரணம் – தொல்காப்பிய விருத்தி உரை , நன்நூல் விருத்தி, யாப்பருங்கல விருத்தி, பெளட்கர விருத்தி
உரையின் பொது இலக்கணங்களோடு , சூத்திர பொருளை விளக்கலளவில் நில்லாது, அங்கு இன்றியமையாத கருத்துக்கள் யாவும் விளங்கத் தன்னுரையானும் ஆசிரிய வசனங்களானும் ஐயமற உண்மைப்பொருளை விரித்து உரைப்பது .
உரையின் பொது இலக்கணங்கள் 14
அவை – படம், கருத்து, சொல்வகை , சொற்பொருள், தொகுத்துரை , உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம் என்ற பதினான்குமான்.
சூத்திரத்துட் பொருளன்றியும் ஆண்டைக்கு
இன்றியமையாவையும் விளங்கத்
தன்னுரையானும் பிறநூலானும்
ஐயமகல ஐங்காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி.
இதனை அகலவுரை என்பர் இளம்பூரணர் .
From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi
*****
சூத்திரம்
சூத்திரம் என்பது கண்ணாடியில் விளங்கும் நிழல்போல , ஆசிரியன் கருதிய பொருள் தெள்ளிதின் விளங்கச் சில சொற்களால் திட்பமும் நுட்பமும் பொருந்த யாக்கப்பெற்ற நூல்யாப்பு என்க .
அவற்றுட் சூத்திரந் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றி ப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே
–தொல்காப்பியம்- பொருளதிகாரம் 482
சூத்திரம் 656-ல் மேலும் விளக்கமாகச் சொல்கிறார் .
இளம்பூரணர் சொல்வதையும் காண்போம்
நுட்பம் ஒட்பம் திட்பம் சொல்லில்
சுருக்கங்கருத்து பகுதியொடு தொகை இ
வருத்தமில் பொருட்பயன் நிகழ்ச்சி சூத்திரம்
இளம்பூரணரும் இதை மேலும் விளக்குகிறார் . அவர் உரையில் காண்க.
From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi
ஆடி நிழலின் அறியத் தோன்றி — என்ற தொல்காப்பிய வரிக்கு ஒரு அறிஞர் நல்ல விளக்கம் கூறியுள்ளார்.
கண்ணாடியில் ஒருவர் தன முகத்தைப் பார்க்கையில் அவர் முகம் மட்டுமின்றி அவர் பின்னாலுள்ள பொருள்களும் தென்படும். யாராவது அவரைக் கொல்ல வந்தாலோ , (கிஸ்/ Kiss) முத்தம் தர வந்தாலோ அதையும் காட்டும். அதாவது வருங்கலத்தைக் காட்டும். சுற்றுமுள்ள பொருட்களைக் கொண்டு அதன் சூழ்நிலை, நிகழ் காலம், கடந்த காலத்தையும் உய்த்துணரலாம். ஆக கண்ணாடியின் பயன்கள் பல. இது போல சுருங்க உரைத்தாலும் சூத்திரம் விளக்கும் பொருட்கள் பல..
பாணினியின் சம்ஸ்கிருத சூத்திரங்களையும் அதன்மேல் எழுந்த காத்யாயனரின் வார்த்திகத்தையும் அதற்குப் பின்னார் எழுந்த பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யத்தையும் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்
****

அணிகள் – FIGURES OF SPEECH
ALLEGORY, FABLE, PARABLE -மற்றொறு பொருள் தோற்றும் கதை , ஒட்டுவமை
ALLITERATION – முற்றுமோனை
ALLUSIONS – மேற்கோள்கள்
ANTI CLIMAX, BATHOS, ANTI THESIS – முரண்தொடை
APHORISMS – பழமொழி/ சூத்திரம்
APOSTROPHE – விளி
ASYNDETON- உம்மைத் தொகை
CIRCUMLOCUTION, OR PHERIPHRASIS – சுற்றுச் சுழற்சி , மீமிசை
CLIMAX- வீறு கோளணி , ஏற்றவணி
EPIGRAM- சுருங்கச் சொல்லல்
EUPHEMISM – இடக்கரடக்கல், மரியாதை வாசகம்
HYPERBOLE, EXAGGERATION – உயர்வு நவிற்சி அணி
EXCLAMATION – வியப்புச் சொல்
HISTORIC PRESENT — கால வழுவமைதி
HYSTERON PROTERON – மொழி மாற்றுப் பொருள்கோள்
INTERROGATION -வினா
IRONY OR SARCASM -வஞ்சப் புகழ்ச்சி
LITOTES — பிற குறிப்பு, , எதிர்மறை இலக்கணை
METAPHOR – உருவகம் , உருவக அலங்காரம்
METAPHOR-CONTINUED- முற்றுருவகம்
METONYMY – ஆகுபெயர் — பண்பு
ONOMATOPEIA — ஒலிக்குறிப்பு
PATHETIC FALLACY — இயற்கைப் பொருளுக்கு மக்கட்பண்பபை ஏற்றிச் சொல்லுதல்
PROVERB –பழமொழி
PUN — இரட்டுற மொழிதல் , சிலேடை
SIMILE –உவமை
SUGGESTION – குறிப்பு
SYNEEDOCHE — ஆகுபெயர் — சினை – பிரித்து மொழிதல், முதலாகுபெயர் இலக்கணை ,
இனவாகுப் பெயர் இலக்கணை
-from Lifco Dictionary


to be continued………………………………….