சவூதி அரேபிய கல்வித்திட்டத்தில் ராமாயணம், மஹாபாரதம் (Post.9682)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9682

Date uploaded in London – –  –3 JUNE   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

சவூதி அரேபியா ராமாயண, மஹாபாரதத்தைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்க்கிறது!

ச.நாகராஜன்

சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளது! (ஆர்கனைஸர், 23-4-2021 இதழ்)

சவூதி அரேபியா ஹிந்து இதிஹாஸங்கள், பழக்க வழக்கங்கள், அதன் நடைமுறைகள், மற்றும் புராணங்கள் ஆகியவற்றை தனது கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார். சவூதி அரசு எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒன்று.  இளவரசர் பன்முகம் சார்ந்த பொருளாதாரத்தை விரும்புகிறார்.

உலகமயமாக்கப்பட்ட உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீ விருது 2018இல் வழங்கப்பட்டது.

**

இந்தியா ராணுவத்திற்கென உலகில் அதிகம் செலவழிக்கும் மூன்றாவது நாடு!

ராணுவத்திற்கென அதிகம் செலவழிக்கும் மூன்றாவது பெரிய நாடாக உலகில் இந்தியா திகழ்கிறது. 72900 கோடி டாலரை 2020இல் இந்தியா செல்வழித்துள்ளது. இருப்பினும் அது அமெரிக்காவை ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே தான் உள்ளது. அமெரிக்கா இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாகவும் சீனா நான்கு மடங்கு அதிகமாகவும் ராணுவத்திற்கென செலவழிக்கிறது. உலகளாவிய ராணுவச் செலவை எடுத்துக் கொண்டால் அது 2020இல் 198100 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6% அதிகமாகும்.

(டைம்ஸ் ஆஃப் இந்தியா 27-4-2021 இதழ்)

நன்றி : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:-

Snippets 

I. Saudi Arabia Introduces Ramayana, Mahabharata, Yoga and Ayurveda in its curriculum : (The Organiser, 23.04.2021) 

The Kingdom of Saudi Arabia has introduced Hindu epics, customs, practices and mythology in its curriculum. 

Henceforth, children would also be taught about Ramayana, Mahabharata, Yoga and Ayurveda. 

The religious study texts would also include chapters about Buddhism and other religions too. It’s all part of the vision 2030 document prepared under the guidance of Prince Mohammad Bin Salman. 

Prince Salman, under his vision to bring dramatic changes in how the Kingdom operates, has been implementing widespread change in its policies. 

The Kingdom has an overly oil-dependent economy. Prince wants a more diversified economy. 

And to prepare the younger generation for a more globalised world, English language has been made compulsory. 

Nouf Almorwaai, a Saudi-based Yoga teacher tweeted on April 15 a screenshot of her child’s question paper, which has questions about Hinduism and Buddhism. 

Almorwaai was conferred Padma Shri in 2018 for popularising Yoga in Saudi Arabia. 

II. India 3rd largest military spender :

India remains the third largest militaryspender, doling out $ 729 billion in 2020, though still far behind US, which spends over 10 times and China (Four times). The total global military expenditure rose to $1981 billion in 2020, an increase of 2.6% from 2019. (TOI, 27.4.2021) 

SOURCE : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021

***

tags- சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம்