சாக்ரடீஸுக்கு வேதம் கூட தெரியும்! (Post.10,387)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,387

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு(Socrates)  இந்து மத உபநிஷத்துக்கள் அத்துப்படி என்று பல ஆங்கில நூல்கள் வந்துவிட்டன. சாக்ரடீஸ் நேரடியாக நமக்கு எதையும் எழுதி வைக்க வில்லையாயினும் அவருடைய பிரதம சீடன் பிளாட்டோ(Plato) எழுதிய விஷயங்கள் மூலமாக நாம் முழு சித்திரத்தைப் பெறுகிறோம்.

சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அவருக்கு முந்தைய பித்தகோரஸ் (Pythagoras) முதலியோர் மூலம் இந்து மத நூல்களை அறிந்ததை நாம் ஊகிக்க முடிகிறது. பித்தகோரஸ் தியரம் (Pythagoras Theorem தேற்றம்) என்பது இந்துக்கள் முன்னரே வேத காலத்தில் சொன்னது என்பதை இப்பொழுது உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர்.(கணித வரலாறு பற்றிய நூல்களைக் காண்க)

ஆக, பித்தகோரஸ், அவருக்குப் பின்னர் சாக்ரடீஸ், அவரது சிஷ்யன் பிளாட்டோ, அவரது சிஷ்யன் அரிஸ்டாட்டில் (Aristotle) , அவரது சிஷ்யன் மாமன்னன் (Alexander)அலக்ஸ்சாண்டர் என்று வரிசையாக இந்து மத ஆதரவாளர்களைக் காணமுடிகிறது. கிரேக்க அறிஞர்களே இவர்களுடைய இந்து மத தொடர்பு, சைவ உணவு ஆதரவு பற்றி எழுதிவிட்டனர்.

நான் செய்த ஆராய்ச்சியில் வள்ளுவருக்கு சாக்ரடீஸ் தெரியும் என்று கண்டுபிடித்தேன். 1990-களில்  லண்டனிலிருந்து டாக்டர் இந்திரகுமார் வெளியிட்ட மேகம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதை எழுதி அது 2015ல் விநாயகா பதிப்பக புஸ்தத்த்திலும்  வந்துவிட்டது. (காண்க – தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்)

குறள் 580-ல் நண்பர்களே விஷம் கொடுத்தாலும் அதை நண்பர்கள் மனம் வருந்தாமல் இருக்க குடிப்பது நாகரீகம் என்று வள்ளுவர் பாடுவது சிவபெருமானை அல்ல; சாக்ரடீஸையே என்று நான் எழுதியுள்ளேன்.

சாக்ரடீஸ் போதித்த ‘உன்னையே நீ அறிவாய்’ (Know thyself) என்ற ஆத்ம விசாரம், உபநிஷத் வாக்கியம் என்பதை உலகமே அறியும். மேலும் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், நண்பன் கிரிட்டோ(Creto) வை அழைத்து “ஏய் , ஆத்தாளுக்கு கோழியை பலி கொடுக்க மறந்துவிடாதே ; நான் ஆத்தாளுக்கு நேர்த்திக் கடன் செய்ய வேண்டியுள்ளேன்” என்று சொன்னதும் அவர் ஒரு பக்கா ஹிந்து என்பதைக் காட்டுகிறது.

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.

இதோ அதர்வண வேத மந்திரமும்  Griffith கிரிப்பித் விமர்சனமும்

காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)

மந்திரம் 7

“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.

நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன்  பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு  காணக்கிடக்கிறது

கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு

சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :

இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic  ரிபப்ளிக் என்ற நூலில் உளது

அக்காலத்திலேயே,  வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

My Old Articles:-



சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி | Tamil and Vedas

https://tamilandvedas.com › சாக்…

12 Feb 2012 — சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் …

DID SOCRATES KNOW VEDAS? HIS ‘SUN AND EYE …

https://tamilandvedas.com › 2021/11/27 › did-Socrates-…

1 day ago — 13 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. Tiru Valluvar , author of Tamil Veda Tirukkural, says that man becomes god in two …



Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar

https://tamilandvedas.com › strange-l…

·

18 Sept 2011 — Lord Shiva is one of the Hindu Trinity, a great god worshipped by millions of Hindus. Socrates was a great Greek philosopher who lived …

Missing: valuvar ‎| Must include: valuvar



Socrates’ Meeting with a Hindu Saint | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/02/22 › socrates-meet…

22 Feb 2014 — Socrates (499- 399 BC) Greek Philosopher Plato (427-347 BC) Philosopher … Drinking poison: Shiva Socrates and Valluvar, Know thyself in …

–subham–

tags- சாக்ரடீஸ், சிவபெருமான், வேதம், வள்ளுவர், கண், சூரியன்,Scrates

நடந்தவை தான் நம்புங்கள் – 8; சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்! (Post No.9302)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9302

Date uploaded in London – –24 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRITE TO US

நடந்தவை தான் நம்புங்கள் – 7 வெளியான தேதி 10-2-21              கட்டுரை எண் : 9248

நடந்தவை தான் நம்புங்கள் – 8

ச.நாகராஜன்

சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்!

கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அவர். தனக்கு செருப்பு கூட வேண்டாம் என்று நினைத்த அவர் வெறும் காலுடனேயே நடந்து செல்வது வழக்க்கம். அவர் அடிக்கடி சந்தைக்குச் செல்வது வழக்கம். அங்கு ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து தமக்குத் தேவையானதை வாங்கிச் செல்வர். சாக்ரடீஸ் செருப்பு விற்கும் கடையின் முன் நின்று அங்கு இருக்கும் விதவிதமான

TAGS-  நடந்தவை-8, சாக்ரடீஸ்

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை! (Post No.5241)

Written by S NAGARAJAN

 

Date: 21 JULY 2018

 

Time uploaded in London –   7-03  AM (British Summer Time)

 

Post No. 5241

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

 

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!

 

ச.நாகராஜன்

 

‘உண்மையான ஞானஸ்தன் எளிமையான வாழ்க்கையைத் தான் விரும்புவான்; எளிமையாகத் தான் வாழ்வான் என்று நம்பினார் சாக்ரடீஸ்.

தனது வாழ்க்கையிலும் அவர் எளிமையையே கடைப்பிடித்தார். இதனால் அவர் காலில் செருப்பு கூட அணிந்ததில்லை.

இருந்தாலும் கூட அடிக்கடி கடை வீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார்.

 

 

ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர்,”எதையுமே நீங்கள் வாங்குவதில்லை; அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருள்களைப் பார்வையிடுகிறீர்கள்” என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ், “ அங்கு அடிக்கடி போக நான் விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான  பொருள்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத் தான்” என்று பதிலளித்தார்.

**

ஜப்பானில் முதியவர் கூட்டம் ஒன்று அடிக்கடி கூடி செய்திகளைப் பரிமாறிக்கொண்டே டீ அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது.

சுவையான புதிய வகை டீ ஏதேனும் எங்கேயும் கிடைக்கிறதா என்பதைப் பார்ப்பது அவர்களின் ஒரு வழக்கம். அந்த டீ எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு அது எப்படிப்பட்ட கலவையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வர்.

ஒரு நாள் அங்கிருந்த வயதானவர் ஒருவரின்  முறை வந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த புது மாதிரியான டீயை அனைவருக்கும் தந்தார். அனைவரும் அதை சுவைத்துப் பார்த்தனர்.அருமையோ அருமை! இதுவரை அப்படிப்பட்ட சுவையுள்ள டீயை சாப்பிட்டதே இல்லை என்று ஒருமனதாக அனைவரும் கூறினர். இப்படிப்பட்ட டீயை எப்படிக் கலந்து தயாரிப்பது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டு அவரைக் கேட்டனர்.

அதற்கு அவர்,”நண்பர்களே! இது எனது வயலில் உள்ள குடியானவன் காலம் காலமாகச் சாப்பிட்டு வரும் டீதான்! மிக அருமையான விஷயங்கள் உண்மையிலேயே அதிக விலை கொண்டவையும் அல்ல; எங்கேயோ தூரத்தில் இருப்பவையும் அல்ல; நமக்கு அருகில் உள்ள சிறந்த விஷயங்களை நாம் அறிவதே இல்லை” என்றார்.

 

 

அனைவரும் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு ஆமோதித்தனர்.

**

“I have just three things to teach; Simplicity,Patience, Compassion. These three are your greatest treasures.: – Lao Tsu

எளிமை, பொறுமை, தயை இந்த மூன்றுமே உங்களுக்கு நான் போதிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். இவையே உங்களது பெரிய பொக்கிஷங்கள் என்றார் லாவோட்சு.

 

**

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரிய பண்டிதர். எளிமையாக உடையை அணிபவர்.  படாடோபமான ஆடை அணிந்தவர்களையே பெரிய மனிதராக நினைத்து வந்த காவலாளி அவரை ஒருமுறை அழைக்கப்பட்ட இடத்தில் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான். படாடோபமான உடைகளைக் காட்டி வித்யாசாகர் இதற்கு அனுமதியை வழங்குங்கள் என்று சொன்ன போது தான் அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

 

இந்த சமபவம் அனைவரும் அறிந்த ஒன்று.

 

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவரும்! (குறள் எண் 667)

**

 

மகாத்மா காந்திஜி எளிமையின் உருவம். உடை, உணவு என்று எதை எடுத்தாலும் மிகக் குறைந்த தேவையையே அவர் கொண்டிருந்தார்.

அவர் இறந்த போது அவருக்கென்று இருந்த உடமைகள் பத்து கூடத் தேறவில்லை. அவரது கண்ணாடி, உண்ணுகின்ற பாத்திரம், செருப்பு, கடிகாரம் போன்றவை தான் அவருக்கென இருந்தன.

இந்தியாவைத் தட்டி எழுப்ப பிரிட்டிஷாரின் துணிகளை பகிஷ்காரம் செய்ய அவர் அறைகூவல் விடுத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்கான இடுப்புக் கச்சையை அவரவரே நூற்று உடுக்கலாம் என்று  கூறி முன்னுதாரணமாகத் தானே நூற்க ஆரம்பித்தார். இந்த எளிமை உணர்வு வெகு ஜன உணர்வைத் தட்டி எழுப்பியது.

 

எளிமை என்றும் மதிப்பைத் தரும் என்பது தான் உண்மை.

சாக்ரடீஸ் முதல் காந்திஜி வரை அனைவரும் உணர்த்தும் உண்மையும் இதுவே தான்!

***

 

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்! (Post No.4140)

Written by London Swaminathan

 

Date: 8 August 2017

 

Time uploaded in London- 20-46

 

Post No. 4140

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம்முடைய கண்ணோட்டத்தில் சாக்ரடீஸ் ஒரு சிந்தனைச் சிற்பி; பேரறிஞர்! ஆனால் அவர் காலத்திய கிரேக்க அறிஞர்கள் அவரை பைத்தியக்கரப் பயல் என்று சித்தரித்துள்ளனர். நான் ஏதென்ஸ் நகரில் ஆவலோடு வாங்கிய சீட்டுக் கட்டில் ஜோக்கர் கார்டில் சாக்ரடீஸ் உள்ளார். ஆனால் வேறு ஒரு கார்டிலும் சாக்ரடீஸ் படம் இருந்தது எனக்குக் கொஞ்சம் திருப்தி. இதைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதி புகழ் சேர்த்த அரிஸ்டோபனிஸ் என்பவர், எல்லா தத்துவ அறிஞர்களும் தீய கருத்துக்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் சாக்ரடீஸை பைத்தியக்காரன் என்கிறார்.

 

 

நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்தான். கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் அக்காலத்தில் தூக்குத் தண்டனை, சிரச் சேதம் முதலியன கிடையா. எவருக்கேனும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் உன் கொள்கைகளைக் கைவிடுகிறாயா? அல்லது விஷத்தைக் குடிக்கிறாயா? என்று கேட்பர். அப்பாவி சாக்ரடீஸ் எனக்கு இருக்கும் ஒரே சொத்து என் கொள்கைதான்; அது என்னுடன் இருக்கட்டும் என்று சொல்லி விஷத்தைக் குடித்தார்.

அவரது ஆத்ம சிநேகிதனான கிரீட்டோ, தப்பித்துச் செல்ல வழிவகைளைக் கூறியும் சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். கடைசியில் கிரீட்டோவை அழைத்து, “கிரீட்டொ! நான் வேண்டிக்கொண்ட தெய்வத்துக்கு ஒரு கோழியைப் பலி கொடுக்க மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டு ஹெம்லாக் என்னும் விஷத்தைக் குடித்தார். நிற்க.

 

இவரை நையாண்டி செய்து, நக்கல் அடித்த அரிஸ்டோபனிஸ், 40 நாடகங்களுக்கு மேல் எழுதினார். ஆனால் நம் கைகளில் சிக்கியது 11 நாடகங்கள்தான்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் முழுதும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் நகரில் பிறந்து 20 வயதுக்குள்ளேயே நகைச்சுவை நாடகங்களை எழுதத் துவங்கினார். இவரது  காலத்தில் ஏதன்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் 27 ஆண்டுகளுக்கு நடந்த போரில் ஏதென்ஸ் தோல்வி அடைந்தது. அத்துடன் மிகப்பெரிய கிரேக்க நாகரீகம் சீரழியத் தொடங்கியது. ஊழல் தலைவிரித்தாடியது. அவைகளக் குறை கூறியும் கிண்டல் செய்தும் நகைச் சுவை நாடகங்களை எழுதினார்.

 

இவருடைய நாடகங்கள் அங்கத நாடகங்கள் இரு பொருள்பட இருக்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று தவளைகள் பற்றியது. ரிக் வேதத்தில் வரும் தவளைப் பாடலுடன் அதை ஒப்பிட்டு ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

 

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

 

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

80 நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

கிரேக்க நாடகத்தின் முன்னோடி இவர். ஏஸ்கைலஸ்– சோக நாடகங்களின் மன்னன். ஏதென்ஸ் அருகில் பிறந்தவர். அடிக்கடி இதாலிக்குச் சொந்தமான சிசிலி தீவுக்குப் போய் வந்தார். அங்கேதான் இறந்தார்.

 

மராத்தன் போரிலும் சலாமிஸ் போரிலும் பங்கேற்றவர்.

 

80 நாடகம் எழுதி 52 முறை முதல் பரிசு பெற்றவர் ஏஸ்கைலஸ் . ஆனால் நமக்குக் கிடைத்தவை ஏழே நாடகங்கள் தான்.

கிரேக்க புராணக் கதைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்திகளை அளித்தார். இவருடைய நாடகம் பற்றிய சிறப்பு என்னவென்றால் 2500 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இவருடைய நாடகங்கள் மேடையில் நடிக்கப்படுகின்றன (நம்முடைய மஹாபாரத நாடகங்கள் இன்றும் இந்தோநேஷியாவில் நடப்பது போல).

 

இவரது காலத்தில் பாரசீகத்துடன் நடந்த சண்டையில் கிரேக்கம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக போர்க்கால துன்பங்களை இவரது நாடகத்தில் காணலாம்.

பிறந்த ஆண்டு- கி.மு. 524

இறந்த ஆண்டு – கி.மு.456

 

–Subham–

சாக்ரடீசும் அவ்வையாரும்!

GREECE - CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

GREECE – CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

Adhiyaman_wiki

Avvaiyar with Athiyaman; picture from wikipedia

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

 

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

-சுபம்-

swami_48@yahoo.com

அசரீரி (ஆகாசவாணி) பற்றி ஒரு ஆராய்ச்சி

Please click here அசரீரி

joan_egz
picture of Joan of Arc

சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை- பதில்கள் பிளாட்டோ நூல்களிலிருந்து)

சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் உரையாற்றும்போது அவள், உம்மீது வசை மாரி பொழிந்து ஒரு வாளி தண்ணீரையும் கொட்டினாளே, அப்போது என்ன சொன்னீர்?

இதுவரை இடி இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது.

 

அட, பொறுமையின் இலக்கணமே ! கிரேக்க நாடு பெற்றெடுத்த தவப் புதல்வா! அப்படியானால் நங்கள் எல்லாம் கல்யாணமே கட்டக் கூடாதோ?

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆகிவிடுவீர்கள்.

இப்போது புரிகிறது, நீங்கள் எப்படி தத்துவ வித்தகர் ஆனீர்கள் என்று. எங்கள் உபநிடத்தில் கூறியதை நீரும் கூறினீரா?

உன்னையே நீ அறிவாய்

நல்ல வாசகம், சாக்ரடீஸ், நீவீர் வறுமையில் வாழ்ந்தீர், ஆனால் ஞானச் செல்வத்துக்குக் குறைவில்லை. இளஞர்களில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டீர். இதுதான் உம் மீதுள்ள பெரும்பழி.

நான் யாருக்கும் எதையும் சொல்லித்தர முடியாது. சிந்தனை செய்யத் தூண்டுவதே என் பணி. உன்னை நீ அறிய சிந்தி, நன்றாகச் சிந்தித்துப் பார்.

 

தெய்வவாக்கில் உமக்கு நம்பிக்கை அதிகம். டெல்பியில் குறி சொல்லும் தெய்வத்திடம் மிகப் பெரிய அறிவாளி யார் என்று கேட்டதற்கு உம்முடைய பெயரை அது கூறியது.அப்போது என்ன தோன்றியது?

என்னை விடச் சிறந்த அறிவாளி யாரையாவது நான் தேடிக் கண்டுபிடிப்பேன். உடனே தெய்வத்திடம் போய் ஏன் என்னைச் சொன்னாய் என்று கேட்பேன்

 

அஞ்சாத சிங்கம்,ஆனால் ஒரு ஞானி, எங்கள் ஊர் ஜனக மகாரஜா போல,

அறிவாளி யாரையாவது கண்டுபிடித்தீர்களா?

(பல அரசியல்வாதிகளையும் தத்துவ அறிஞர்களையும் பார்த்தபின்)

அவர்களை விட நான் சிறந்தவனே, தெய்வம் சொன்னது பொய்யன்று.

 

உமக்கு எப்படி இவ்வளவு துணிவு பிறந்தது?

நல்ல செயலைத் துவங்கும்போது அது நேர்மையானதா என்றுதான் பார்ப்பேன். உயிருக்கு ஆபத்து விளையுமா என்று சிந்திப்பது கோழைத் தனம்.

 

உமது புகழ்பெற்ற பொன்மொழி எங்கள் சரஸ்வதி தேவி “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதைப் பிரதிபலிக்கிறதே:

எனக்கு ஒன்று தெரியும் ,அது என்னவென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது

I know one thing, that I know nothing.

 

ஆஹா, புரிகிறது. எங்கள் வள்ளுவரும் “ அறிதோறு, அறியாமை கண்டற்றால்” என்றுதான் சொல்வார்.படிக்கப் படிக்கத்தான், அடடா, இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்தோமே என்று நினைக்கிறோம்

கிரேக்க மக்கள் தொழுதுவந்த தெய்வங்களை நீர் புறக்கனிக்கச் சொன்னதாக உம் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது, இளைஞர்களை ஒழுக்கத்திலிருந்து தவறச் செய்தீர்களாமே?

புதிய தெய்வங்களை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மற்றொரு புறம் நான் நாத்தீகம் பேசியதாகச் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா? வெறுப்பும் பொறாமையும் தான் உங்கள் குற்றச் சாட்டுகளுக்குக் காரணம்.

 

எழுபது வயது, மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. நீதி மன்றத்தில் மூன்று சொற்பொழிவுகள் செய்தீர்கள்.முதல் சொற்பொழிவில் என்ன சொன்னீர்கள்?

வீண் கர்வத்தாலும், அறியாமையாலும் கஷ்டப்படும் மக்களைத் திருத்துவதே ஆண்டவன் எனக்கு இட்டிருக்கும் பணி. அறம் தவறாது நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே என் விருப்பம். என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்பேன்.

 

உமக்கு மரண தண்டனை விதித்த நீதி மன்றத்தில் 501 பேர் இருந்தனர்.ஒரு கவிஞனும் தோல் வியாபாரியும் உமக்கு எதிராக நின்றனர். இவர்களில் 220 பேர் உமக்கு ஆதவளித்தபோது இரண்டாவது உரையில் என்ன சொன்னீர்?

உங்கள் தீர்ப்பு எனக்கு வியப்பளிக்கவில்லை. முன்கூட்டியே குற்றவாளி என்று முடிவுகட்டி விட்டீர்கள். ஆனால் இத்தனை குறைந்த வாக்குகள் தான் எனக்கு மரண தண்டனை அளித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் குற்றமற்றவன் என்று என் மனச் சாட்சி சொல்லுகிறது எனக்கு நீங்கள் பசியும் பிணியும் ஏற்படாதவாறு மானியம் தந்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறையில் அடிமாடு போல வாழ விரும்பவில்லை நான் வேறு நாட்டுக்கு சென்று வசிக்கவும் விரும்பவில்லை. நான் ஒரு ஏழை, அல்லது அபராதத் தொகை கொடுத்திருப்பேன். எனக்கு பொருளை இழப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை.

 

மேலை நாட்டு வள்ளுவா, நீயோ வள்ளுவனுக்கும் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாய்,மூன்றாம் சொற்பொழிவு பற்றி…….

ஏதன்ஸ் நகர மக்களே! நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. நான் வயதானவன். இந்தத் தண்டனை இல்லாவிட்டாலும் குறுகிய காலத்துக்குள் நான் இறக்கத்தான் போகிறேன் போர்ககளத்தில் ஒரு வீரன் எப்படி நடந்துகொள்வானோ அப்படியே நீதிமன்றத்திலும் நடக்கவேண்டும். மனிதனுக்கு மரணம் ஆபத்தல்ல. அதர்மமே ஆபத்து தர்ம வழியில் நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பமில்லை.

 

எனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நான் எப்படி செல்வர்களையும் பிறரையும் கேள்விகள் கேட்டு துளைத்தேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும்.அவர்கள் போக்கில் விட்டு விடாதீர்கள். காலம் அதிகரித்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். நானோ இப்போதே உங்களை விட்டுப் போகிறேன். விடை கொடுங்கள்.

 

(விஷம் கொடுத்து கொல்வதற்கு முன் சிறைச் சாலையில் நடந்தது: நம் ஊரில் கோவில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிய பிறகு முக்கிய காரியங்களை நிறுத்திவைப்பது போல, ஏதன்ஸ் நகர மக்கள் அருகிலுள்ள தீவின் விழாவுக்கான கப்பல் புறப்பட்டுவிட்டால் அது திரும்பும் வரை எதையும் செய்ய மாட்டார்கள். இதனால் சாக்ரடீஸின் மரண தண்டனை சிறிது தடைப்பட்டது)

நண்பர் :கெட்ட செய்தி கொண்டுவந்திருக்கிறேன்

சாக்ரடீஸ்: கப்பல் வந்து விட்டதா?

நண்பர்: நாளை வரப்போகிறது. நாளை உமது ஆயுள் முடியும்

சாக்ரடீஸ்: நண்பரே நான் தூங்குவதால் என்னை எழுப்பாமல் காத்திருந்தீர். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன்.மங்கை ஒருத்தி மங்கல உடை தரித்து என் முன் தோன்றினாள். இன்றைக்கு மூன்றாம் நாள் நீர் அழகிய சொர்க்கத்திற்கு வந்து விடுவீர் என்றாள்.

 

விஷம் அருந்தும் முன் நீர் என்ன சொன்னீர்?

உடல் நமக்கு இறைவன் தந்த சிறைச் சாலை; இதிலிருந்து நாமாகத் தப்பிவிடக்கூடாது. ஆண்டவனே நம்மை விடுதலை செய்யவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

 

விஷ பானம் உடலில் வேலை செய்யத் துவங்கியவுடன் நீர் கடைசியாகச் நண்பரிடம் சொன்ன வார்த்தைகள்…….?

நான் ஒரு கோவிலுக்கு பலிக் கடன் செய்ய வேண்டும். அதை எனக்காக நீர் செலுத்திவிடும்.

 

(சாக்ரடீஸ் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவரது சீடர்கள் ,குறிப்பாக பிளாட்டோ எழுதிய நூலிலிருந்தும் சாக்ரடீஸை கிண்டல் செய்து அரிஸ்டபனீஸ் எழுதிய நாடகத்திலிருந்தும் பல விஷயங்களை அறிகிறோம்.)