ஆலயம் அறிவோம்! சிதம்பரம் (Post No.9101)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9101

Date uploaded in London – –3 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 3-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்,  ஜடாதரம் பார்வதி வாம பாகம்

ஸதாசிவம்  ருத்ரமனந்த ரூபம்,   சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி”

கருணைக் கடலும், அழகான முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடையைத் தரித்தவரும், பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரும், எப்போதும் மங்களமூர்த்தியாயும், துக்கத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பரநாதனை மனதில் பாவிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாகவும், புருஷ வடிவமாக உள்ள உலகத்தில் இதய ஸ்தானமாக விளங்குவதும், பிரபஞ்ச மர்மத்தைத் தன்னுள் அடக்கி அனைவருக்கும் அருள் பாலிக்கும் ஆடல் வல்லானின் தலமுமான சிதம்பரம் ஆகும். சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. 

இந்த ஆகாசமானது, பூத ஆகாசம் போல் ஜடமாக விளங்காமல், சித் அம்பரமாக விளங்குவதால் சிதம்பரம் எனப் பெயர் பெற்றது. இறைவன் திரு நடனம் ஆடுகின்ற இந்த அம்பலம் பொன் தகடு வேயப்பெற்றதால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

கோயில் என்றாலேயே சைவர்களிடம் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஏராளமான அதிசயிக்க வைக்கும் புராண வரலாறுகள் கொண்டது இந்தத் தலம். இறைவனுக்கு அன்றலர்ந்த வண்டு மொய்க்காத உயரமான மரங்களில் இருக்கும் பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க தை மாதம் பூச நட்சத்திரமும்,குருவாரமும், பூரனையும் கூடும் வேளையில் தன்னுடைய ஆனந்த நடனத்தைக் காண்பிப்பதாக அருளிய நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம்.

அருவம் அதாவது ரகசியமானது, மற்றும் உருவம் அதாவது நடராஜர், மற்றும் அருவுருவம் அதாவது மூலநாதர் லிங்க வடிவம் என இப்படி மூவகை வழிபாடுகளைக் கொண்ட இந்த அதிசய தலத்தில் மூலவரே உற்சவராக வலம் வருவதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

சிதம்பரம் ஆலயத்தில் சித்சபை, கனகசபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை என பஞ்ச சபைகள் உள்ளன. சித்சபையில் நடராஜரும் சிவகாமி அம்மையும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள படிகள் ஐந்து. அவை பஞ்சாக்ஷரங்களாகும். தங்க ஸ்தம்zaபங்கள் பத்தில் ஆறு சாஸ்திரங்களும் நான்கு வேதங்களும் இருக்க வெள்ளி ஸ்தம்பங்கள் ஐந்தில் பஞ்ச பூதங்களும் உள்ளன. வெள்ளிப் பலகணிகள் 96 உள்ளன. இவை 96 தத்துவங்களாகும். இங்குள்ள ஸ்தம்பங்கள் 18 புராணங்களாகவும், கைமரங்கள் 64 கலைகளாகவும் காட்சி தருகின்றன. இச்சபையின் தங்க விமானத்தில் மேல் உள்ள 21600 ஓடுகள் மனிதன் தினசரி விடும் சுவாசங்களின் எண்ணிக்கையையும், 7200 ஆணிகள் நாடி நரம்புகளையும் குறிக்கின்றன. 9 தங்க கலசங்கள் நவ சக்திகளாகத் திகழ பொன் ஓட்டில் ‘சிவாய நம’ என பஞ்சாக்ஷரம் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆதி சங்கரர் ஐந்து ஸ்படிக லிங்களில் ஒன்றை ஸ்தாபித்தருளினார்.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியதை சிவபெருமானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு அவர் சொல்லச் சொல்ல தானே எழுதினார். பின்னர் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்ல மாணிக்க வாசகர் திருகோவையார் பாடினார். பின்னர் ‘மாணிக்கவாசகன் சொல்ல சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று சிவபிரான் கையொப்பமிட்டு ஓலைகளை பஞ்சாக்ஷரப் படியில் வைத்துப் பின் மறைந்தார். மறு நாள் பூஜை செய்ய வந்தோர் ஓலைச் சுவடிகளை கண்டு மாணிக்கவாசகரை அணுகி ‘இவற்றின் பொருள் என்ன’ என்று கேட்க அவர், அவர்களை சிற்சபைக்கு அழைத்துச் சென்று சிற்றம்பலமுடையாரைக் காட்டி ‘இதன் பொருள் இவனே’

என்று கூறி சபைக்குள் புகுந்து மறைந்தார்.

ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் குருந்த மரத்தடியில் உபதேசம் செய்தார். அன்று தான் அவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இந்த உபதேச நிகழ்வு திருவிழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள ராஜசபையின் நடுவில் உள்ள நந்தி மண்டபத்தில் தான் சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். எப்படிப் பாடத் துவங்குவது என்று நினைத்து கூத்தப்பெருமானை அவர் வழிபட்ட போது ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று பெருமான் அடி எடுத்துக் கொடுத்தார்.

இந்தத் தலத்தில் சிவகங்கைத் தீர்த்தம், சமுத்திரம், புலிமடு, வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி, பிரம்மதீர்த்தம், சிவப்ரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூபம் என பத்து தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு கோயிலில் பூஜைகளை தீக்ஷிதர்களே செய்து வருகின்றனர்.

சிதம்பர சித்சபையில் ஸ்ரீ தாண்டவமூர்த்தி உமையோடு வீற்றிருக்கும் ஸ்தானமும் ஆயிரங்கால் மண்டபத்தில் மஹாபிஷேகத்தில் வீற்றிருக்கும் உயர்ந்த மேடையும் ஒரே அளவு என்றும், அந்த ஸ்தானத்தின் மஹிமையை எடுத்துச் சொல்வதற்கு ஆதி காலத்திலிருந்த மகான்களால் கூட முடியவில்லை என்றும் தெரிகிறது. இந்த திவ்யமான சுந்தர மஹாபீடத்தின் கீழ் ஜிதேந்திரியர்களும் வித்யா தரங்கிணி முதலான சிவ கணங்களும் ஸதா கோஷங்களுடன் வசிப்பதாகவும் காணப்படுகிறது. ஸ்ரீ குஞ்சிதபாத தீர்த்தமாகிய சிவகங்கைக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் தீர்த்தத்திற்கும் கீழே ஒரு பாதை இருப்பதாகவும் அந்த மார்க்கமாக தினந்தோறும் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்க இவர்கள் வந்து  கொண்டிருக்கிறார்கள் என்றும் பழைய நூல்கள் அறிவிக்கின்றன.

இதை மஹாமஹோபாத்யாய ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் திருத்தலங்கள் வரலாறு என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களையும் திருநாவுக்கரசர் 8 பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் ஆக மொத்தம் 11 பதிகங்களை இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.  அருணகிரிநாதர் 65 திருப்புகழ் பாடல்களை, இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளதோடு, இந்தத் தலத்தை புலியூர்,புலீச்சுரம்,கனக சபை, கனகம்பலம்,பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப்புலியூர் எனப் பலவாறாகப் புகழ்ந்து போற்றி அருள்கிறார்.. சுமார் 12 ஆண்டுகள் சிதம்பரத்தில் தன் அருள் வாழ்வைக் கழித்தார் திருஅருட்பிரகாச வள்ளலார். அவர் பாடல் அருளி வழிபட்ட 14 தலங்களில் சிதம்பரமும் ஒன்று.

திருநீலகண்ட நாயனார், நந்தனார், கூற்றுவ நாயனார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட ஏராளமான அருளாளர்கள் இங்கு நடராஜரை தியானித்து முக்தி பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிர்ட்ஜாஃப் காப்ரா (Dr Fritjof Capra) சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்தார்.  ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான அவர் தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ் (The Tao of Physics) என்ற தனது நூலில், “ ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கிப் பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம். இது அணுத்துகளின் நடனம் போலவே உள்ளது” என்கிறார்.

அணுவின் அசைவை, சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சல்ஸில் 1977 அக்டோபர் 29ஆம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடாபிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் பிரபஞ்சம் பற்றிய COSMOS தொடரை எடுத்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் பிரபஞ்சத்தின் வயது 864 கோடி என்று அறிவியல் கூறும் அதே வயதைச் சரியாகச் சொல்லும் ஹிந்து மதத்தைக் கண்டு வியந்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார். தனது தொடரான COSMOS தொடரின் ஆரம்பத்தில் பிரபஞ்ச நாயகனான நடராஜரின் திருவுருவத்தைக் காண்பித்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கினார்.

GOD PARTICLE ஆராய்ச்சியில் கடவுள் துகளைக் கண்ட உலகின் பெரும் சோதனைக் கூடம் ஜெனிவாவில் உள்ளது. CERN என்று புகழ் பெற்ற இந்த சோதனைச் சாலையின் முகப்பில் இந்திய அரசு 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று வழங்கிய இரண்டுமீட்டர் உயரம் உள்ள நடராஜர் திருவுருவம் அலங்கரிக்கிறது. இப்படி பெரும் ரிஷிகள், மகான்களுடன் அறிவியல் விஞ்ஞானிகளையும் ஈர்க்கும் தலம் உலகில் இது ஒன்றே தான்!

காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், விவரிக்க முடியாத எல்லையற்ற பெருமையைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் அருள் வாக்கு –

“நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே, நல்லவெலாம் செய வல்லவனே,

நாதாந்த நாட்டுக்கு நாயகரே, நடராஜரே சபாநாயகரே

நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே, நடராஜ எனில் வரும் நித்தியமே” நன்றி. வணக்கம்.

tags – சிதம்பரம்

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி? (Post No.6262)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 April 2019


British Summer Time uploaded in London – 7-46 am

Post No. 6262

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?

ச.நாகராஜன்

நடராஜர் ஆனந்த தாண்டவம் புரியும் சிதம்பரத்தைக் கனக சபையாகச் செய்ய நினைத்த ஆதித்தன் என்னும்  அரசன் அதற்கான தங்கத்தை எங்கிருந்து, எப்படி பெற்றான்?

இதற்கான பதிலை கொங்கு மண்டல சதகத்தின் 29ஆம் பாடல் தருகிறது.

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்

சித்தம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்

முற்றிலுந் தன்னகத் தேவிளை வாவதை மொய்ம்பிறையுண்

மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் பொருள் : சிவபிரான் ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரத்தைக் கனகசபையாக்கத் தேவையான தங்கம் அனைத்தையும் தன்னிடத்தே விளைந்த பொன்னைக் கொடுத்து அரசனும் வியக்கப் புகழை அடைந்ததும் கொங்கு மண்டலமே.

இந்தப் பாடல் கூறும் வரலாறு சுவையான ஒன்று.

கீழ்க்கரை பூந்துறை நாட்டின் இணைநாடு பருத்திப் பள்ளி நாடு ஆகும். அந்த நாட்டில் கஞ்சமலையில் ஒரு சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அது மகடஞ்சாலை இரயில் நிலையம் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்லுகின்றது. அதனைப் பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன் சன்னம் எடுக்கிறார்கள். உழைப்புக்குத் தக்க கூலி போலப் பொன் கிடைக்கிறதாம். அது எட்டரை மாற்றுத் தங்கம் ஆகும். இதே போல கொங்கு  மண்டலத்தில் பொன் கிடைக்கும் இடம் பல உள்ளன என்பதால் ஆதித்த மன்னன் என்னும் சோழ மன்னன் சிதம்பரத்தைக் கனகசபையாக்க முயன்ற சமயத்தில் அதற்குத் தேவையான பொன் அனைத்தையும் கொடுத்தது கொங்கு மண்டலமே.

இதே வரலாற்றை நம்பியாண்டார் நம்பி திருவந்தாதியும் ஒரு பாடலில் குறிப்பிடுகிறது.

பாடல் வருமாறு :-

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு

கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்

திங்கட் சடையர் தமரதென் செல்லமெ னப்பறைபோக்

கெங்கட் கிறைவ னிருக்கும்வே ளூர்மன் னிடங்கழியே

கோனாட்டுக் கொடும்பாளூர் இருக்குவேளிர் குலத் தலைவரிடம் கழியார் கொங்கிற் செம்பொன்,

ஆனேற்றார் மன்றின்முக டம்பொன் வேய்ந்த வாதித்தன் மாபோர் நெற்கவர்ந்தோரன்பர்,

போனாப்ப ணிருளின்கட் காவலாளர் புரவலர்முன் கொணரவவர்

புகலக் கேட்டு,

மானேற்றாரடியாரே கொள்கவென்று வழங்கியர சாண்டருளின் மன்னினாரே

என்ற பாடலும் இந்த வரலாறை வலியுறுத்துகிறது.

ஆக சிதம்பரத்தின் கனகசபைக்குப் பொன் தந்து உதவியது கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய கார்மேகக் கவிஞர் புளகாங்கிதம் அடைந்து கொங்கு மண்டலப் பெருமையை இப்படி இந்தப் பாடலில் கூறுகிறார்.

***

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4 (Post No 2788)

3 towers in kanchi

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 7 May 2016

 

Post No. 2788

 

 

Time uploaded in London :–  5-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4

 

.நாகராஜன்

 

 

திதிகள் பூஜித்த தலங்கள்

 

இதே போல 14 திதிகளும் பூஜித்த தலங்கள் வருமாறு:

 

பிரதமைகாஞ்சிபுரம் (காமாட்சி கோவிலுள் காம தீர்த்தம்,

 

புரட்டாசி நவராத்திரி பிரதமை)

காஞ்சிபுரம்: கல்வியிற் பெரிய காஞ்சி பழைய பல்லவ நாட்டின் தலை நகரம். காமாட்சி அம்மன் திருக்கோவிலைக் கொண்டுள்ள தலம். சக்திக்கான தனிப்பெரும் கோவில். ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம். அம்மன் இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது ஒரு கையில் கரும்பு வில்லும் இன்னொரு கையில் தாமரை மற்றும் கிளியும் உள்ளது. தந்திர சூடாமணி நூலின் படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும்.  இங்குள்ள கைலாச நாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

 

 

துவிதியை – 1) கருவிலி என்கிற துர்க்குணேசுவரபுரம்

 

(யமதீர்த்தம் – யம துவிதியை; ஐப்பசி விசேடம்), 2) தாராசுரம், 3) திருச்செங்காட்டங்குடி

கருவிலி:  யமன், மஹாபலி, திருமால், சூரியன் பூஜித்த தலம். தக்ஷிணாமூர்த்தி விக்ரஹம் மஹாமண்டபத்தின் தெற்கில் உள்ளது. பரணி தீர்த்தம். மஹாமண்டபத்தின் கிழக்கே யமனுக்கு உபதேசம் ஆனது.

 

திருதியை – 1) கேதாரம்அக்ஷய திருதியை, கனகல தீர்த்தம்; கேதார பூஜை ஆரம்பம் 2)சிந்தாமணி

 

சதுர்த்தி – 1) செங்காட்டங்குடி  சித்திரை சுக்கில பட்சம் சதுர்த்தி தீர்த்தம், சித்திரை சுக்கில பட்ச கணபதி பூஜை பண்ணிய தினமாகும்.  2) திருவலஞ்சுழி – சதுர்த்தி உற்சவம்

செங்கட்டாங்குடி : காவிரித் தென்கரைத் தலம்.இறைவன்: கணபதீச்சுரத்தார் இறைவி: திருக்குழல் நன்மாது. தலவிருட்சம் ஆத்தி. தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

chidambaram tower close

Chidambaram temple  tower

பஞ்சமிதவத்துறை (லால்குடி)

(ஏழு முனிவர்கள் பூஜித்து முக்தி பெற்றது ரிஷி பஞ்சமி)

 

லால்குடி

காவிரியின் வடபுறத்தில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது.

ஸ்வாமி: ஸப்தரிஷிநாதர்: ஸப்த ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட தலம். காயத்ரி என்ற சிறு ஆறும் ஓடுகிறது. சிவகாமி சமேத நடராஜர் சன்னதி பிரபலம். சன்னதியில் சிவகங்கை தீர்த்தம் விசேஷமானது. பைரவி வனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.மாணிக்கவாசகர் இயற்றிய புராணம் கொண்டது இத்தலம்.மழவராஜன் குஷ்டரோகம் நீங்கப் பெற்ற இடம். மாங்கல்ய ரிஷி பெருந்திருவாட்டி அம்மையை மணம் செய்து கொண்ட திருத்தலம். இக்கோயிலில் கமலகொத்த நாயனார், ஐயனார் சன்னதி பிரபலமானவை.

 

ஷஷ்டி – ஸ்கந்த ஷஷ்டி – சுப்பிரமணிய தலங்கள்

வெண்காட்டில் மாசி மாத ஷஷ்டியில் மணிகர்ணிகையில் அவபிருதம்; துவாதசியில் கொடியேற்றம். கிருஷ்ணபட்சம் ஷஷ்டி.

 

 

ஸப்தமி – 1) திருவாவடுதுறை 2) மீயச்சூர் 3) சிதம்பரம் ; ஆனித் திருமஞ்சனம் 4)திருவொற்றியூர்

 

திருவாவடுதுறை : காவேரி தென்கரைத் தலம். இறைவன்: மாசிலாம்ணியீசர் இறைவி: மங்கள நாயகி தீர்த்தம் பிரமதீர்த்தம்.இத்தலத்தில் தருமதேவதை தவம் செய்து இறைவனுக்கு வாகனமான விடை ஆயிற்று என்று தல புராணம் கூறுகிறது.

 

ஸப்தமி – 2 பட்ச உற்சவ தலங்கள்

 

சிதம்பரம், வெண்காடும் செங்காடு, மீயச்சூர், ஆவடுதுறை, ஆனைக்கா

 

மீயச்சூர்: காவேரி தென்கரைத் தலம். இறைவர்: முயற்சி நாதர், இறைவி சுந்தர நாயகி தல விருட்சம் வில்வம் தீர்த்தம்: சூரிய புஷ்கரணி

 

அஷ்டமி – பைரவ தீர்த்தம் (அஷ்டமி தீர்த்தம்) , காசி,  ஸ்ரீ சைலம் என்கிற நீலகிரி, ஐயாறும் மதுரை.

கார்த்திகை ம்கா காளாஷ்டமி, பைரவாஷ்டமி, ஆவணி முதல் பங்குனி வரை காளாஷ்டமி

8 பைரவர்கள் தோன்றிய தினம்: கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி மாத்திரம் மகா காளாஷ்டமி; மகா பைரவர் பிறந்த தினம்; கோடி சிவராத்திரி புண்ணியத்தையும் ஒருங்கே தர வல்லது.

 

 

நவமி  – காஞ்சீபுரம்; காமதீர்த்தம் நவமி சிதம்பரம் பரமாநத கூபம். திருவீழிமலை விஷ்ணு தீர்த்தம்; புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் நவமி

தசமி – திருவாரூர் விஜய தசமி தேவதீர்த்தம் என்ற கமலாலயம்; விஜயலக்ஷ்மி பூஜை பண்ணி கமலாம்பிகை பிரசாதத்தினால் விஜயத்தை அடைந்ந்தபடியால் விஜயதசமி என்று பெயர்; விஜயபுரம் என்று கிழக்கே இருக்கிறது.

 

-அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.