கனடா நாட்டு சிறுவர் கதை ஆசிரியர் லூசி மாண்ட்கோமரி (Post No.100,03)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,003

Date uploaded in London – 21 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகம் முழுதுமுள்ள சிறுமியர்கள், இளம் பெண்கள், மாணவிகள் ரசித்துப் படிக்கும் புஸ்தகம் , ANNE OF GREEN GABLES  ‘ஆன் ஆப் க்ரீன் கேபிள்ஸ்’ என்ற நாவல் ஆகும். இதை எழுதியவர் லூசி மாட் மாண்ட்கோமரி LUCY MAUD MONTGOMERY  ஆவார்.

கனடாவிலுள்ள பிரின்ஸ் எட்வார்ட் PRINCE EDWARD ISLANDS  தீவில் அவர் பிறந்தார்; இரண்டே வயதில் தாயாரை இழந்தார். தந்தையோ வேறொரு பெண்ணை மணந்து கொண்டு ஓட்டம் பிடித்தார். லூசியை கொடுமைக்கார தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டார். அவர் 15 வயதில் கவிதை ஒன்றை எழுதியது வெளியானது. பின்னர் ஆசிரியராகவும் பத்திரிகை நிருபராகவும் ஹாலிபாக்ஸ் HALIFAX நகரில் பணியாற்றினார்.

புகழ் பெற உதவிய  ANNE OF GREEN GABLES  நாவலை அவர் எழுதினார், திருத்தினார், மீண்டும் எழுதினார்; மாற்றி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் வெளியீட்டாளர்களும் திருப்பி அனுப்பினர்.

இறுதியில் 34 வயதானபோது ஒரு  நிறுவனம் ஒப்புக்கொண்டு வெளியிட்டது.

ஒரு பிள்ளை பிறக்காதா என்று ஏங்கிய வயதான ஒரு தம்பதியருக்கு ஆன் ANNE என்ற அனாதைக் குழந்தை கிடைத்தது. அந்தச் சிறுமியின் ஒவ்வொரு பருவத்திலும் அவருடைய  ஆசை அபிலாஷைகள் எப்படி இருந்தன என்பதை லூஸி சித்தரிக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் இது லுயூஸியின் சொந்த அனுபவமே. இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது .

மார்க் ட்வைன் போன்றோரும் வரவேற்றனர். ஆன் ANNE என்ற கதா பாத்திரத்தை வைத்து ஏழு தொடர் நாவல்கள் எழுதினார். ஆன் என்பவர் ஆசிரியர் ஆகி,, கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்வது வரை நாவல் செல்கிறது.

1911ல் பாட்டி இறந்தவுடன் லூஸி , ஒரு சமயப் பிரசாரகரை மணந்துகொண்டு  ஒண்டாரியோவுக்கு  குடியேறினார்   குடும்பத்தை நடத்திக்கொண்டே இரண்டு ஆண்டுக்கு ஒரு நாவல் வீதம் 20 நாவல்கள், சிறு கதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

மாண்ட்கோமெரி 20 புதினங்களையும் 530 சிறுகதைகள், 500 கவிதைகள் மற்றும் 30 கட்டுரைகளையும் வெளியிட்டார்

பிறந்த தேதி – நவம்பர் 30, 1874

இறந்த தேதி  ஏப்ரல் 24, 1942

வாழ்ந்த ஆண்டுகள் – 67

வெளியிட்ட கதைகள்

1908 – ANNE OF GREEN GABLES

1909 – ANNE OF AVONLEA

1911 – THE STORY GIRL

1915- ANNE OF THE ISLAND

1917 – ANNE’S HOUSE OF DREAMS

1919 – RAINBOW VALLEY

1921 – RILLA OF INGLESIDE

1923 – EMILY OF NEW MOON

1936 – ANNE OF WINDY POPLARS

1939- ANNE OF INGLESIDE

–SUBHAM–

TAGS-  கனடா , சிறுவர் கதை ஆசிரியர்,  லூசி மாண்ட்கோமரி, LUCY MAUD MONTGOMERY

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling