சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (Post No.9105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9105

Date uploaded in London – –5 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

ச.நாகராஜன்

கீத்ருக்ஷா கிரிஷதனுர்ஜயே ச தாதுர

   விஷ்ணௌ கா விபுதஜராதமஸ்த்ருதீயா |

மத்யார்னே சதி  கதமாஸ்மகோஸ்தி தேஷ:

  சோமாஜ்யம் சகலகலா ஜஸாதசாஹா: ||

சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சோமா : பார்வதியுடன் இணைந்து)

வெற்றி அடைதல் என்ற வினைச்சொல்லுக்கு மூலம் எது (ஜி ; வெல்வதற்கு)

விஷ்ணுவின் மேல் அமர்ந்திருப்பவர் யார்? (அம் : லக்ஷ்மி)

புத்திசாலியான மூத்தோருக்கு துணை எது? (சகலகலா : அனைத்து கலைகளும்)

ஜலத்தின் மத்தியில் உனது தேசம் எப்படி இருக்கும்? (ஜலதசாஹா)

How is the body of Lord Siva? (Soma: United with Parvati)

What is the verbal root of  ‘to conquer’? (ji : to conquer)

Who is seated on Lord Vishnu? (am : Lakshmi)

What is the third to the old age of wise and darkness? (sakalakala : all arts)

In the midst of waters how can your country be? (jalatasaha)

                                                             (Translation by A.A.R)

இது ஒரு புதிர் சுபாஷித ஸ்லோகம். இந்த்ரவ்ரஜா சந்தத்தில் அமைந்துள்ளது இது.

*

கிம்ஸ்விச் சித்ரம் பவேத் தோஷ: கிம்ஸ்வித் ஹி வினிபாதநம் |

குதோ மம ஸ்த்ரவேத் தோஷ இதி நித்யம் விசிந்தயேத் ||

என்னிடம் உள்ள பலஹீனமான விஷயம் ஒரு குறையாக மாறுமா?

அது தொடர்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் குறையாக ஆகி விடுமா?

எப்படி எனது குறைகள் நீங்கும்?

இப்படியாக ஒருவன் தினமும் சிந்திக்க வேண்டும்.

Can a weak point in me turn out to be a defect?

May it lead to a defect of serious consequences? (to my downfall)

How may my defects disappear?

Thus should one ponder carefully, every day.

                                                            (Translation by A.A.R)

*

க்ருத்யாக்ருத்யவிபாகஸ்ய ஜாதார: ஸ்வயமுத்தமா: |

உபதேஷே புனர்மத்யா நோபதேஷே நராதமா: ||

உத்தமமான மனிதர்கள் தீயதிலிருந்து நல்லனவற்றைத் தாமே பிரித்து அறிய வல்லவர்கள்.

மத்யமான மனிதர்கள் ஒருவர் அவருக்கு அறிவுறுத்தும் போது அதை அறிவர்;

ஆனால் அதமமான மனிதர்களோ அப்படி ஒரு அறிவுறுத்தினாலும் கூட அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்!

The highest men can discern by themselves the right from wrong;

The middle men after they had been advised;

The worst ones even not after they had been advised.

*

VIRINCHIPURAM  SIVA LINGA – PICTURE BY LALGUDI VEDA 

–SUBHAM–

TAGS – சிவன் , உடல், 

சிவன் பற்றிய 6 பழமொழிகள் என்ன ? (Post No.8740)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8740

Date uploaded in London – –26 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவன் பற்றிய 6 பழமொழிகள் என்ன ? கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு

2.சிவன் சொத்து குல நாசம்

3.சிவ பூசை வேளையிலே கரடி புகுந்தது போல

4.சிவலிங்கத்தின் மேல் எலி போல

5.சிவனே என்றிருந்தாலும் தீவினை விடவில்லை

6.படிக்கிறது திருவாசகம் (ராமாயணம்)  இடிக்கிறது சிவன் கோவில்.

TAGS—சிவன், படிக்கிறது, குல நாசம்

—SUBHAM—

ராமனும் லெட்சுமணனும் உத்ய , பித்ய நதிகள் (Post No.7794)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7794

Date uploaded in London – 7 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி என்ற ரிஷி உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதினார். அதன் பெயர் அஷ்டாத்யாயி; அதாவது எட்டு/அ ஷ்ட  அத்தியாயங்கள். நாம் எப்படி த்ருண தூமாக்கினி என்ற ரிஷி எழுதியதை தொல்காப்பியம் என்று அழைக்கிறோமோ அப்படி பாணினி பெயரால் அந்த நூலை பாணினீயம் என்றும் அழைப்பர்.

(காப்பிய (காவ்ய) கோத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு தொல்காப்பியன் என்ற பெயரும் உண்டு.) tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினி திருள்ளூவருக்கும் மேலாக ஒரு படி சென்று ரத்தினச் சுருக்கமாக இலக்கணத்தை எழுதிவிட்டுப் போய்விட்டார் . புத்தகமாகப் போட்டால் 35 பக்கம்தான் வரும். ஆனால் உலகம், இவர் எழுதியது பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறது. அவர் சொல்லுமொரு சுவையான விஷயம் ‘உத்ய- பித்ய’ ஆறுகள் பற்றிய  விஷயமாகும் .

பாணினி சொல்கிறார் —

பித்யோத் த்யௌ நதே —

சூத்திரம் 3-1-115

அதாவது தான்  கூறிய இலக்கண விதிக்குப் புறம்பாக இப்படியும் உத்ய  , பித்ய நதிகள் பெயர்கள் உளது என்று இயம்புகிறார்.

பித்ய – கரையை உடைக்கும் ஆறு;

உத்ய – கரை புரண்டு ஓடும்  ஆறு

உத்ய  , பித்ய நதிகள் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்  எல்லைப்பகுதி நதிகள் என்றும் அவை ரவி என்னும் நதியின் உபநதிகள் என்றும் ஆராய்ச்சியாளர் விளம்புவர். இவை மழைக்காலத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பதால் இந்தப் பெயர்கள் ஏற்பட்டதாக சிலர் பகர்வர்.

உலகப் புகழ் பெற்ற காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் பித்ய – உத்ய நதிகளை ராம லெட்சுமணர்களின் நடைக்கு ஒப்பிடுகிறார்.

இன்னும் ஒரு இடத்ததில் யமுனை- கங்கை நதிகளை சிவ பிரானின் வெண்மை நிற உடலுக்கும் அவர் கழுத்தில் நெளியும் பாம்புக்கும் ஒப்பிட்டிருக்கிறார். கங்கை நதி வெள்ளையாக இருக்கும்.அதில் கலக்கும் யமுனை நதி கருப்பாக இருக்கும் . இன்றும் இக்காட்சியைக் காணலாம்.

ராமனும் லெட்சுமணனும் teenage boys ‘ டீன் ஏஜ் பாய்ஸ்’ ; அவ்விருவரும் கைகளை வீசிக்கொண்டு விசுவாமித்திர முனிவனைப் பின்தொடர்ந்து நடந்தனர். அவர்கள் காட்டுப் பாதையில் போனதைக் காளிதாசன் வருணிக்கிறார் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மேகம் வரும் மழைக் காலத்தில் எப்படி உத்யம், பித்யம்  என்ற நதிகள் பெயருக்கு ஏற்றபடி செயல்படுகின்றனவோ அதுபோல அலை வீசும் கைகளையும் மெதுவாக நடைபோடும் கால்களையும் அவ்விரு பாலகர்களும் கொண்டிருந்தனர்”– -ரகு வம்சம் 11-8

உத்யம் என்றால் தண்ணீரைப் பெருக்குவது என்று பொருள்; பித்யம் என்றால் கரைகளை உடைக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான நதிகள் மழைக்காலத்தில் இதைத்தான் செய்கின்றன. ஆயினும் ஜம்மு பகுதியில் உள்ள இந்த இரு நதிகள் பெயரிலேயே அவைகளைக் கொண்டுவிட்டன. சின்னப் பையன்களான ராம லெட்சுமண கை வீச்சும், கால் வீச்சும் அப்படி இருந்தனவாம்.

கங்கை யமுனை நதிகள் உவமை

திரு நீறு அணிந்த-  சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்ட–  சிவனின் உடல் வெள்ளை நிறத்தில் காட்சி தரும்.

அதில் கலக்கும் கரு நிற யமுனை நதி, சிவன் கழுத்திலுள்ள பாம்பு போலக் காட்சி தரும் என்கிறார் காளிதாசன் –ரகு வம்சம்   13-54/57

நாம் கற்கும் பாடங்கள்

காளிதாசன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; ஏனெனில் அவர் பயன்படுத்திய சுமார் 200 உவமைகள் சங்கத் தமிழ் பாடல்களில் உள்ளன. அது மட்டுமல்ல. அவர் குப்தர் காலத்துக்கு 500, 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று இந்திய வெளிநாட்டு அறிஞர்களும் காரண காரியங்களுடன் விளக்கியுள்ளனர். அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாணினி. ஒரு உவமையை ஒருவர் கையாள வேண்டுமானால் அது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கங்கை யமுனை நதிகளைத் தெரியாதோர் எவருமிலர். சங்கத் தமிழ் பாடல்களிலேயே இரு நதிகளும் புனித நதிகளாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் உத்ய  , பித்ய நதிகள் பற்றிப் பாணினியும் காளிதாசனும் பகராவிடில் நமக்குத் தெரியாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இவை எல்லோருக்கும் தெரிந்த நதிகள் என்பது உவமையிலிருந்து கிடைக்கும் செய்தியாகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

वीचिलोलभुजयोस्तयोर्गतम्
शैशवाच्चपलमप्यशोभत।
तोयदागमे इवोद्ध्यभिद्ययोः
नामधेयसदृशम् विचेष्टितम्॥ ११-८

vīcilolabhujayostayorgatam
śaiśavāccapalamapyaśobhata |
tooyadāgame ivoddhyabhidyayoḥ
nāmadheyasadṛśam viceṣṭitam || 11-8

vIcilolabhujayostayorgatam
shaishavAccapalamapyashobhata |
tooyadAgame ivoddhyabhidyayoH
nAmadheyasadR^isham viceShTitam || 11-8

क्वचिच्च कृष्णोरगभूषणेव
भस्माङ्गरागा तनुरीश्वरस्य।
पश्यानवद्याङ्गि विभाति गङ्गा
भिन्नप्रवाहा यमुनातरङ्गैः॥ १३-५७

kvacicca kṛṣṇoragabhūṣaṇeva
bhasmāṅgarāgā tanurīśvarasya |
paśyānavadyāṅgi vibhāti gaṅgā
bhinnapravāhā yamunātaraṅgaiḥ || 13-57

kvachichcha kR^iShNoragabhUShaNeva
bhasmA~NgarAgA tanurIshvarasya |
pashyAnavadyA~Ngi vibhAti ga~NgA
bhinnapravAhA yamunAtara~NgaiH || 13-57

slokas taken from Sanskrit documents.org

tags — ராமன், லெட்சுமணன்,  உத்ய , பித்ய நதிகள்  , கங் கை, யமுனை ,சிவன்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள் (Post No.7133)

India- Vietnam Joint Issue

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am


Post No. 7133

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுளின் பாத சுவடுகளை வழிபடுவதும், ஞானியரின் காலணிகளை வழிபடுவதும் பாரத நாட்டில் தொன்றுதொட்டு  இருந்துவரும் பழக்கங்கள். ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன். காசி இந்து பல்கலைக் கழக துவக்க விழாவுக்கு வர இயலாது என்று சிருங்கேரி சுவாமிகள் சொன்னவுடன் பாதுகைகளை  வாங்கிச் சென்று பெரிய மரியாதை செய்து அவற்றைத் திருப்பி அனுப்பினார் அமைச்சர். பாதுகா சஹஸ்ரம் என்ற பெயரில் இறைவனின் திருவடிகள் மீது 1000 பாடல் இயற்றினார் வேதாந்த தேசிகன். வள்ளலார் பாதக் குறடுகள் முதல் மஹாத்மா காந்திஜியின் பாதக் குறடுகள் வரை இன்றும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் தரிசிக்கப்படுகிறது.

இந்துக்களுக்கு மண்ணும் புனிதம், மலையும் புனிதம். பக்தர்களின் காலடித் தூசி தன்  மீது படவேண்டும் என்பதற்காக மாமன்னர்கள் தங்கள் பாத சுவடுகளை கோவில் தரைகளில் பொறிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் காலடிச் சுவடுகள் மீது நாம் படக்கூடாது என்று அஞ்சி அதன் மீதும் மண்டபம் எழுப்பிவிட்டோம்.

இமய மலை முதல் இலங்கையின் சிவனொளி பாத மலை (Adam’s Peak) வரை பாதச் சுவடுகளை வழிபடுவதில் வியப்பில்லை ஆனால் கம்போடியாவிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபடக்கூடிய பாத சுவடுகள் உள்ளதைப் பலரும் அறியார்.

வியட்நாம், கம்போடியாவின் பழைய பகுதி ப்யூனான் (Funan). அங்கு முக்கிய வைஷ்ணவக் கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்வெட்டு ஜயவர்மனின் மனைவி குலப் பிரபாவதி செய்த தானம் பற்றியது. பிராமணர்கள் வசிக்கும் குரும்ப நகரத்தில் அவள் இறைவனின் தங்க விக்ரகத்தை நிறுவினாள்; ஒரு நந்தவனத்தையும், ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்தாள்; மற்றொரு கல்வெட்டு விஷ்ணுவின் பாத சுவடுகள் பற்றியது. குணவர்மன் என்பவன் சக்ர தீர்த்த ஸ்வாமின் என்னும் விஷ்ணுவின் பாத சுவடுகளைப் பொறித்தான். அடுத்ததாக ருத்ரவர்மன் கல்வெட்டு புத்தர், பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறது.

604-ம் (CE 604) ஆண்டில் (சக ஆண்டு 526) ஒரு பிராஹ்மணன், மலை உச்சியில் சிவன் பாதத்தைப் பொறித்து அதன் மீது தண்ணீர், பால் விழுவதற்காக ஒரு குடத்தை நிர்மாணிததாக ஒரு கல்வெட்டு இயம்புகிறது. அதைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பியதையும் கல்வெட்டு உரைக்கிறது.

613 (CE 613) ஆண்டில் சிவன் மடி மீது பார்வதி அமர்ந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது.

xxxx

Brahma Stamp in Indo China

சீனர்கள் அடித்த கொள்ளை – ஒரு லட்சம் பவுண்டு தங்கம்

சீனாவின் லியங் வம்சாவளி (History of Liang Dynasty) )  பற்றிய புஸ்தகம் கிடைத்துள்ளது. அதில் வியட்நாமென்னும் சம்பா  தேசத்தில் இருந்து சீனர்கள் ஒரு லட்சம் பவுண்டு எடையுள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கவுண்டின்ய வம்சத்தில் வந்த மன்னர் தங்க சிம்மாசனத்தில் படாடோபங்களுடன், அழகிகள் சாமரம் வீச, எழுந்தருளியதாகவும் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது நாம் சினிமாவில் காணும் மன்னர்களின் காட்சிகள் அத்தனையையும் அவர்கள் அப்படியே வருணித்து எழுதியுள்ளனர்.

சம்பா தேச பாமர மக்கள் உடை அணியாமல் இருந்ததாகவும் அவர்களுக்கும் உடை அணியும் வழக்கததை கவுண்டின்யர் கற்றுக் கொடுத்தகதாவும் சீனர்கள் எழுதி வைத்துள்ளனர்.

சீனர்களுக்கு சிறிய கப்பல் மட்டுமே கட்டத் தெரிந்ததால், தென் சீனக் கடலில் ,இந்துக்களின் நீண்ட கப்பல்களுக்கு , பயணிகள் மாற்றப்பட்டதாகவும் சீனர்கள் சொல்கின்றனர்.

ஒரு பவுண்டு= 453 கிராம்; ஒரு பவுன்/ சவரன் = எட்டு கிராம்)

xxx

உடனே செய்க!

உலக நாடுகள் முழுதும் அவரவர் எழுதிய புது வரலாற்றைப் படிக்கின்றனர். இந்தியர்கள் மாட்டும் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றை இன்று வரை படிக்கின்றனர்!!!

இந்திய வரலாற்றை விரைவில் திருத்தி எழுத மாபெரும் இயக்கம் துவக்க வேண்டும். தமிழர்களும் ஏனைய தென் இந்தியர்களும் தென் கிழக்கு ஆசியாவில் எட்டு நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆண்டதை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; சிங்க்கப்பூரின் பெயர் சம்ஸ்க்ருதம் (சிம்ஹ புரம்; இலங்கையின் பெயர் சம்ஸ்க்ருதம்- லங்கா, சிம்ஹலதேச); பர்மாவின் பெயர் பிரஹ்மா, கம்போடியாவின் பெயர் காம்போஜம், லாவோஸின் பெயர் லவன் தேசம்; வியட்நாமின் பழைய பெயர் சம்பா; மலேயாவின் பெயர் மலை நாடு- தமிழ்) சாவகம், சுமத்ரா போன்ற` இந்தோநேஷிய தீவுகள் தமிழ், சம்ஸ்கிருத நூல்களில் உள்ளன; தென் கிழக்காசிய வரலாற்றை தமிழர்கள் கற்றால் ராஜேந்திர சோழன், வீர பாண்டியன், குலோத்துங்க சோழனின் கடற்படை வலிமை புரியும். வியட்நாமை ஆண்ட திருமாற பாண்டியன் முதல் 1500 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்). அந்த புகழோங்கிய காலம் மீண்டும் வரும்; வரச் செய்ய முடியும்!)

Shoe worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › shoe-worship

1.      

15 Aug 2012 – Why Do Hindus Worship Shoes? By London swaminathan. “A pair of sandals worn by the Maharishi is expected to fetch £80,000 when they are …

Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …



https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-temple-in-syria-with-…

1.      

8 Apr 2017 – Written by London swaminathan Date: 8 APRIL 2017 Time uploaded in London:- 13-47 Post No. 3799 Pictures are taken from various sources; …

Footprints on sands | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › footprints-on-sands

1.      

12 Jul 2017 – Written by London Swaminathan Date: 12 July 2017. Time uploaded in London- 18-24. Post No. 4074. Pictures shown here are taken from …

Durga | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › durga

1.      

20 Jul 2018 – The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his …

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints …



https://tamilandvedas.com › 2018/10/07 › காலம…

1.      

Translate this page

7 Oct 2018 – Tamil and Vedas … காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the … some of his most famous poems, including the Village Black Smith. … Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)In …

Xxxx subham xxxx

எட்டாம் நாள் திரு நாள் – வேட்டைத் திருநாள் – ஏன்? (Post No. 2613)

arjuna hunter

Article written by london swaminathan

Date:  9 March, 2016

 

Post No. 2613

 

Time uploaded in London :–  8-28

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த வேட்டைத் திருநாள் உற்சவ மகிமைக் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

 

 

 

கதைச் சுருக்கம்:

அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்தான். அப்பொழுது, துர்யோதனின் ஏவலின் பேரில் முகாசுரன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அர்ஜுனனைத் தாக்க வந்தான். அர்ஜுனனைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமானும் வேடன் உரு தாங்கி வந்தான். அடிபட்ட பன்றி ஒரு முனிவனிடம் தஞ்சமடைய அர்ஜுனனும், சிவபெருமானும் தானே பன்றியை முதலில் வில்லால் அடித்ததால் தனக்கே சொந்தமென்று உரிமை கொண்டாடுகின்றனர்.

 

siva hunter

இருவரும் இது குறித்து பெரும் சண்டையில் ஈடுபட்டவுடன், தேவர்கள் அனைவரும் கூடினர். அப்பொழுதுதான் அர்ஜுனனுக்கு, தான் யாரைக் குறித்து தவம் செய்தானோ அந்த சிவ பெருமானே நேரில் வந்ததைக் கண்டு காலில் விழுகிறான். சிவனும், அர்ஜுனனின் பக்தியை மெச்சி, அவன் கேட்ட பாசு பத அஸ்திரத்தைத் தருகிறான். ஆனால் வேடனென்று தன்னை ஏசியதால், அர்ஜுனனும் ஒரு ஜன்மத்தில் காளஹஸ்தியில் வேடனாகப் பிறந்து சிவனை அடைவான் என்று ஒரு சிறிய சாபம் இடுகிறார். அவரே காளஹஸ்தியில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் ஆவார்.

 

இந்த சிவனின் வேடமே, சிவன் கோவில் உற்சவங்களில் எட்டாம் நாளன்று வேட்டைத் திருநாளாகக் கொண்டாடப் படுகிறதென்றும், அவ்வாறு வேடுவ வேடம் தரித்து சுவாமிக்கு முன்னால் செல்லும் உரிமை ருத்ர கணிகைகளுக்கே உண்டு என்றும் ஆதாரங்களுடன் எழுதுகிறார் அஞ்சுகம்.

shiva_arjuna

இதோ அந்த மூன்று பக்கங்கள்:–

 

pandri1

pandri2

 

pandri3

–subam-

 

 

ஒரே சிந்தனை! கம்பன், பாரதி, கண்ணதாசன் மூவரும் பாடிய விஷயம்! (Post No.2604)

Kannadasan_stamp

Compiled by london swaminathan

Date: 6 March, 2016

 

Post No. 2604

 

Time uploaded in London :–  11-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை

மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”

 

–சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்

 

 

பொருள்:- வானளாவிய தோளை உடையவனே! மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், உமாதேவியை தன் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டான். திருமாலாகிய இன்னொருவன், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைத் தன் மார்பில்

வைத்துக்கொண்டான். பிரமன், சரசுவதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் தோன்றுகின்ற மின்னலை வென்ற நுண்ணிய இடையை உடைய சீதையை நீ அடைந்தால், அவளை எந்த இடத்தில் வைத்துகொண்டு வாழ்வாய்?

kambar

 

இது ராவணனிடம் சூர்ப்பநகை கேட்ட கேள்வி. அதாவது, அவன் சீதையை அபகரிக்க வேண்டும் என்பதும், அவளைக் காவலில் வைக்குமிடத்தை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டுமென்பதும் சூர்ப்பநகையின் சதித்திட்டம். அவளுக்குத் தெரியும் ரவணனின் மனிவியான மண்டோதரி, மஹா பதிவிரதை என்பது. ஆகையால் ராவணனை உளவியல் ரீதியாக (சைகலாஜிகல்) தயார்படுத்த இப்படிப் பல வசனங்களைக் கூறுகிறாள். இந்தப் பாடல் பாரதி, கண்ணதாசன் பாடல்களிலும் பிரதிபலிக்கிறது.

 

 

 

பாரதி பாடியது

 

பாரதியார் பாடல்களை நன்கு ஊன்றிப் படிப்போர்க்கு, ஆழ்வார் பாடல், தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியன,  அவர் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவர். கம்பனுடைய மேற்கூறிய பாடல்  கருத்தும் அப்படியே இடம் பெறுவதைக் காணலாம்.

 

 

பாரதியார் தன் சுயசரிதையில், காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் என்று துவங்கும் பகுதியில் கம்பன் கூறியதை அப்படியே பயன்படுத்துகிறார்.

bharati-stamp

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்
: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

 

கண்ணதாசன் கவிதைகள்

 

கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் பாடல்களையும் தமிழ்ப் பாடல்களையும் அவரது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி… என்ற பாடல் பகவத் கீதை, பஜ கோவிந்தம் ஆகிய துதிகளிலிருப்பதையெல்லாம் முன்னரே கட்டுரைகளில் சுட்டிக்காட்டி விட்டோம்.

 

ஆனால் கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூவரும் ஒரே கருத்தை அதே வரிசையில் சொல்லுவதை இப்பொழுதுதான் காண்கிறேன்.

 

 

 

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் GREATMEN THINK ALIKE— அதாவது, “உயர்ந்த மனிதர்க்கு சிந்தனை ஒன்றே” – என்று

அது போல கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூன்று உயர்ந்த கவிஞர்களும் ஒன்றே நினைப்பர்! நன்றே நினைப்பர்.

 

–சுபம்-

கடவுள் தந்த இரண்டு மொழிகள்

shiva
பம் பம் பம் பம் பம் பம் பாஜே டமரு
டம் டம் டம் டம் டமருக நாதா (பஜனைப் பாடல்)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1408; தேதி 13 நவம்பர், 2014.

இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே பவழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம். இதைவிடப் பெரிய சிறப்பு இவ்விரு மொழிகளும் கடவுளால் படைக்கப்பட்டன. இவ்விரு மொழிகளையும் சிவ பெருமான் கொடுத்ததாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலவர்கள் பாடி வருகின்றனர்.

பாரதியின் தமிழ்ப் பற்றை சந்தேகிப்பார் எவரேனும் உளரோ? அவரே ஆதி சிவன் இந்த தெய்வீகத் தமிழ் மொழியை உருவாக்கியதையும் அதற்கு அகத்தியன் என்று ஒரு பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்ததையும் சம்ஸ்கிருத (ஆரியம்) மொழிக்குச் சமமாக தமிழ் மொழி, வாழ்ந்ததையும் பாடுகிறார்:-

damaruka

தமிழ்த் தாய் – என்னும் பாடலில் பாரதியார் பாடுகிறார்:

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்

ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — (பாரதியார் பாடல்)

சிவபெருமான் தனது உடுக்கையை வாசிக்கும்போது அதன் ஒரு புறத்திலிருந்து தமிழும் மறு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வந்ததாக ஆன்றோர்கள் கூறுவர். பாணினி என்னும் உலக மகா அறிஞன், உலகின் முதலாவது இலக்கண வித்தகன் சிவபெருமானுடைய ‘’டமருகம்’’ என்னும் உடுக்கை ஒலியில் இருந்து எழுந்த 14 ஒலிகளைக் கேட்டு சம்ஸ்கிருத இலக்கணம் செய்தார். இதை மஹேஸ்வர சூத்ரம் என்று கூறுவர்.

இதே போல அகத்தியர் என்பார் தமிழுக்கு இலக்கணம் செய்தார். ஆக இவ்விரு மொழிகளும் பாணினி, அகத்தியர் என்போருக்கு முன்னதாகவே வழங்கின. ஆனால் காலத்துக்கு காலம் இலக்கணம் மாறுபடும் என்பதால் அவ்வப்போது வரும் பெரியோர் இத்தகைய பணியை ஏற்பர். தமிழில் தொல்காப்பியருக்கு முன்னரும் இலக்கண வித்தகர்கள் இருந்தனர். பின்னரும் பலர் வந்து நூல்களை யாத்தனர். இது போலவே பாணினிக்கு முன்னரும் இலக்கண அறிஞர்கள் இருந்தனர்.

வட கோடு (இமய மலை) உயர்ந்து, தென் நாடு தாழவே, பூபாரத்தை சமனப் படுத்த அகத்தியனை தென் திசைக்குச் செல்லுமாறு சிவ பெருமான் கட்டளையிட்டதை முன்னரே உலகின் முதல் மக்கட்தொகைப் பெருக்கப் பிரச்சனை என்ற கட்டுரை வாயிலாகத் தந்துள்ளேன்.

shiva2

காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை பற்றி நான் முன்னரே எழுதிவிட்டேன்.

புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.

மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)

trishul-damaru

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு எது பெரிது என்றே சொல்ல முடியாது. ஏனெனில் சம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழிலோ திருக்குறள் இருக்கிறது என்று பெருமைப்படுவார் வண்ணக்கன் சாத்தனார்:-

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

shiva3
கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

shiva on coin

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!

எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? (ஜூன் 9, 2014)
புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர் ( 28 மார்ச் 2014)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
தமிழ் ஒரு கடல்

Ravana-Pandya Peace Treaty: Kalidasa solves a Tamil Puzzle (24th June 2014)
Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures (posted on 2nd February 2013)

சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்

baladevakrishna

பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

Written by London Swaminathan
Post No. 1083 ; Dated 4th June 2014.

நாத்திக வாதம் பேசும் தமிழர்களும், தங்களுக்கு முன் திராவிடர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட சில தமிழர்களும் நூறு வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையே காரணம். ஏமாறுபவன் இருக்கும் வரை உலகில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை நியதி. “இளிச்ச வாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்”, “குனியக் குனியக் குட்டுவார்கள்” என்ற பழமொழிகளே இதற்குச் சான்று.

வெள்ளைக் காரர்கள் அவர்களுடைய மதத்தைப் பரப்பவும், ஆட்சியை நிலை நாட்டவும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி இந்து தெய்வங்களை இரு கூறுபோட்டு ஒரு கோஷ்டி ஆரிய தெய்வங்கள் என்றும் மற்றொரு கோஷ்டி திராவிட தெய்வங்கள் என்றும் ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர். இதை சில திராவிடங்களும் பற்றிக் கொண்டு பொய்ப் பிரசாரம் செய்துவந்தனர்.

தமிழர்களுக்கு தெய்வங்களே கிடையாதென்றும் ஆரியர்கள்தான் இப்படி இந்து மத தெய்வங்களைப் “புகுத்தினார்கள்” என்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்கள். ஆங்கிலமும் தெரியாத, தமிழும் படிக்காத, பாமர ஜனங்கள் அதை நம்பி ஏமாந்தனர். காஞ்சிப் பெரியவர் போன்ற சிலர் மட்டும் அன்பான முறையில் அறிவுபுகட்ட முயன்றனர். ராக்காயி, மூக்காயி, மஹமாயி, சாத்தன், ஐயனார் என்பன எல்லாம் வேத கால தெய்வங்கள் என்றும், அந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள் என்றும் சொற்பொழிவாற்றி உதரணங்களையும் கொடுத்தார்.

சங்க இலக்கியத்தில் உள்ள 2389 பாடல்களைப் பயின்றவருக்கு ஆரிய, திராவிட என்ற சொல் எல்லாம் நகைப்பைத் தரும். திராவிட என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆரிய என்ற சொல் இருந்தாலும் அது இனவாதப் பொருளில் பயிலப்படவில்லை.

தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பகுதிகளில் ராமன், பலராமன், பரசுராமன், சிவன், கொற்றவை (துர்கை), முருகன் ஆகிய எல்லோரும் மதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான இடங்களில் பிராமணர்கள், வேதங்கள், இந்து மத நம்பிக்கைகள், மறு ஜன்மம், தகனம், கர்ம வினைக் கொள்கை, இந்திரன் வருணன், அக்னி, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், சுவர்க்கம், நரகம் முதலியவையும் குறிப்பிடப்படுகின்றன.

800px-Heliodorus-Pillar2
பெஸ்நாகர் என்னும் இடத்தில் கிரேக்க மன்னன் எழுப்பிய கருட ஸ்தம்பம்.

தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன், துர்க்கை, அக்னி, பலராமன், விஷ்ணு ஆகியவர்களைத் தமிழர் தெய்வங்களாகப் போற்றி இருப்பதை ஏற்கனவே மூன்று கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இதோ சங்கத் தமிழ் நூல்களில் இருந்து சில பகுதிகள்:

புறநானூறு:
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல (புறம் 55)

பொருள்: மலையையே வில்லாகவும் பாம்பை நாண் ஆகவும் கொண்டு ஒரே வில்லில் அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்த சிவபெருமானைப் போற்றும் பாடல் இது. கழுத்தில் கறை ஏற்பட்டு நீலகண்டனாக விளங்கும் சிவனுக்கு நெற்றியில் ஒற்றைக் கண் இருப்பது தலையில் நிலவின் பிறை இருப்பது ஆகியவற்றையும் புலவர் மருதன் இள நாகன் குறிப்பிடுகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பழைய பாண்டிய மன்னனைப் பாராட்டும் பாடலில் காரி கிழார் என்னும் புலவரும் சிவனின் மூன்று கண்களையும், சடையையும் பாடுகிறார்:-முக்கட் செல்வர், நீணிமிர் சடை (புறம் 6)

சிவபெருமான் தான் ஆதிசிவன், முதற் கடவுள் என்று புறம் 166 கூறும்: ‘’முது முதல்வன்’’.

அகநானூறு:
ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வ
னாலமுற்றங்கவின் பெறத்தை இ (அகம் 181)
பொருள்:–உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! என்று பரணர் என்னும் புகழ்மிகு புலவர் பாடுகிறார். இதே பாடலில் ஆய் எயினன் என்பவன் முருகப் பெருமான் போல வீரம் உடையவன் என்றும் போற்றப் படுகிறான்.

பரணரும் கபிலரும் இரட்டைப் புலவர் போல சங்க நூல்கள் முழுதும் வியாபித்து நிற்கின்றனர். அவர் தம் திரு வாயால் மலர்ந்தருளிய சொல்லில் வேதத்தை, நான்மறைகளை ‘’முதுநூல்’’ என்று போற்றுவதைக் கவனிக்கவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பரணருக்கே அது மிகப் பழைய நூல் என்றால், வேதங்களின் காலத்தை யாரே கணிக்க வல்லார்?

azakaana sivan

நக்கீரர் பாடிய பாடலில் (புறம் 56) இந்துமதம் பற்றிய ஏராளமான கருத்துகளை அளிக்கிறார்:-
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனுங்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56, நக்கீரர்)

பொருள்:–காளையைக் கொடியாகக் கொண்ட தீயைப் போல விளங்கும் சடையையும் மழு என்ற ஆயுதத்தையும் உடைய நீலமணி போன்ற கழுத்தை உடையவனும், கடலில் வளரும் வெண்மையான சங்கு நிறம் கொண்ட, கொல்லும் கலப்பை என்ற ஆயுதத்தை உடைய பனைக்கொடி உடைய பலதேவனும் தூய்மை செய்யப்பட்ட நீலமணி போன்ற மேனியயும் கருடக் கொடியையும் உடைய வெற்றியை விரும்பும் கண்ணனும் , நீலமணி போன்ற மயில் கொடி உடைய மாறாத வெற்றி பொருந்திய மயில் ஊர்தியை உடைய முருகப் பெருமானும் உலகம் காக்கும் வலிமையும் தோற்காத நல்ல புகழும் உடையவர்கள்.

இந்துமத தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள், வருணனைகள் எல்லாம் ஆப்கனிஸ்தான் முதல் கன்னியாகுமரி வரை இதே காலத்தில் ஒரே மாதிரியாக இருப்பது எண்ணி எண்ணி இறும்பூது எய்ய வைக்கும். குஷான மன்னர்கள் கட்பீஸசும், கனிஷ்கரும் காளைவாகனத்துடன் சிவன் இருக்கும் நாணயங்களை வெளியிட்டனர். வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட கிரேக்க வம்சாவளி மன்னர்கள் பலராமனுக்கும் கண்ணனுக்கும் (Bactrian coins of Agathocles 180 BCE) நாணயம் வெளியிட்டதும், (Greek King Heliodorous 113 BCE) விஷ்ணுவின் கருட வாகன தூண் அமைத்ததும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. அதற்கு 200 வருடங்களுக்குப் பின் 4000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த நக்கீரரும் அதையே செப்புவது இந்து மதத்தின் பரந்த தாக்கத்தை நிலைநாட்டுகிறது.

avatars6only
பல ராமன் & கண்ணன்
நக்கீரர் பாடலில் பலராமனை பனைக்கொடியோன் என்று பாடியதைக் கண்டோம். தொல்காப்பியரும் இந்த பனைக்கொடியைக் குறிப்பிட்டவுடன் உரைகாரர்கள் இது பலதேவனுடைய கொடி என்று உரை கண்டுள்ளனர். புறம் 58ல் இதைவிட உறுதியான ஒரு செய்தி வருகிறது. கண்ணனும் பலதேவனும் இணைபிரியாமல் இருப்ப்பது எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழ் நாட்டில் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் சேர்ந்தே சந்நிதிகள் இருந்தன. காலப்போக்கில் பலதேவன் மறைந்துவிட்டார். காரிக்கண்ணன் பாடிய புறம் 58ல் இரண்டு மன்னர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு ‘’கண்ணன் – -பலதேவன்’’ நினைவே வந்தது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரை காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடல் இதோ:–

“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?”
இந்தப் பாடலில் ‘’இரு பெரு தெய்வங்கள்’’ என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். இனி சில ராமாயணக் காட்சிகள்:

தமிழ் ராமாயணம்
வால்மீகி, கம்பன் சொல்லாத விஷயங்களை சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்:-
புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்:–
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
. . . . . . . . .
பொருள்:– இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல……..

பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்!

ராவணன் ஒரு தமிழன் என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்கையில் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார், ராவணன் ஒரு அரக்கன் என்று தெள்ளத் தெளிவாக உரைப்பது படித்துச் சுவைக்க வேண்டியது ஆகும்.

அகம் 70 மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:–

. . . . . .
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:– வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.

இராம பிரானின் அபூர்வ ஆற்றல் பற்றிக் கூறும் இப்பாடல் போலவே பிற பாடல்களில் கிருஷ்ணனுடைய அபூர்வச் செயல்களையும் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் தென்கோடி வரை, மாய மந்திரம், அபூர்வ ஆற்றல்கள் பற்றி நம்பிக்கை ஏற்பட்டத்தானது பகுத்தறிவு என்ற பெயரில் பொய் பிரசாரம் செய்வோருக்கு சரியான சவாலாக அமையும்.

aghora and agni veerabhadra
அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்திரர்

கண்ணனின் அபூர்வ ஆற்றல்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தாற் போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது.
இதே பாடலில்,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
என்ற வரிகள் திரு முருகனின் சூரபதுமன் வதையையும், திருப்பரங் குன்றத்தின் பெருமையையும் கூறுகிறது.

புறம் 174 (மாறோக்கத்து நப்பசலையார்):–
அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுத்தாங்கு

—— . . .
பொருள்:–மற்றவரை வருத்தும் அச்சம் பொருந்திய அரக்கர் ஞாயிற்றை எடுத்துக் கொண்டுபோய் மறைத்தனர். தொலைவில் விளங்கக் கூடிய அந்த்த ஞாயிற்றைக் காணாததால் இருளன்னது உலகத்தாரின் கண்ணை மறைத்தது. அப்பொழுது உலகத்தாரின் நோய்கொண்ட துன்பம் நீங்குமாறு மிகுந்த வன்மை உடைய மை போன்ற கரிய நிறம் உடைய மேனியனான திருமால், அந்த வட்டமான ஞாயிற்றைக் கொண்டுவந்து இந்த உலகத்தின் இருள் நீக்குவதற்காக வானத்தில் நிறுத்தினான் – என்று புறநானூற்று உரை கூறும்.

இது சூரிய கிரகணம் பற்றிய பாடலென்றும் மஹாபாரதத்தில் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கலாம் என்றும் நான் ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் தென் கோடி வரை கண்ண பிரானின் மாயச் செயல்கள் பற்றிய கதைகள் பாமர மனிதனுக்கும் தெரிந்ததை இப்பாடலின் வாயிலாக அறிகிறோம்.

19.-Marichi-Vadh,Large-Vishnu-temple,-Janjgir
ராமாயண சிற்பங்கள்

அகம் 175 (ஆலம்பேரி சாத்தனார்)
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
பொருள்:– கதிர்கள் ஒழுங்காக அமைந்த சக்கரத்தை உடைய திருமாலின் பகைவர் போர் ஒழிவதற்குக் காரணமான மார்பிலுள்ள மாலை போல பல நிறம் உடைய வான வில்லை உண்டாக்கியது. கண்ணன் கையில் உள்ள சுதர்சன சக்ரம் தமிழ் நாடு வரை புகழ் எய்தியதைக் காண்கிறோம்.

புறம் 198 (வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்):–
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் – என்று புலவர் குறிப்பிடுவதை சிலர் ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த சிவன் என்றும் இன்னும் சிலர் ஆல் இலையில் மிதந்த திருமால் என்றும் உரை கண்டுள்ளனர்.

பரசுராமன் அகம் 220 (மருதன் இளநாகன்):–

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்

பொருள்:– என்றும் நீங்காத வேள்வித் தீயை உடைய செல்லூரில், மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையிலே அழித்த மன்னர் பரம்பரையை அழித்தவர் பரசுராமன். அவர் முன்காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் கட்டப்பட்ட வேள்வித் தூணைப் போல அரிதில் காண முடியாதது என் தலைவியின் மார்பு.

கேரள மக்கள் பரசுராமனை முழுமுதற் கடவுளாக வழிபடுவதும் மேலைக் கடற்கரை முழுதும் பரசுராமன் தந்த பூமி என்று கொண்டடுவதும் எல்லோரும் அறிந்ததே. அவர் சங்கப் பாடலில் மழுவாள் நெடியோன் என்று போற்றப்படுவது படித்து இன்புறத் தக்கது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக வணங்கும் ராமன், பலராமன், பரசுராமனை நாமும் வணங்கி தமிழ் பண்பாட்டைத் தழைக்கச் செய்குவோம்.