
Written by S.Nagarajan
swami_48@yahoo.com
Date: 4 March 2019
GMT Time uploaded in London – 6-56 am
Post No. 6148
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
இன்று 4-3-19 சிவராத்திரி. அவனது பொருள் பொதிந்த திருவிளையாடலை பனி மலை அருகே நேரடியாக அனுபவிக்கும் கால கட்டம் இது!
அவனைப் போற்றுவோம்; துதிப்போம்!
இமயத்தில் சிவனது திருவிளையாடல்!
ச.நாகராஜன்

திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவ சிவ என்றிடில் பனைமேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்;
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்:
ஒருத்தன் வாயாரச் சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும்; இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்.
விருத்தாசல புராணத்தில் வரும் அழகான பாடல் இது.
சிவ நாம ம்ஹிமையை இதற்கு மேல் சிறப்புடன் யாராலும் உரைக்க முடியாது.
சிவ் சிவ என்று சொன்னால் பாவம் எல்லாம் இடியானது பனை மேல் விழுந்தது போல எரிந்து போகும். இறப்பும் பிறப்பும் – ஜென்ம மரணச் சுழற்சி – நீங்கும்.
சிவ என்று மூன்று தரம் சொன்னாலோ முதல் சிவ நாமத்திற்கு கடவுள் பதத்தில் இருக்கும் பேறு கிடைக்கும்.
மற்ற இரண்டு சிவ நாமம் சிவனிடம் கடன்களாய் நிற்கும்.
தேவையான நேரத்தில் சிவன் அருள் பாலிப்பார்.
சிவனுடைய 108 நாமங்களின் விளக்கம் அற்புதமானவை.
அதில் 70வது நாமம் : ஓம் ப்ரமதாதிபாய நம: என்பதாகும்.
சிவ பிரான் ப்ரமதர்களுக்குத் தலைவன்.

வைதிகம் அல்லாத அவைதிகர்களை அழிப்பதால் சிவனது சபையில் உள்ளவர்கள் ப்ரமதர்கள் என அழைக்கபப்டுகின்றனர்.
மஹா பாரதத்தில் வரும் விளக்கம் இது:
“ம்னதாலும் வாக்காலும் கர்மாவினாலும், பக்தர்களைப் புத்திரர் போல ரக்ஷிப்பவர் ப்ரமதர்.பிரும்ம த்வேஷிகளது ரத்த மாமிசங்களை கோபத்துடன் சிவ ப்ரமதர் பக்ஷிப்பார்.”
சிவபிரான் தானே களத்தில் இறங்கி 64 விளையாடல்களை நடத்தியதைக் கூறுவது திருவிளையாடல் புராணம்.
அவன் பிறப்பிலன்; இறப்பிலன்; என்றும் உளன்!
நேரே அவ்வப்பொழுது திருவிளையாடல்களைச் செய்வது ம்டட்டுமன்றி ப்ரமதர்களைக் கொண்டு துஷ்டர்களை சிக்ஷித்து பக்தர்களுக்கு அருளி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் அவன்.
35வது நாம இது : ஓம் கைலாஸ வாஸிநே நம:
கைலாஸத்தில் வசிப்ப்வன் அவன்.
கேலி அதாவது விளையாட்டு – அதன் கூட்டம் கைலம். அது உள்ள இடம் கைலாஸம். அதாவது சிவாலயம்.
கைலாஸம் என்றால் சிவனின் திருவிளையாடல் நடக்கும் என்று பொருள்.
இமயமலை,
மேரு மலை
வைகுண்டத்திற்கு மேல் உள்ள ஓரிடம்
என இப்படி மூன்று இடங்கள் உள்ளன.
இங்கு சென்றவர் புண்ணியம் கழிந்த பின்னர் பூமிக்குத் திரும்புவர்.
முதல் இடமான இமயமலை அருகே அவன் தனது திருவிளையாடலை இப்போது நடத்துகிறான் – துஷ்டர்களை ஒழித்துக் கட்டி பக்தர்களைப் பாதுகாக்க! ப்ரமதர்கள் அங்கு இறங்கி விட்டனர் போலும்!
இந்தத் திருவிளையாடலின் ஒரு அங்கமாக ஆவோமாக!
சிவ சிவ சிவ என்று சொல்லி துஷ்டர்களை ஒழிக்கும் பணியில் அவனது கருவியாக ஆவோமாக!
வந்தே மாதரம்.
பாரத் மாதா கீ ஜெய்!

***
