கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)

Big-Crunch-to-Be-the-

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3033

Time uploaded in London :–  6-00 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

 

வால்மீகி என்னும் ஆதி கவி சம்ஸ்கிருத மொழியில் எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதியதை நாம் அறிவோம்.

 

காஸ்மாலஜி/ COSMOLOGY-யை பெரும்பாலோர் அறியோம். காஸ்மாலஜி என்றால் என்ன? பிரபஞ்ச இயல். அதாவது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? அதன் அமைப்பு என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பனவற்றை ஆராயும் ஒரு துறை. முதலில் பட்டாணி அளவுக்கு இருந்த பிரபஞ்சம் திடீரென  வெடித்து (BIG BANG) பல்வேறு உலகங்களை உருவாக்கி, இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது இதில் விளக்கப்படுகிறது.

bigbang_expansion

இப்படி விரிந்துகொண்டே போக்கும் பிரபஞ்சம் ஒரு நாள் சுருங்கிவிடும் (BIG CRUNCH-பிக் க்ரஞ்ச்) என்று இப்பொழுது எழுதத்துவங்கியுள்ளனர். ஆனால் இதை கம்பனும் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புராண முனிவர்களும் செப்பிவிட்டனர்.

 

உலகில் முதல் முதலில் காஸ்மாலஜி பற்றிப் பாடியவர்கள் ரிக்வேத முனிவர்களே! ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129, 130 ஆகிய இரண்டு மந்திரங்களும் (நாசதீய சூக்தம்) இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைக் கண்டு வியக்கும் பாடல்கள் —  விளக்கும் பாடல்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இப்படி ஒரு அருமையான கவிதை இருப்பதைப் பற்றி நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின.

 

 

நாம் கம்ப ராமாயணப் பாடலுக்கு வருவோம்:–

 

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே

–ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:–

 

ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (BIG BANG) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயி ரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (BIG CRUNCH) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய் (பரித்ராணாய சாதூனாம், விநாசாய ச துஷ்க்ருதாம் – கீதை 4-8). நிலையில்லாத அப் பாவமும் நீ படைத்தது அல்லவா?

 

big-crunch-theory-big-bounce

உலக விஞ்ஞானிகள் சொல்லாததை எல்லாம் இந்து மதம் முன்னரே சொல்லிவிட்டது. நாம் சொன்ன பேரண்ட வெடிப்பு, பேரண்டச் சுருக்கம் (மஹா பிர்ளயம்) ஆகியவற்றை பிரபஞ்சவியல் (COSMOLOGISTS) அறிஞர்கள் இப்போது ஒப்புக் கொண்டனர். இனி இது சுழற்சியாக நடை பெறும் ஒரு செயல் பாடு (CYCLICAL) என்பதையும் ஒப்புக்கொள்வர்!

 

–subham—

 

நாசதீய சூக்தம், காஸ்மாலஜி, ரிக் வேதம்,பேரண்ட வெடிப்பு, சுருக்கம், மகா பிரளயம்