

Written by London Swaminathan
Uploaded in London on – 8 JANUARY 2020
Post No.7433
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
முன்னடிக்காரரும் பின்னடிக்காரரும்
இராப்பத்து, பகல் பத்து காலங்களில் பெருமாள் கோவில் களில் நடக்கும் அலங்காரமும் பெருமாள் புறப்பாடும் அரையர் சேவையும் காணக் கண் கோடி வேண்டும். பக்தர்கள் அல்லது அரையர் ஆகியோர் மாறி மாறிப் பாடுவர். முதல் இரண்டு அடிகளை ஒரு வரிசையில் உள்ளோர் பாட, மறறொரு வரிசையில் உள்ளோர் பின்னிரண்டு அடிகளை பாடுவார்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. மதுரை வடக்கு மாசிவீதி யாதவர் தெரு. அங்கே ஒரு கிருஷ்ணன் கோவில் மிகவும் புகழ் படைத்தது. மதுரை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக உற்சவ நாள் அனைத்திலும் நாலு மாசி வீதிகளில் சுவாமி/ பெருமாள் வலம் வருவது இந்தக் கோவில் ஒன்றே. கூடல் அழகர் பெருமாள் கோவில் 2000 ஆண்டுப் பெருமை பெற்ற இருந்தையூர் என்றாலும் நாலு மாசிவீதிகள் வழியாக ஊர்வலம் வராது . அப்போது நாங்கள அண்ணன் ,தம்பிகள் அனைவரும் பெருமாளுக்கு இருபுறமும் நின்று சாமரம் விசிறி வீசுவோம். எதற்காக?? அரை அணா காசுக்காக.! எங்கள் நெற்றியில் விபூதி பட்டை இருந்தாலும் அய்யர் வீட்டுப் பிள்ளை என்பதால் எங்களை யாதவ மானேஜர் விசிறி ,, சாமரம் போட அனுமதிப்பார். மேலும் ஐயங்கார் பையன் களும் போட்டிக்கு வரவில்லை. அப்போது ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை முதலிய இடங்களில் இருந்து பக்தி சிரத்தையான தென்கலைப் பிரிவினர் –அய்யங்கார் குடும்பத்தினர் — எங்கள் வீட்டில் தங்குவர். நாங்கள் ஐயர்கள் என்பதால் என் தாயார் சமைப்பதை அந்த வீட்டுப் பெண்மணிகள் சாப்பிட மாட்டார்கள்.
என் அம்மாவும் அவர்களுக்கு சகல உபசாரம் செய்து ஒரு த னி குமுட்டி அடுப்பு கொடுத்து ஒரு மூலையில் சாணியால் மெழுகி அங்கே சமைத்துக்கொள்ள உதவி செய்வார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு முறை இரவு அரட்டை துவங்கியது. அவர்களுடன் வந்த இளைஞன் மதுரை ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் பயில்பவன். பேச்சு வாக்கில் தனக்கு நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் 4000 பாடல்களும் மனப்பாடமாகத் தெரியும் என்று சொன்னான். நாங்கள் அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து அது முடியவே முடியாது என்றோம் .என் தந்தை ‘காத்ரேஜ் பீரோ’ முழுதும் 6000 புஸ்தகம் வாங்கி வைத்திருந்ததால் திவ்யப் பிரபந்தத்தை எடுத்து சவால் விட்டோம்.
வடக்கு மாசி வீதியிலுள்ள எங்கள் வீட்டு முதல் அறைக்கு பகுத்தறிவுப் பாசறை என்று பெயர். எப்போதும் ஒரு அரட்டைக் கச்சேரி கும்பல் இருக்கும். பகல் நேரமானால் எல்லோருக்கும் ‘ஓசி’க் காப்பியும் கொடுப்போம்.
அந்த இளைஞரிடம் ஒரு பாடலின் துவக்க வரியை வாசித்து சொல்லுங்கள் பார்ப்போம் என்றோம் . அரையர் கள் பாடுவதற்கே ஒரு ராகம் உண்டு. அதில் அழகாக இரண்டு அடிகளை ராகத்துடன் பாடி விட்டு நிறுத்தினார். எல்லோரும் நன்றாக இருக்கிறது; ம்…. ம்….. தொடருங்கள் என்று உற்சாகக் குரல் கொடுத்தோம்.அவர் பாடவில்லை. ஏன்? ஏன்? என்று எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தோம். நான் முன்னடிக்காரன் ; பின்னடிக்காரன் இங்கே இல்லையே; அவர் எங்கே? என்று கேட்டார். அதாவது 4 வரிப் பாடலில் முதல் இரண்டு அடிகளை ஒரு கோஷ்டியும் எதிர் வரிசையில் நிற்கும் மற்றொரு கோஷ்டி பின்னிரண்டு அடிகளையும் பாடுவது வழக்கமாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாங்கள் அனைவரும் வெடிச் சிரிப்பு சிரித்தோம். பாடல் தெரிந்தாலும் கூட பின்னடிக்காரர்கள் பாடாவிட்டால் அடுத்த அடி ஞாபத்துக்கு வராது! எனவே எல்லோரும் இளம் வயது என்பதால் தமாஷ் அத்துடன் முடிந்தது. அறையர்கள் அவர்களுக்கே உரித்தான பட்டுத் தொப்பி / குல்லாய்களுடன் பாடும் பாசுரம் / பாட்டு – திருவாய்மொழி –இன்றும் மனக்கண் முன் நிற்கிறது. அந்த நாட்கள் பொன்னான நாட்கள்.! tamilandvedas.com, swamiindology.blogspot.com
Tags – அரையர் சேவை, சுவையான சம்பவம்
–subham–
அரையர் சேவை, சுவையான சம்பவம்
You must be logged in to post a comment.