
WRITTEN BY S Srinivasan
Post No. 9216
Date uploaded in London – – 2 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam
சூரியனே போற்றி! – 1
ச.சீனிவாசன்

ஆயிரம் கரங்கள் நீட்டி அருளும் சூரியனே போற்றி !!!
அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
இராமலிங்க ஸ்வாமிகள் பாடலுடன் இதை ஆரம்பிக்கிறேன்.
கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு அவன்,
காணார்க்கும்,கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண் அவன்,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி அவன்,
நல்லார்க்கும், பொல்லார்க்கும் நடு நிற்பவன் அவன்,
நரர்களுக்கும், சுர ர்களுக்கும நலம் கொடுக்கும் நலமே அவன்,
எல்லார்க்கும் பொதுவில் நடு நின்ற சிவனென்னும் சூரியனே,
என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே!!!
உலகதிலுள்ள உயிர்களுக்கு ம் அசையும் அசையாப் பொருள்களக்கும் ஆதாரமாக
விளங்கும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து சூரியனைப் பற்றிய ஆச்சரியமான,
உண்மையான சில தகவல்களை உங்களுடன் பரிமாறக்கொள்ள வந்திருக்கிறேன்.
குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை
வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே தெய்வம் சூரியனே!!!
பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால்
உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும்
மழையையும் வருவிக்கின்றன.

சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள்
கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார்.
“சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார்.
ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது
அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!!
ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே
“சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன.
சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில்
பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி,
ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும்.
அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது.
இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட்,
இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக
இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள்
என்றும் கூறுவர்.
உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும்.
இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்..
அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும்
இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது
உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில்
சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள்.
காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.
“செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம்,
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”
இந்த காயத்ரி மந்திரத்தை பற்றி கூற வேண்டுமானால் பல்லாயிரம்
பக்கங்கள் தேவை.
காயத்ரி மந்திரங்களையும், அதன் அருமை மிகு சக்தியையும் பற்றி
திரு சுவாமிநாதன், திரு நாகராஜன் எழுதிய பல கட்டுரைகள் இதே
tamilandvedas ல் பல முறை வந்துள்ளன.தயவு செய்து படித்து பின்பற்றுங்கள்.
சூரிய வழிபாடு
உலகெங்கும் ஜாதி மதம், இனம், மொழி, நாடு எல்லாம் கடந்து. வழி
படக்கூடிய ஓரே தெய்வம் சூரியனே!!!!
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன் யூப்ரெடஸ்,டைகிரீஸ், ந்தி
வெளியில் உள்ள சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள்
சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர்
“ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான்
சூரியன்.இதென்கெல்லாம் மேலாக சூரியனின்
பெயரை “அடோன்” மாற்றி தன் பெயரையும் “அக்ன அடோன்” என்று மாற்றிக் கொண்டான்
ஒரு எகிப்திய அரசன்!!!
தெற்கு இங்கிலாந்தில் ஸ்டோன் ஹென்ஞ் என்ற கல் அடுக்கினை
சூரியனின் கோவில். என்றே கருதுகிறார்கள்.
பாரசீகத்தில் அவஸ்தா என்னும் மத நூலில் சூரியன் “மித்ரன்”என
போற்றப்படுகிறான்.
கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர்
“அப்பல்லோ”என்றும் அழைத்தனர்.இவர்கள் சூரியனுக்கு 105 அடி
உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர்
உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது.
சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை
ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால்
சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள்.
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!!
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டி
சிறப்பாக வழிபட்டனர்

தை பொங்கல்
சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும்.
சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே
மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம்.
ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம்
என்கிறோம்.
நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும்
முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும்
நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.உழவுக்கு உதவி செய்த மாட்டிற்கும் நன்றி
சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடுகிறோம். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு
மாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்
ரத சப்தமி
தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி….. இன்று தான்
சூரியனின் பிறந்த நாள்!!! சூரியன தனது தேரை வடகிழக்காக
திருப்பும்நாள். அன்று ஆண்கள் தலையிலும் பெண்கள் தோளிலும்
எருக்க இலையையும், சிறிது அரிசியையும் வைத்துக் குளிப்பார்கள்
தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள……
ஆடி பெருக்கு
சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் அதாவது தட்சிணாயண
புண்ய காலம் ஆரம்பம் . ஆடி 18 ம் நாள், மழை பெய்து வெள்ளம்
பெருக்கோடும் நாள். பல வித உணவு வகைகளை மக்கள் நதிக் கரையோரம் உண்டு மகிழ்வார்கள்.
“ஆடிப்பட்டம் தேடி விதை” எந்பதற்கேற்ப விவசாயிகள் விதைக்க ஆரம்பிப்பார்கள்.
இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமாக கருதப்படும்.
சூரிய நமஸ்காரம்
மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம்
ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார்.
இதன் விதி முறைகளை குரு மூலமாக அறியவும்.

சூரியனின் பெயர்கள்
நிகண்டு பிரகாரம் 192 பெயர்கள் உள்ளன. இன்றைக்கு வரும் காலை
தினசரிகளின் பெயர்களும் அதில் அடக்கம்.மிக மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும்
இங்கு கூறுகிறேன்.
மித்ரன்,ரவி,சூரியன், பானு,க்கான்,பூஷ்ணன்,ஹிரண்ய கர்ப்பன்,
மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்
சூரியனின் பிறப்பு
தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான்.
இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார்.
சிலகுழந்தைகளையும் பெற்றார். சூரியனின் வெப்பம் தாங்காமல் சஞ்சிகை தன்னைப் போலவே
ஒருத்தியை சிருஷ்டித்து சூரியனிடம் அனுப்பி தவம்செய்ய கிளம்பி மறைந்தாள்.சாயா என்ற
அவள் சில குந்தைகளை பெற்றவுடன் தன் குழந்தைகளையயும், சஞ்சிகை குழந்தைகளையும்
தனியாக கவனிக்கவும் ஆரம்பித்தாள். இந்த விஷயத்தை குழந்தைகள் மூலமாக அறிந்த சூரியன்
மீண்டும் சஞ்சிகையை அழைத்து வந்து வாழ்ந்தான்.

சூரியனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து பூமி உள்ள தூரம் 149.6 மில்லியன்கி.மீ
இந்த தூரமே ஒரு வானியல் தூர அலகு எனப்படுகிறது(astronomical unit)
தன்னைத்தானே சுற்றிக்கொள்ள. மேலாக. 24/25 நாடகள்
மத்தியில். 345/37 நாட்கள்
சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் : 8 நிமிடம் 19 நொடிகள்
சூரியனிடமிருந்து வரும் குறுகிய ஒளிஅலையின் பெயர். INFRARED WAVES (அகச்சிவப்பு கதிர்கள்)
இது நுண்ணுயிர் கொல்லி மருந்தாகவும், விட்டமின் D சத்தாக
உபயோகப்படுகிறது.தசை பிடிப்புக்கு , கள்ள நோட்டு, கள்ள கையெழுத்து கண்டு பிடிக்க,
இரவில் இருட்டில் பார்க்க, சென்சார் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது.
(மாலை நேரம் ஆரஞ்சு/ சிவப்பு நிறமாக வானம்
காணப் படிவதற்கு இதுவே காரணம்)
சூரியனிடமிருந்து வரும் அதிக ஒளி அலையின்
பெயர். ULTRA VIOLET RAYS
தோலின் நிறத்திற்கு காரணமாகிறது. வைட்டமின் “D” நிறைந்தது.
ஆனால் ஆபத்து நிறைந்தது – சரியாக உபயோகப்படுத்தாவிட்டால்.

சூரியன் மஞ்சளாக தெரிவது ஏன்???
உண்மையாகப்பார்த்தால் அண்ட வெளி கருமை நிறம்.
சூரியனானது விண்மீன் வகைப்பட்டியலில் G 2 V வகையைச்
சார்ந்தது. G 2 வகை விண்மீன்களின் பேற்பரப்பு 5500 டிகிரி
வெப்பம் கொண்டதாகவும் வெண்மை நிற ஒளி உடையதாகவும்
உள்ளது.அந்த ஒளியில் உள்ள ஊதா, நீலக்கதிர்களின் ஒளி அலை
நீளம் அதிகமாக இருப்பதால் “ஒளிச் சிதறல்” விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு
மஞ்சளாக தெரிகின்றது.
இந்த ஒளிச்சிதறல் மூலமாகவே வானமும் கடலும் நீல நிறமாக
தெரிகின்றது.இதையே சர்.சிவி. ராமன் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்றார்.
• தொடரும்
Tags- சூரியன், நவ கிரகங்கள், சூரிய நமஸ்காரம்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx