மஹாத்மா என்பவர் யார்? (Post No.9391)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9391

Date uploaded in London – –  17 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷித சுரங்கம்

மஹாத்மா என்பவர் யார்?

ச.நாகராஜன்

மஹாத்மா என்பவர் யார்?

விபதி தைர்யமதாப்யுதயே க்ஷமா சதஸி வாக்படுதா யுதி விக்ரம: |

யஷஸி சாபிருசிவ்யர்ஸனம் ஷ்ருதௌ ப்ரக்ருதிசித்தமிதம் ஹி மஹாத்மனாம் ||

வீழ்ச்சியுற்ற காலத்தில் தைரியம், வளமாக இருக்கும் காலத்தில் எளிமை, யுத்தத்தில் வீரம், புகழ் பெறுவதில் பெரும் ஆசை, சாஸ்திர ஞானத்தில் ஆழ்ந்த பற்று ஆகிய இந்த குணங்களை இயல்பாகக் கொண்டிருப்பவரே மஹாத்மா ஆவர்.

Fortitude in adversity, humbleness in prosperity, eloquence in council, bravery in war, strong desire for fame and warm attachment to Shastric learning, are the natural attributes of noble-minded (great-minded) persons.

(English translation – Kalyana-Kalpataru – December 2015 issue)

*

சண்டை போட்டாலும் நல்லவருடன் மட்டுமே போடு!

சத்திரேவ சஹாசீத் சத்தி: குர்வதி சங்கதிம் |

சத்திவிர்வாதம் மைத்ரீம் ச நாசத்தி: கிஞசிதாசரேத் ||

நல்லவருடனேயே ஒருவர் சேர்ந்து இருக்க வேண்டும். அவருடனேயே அமர்ந்து பேச வேண்டும். நட்போ, சண்டையோ அதுவும் கூட நல்லவருடனேயே இருக்க வேண்டும். கெட்டவருடன் ஒருபோதும் தொடர்பை ஒருவர் கொள்ளக் கூடாது.

One should keep company of virtuous people, Sit and talk with them only. If there is any friendship or even enmity that should only be with virtuous persons. One should have no contact with evil ones.

(English translation – Kalyana-Kalpataru – October 2015 issue)

*

கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை விட பிச்சை எடுப்பது மேல்!

வரம் தாரித்ர்யமன்யாயப்ரபவாத்திபவாதிஹ |

க்ருஷதாபிமதா தேஹே பீனதா ந து ஷோபத: ||

கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை விட பிச்சை எடுப்பது மேல். பெருத்த தொப்பையுடன் இருப்பதை விட ஒல்லியான ஆரோக்கியமான உடலுடன் இருப்பதே மேல்.

It is better to remain poor than getting rich by unfair means. A thin healthy body is preferable to a bulging stomach.

(English translation – Kalyana-Kalpataru – January 2016 issue)

*

புத்திமான்கள் சங்கீத சாஸ்திரம் கற்று வாழ்வர்; மூடர்களோ…!!!

கீதசாஸ்த்ரவிநோதேன காலோ கச்சதி தீமதாம் |

வ்யசனேன து மூர்கானாம் நித்ரயா கலஹேன வா ||

புத்திமான்கள் சங்கீதமும் சாஸ்திரமும் கற்று வாழ்வர். மூடர்களோ தூங்குவதிலும் கலகம் செய்வதிலும் தங்கள் நேரத்தை வீணாக்குவர்.

Intelligent people spend their time in pursuit of music and literature while fools waste their time in sleeping or useless feuds.

(English translation – Kalyana-Kalpataru – February 2016 issue)

*

செல்வம் தானே தேடி வரும்படி இருக்க முயற்சி செய்!

நோதத்வாநர்திதாமேதி சதாம்போபி: ப்ரபூர்யதே |

ஆத்மா து பாத்ரதாம் நேய: பாதமாயாந்தி சம்பத: ||

கடலானது நீருக்காக பிச்சை எடுப்பதில்லை. தானாகவே நதிகள் எப்போதும் நீரைச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றன. அது போலவே தானாகவே செல்வம் வந்து சேரும்படி ஒருவன் வாழ முயற்சிக்க வேண்டும்.

The ocean does not go begging for water and yet is constantly poured with it (by rivers). One should strive to become deserving as riches automatically flow unto a deserving person.

(English translation – Kalyana-Kalpataru – March 2016 issue)

*

–subham—

tags- மஹாத்மா, செல்வம், சங்கீதம்

இல்லத்தில் செல்வம் செழிக்க, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க எளிய வழிகள் -2 (Post.9332)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9332

Date uploaded in London – –  3 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

if u want to listen to his speech, please go to facebook.com/ gnanamayam

தரித்திரமும் கண் திருஷ்டியும் நீங்க !

வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம். 

அளவுக்கு மீறிய கடன்கள், வருமானமின்மை, வரவுக்கு மீறிய செலவு ஆகிய அனைத்திற்கும் வீட்டில் இருக்கும் அழுக்குகளே காரணம். இவை நெகடிவ் எனர்ஜியின் பெட்டகங்கள்.

பழைய பேப்பர்கள், பால் பைகள், கிழிந்த துணிகள் இதர தேவையற்ற குப்பைகள் ஆகியவற்றைச் சேர்த்து பின்னால் வெளியில் விற்பதால் வரும் வருமானம் பத்து ரூபாய் என்றால் அதனால் இழக்கும் பணமோ ஆயிரம் என்பதை நினவில் கொண்டு இவற்றைச் சற்றும் தாமதிக்காமல் அகற்றி விட வேண்டும்.

வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் தினமும் வீட்டு அறைகளை நீரால் மெழுகித் துடைக்கும் போது அந்த நீரில் சிறிது கல் உப்பைச் சேர்த்தல் வேண்டும். (பவுடர் உப்பு அல்ல)

தோஷங்கள் போக, வளம் பெற, ‘ரத்தினக் கற்களை அணிக’ என்பது சரகர் தரும் அறிவுரை. அவரவர் தேவைக்குத் தக உரிய ரத்தினக் கற்களையும் உபரத்தினங்களையும் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும். 

பூக்களும் சங்கும்

மலர்ந்த அழகிய புஷ்பங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. ஒவ்வொரு பூவிற்கும் என்ன சக்தி உள்ளது என்பதை அரவிந்த ஆசிரமம் அன்னை விளக்கியுள்ளார்.

உதிர்ந்த பூக்களை அன்றாடம் அகற்றுதல் வேண்டும். 

உலர்ந்த பூக்களை வாங்கவும், பயன்படுத்தவும் கூடாது. (துளஸி மட்டும் இதற்கு விதி விலக்கு)

வில்வத்தில் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். மாதுளம் பூ, மாதுளம் இலை செல்வத்தை அபரிமிதமாக அள்ளித் தரும். இது வந்தா மூலிகை என்ற பெயரைப் பெறுகிறது.

வலம்புரிச் சங்கு கிடைப்பது அரிது. நல்ல வலம்புரிச் சங்கு கிடைத்தால் அதை வீட்டில் வைக்கலாம். அது செல்வம் சேர்வது உள்ளிட்ட பல நலன்களுக்கான ஒரு அஸ்திவாரம்.

கெமிக்கல் கலந்த கந்தக (சல்பர் கலந்த) ஊதுபத்தியை ஒரு நாளும் வீட்டில் ஏற்றக் கூடாது. இது உடல் நலத்தைப் பாதிக்கும்; சுவாசக் கோளாறுகளை உருவாக்கும். மாறாக இயற்கையான நறுமணம் தரும் நல்ல ஊதுபத்திகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

சுக கந்த மால்ய ஷோபே என்று லட்சுமி தோத்திரத்தில் வருகிறது. இதன் பொருள் நல்ல நறுமணம் வீசும் இடத்தில் வாசம் புரிபவள் என்பது தான். அது இன்றைய நாளில் சுக கந்தக மால்ய ஷோபே என்பது போல ஆகி விட்டது; சல்பர் இருக்கும் இடத்தில் லட்சுமி வாசம் நிச்சயம் இருக்காது.

நல்ல அருமையான சந்தனக் கட்டையின் சிறிய பகுதியேனும் வீட்டின் பூஜையறையில் இருக்கச் செய்தல் வேண்டும்.

எந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பது?

வடக்குப் பக்கம் தலையை வைத்துப் படுக்கக் கூடாது.

தெற்குப் பக்கம் தலை வைத்துப் படுப்பது ஆயுளைக் கூட்டும். வீட்டில் கிழக்கு நோக்கியும் வெளியிடங்களில் மேற்கு நோக்கியும் தலையை வைத்துப் படுப்பது மரபு.

கண்ணாடி தரும் உணவு வளம்

கண்ணாடியை பெட் ரூமிலும் சமையலறையிலும் மாட்டக் கூடாது.

டைனிங் டேபிளின் எதிரே கண்ணாடியை மாட்டுவதன் மூலம் சுவையான உணவும் ஆரோக்கியமும் நிரந்தரமாகக் கிடைக்கும்.

பெட் ரூமில் பெரிய நிலைக் கண்ணாடிகளோ, அல்லது பீரோக்களில் பெரிய கண்ணாடிகளோ இருந்தால் அவை கணவன் – மனைவி உறவில் சச்சரவையும் வாதங்களையும் உண்டாக்கிக் கொண்டே இருக்கும்; அத்துடன் மட்டுமன்றி தூக்கத்திற்கு இடைஞ்சலாகவும் அமையும்.

ஒருவேளை தவிர்க்க முடியாமல் கண்ணாடி இருப்பின் அதை ஒரு சிறிய திரையால் மூடி விடுவது நலம்.

ஃபேஷன் டேஞ்சர்!

திறந்த அலமாரிகள் இன்றைய நவநாகரிகத்தால் வந்த ஃபேஷன் டேஞ்சர்.  புத்தகங்களை இப்படித் திறந்த அலமாரியில் வைத்திருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகவே அலமாரிகளுக்குக் கதவுகள் அவசியம்.

வீட்டைச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பங்களை மறைவான இடத்தில் வைக்க வேண்டும்.

வடகிழக்கில் கழிவறை இருத்தல் கூடாது. அப்படி ஒருவேளை அமைந்திருப்பின் அங்கு கல் உப்பை (காய்ந்திருக்கும் நிலையில்) ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்தல் வேண்டும். உப்பை ஈரம் பட்ட நிலையில் மாற்றி புது உப்பை கிண்ணத்தில் நிரப்பல் வேண்டும். இது தீய சக்திகளை ஓரளவு கட்டுப்படுத்தும்.

இயற்கையை அலட்சியம் செய்யக் கூடாது

‘சீரைத் தேடின் நீரைத் தேடு’ என்பதற்கு இணங்க ஒரு நாளும் வீட்டில் குழாயிலிருந்து நீர் ஒழுகக் கூடாது; கசியக் கூடாது. கசியும் நீர் செல்வம் குறைவதற்கான வழி. இயற்கை தரும் இனிய நீரைக் காத்தல் கடமை.

நீர்வீழ்ச்சி படத்தை வீட்டின் உட்பக்கம் நீர் உள்ளே பாய்ந்து வருவது போல மாட்டுவது செல்வம் அதிகரிக்க வழியாகும்.

தங்கமும் வெள்ளியும்

தங்கமும் வெள்ளியும் சிறிய அளவிலேனும் வீட்டில் இருக்கச் செய்வது தொன்று தொட்டு எல்லாக் குடும்பங்களிலும் இருந்து வரும் ஒரு நல்ல மரபு. (தாலியில் குந்துமணி அளவேனும் தங்கம் இல்லாத பெண்மணி யாரும் இல்லை)

வீட்டின் அந்தஸ்தைக் கூட்டுவது, பண நிலையை ஸ்திரம் செய்யும் பாதுகாப்பு என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க ரஸ ஜல நிதி போன்ற அருமையான நூல்கள் தங்கம் வீட்டில் இருப்பதாலும் தங்க நகைகளை அணிவதாலும் ஏற்படும் அதிசயக்கத் தக்க பலன்களை விளக்குகின்றன.

  1. அமைதியைத் தரும் 2) சுத்தத்தைத் தரும் 3) விஷத்தை முறிக்கும் 4) க்ஷய ரோகத்தைப் போக்கும் 5) பைத்தியத்தை நீக்கும் 6) நினைவாற்றலைக் கூட்டுவதோடு நுண்ணறிவை அதிகரிக்க வைக்கும் 7) ஞாபக சக்தியோடு நினைத்தவுடன் ஒரு விஷயத்தை கணத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லும் திறன் கூடும் 8) ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும் 9) மூன்று தோஷங்களை நீக்கும் – தங்கத்தின் பயன்களாக இவற்றைத் தான் ரஸ ஜல நிதி அறிவிக்கிறது.
  2.  

இதே போல வெள்ளிக்கும் தனிப் பலன்கள் உண்டு. விரிப்பின் பெருகும்.

கடல் அளவில் ஒரு சிறு திவலையே இந்தக் குறிப்புகள்

இப்படி ஏராளமான குறிப்புகளை நமது நூல்கள் தருகின்றன; பாரம்பரியப் பழக்கங்கள் செல்வ வளத்தைத் தந்து மன சாந்தியை உறுதிப் படுத்தி சந்ததி விருத்தியை நல்ல விதத்திலும் செய்து வந்தன. இனியும் செய்து வரும்!

மேலே குறிப்பிட்டவை கடல் அளவு போன்ற குறிப்புகளில் ஒரு சிறு திவலை தான்! 

அனைத்தையும் அறிய தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி அவற்றை பரிசோதனை முறை என்ற அளவிலாவது மேற்கொண்டு கடைப்பிடித்து சொந்த அனுபவத்தால் உணர்ந்து பலன்களைப் பெறலாம்.

இன்னும் ரத்தினக் கற்களின் பயன்பாடு, ஜோதிட சாத்திரத்தை உண்மையான முறையில் பயன்படுத்துவது, எண் கணிதத்தின் மேம்பாடு, மந்திர யந்திரங்களின் மஹிமை, இசை மற்றும் தோத்திரங்களால் துதித்தல், சிவ, விஷ்ணு, தேவி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் தலங்களில் செய்யும் வழிபாடு, புண்ய தீர்த்தங்களில் குளிப்பதன் மேன்மை, மூலிகைகளின் மகிமை, யோகா, ஸ்வரோதய விஞ்ஞானம் எனப்படும் சுவாசத்தின் அடிப்படையிலான சாத்திரம், அற நூல் வழிப்படி நடக்கும் பெரியோரைச் சார்ந்து அவர்களை அணுகி அவர்களின் அறிவுரைப்படி நடப்பது, அன்ன தானம் உள்ளிட்ட அறங்களை மேற்கொண்டு சமுதாயத்திற்கு உதவுவது உள்ளிட்ட ஏராளமான வழிமுறைகள் நமது வாழ்க்கை முறையில் உள்ளன.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; நல்வழியில் பயணம் மேற்கொண்டால் நற்பலன் உண்டு.

முயற்சி திருவினையாக்கும் அல்லவா! முயல்வோம் வெல்வோம்!

***

tags-  செல்வம்,மகிழ்ச்சி, எளிய வழிகள் -2

இல்லத்தில் செல்வம் செழிக்க, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க எளிய வழிகள் -1 (Post. 9328)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9328

Date uploaded in London – –  2 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

if u want to listen to the speech, please go to facebook.com/ gnanamayam

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். இந்த வேக யுகத்தில் சுபிட்சமான வாழ்க்கை சாத்தியமா?

இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ  எளிய வழிகள் ஏதேனும் உள்ளனவா? அனைவரின் மனதிலும் எழும் கேள்விகள் இவையே தான்!

சாத்தியம் தான் என நமது அறநூல்கள் உரத்த குரலில் கூவுகின்றன.

அதற்கான வழிகளை அன்றாட வாழ்க்கை முறையுடனும் வீட்டின் அமைப்பு முறையுடனும் கலந்து அதைக் கடைப்பிடிக்குமாறு அற நூல்கள் முறையாகச் சொல்லி இருக்கின்றன.  மறந்து விட்டோம்; அவ்வளவு தான்!

அதைக் கடைப்பிடிக்க உத்வேகம் கொண்டு, சிறிது நேரம் அதற்கென செலவழித்துக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும்; நல்லதே நடக்கும்.

அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் பாங்க் பாலன்ஸைக் bank balance குறித்து வைத்துக் கொண்டு சில வாரங்கள் கழித்து மீண்டும் உங்கள் பாங்க் பாலன்ஸைச் சரி பார்த்தால் உள்ளம் மலரும்; இல்லம் மகிழ்ச்சியுறும்.

அதே போல மனதிருப்தியை அடையவும் (பார்க்கப் போனால் அது தானே வாழ்வின் இறுதி லட்சியம்) அந்த விதிகள் வழி வகுக்கும்.

இந்த முறைகள் வேத அடிப்படையிலான புராண சாஸ்திரங்கள், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், சீன வாஸ்து முறைகள், உள்ளிட்ட நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. ஒவ்வொன்றையும் விரிப்பின் பெருகுமாதலால் சுருக்கமாகச் செய்ய வேண்டுவன மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வீட்டின் மைய பாகம்

வீட்டின் மைய பாகம் பிரம்ம ஸ்தலம் எனப்படும். இந்தப் பகுதியில் எதையும் வைக்காமல் சுத்தமாக வெற்றிடமாக இருக்கச் செய்ய வேண்டும். இதற்கென சோபாக்கள், நாற்காலிகளைச் சிறிது மாற்றி வைக்க வேண்டுமெனில் அதை உசிதப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

வீட்டின் நுழைவாசல்

வீட்டின் நுழைவாசலை எடுத்துக் கொள்வோம்.

அங்கு வாசலில் முன்னே எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது.

வாயிலை ஒட்டி துடைப்பம், செருப்புகளை வைக்கும் ஸ்டாண்டுகள் இருக்கக் கூடாது.

கண்ணாடியைச் சிலர் நுழைவாயிலுக்கு எதிரே மாட்டுவது வழக்கம். உள்ளே வருகின்ற நல்ல சக்தியைப் பிரதிபலித்து இது வெளியே அனுப்பி விடும். ஆகவே கண்ணாடியை நுழை வாசலுக்கு எதிரே மாட்டக் கூடாது.

வீட்டின் வாயிலைப் பார்த்தவாறு லாஃபிங் புத்தா எனப்படும் புத்தரின் சிலையை வைப்பதன் மூலம் செல்வ வளம் சேரும்.

குபேரனின் திசை வடக்கு

வடக்குத் திசை செல்வத்தின் திசை. அங்கு கல்லா பெட்டியை – காஷ் பாக்ஸை வைத்திருத்தல் நலம். 

வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டே இருந்தால் கடன்கள் தீரும்; செல்வம் சேரும்.

இந்த அமைப்பைச் செய்ய ஆரம்பித்தவுடன் வரு நல்ல அறிகுறியை இனம் காணுதல் முக்கியம். இப்படி ஒரு நல்ல செய்தி அல்லது வருமானம் (24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்குள்) ஏற்படின் நீரில் பூக்களைச் சேர்க்கலாம்; பன்னீரைச் சேர்க்கலாம். பலன்கள் அதிகரிக்கும். இதை அனுபவத்தில் கண்டால் மட்டுமே உண்மையை உணர முடியும்.

பணப்பெட்டியில் (காஷ் பாக்ஸ்) சம்பிரதாயமாக பழைய காலத்தில் திருவிதாங்கூர் அம்மன் காசு, சங்கு பொறித்த காசு, தாமரை பொறித்த காசு, லக்ஷ்மி படம் பொறித்த பழைய கால காசு ஆகியவற்றை வைத்தல் மரபு. பெரியவர்கள் கொடுத்த ஆசீர்வாதப் பணங்களையும் செலவழிக்காமல் சேர்த்து வைப்பது சில குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கம். (குறைந்தபட்சம் ஒரு சில காசுகளையாவது அதிலிருந்து எடுத்து வீட்டில் நிரந்தரமாக வைத்திருப்பர்)

பூஜை அறையும் மங்கலச் சின்னங்களும்

பூஜை அறையில் இஷ்ட தெய்வங்களின் படங்களை முறையாக மாட்டி அதற்கு அன்றாடம் நைவேத்யம் (ஒரு இலை அல்லது சிறிது நீர், அல்லது ஒரு பழம், கல்கண்டு ஏதேனும் ஒன்று பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்பார்கள்) செய்தல் அவசியம்.

மங்கலச் சின்னங்கள் ஏராளம் உள்ளன. ஓம், ஸ்வஸ்திகா உள்ளிட்ட ஏராளமான அடையாளச் சின்னங்கள் ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் விலைக்குள் அழகுறக் கிடைக்கின்றன. நுழை வாயில் கதவிலும் பூஜை அறை உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சின்னங்களை இடம் பெறச் செய்தல் மரபு.

மகிழ்ச்சி தரும் சித்திரக் காட்சிகள்

போர், வன்முறைக் காட்சிகளுடனான படங்கள், வேட்டையாடிய மிருகங்கள் ஆகியவற்றை வீட்டில் தொங்க விடக்கூடாது. இவை சண்டை சச்சரவை வீட்டில் தூண்டி விடும்

மாறாக மகிழ்ச்சியைச் சித்தரிக்கும் அழகிய குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை பிரதானமான இடத்தில் மாட்டி மகிழலாம்.

லவ் பேர்ட்ஸ் LOVE BIRDS போன்றவற்றை பெட் ரூமில் BED ROOM மாட்டுவதன் மூலம் அன்யோன்யமான கணவன் மனைவி உறவு அமையும்.

TO BE CONTINUED………………………………………….

TAGS- செல்வம் ,மகிழ்ச்சி , எளிய வழிகள்

லக்ஷ்மீ – செல்வம் – பற்றி 31 பொன்மொழிகள் (Post No.8974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8974

Date uploaded in London – –27 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்

பண்டிகை நாட்கள் –  டிசம்பர் 16- மார்கழி மாதப் பிறப்பு; 25-வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ்  ; 30-ஆருத்ரா தரிசனம்

அமாவாசை- 14பௌர்ணமி-29ஏகாதஸி-11,25

சுபமுகூர்த்த தினங்கள்—4, 10, 11

Xxx

டிசம்பர் 1 செவ்வாய்க் கிழமை

துணிவுள்ளவனுக்கே செல்வம் சேரும்

சத்வமநுதாவந்தி சம்பதஹ – கதா சரித் சாகரம்

xxxx

டிசம்பர் 2 புதன் கிழமை

நல்ல காலம் வந்துவிட்டால் எல்லா ரத்தினங்களும் , முயற்சி செய்யாமலே கிடைத்து விடும் – ராமாயண மஞ்சரி

விபவே சர்வரத்னானாமயத்னேனைவ  சங்கமஹ

xxxx

டிசம்பர் 3 வியாழக் கிழமை

சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக  அனுபவிக்க வேண்டும் – பஞ்ச தந்திரம் 2-81

சநைஹி சனைஸ் ச போக்த்வயம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்

xxx

டிசம்பர் 4 வெள்ளிக் கிழமை

ஹேமம் போஜன பாஜனம் பவதி சேத் ப்ருச்சயேத் கிம் வ்யஞ்ஜனம்

சாப்பாட்டுத் தட்டே தங்கம் ; அதில் போடப்படும் கறி கூட்டு வகை பற்றி என்ன கேள்வி? – சம்ஸ்க்ருத பழமொழி

xxx

டிசம்பர் 5 சனிக் கிழமை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் -659

பிறரை அழச் செய்து சேர்த்த பொருள் அவரை அழவிட்டு ஓடி விடும்.நல்ல வழியில் வந்த செல்வம் போனாலும்  அது பின்னர் நல்லதையே செய்யும் –

xxx 

டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை

சலத்தால்  பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள் நீர் பெய்திரீ இ  யற்று -குறள் -660

கெட்ட வழியில் பொருள் சேர்த்து காப்பாற்ற எண்ணுவது பச் சை  மட்பாண்டத்தில் தண்ணீரை  சேகரிக்க முயல்வது போன்றதாகும்

xxxx

டிசம்பர் 7 திங்கட் கிழமை

அதிக செல்வம் இருக்குமிடத்தில் தீமையும் இருக்கும் -பாதகாதிதக 56-1

ஸர்வதா நாஸ்த் யபி சா சமைஸ்வர்ய ம்

xxx

டிசம்பர் 8 செவ்வாய்க் கிழமை

யாருடைய செல்வம் நிலையாக நின்றது ?- ராஜ தரங்கிணி

ஸ்திராஹா  கஸ்ய விபுதய

xxxx

டிசம்பர் 9 புதன் கிழமை

சர்வே குணாஹா காஞ்சனம்  ஆச்ரயந்தே – நீதி சதகம்

நல்ல குணங்களே தங்க கட்டிகள் ஆகும்

xxxx

டிசம்பர் 10 வியாழக் கிழமை

ஹரதி தனிநாம் வித்தன்யாஹோ  டாம்பிகாஹா — சுபாஷிதாவலி

ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்

xxxx

டிசம்பர் 11 வெள்ளிக் கிழமை

அந்தி நேரமும் , மின்னலும், செல்வமும் எங்கே எப்போது நிலையாக நின்றது -கதாசரித் சாகரம்

சந்த்யா வித்யுச்ச  லக்ஷ்மிஸ் ச த்ருஷ்டா  குத்ர  கதா ஸ்திரா

xxxxx

டிசம்பர் 12 சனிக் கிழமை

ஒருவருக்குப் பணம் இல்லாவிடினும் அவருடைய செல்வாக்கே பெருஞ் செல்வமாகும் – கஹாவத் ரத்னாகர்

xxxx

டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை

ஒருகாலத்தில் செல்வ ச்  செழிப்புடன் இருந்தவன் பணக்காரனிடத்தில் கைகட்டி நிற்பானா – வால்மீகி  ராமாயணம் 2-8-35

சம்ருத்த்தார்த்தஸ்ய நாஷ்டார்த்தோ ஜிவிஷ்யதி காதம் வஸே

xxxxx

டிசம்பர் 14 திங்கட் கிழமை

செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு- குறள் 752

ஒரு ஆளுக்கு பணம் இருந்தால் எல்லாரும் அவரை இந்திரனே சந்திரனே என்று தலை மேல் வைத்துக் கூத்தாடுவர்.

XXX

டிசம்பர் 15 செவ்வாய்க் கிழமை

பொருள் என்னும் பொய்யா விளக்கு -குறள் 753

பணம் என்பது நந்தா விளக்கு- அணையாத விளக்கு

xxxx

டிசம்பர் 16 புதன் கிழமை MAARKAZI MONTH BEGINS

அறன்  ஈனும் இன்பமும் ஈனும் …… தீதின்றி வந்த பொருள் –குறள் 754

நல்ல வாயில் சம்பாதித்த பணம் இன்பத்தையும் அறத்தின் பயனையும் கொடுக்கும்

xxx

டிசம்பர் 17 வியாழக் கிழமை

அரசனுக்கு கிடைக்கும் செல்வம் – 1.வரிகள், 2.திறை .3.சுங்கம் -குறள் 756

xxxx

டிசம்பர் 18 வெள்ளிக் கிழமை

அன்பு பெற்று எடுத்த குழந்தையின் பெயர் அருள்; அதை வார்ப்பது பணம் என்னும் செவிலித் தாய் ஆவாள் -குறள் 757

xxx

டிசம்பர் 19 சனிக் கிழமை

நிறைய பணம் சம்பாதித்தல் அறமும் இன்பமும் எளிதில் கிடை க்கும் – குறள்  760

xxx

டிசம்பர் 20 ஞாயிற்றுக் கிழமை

கையில் பொருள் இருந்து காரியத்தைத் தொடங்கினால் , மலை மீது ஏறிக்கொண்டு யானைகள் சண்டை இடுவதை பார்ப்பது போல ஜாலியாக இருக்கலாம் – குறள் 758

xxx

டிசம்பர் 21 திங்கட் கிழமை

பொருள் அல்லவரை பொருளாகச் செய்யும் பொருள் – குறள் 751

மதிக்க முடி யாத ஆளையும் மதிக்கவைத்துவிடும் செல்வம்

xxx

டிசம்பர் 22 செவ்வாய்க் கிழமை

துணிவும் திறமையும் உள்ளவரிடத்தில் லக்ஷ்மீ வசிக்கிறாள் – ஹிதோபதேசம் 3-116

நயே  ச சவுர்யம் ச  வசந்தி சம்பதஹ

xxx

டிசம்பர் 23 புதன் கிழமை

அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ நீண்ட  காலம் நீடிக்காது – ஹனுமான் நாடகம்

ந பவந்தி  சிரம் ப்ராயஹ சம்பதோ விபதோபி வா

xxx

டிசம்பர் 24 வியாழக் கிழமை

தனேன வர்த்ததே த்ருஷ்ணா – பாரத மஞ்சரி

பணம் பேராசையை வளர்க்கிறது

xxx

டிசம்பர் 25 வெள்ளிக் கிழமை VAIKUNDA EKADASI

அலிகளிடத்தில் செல்வம் சேராது –பாரத மஞ்சரி

ந க்லீ பாஹா  ஸம்பதாம் பதம்

xxx

டிசம்பர் 26 சனிக் கிழமை

பணம் இருந்தால் குணம் இருப்பது அரிது – பழமொழி

தனவத்சு குணா ந த்ருஷ்யந்தே

xxx

டிசம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை

பணம் பணத்தோடு சேரும் – கஹாவத் ரத்னாகர்

தனாதேவ தனம் பவேத்

xxx

டிசம்பர் 28 திங்கட் கிழமை

அருள், அன்பு ஆகிய இரண்டுடன் வராத செல்வத்தை உடனே நீக்கி விட்டு- குறள் 755

xxx

டிசம்பர் 29 செவ்வாய்க் கிழமை

லக்ஷ்மீ ம்  வினா நாதரஹ – பழமொழி

பணம் இல்லாவிடில் மதிப்பும் இல்லை

xxxx

டிசம்பர் 30 புதன் கிழமை ARUDRA DARISANAM

லக்ஷ்மியை தேடிச் சென்றால் அவள் கிடைக்க மாட்டாள்; அவள்

நம்மை நாடிவந் தால் கிடைப்பாள் – சாகுந்தலம் 3-12

லபேத வா ப்ரார்த்தயிதா ந வா ஸ்ரியம் ஸ் ரியா  துராபஹ கதமீப் சிதோ பவேத் 

xxxx

டிசம்பர் 31 வியாழக் கிழமை

செறுநர் செருக்கறுக்கும்  எ ஃகதனிற்  கூ ரியது இல் – குறள்  759

பொருள் என் பது பகைவரின் செறுக்கை வெட்டி முறிக்கும் வாள் ஆகும் .

xxx

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை ,2021

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

tags- லக்ஷ்மீ , செல்வம் , பொன்மொழிகள், டிசம்பர் 2020