
Post No. 9010
Date uploaded in London – – 8 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
TALK BY KATTUKUTY SRINIVASAN IN FACEBOOK.COM/GNANAMAYAM ON 7-12-2020.
VOICE RECORDING IS AVAILABLE AT GNANAMAYAM AND YOUTUBE.COM/GNANAMAYAM

நவக் கிரகங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவரும், சக்தி வாய்ந்தவரும்,
ஆண்மகனுமான அங்காரகனை வணங்கி ஆரம்பிக்கிறேன்.
செவ்வாய் என்றவுடன் செவ்வாய் தோஷம் என நினைத்து
அலறிப் புடைத்துக்கொண்டு, முகத்தை சுளித்துக் கொண்டு ஓடும்
அன்பர்களுக்கே இந்த விளக்கம் சமர்ப்பணம்……
வீரத்தையும் மங்களத்தையும்,அளிக்கும்செவ்வாயின் நற்குணங்களையும்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கு பரிகாரம் என்ன என்பதன்
விளக்கத்தை தயவுசெய்து
“tamilandvedas“-ஐ நாளை பார்த்து நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
செவ்வாயின் பிறப்பு
உஜ்ஜைனி என்ற நகரத்தில் அந்தகாசுரன் என்ற ஒருவன் சிவனை் நோக்கி தவம் புரிந்து
என் இரத்தம் பூமியில் விழுந்தால், ஒவ்வொரு சொட்டிலிருந்தும், என்னை மாதிரி அசுரர்
தோன்ற வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அன்றிலிருந்து அந்த நாட்டிலிருந்த
முனிவர்களுக்கும், மக்களுக்கும் பிடித்தது பீடை. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல்
சிவனிடம் முறையிட்டனர்.
நானே வந்து அவனை ஹதம் செய்கிறேன் என வாக்களித்தார் சிவபிரான்.
சண்டையிடும்போது அவர் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத்
துளி அந்த அசுரன் உடலிலிருந்து விழுந்த ரத்தத்தை குடிக்க,
அசுரனைக் கொன்றார் சிவன். அந்த வியர்வைத்துளியை அவர் பூமா தேவியிடம்
ஒப்படைத்தார்.
அதுவே குழந்தையாக வளர்ந்தது.
குஜன் எனப் பெயர் பெற்றது.

செவ்வாய் பற்றிய மற்றொரு கதை
பரத்வாஜ முனிவர் நர்மதை ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஆற்றில்
குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகையின் மீது மோகம் கொண்டதால் ஒரு
குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையை அப்படியே விட்டுச் செல்ல, அக்குழந்தையை
பூமா தேவி எடுத்து வளர்த்ததாகவும் ஒருகதை உண்டு.
#
பெயர் காரணம்
கு- என்றால் பூமி. ஜன்- என்றால் புத்திரன். ஆகையினால் குஜன்
எனப் பெயர் பெற்றார்.
சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார் குஜன்.உடல் நெருப்பாக
அனல் பறக்கவே, தவத்தை மெச்சி அவருக்கு நவக்கிரக பதவியை அளித்து
“சகோதரகாரகனாக” விளங்குவாய் என அவர் வரமளித்தார்.
அவர் தவத்தின் மகிமையால் உடல் நெருப்பான காரணத்தால் “அங்காரகன்” எனவும்
பெயர் பெற்றார்.
“அங்கார” என்றால் “தணல்” என அர்த்தம்…..
செவ்வாயின் வேறு பெயர்கள்
செந்தீ வண்ணன்,சேய், குருதி, வக்ரன்,பௌமன்,நில மகன்,அழலோன்,
ஆரல், உதிரோன், மங்களன், உக்கிரன், மகா காயன், அர்த்தன்,
சக்தி தரன்,த னப்ரதன், லோகிதாங்கன்
யுத்தக்கடவுள்!!!
கிரேக்கர்களும், ரோமானியர்களும் இவரை “GOD OF WARS”,
“ARIES” என்றும், மேலும் “விவசாயி” என்றும் கூறுகிறார்கள்.
செவ்வாயின் சிறப்பு
செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்,
ராணுவத்தில் உள்ள பெரிய அதிகாரிகள்
காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரிகள்
முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆவர்.
(சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று குரு கேந்திரத்தில் இருந்தால்
நாட்டை வழி நடத்திச் செல்லும் அசைக்க முடியாத தலைவராவார்.
சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று 6,7,9 க்குடையவர்கள் ஆட்சி
பெற்றிருந்தால், சிறுவயதிலேயே அரசியலில் புகுந்து அசைக்க
முடியாத தலைவராவார்……. இதை படிப்பவர்கள் உங்கள் பேரன் பேத்தி ஜாதகத்தை
உடனே பார்க்கவும் ஒருநாள் உங்கள் படமும்
பேப்பரிலும் T V யிலும் வரலாம்)
Top பொறியியல் (civil, elec, mech, electronics)வல்லுனர்கள்,
கண்டிப்பான நீதிபதிகள்,
முன்னிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள்,
எஸ்டேட் ஓனர்கள், விவசாயிகள்,
ரியல் எஸ்டேடில் முன்னிலை வகிப்பவர்கள்,
அறுவை சிகித்சை நிபுணர்கள்,
கால் நடை பராமரிப்பில் உள்ளவர்கள் (வெட்னரி டாக்டர்கள் உள்பட)
இவர்களின் யார் ஜாதகத்தை எடுத்துப் பர்த்தாலும் செவ்வாய்
மிக நல்ல நிலைமையில் இருப்பது தெரியும்!!!
சசிமங்கள யோகம்
மேலும், சந்திரனுக்கும் இவருக்கும் மிக நட்புண்டு.
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தில்
இருந்தால் அதை “சசி மங்கள யோகம்” எனக் கூறுவார்கள்.
இடம், நிலம், வீடு, உடையவர்களாவர்கள். திருமணத்திற்குப் பிறகு
ராஜ யோகம்!!!
பெண்களுக்கே உண்டான “மாத விடாய்” யை தீர்மானப்பது செவ்வாயும் சந்திரனுமே……
சற்றேனும் மாறியிருந்தால் அதிக
ரத்தப் போக்கு, அல்லது குறைவாகுதல், முன் அல்லது பின் அல்லது விட்டு ஆதல்
எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறார்கள்.
(இதற்கும் பரிகாரம் உண்டு)

குரு மங்கள யோகம்
குருவுக்கும், செவ்வாய்க்கும் கூட மிக பரிச்சயம் உண்டு. இதை
“குரு மங்கள யோகம் “ என்று சொல்லுவார்கள். இந்த யோகம் உடையவர்கள்
பெரிய பெரிய கம்பேனி முதலாளிகள், தொழிற்சாலை அதிபர்கள், பல விதவருமானம்,
பலவித தொழில்கள் உடையவராய் இருப்பார்கள்.
செவ்வாயின் தாக்கம் சற்று குறைந்தால், கசாப்பு கடையில்,
Non veg hotelலில், தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தில்
வேலை செய்வார்கள்.
மிக நீசமாகி கெட்ட இடத்தில் இருந்தால், வெட்டு ,குத்து,
திருட்டு, கொள்ளை, ரௌடித்தனம்,கொலை குற்றங்களிலில்
ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் ஆவார்கள்.
TO BE CONTINUED………….
TAGS- செவ்வாய், அங்காரகன், MARS
You must be logged in to post a comment.