சோமபான ரஹசியங்கள் (Post No.3962)

Research Article Written by London Swaminathan

 

Date: 1 June 2017

 

Time uploaded in London- 22-10

 

Post No. 3962

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சோம லதா என்று அழைக்கப்படும் அதிசயமான அற்புதமான குளிகை பற்றி ரிக் வேதம், யஜூர் வேதம்,அதர்வண வேதம் ஆகிய மூன்றிலும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. மூன்று ஆங்கிலக் கட்டுரைகளில் நிறைய விஷயங்களைத் தந்துள்ளேன். இங்கே சுருக்கமாக சில விஷயங்களைத் தருவன்.

 

சோம பானம் என்பது ஒரு போதை தரும் பானம் என்றும் இது ஒரு வகைக் காளான் அல்லது கள்ளிச்செடி போன்ற தோற்றமுள்ள ஒரு செடி என்றும் அந்தக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் புத்தகம் எழுதினர்.

 

நம்ம ஊர்க்கார்களுக்கு ஆட்சியில் இருக்கும் வெள்ளைகளை எதிர்க்கும் துணிவும் இல்லை; ஆங்கிலத்தில் எழுதும் அறிவும் இல்லை; மூன்று வேதங்களை ஆராய்ச்சி கோணத்தில் படித்தவர்களும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதும் வல்லமை படைத்தவர்களோ ஜால்ரா கேஸுகள்!

நல்ல சிந்தனை படைத்தவர்களுக்கு மனதில் சில கேள்விகள் எழும்.

1.உண்மையில் வெள்ளையன் சொன்னது போல போதை தரும் தாவரமானால் அதை ஆப்கனிஸ்தான் முஸ்லீம்கள் கஞ்சா பயிரிட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கில் (நூறு கோடி) சம்பாதிப்பது போல அவர்களும் சம்பாதித்திருப்பர். முதலில் பேடன்ட் (Patent) வாங்கி இருப்பர்.

அவர்கள் அப்படிச் செய்யாததிலிருந்தே இந்தத் தாவரம் என்ன என்று தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. இன்று தெரிந்தால் கூட அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம்.

 

2.மாதா என்பது மதர் (mother) என்றும் பிராதா என்பது பிரதர் (brother) என்றும் ஹோரா என்பது ஹவர் (hour) என்பதும் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆரியர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்று வில்லியம் ஜோன்ஸ் (William Jones) முதலியோர் சொன்னவுடன் எல்லா அரை வேக்காடுகளும் ஆமாம் என்றன. ஆனால் வேதத்தில் கூறப்படும் நூற்றுக் கணக்கான வழக்கங்களும் சொற்களும் ஏன் ஐ ரோப்பாவில் இல்லை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழித்து அரைகுறை பதில்களை வெள்ளையர் தந்தனர்

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் செய்த அஸ்வமேத யாகமோ, பெஉநற்கிள்ளி செய்த ராஜசூய யாகமோ, கரிகாற் சோழன் செய்த பருந்துவடிவ யாக குண்டமோ புற நானூற்றில் கூட இருக்கிறதே ஏன் வெளி நாட்டில் இல்லை. ஜாதி முறை பற்றி சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறதே இது ஏன் வெளிநாட்டில் இல்லை, சுயம்வரம் என்பது ராமயண மஹாபாரதம் ஆகியவற்றில்  கூட இருக்கிறதே, ஏன் வெளி நாட்டில் இல்லை என்று நம்மவர்.கேட்கவில்லை. உண்மையில் வேத கால இந்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று காலாசாரத்தைப் பரப்பினர், அவர்கள் வெளி நாட்டிலிருந்து வரவில்லை என்பதே உண்மை

 

3.இரானில் சொராஸ்தர்  (Zoroaster) கூட அவர்களது வேதப் புத்தகத்தில் (Zend Avesta) சோம லதையைப் புகழ்ந்து பேசியுள்ளாரே, அதில் அவர் 4 முக்கிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரே. கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை பல்லாயிரக் கணக்கான சதுர மைல் பரப்பில் மூவாயிரமாண்டுகளுக்கும் மேலாக சோம லதை இருக்கிறதே! ஏன் ஐரோப்பாவில் ஒரு வரி கூட இல்லை? ஆரியர்கள் அங்கிருந்து அல்லது மத்திய ஆசியவிலிருந்து வந்தால் அங்கும் இது பற்றிப் பேச்சு இருக்குமே? மேலும் சோம ரசம் ஆயுளைக் கூட்டும், குழந்தை பெற உதவும், சக்தியைக் கூட்டும், நோய்களை விரட்டும் என்று சொராஸ்தர் சொல்கிறாரே. மூன்று வேதங்களும் இதைச் செப்புகின்றனவே. இது போதை மருந்தாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பரா?

 

4.ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோமபானம் புகழ் பாடுகிறதே. இதை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சரிப்பு மாறாமல் பாடி வருகின்றனரே. உலகில் எவனாவது இப்படி போதை மருந்து புகழ்ந்து பாடுவானா அப்படி போதை மருந்தைப் றா போற்றி இருந்தால் அந்த இனமே அடியோடு அழிந்திருக்குமே.ஆனால் வேத கால இந்து மதமோ சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, கிரேக்க நாகரீகங்களை மியூசியத்துக்கு அனுப்பிவிட்டு இன்றும் உயிர்த்துடி ப்புடன் இருக்கிறதே இது எப்படி முடியும்?

5.சோம யாகம்செய்ததால் மனோசுத்தம் ஏற்பட்டதாகத் தமிழ் கல்வெட்டு கூ றுகிறதே. எங்கள் லண்டன் மாநகரில் டிரக் DRUG – போதைப் பொருள் விஷயத்தால் வாரத்துக்கு ஒரு கொலை நடக்கிறதே; உலகம் முழுதும் போதைப் பொருள் சாப்பிட்டவர்கள்

ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வர் என்பதை மெக்ஸிகோ, பிரேஸில், லண்டன் வன்செயல்கள் காட்டுகின்றனவே. ஆனால் வேதத்திலோ இதிஹாசத்திலோ இப்படி போதை தொடர்பான வன்முறைகளும் இல்லை; மேலும் பாராட்டுரைகள் அல்லவா இருக்கின்றன?

 

  1. சோமயாகம் பற்றிய வியப்பான விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காமல் வெளி நாட்டினர் திணறி, தத்துப் பித்து என்று உளறுகின்றனரே. 12 ஆண்டுகளுக்கு சோம யாகம் நடந்ததாக யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதை சொல்கிரதே; அதே வேதம் ஆயிரம் ஆண்டும் சோம யாஹம் பற்றிப் பேசுகிறதே; உலகில் எவனாவது யாக குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு 12 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுவரை போதை மருது சாப்பிட்டானா? ஆகவே இதுவும் சோம லதை என்பது ஒரு அரிய குளிகை, போதை மருந்து அல்ல என்பதைக் காட்டுகிறது அல்லவா?
  2. சோமலதையைக் கழுகு கொண்டு வந்ததாகச் சொல்கிறதே. இதற்கு விளக்கம் சொல்ல முடியாமல் உளறுகின்றனரே. ஏன்?

  1. சோமலதை என்பதை விலைக்கு வாங்கும் சடங்கு விநோதமாக இருக்கிறதே. அதாவது சோமலதையை மலையில் இருந்து எடுத்து வருபவனுக்கு ஒரு கன்றுக்குட்டியைக் கொடுத்துவிட்டு அதை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும் மந்திரம் உள்ளதே. எந்த வியாபாரியாவது ஒரு முறை இப்படி அடிபட்டவுடன் மீண்டும் அதே ஆளுக்கு சோமலதை விற்பா னா?. அவன் தனது சஹ வியாபாரிகளிடமும் சொல்லி சோம லதையை விற்காமல் அல்லவா செய்திருப்பான். இந்த வழக்கமும் வேத மந்திரம் மறை பொருளாகச் சொல்ல வந்ததது வேறு என்பது தெரியாமல் உளறுகின்றீரே. உலகில் இப்படி யாராவது போதைப் பொருள் விற்பனை செய்தது உண்டா?

9.சோமலதையை ‘அரசன்’ என்றும் ‘விருந்தாளி’ என்றும் வேத மந்திரம் சொல்கிறதே; விலைக்கு வாங்கிய சோம லதையை ஒரு வண்டியில் வைத்து அதை ராஜ உபசாரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வேத மந்திரங்கள் உள்ளதே. உலகில் எவனாவது போதை மருந்தையோ, கஞ்சா, அபினியையோ இப்படி ஊர்வலம் விட்டு ராஜ உபசாரம் செய்தானா? அப்படிச் செய்திருந்தால் முதலில் அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களே அவர்களை ஓட ஓட விரட்டி இருப்பார்களே.

  1. சோம யாகம் செய்தோர் சோமரசத்தை மந்திரம் சொல்லிப் பிழிந்தெடுத்து யாகத் தீயில் கடவுளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டுக் குடித்ததாக தம் சொல்கிறதே. எவனாவது போதை பொருளைத் தீயில் போட்டு “வீண்” அடிப்பானா? உண்மையில் போதைப் பொருளானால் அவர்களுக்குள் அடிதடி அல்லவா ஏற்பட்டிருக்கும்? மேலும் ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை யாகத்தில் பயன்படுத்தினரே. இதெல்லாம் இது போதைப் பொருள் அல்ல; ஒரு அபூர்வ குளிகை என்பதைக் காட்டவில்லையா?

சமீப காலம் வரை சோம யாகம் நடந்தது. ஆனால் உண்மையில் சோமலதைக் கிடக்கததால் மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டது. அந்த மாற்றுப் பொருள் கூட போதை மருத்து இல்லையே.

 

அப்படியானால் உண்மை என்ன?

வேத கால இந்துக்கள் ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the soil). அதனால்தான் வேத கலாசாரம் பரவிய ஈரான் வரை இது பரவியது.

 

மேலும் சோமபானம் சக்தி, ஆயுள், இன விருத்தி, நோய் நீக்கம் ஆகியவற்றைத் தந்த அபூர்வ குளிகையாகும்

இது மூஜாவத் என்ற மலையில் இருந்து கிடைத்தது.

நீண்டகாலத்துக்கு முன்னரே இது அழிந்துவிட்டது. வேதகாலத்திலும் கூட இதைக் கஷ்டப்பட்டே பெற்றனர்.

 

என்றாவது ஒரு நாள் சோம லதையைக் கண்டுபிடிப்போம்; அது வரை ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தைப் பாடி வருவோம்!

 

Confusion about Vedic Soma Plant | Tamil and Vedas

https://tamilandvedas.com/2013/05/05/confusion-about-vedic-soma-plant/

5 May 2013 – Confusion about Vedic Soma Plant Soma was the famous plant used by the Vedic priests to make juice for the fire sacrifice. The whole of Ninth …

 

Madurai Temple Tunnel and Soma Plant of Vedas … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/madurai-temple-tunnel-and-soma-pla…

23 Apr 2017 – Madurai Temple Tunnel and Soma Plant of Vedas (Post No. 3844) … Soma Plant. I read your “Confusion about Vedic Soma Plant” article.

 

MYSTERY AND MIRACLE OF SOMA PLANT, SOMA RASA! (Post No …

https://tamilandvedas.com/…/mystery-and-miracle-of-soma-plant-soma-rasa-post-no-3…

1 day ago – Anjaneya appears in Sacrificial Fire Research Article Written by London Swaminathan Date: 31 May 2017 Time uploaded in London- 18-13 …

 

–SUBHAM–