சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,100

Date uploaded in London – 16 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1

ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப்  பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.

வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ்  பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது  காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண்  குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.

ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97  துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .

அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .

ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.

அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி  மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.

சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம்  என்பது பெரும்பாலோரின் கருத்து.

இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.

இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும்  கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !

போதை ஊட்டும் பொருளானால்  அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில்  குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.

.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-

சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள்  பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும்  என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள்  காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட்  பாயிண்டுகளில் தருகிறேன்.

ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை

பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்

சோமன், பிழியப்பட்டவுடன் முழக்கத்துடன் செல்கிறான். ரஸத்தை தேவர்களிடம் சேர்க்கிறான்

நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;

நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.

கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .

புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்

புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்

சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்

வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.

பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக

இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்

(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம்  ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும்  இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)

சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்

பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்

சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.

கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.

பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்

ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.

இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்

இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.

பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்

அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்

பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.

அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது

சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;

ஒளி நிற ஆடை அணிந்த  சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.

நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி  செய்

அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .

(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)

TO BE CONTINUED…………………………

XXX subham xxxx

tags – சோம ரசம் , அபூர்வ தகவல்கள்,  RV 9-97, மூலிகை.,பருந்து, கழுகு 

சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Post. 9987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9987

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY  அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.

பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.

முதல் உலகப்  போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே  அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும்  நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய  ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ  குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும்  உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி  நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும்  அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.

தீவு என்ற அவருடைய கடைசி  நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.

பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை  எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத்  தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.

பிறந்த தேதி – ஜூலை 26, 1894

இறந்த தேதி – நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் – 69

ஹக்ஸ்லி எழுதிய நூல்கள்:-

1921 – CHROME YELLOW

1923- ANTIC HAY

1928 – POINT COUNTER POINT

1932- BRAVE NEW WORLD

1936 – EYELESS IN GAZA

1939 – AFTER MANY A SUMMER

1944 – TIME MUST HAAVE A STOP

1948 – APE AND ESSENCE

1958 – BRAVE NEW WORLD REVISITED

1962- ISLAND.

–SUBHAM —

TAGS- சோம ரசம் , நாவல் ,ஆங்கில ,ஆசிரியர்,  ஆல்டஸ் ஹக்ஸ்லி, ALDOUS HUXLEY