
Written by London Swaminathan
Date: 20 June 2017
Time uploaded in London- 17-14
Post No. 4018
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
இந்துக்கள் இழந்த சொத்துகள், பொக்கிஷங்கள் ஏராளம்.
அக்ஷய பாத்திரம் போச்சு;
அமுத சுரபியும் போச்சு;
சங்கப் பலகையைக் காணோம்;
கோஹினூர் பிரிட்டனுக்குப் போச்சு;
மயிலாசனம் ஈரானுக்கு போச்சு;
கொலைகார சியமந்தக மணி அமெரீக்காவுக்குப் போச்சு;
உலவாக் கிழியைக் காணோம்.
இதை எல்லாம் விட அரிய, பெரிய பொக்கிஷம் சோம லதை என்பட்டும் அரிய அதிசய மூலிகை.
இந்துக்கள் மனது வைத்தால் இப்பொழுதும் அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.
இதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது இந்துக்களின் கடமை. ஏனெனில் இந்த மூலிகைக்கு அபூர்வ சக்தி உண்டு. இதைப் பற்றிய ரிக் வேதப் பாடல்களின் முக்கிய அம்சங்களை மட்டும் சொல்கிறேன்.
உலகின் பழமையான நூல் ரிக் வேதம்; சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்த நூல் 6000 ஆண்டுகளுக்கு (கி.மு.4500) முந்தையது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களின் நிலையை வைத்து புத்தகம் வெளியிட்டுள்ளனர். விட்னி (Whitney) போன்ற அறிஞர்கள் கி.மு 2000 க்கு முந்தையது என்பர். மாக்ஸ்முல்லர் இந்த வேதத்தை கி.மு.1200-க்கும், கி.மு 3000 க்கும் இடையே வைப்பர். எப்படியாகிலும் எகிப்திலோ, பாபிலோனியாவிலோ, சீனாவிலோ இதையும் விட பழைய புத்தகம் இல்லை. கிரேக்கத்தில் கி.மு 800 முதல் ஹோமர் முதலானோர் எழுதிய நூல்கள் உண்டு. லத்தீனிலும் தமிழிலும் கி.மு. 200 முதல் நூல்கள் உண்டு.

இவ்வளவு பழமையான ரிக்வேதத்தில் ஒரு மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.
சோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். காரணம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை.
ஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது
சோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.
இதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.

வேதம் சொல்வதாவது
- சோம பானம் ஆயுளைக் கூட்டும்
2.மனதைச் சுத்தப்படுத்தும்
3.உற்சாகத்தைத் தரும்
4.இது ஒரு தெய்வீக மூலிகை
- இதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்
- இது முஜாவத் பர்வதத்தில் விளையும்
சோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்
உலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.
((சோம பானமும் சுரா பானமும் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/சோம-பானமும்-சுரா…
10 May 2013 – குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் …))
தேனுக்கும் மது என்று பெயர்; மது பானத்துக்கும் மது என்று பெயர்; ஆயினும் இந்தச் சொற்கள் சம்ஸ்கிருத அறிஞர்களையோ தமிழ் அறிஞர்களையோ குழப்பாது.

“மது நமக்கு, மது நமக்கு
மதுரம் மிக்க தமிழ் நமக்கு”– என்று பாரதியார் பாடிக் கூத்தாடுவார்
வெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.
சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும் நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.
7.சோம லதை களைப்பை நீக்கும்
8.மனத் தொய்வை நீக்கும்
9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்
இதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்
மந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்
இதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.
10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:
“எல்லா சக்திகளும் அவனுடையதே
நிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்
நோயாளிகளைக் குணப்படுத்துவான்
கண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்
ஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்
தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”
11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”
பிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.
லண்டனிலும் நியூயார்க்கிலும் ரோடுகளில் புரளும் போதை அடிமைகளும், பெரிய பணக்கார நடிகர் நடிகையர், பாடகர்கள் ஆகீயோரும் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில் வாயில் நுரைகக்கி இறக்கும் செய்திகளை நாம் வாரம் தோறும் படிக்கிறோம். வேதத்திலோ, வேறு எந்த இந்து மத நூல்களிலோ இப்படி ஒரு இழிவுதரும் பரிதாபக் காட்சி இல்லை. ஆக வெள்ளையர்கள் சொல்லுவது வெள்ளைப் பொய் என்பதும் நமக்கு விளங்குகிறது.
சோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன.

பிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன்னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.
இதெல்லாம் அடையா பூர்வ கதைகள்
சோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.
இப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.
எங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.
சங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.
இந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்.
–Subham–