ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ (Post No.7656)

 

 

WRITTEN BY S Nagarajan

Post No.7656

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog.

 

 

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள்
– 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய
நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ

 

ச.நாகராஜன்

3. சௌந்தர்ய லஹரீ

 

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக்
கொண்ட நூல் சௌந்தர்ய லஹரீ.

இதைப் பற்றி மிக விரிவாக காஞ்சி
காமகோடி பரமாசார்யாள் தனது உரைகளில் எடுத்துரைத்துள்ளார். நூலின் ரஹஸ்ய அர்த்தங்களைத்
தெரிந்து கொள்ளவும், பெருமையைப் புரிந்து கொள்ளவும் அதைப் படிக்க வேண்டியது மிக அவசியம்.

 

 

அவரது உரையின் ஒரு சிறிய பகுதி
இங்கு (நூல் பற்றிய அறிமுகத்திற்காக)

தரப்படுகிறது:

“ஜகன்மாதாவாக இருக்கிற
அம்பாளைப்பற்றி அநேக
மகான்கள், கவிகள்,
ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஸ்தோத்திர
கிரந்தங்களுக்குள் மூன்று
மிகவும் சிரோஷ்டமானவை.
முதலாவதுஸெளந்தரிய
லஹரீ.
(
இரண்டாவது மூகர் அருளிய மூக பஞ்ச சதி; மூன்றாவது துர்வாஸர்
அருளிய ஆர்யா த்வி சதி
)

 

 

ஸ்ரீ சங்கரர் பகவத்பாதர்கள்
கைலாசத்துக்கு போன
போது சாக்ஷாத்
பரமேசுவரன் தாமே,
அம்பிகையைப் பற்றி
செய்திருந்த சௌந்தர்ய
லஹரீ சுவடிக்கட்டை
நம் ஆசாரியாளுக்குக்
கொடுத்து அநுக்கிரஹித்தார்.
அதில் மொத்தம்
நூறு சுலோகங்கள்
இருந்தன. ஆசாரியாள்
கைலாஸத்திலிருந்து திரும்பி
வரும்போது, வாசலில்
காவலிருந்த நந்திகேசுவரர்,
மகா பெரிய
சொத்து கைலாஸத்திலிருந்து
போகிறதே என்று
நினைத்து, ஆசாரியாள்
கொண்டு வந்த
சுவடியிலிருந்து தம்
கைக்குக் கிடைத்ததை
அப்படியே உருவிக்
கொண்டுவிட்டார். முதல்
41
ஸ்லோகங்கள் மட்டுமே
ஆசாரியாள் கையில்
நின்றன. பாக்கி
59
சுலோகங்கள் நந்திகேசுவரர்
கைக்குப் போய்விட்டன.
அப்புறம் ஆசாரியாள்
தாமே அந்த
59
சுலோகங்களையும் கடல்
மடை திறந்த
மாதிரிப் பாடிப்
பூர்த்தி செய்துவிட்டார்.
இவ்விதத்தில்தான் இப்போது
நூறு சுலோகங்களோடு
உள்ளஸெளந்தரிய
லஹரீ
உருவாயிற்று.

சௌந்தர்யம் என்றால் அழகு; லஹரீ என்றால் அலை.

 

அழகு அலை!

சௌந்தர்ய லஹரீ சிறந்த மந்திர சாஸ்திர நூலாக
உலகெங்கும் போற்றப்படுகிறது.

லிங்க புராணத்தில் விநாயகர் வாழ்த்தில்  மகாமேரு மலையில் விநாயகரால் இது எழுதப்பட்டதென்று
கூறப்பட்டுள்ளது.

நூலுக்கு அருமையான உரை ஒன்றை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதியுள்ளார்.
இது
ஸ்ரீ ராமகிருஷ்ண
மடம், சென்னை – 4 வெளியீடாக வந்துள்ளது.

 

 

 

ஸர்வ ஸித்தியை விளக்கும் – ஸ்தோத்ர மஹிமை
ஸ்லோகமான – 22ஆம் ஸ்லோகம் இது:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி
ய: |

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித
பதாம் ||

 

பதவுரை : –

பவானி – பவன் எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய
பத்தினியே

த்வம் – நீ

தாஸே மயி – அடிமையாகிய என்னிடத்தில்

ஸகருணாம் – கருணையுடன் கூடின

த்ருஷ்டிம் – பார்வையை

விதர – செலுத்தியருள்வாயாக

இதி – என்று

ய; – எவனாவது ஒருவன்

ஸ்தோதும் – துதி செய்ய

வாஞ்ச்சன் – விரும்பி

‘பவானி த்வம்
– ‘பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை

கதயதி – சொன்னால்

ததைவ – அப்போதே

த்வம் – நீ

தஸ்மை – அவனுக்கு

முகுந்த-ப்ரஹ்ம- இந்த்ர -ஸ்புட- முகுட- நீராஜித
பதாம்  – விஷ்ணு, பிரம்மா, இந்திரன், ஆகியவர்களின்
கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய

நிஜ – ஸாயுஜ்ய பதவீம் – உனது ஸாயுஜ்ய பதவியை

திசஸி – அளிக்கிறாய்

(பதவுரை – அண்ணா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நூல்)

 

நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தத்தை
எடுத்துக் கூறுதல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல்
ஆகிய ஆறு ஸ்தோத்திர லக்ஷணங்களைக் கொண்ட சௌந்தர்ய லஹரீ ஆதி சங்கரரின் அற்புதமான நூலாகும்.

 

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு பிரத்யேக பலன்
உண்டு என்பதை மந்த்ர சாஸ்திர விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

லிப்கோவின் ஸ்ரீ சௌந்தர்ய லஹரீ என்னும் நூல் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான
பயனை விளக்குகிறது இப்படி:

முதல் ஸ்லோகத்திலிருந்து நாற்பத்தி ஒன்றாம்
ஸ்லோகம் முடிய வரிசைப்படி பலன்கள்:

 

 

எல்லா நன்மைகளும் பெற, ஜடப்பொருளால் தடை நீங்க,
வேதப் பொருள் விளங்க, வியாதிகள் நீங்க, அனைவரையும் வசீகரிக்க, தம்பதிகளுக்குள் ப்ரேமை
ஏற்பட, சத்ருக்களை வெற்றி கொள்ள,  சம்சார பந்தம்
நீங்க, பஞ்ச பூதங்கள் ஸ்வாதீனமாக, சரீர சுத்தியுண்டாக, மலடு நீங்க, கவிதை உண்டாக, ஸ்திரீ
வஸ்யம் உண்டாக, துர்பிக்ஷம் நீங்க, கவிதை புனையும் வல்லமை ஏற்பட, சபையோரை மகிழ்விக்க,
சகல கலைகளிலும் வல்லமை பெற, ஸ்திரீ வஸ்யம் உண்டாக, ஸ்திரீ மோஹனத்திற்காக,  விஷ பயம் நீங்க, மக்களிடம் மரியாதை பெற, இக லோக
சுகம் பெற, வியாதி கடன் தொல்லை நீங்க, பேய், பூதத் தொல்லை நீங்க, உயர் பதவி கிடைக்க,
பகைமை நீங்க, ஆத்ம ஞானம் உண்டாக, அபம்ருத்யு பயம் நீங்க, முரட்டுத் தனம் நீங்க, எண்வகை
சித்தி பெற, ராஜ வஸ்யம் பெற, தங்கம் செய்யும் வழியை அறிய, செல்வம் செழிக்க, சந்தேகம்
நீங்க, மார்பு நோய் நீங்க, பயங்கர ரோகங்கள் நீங்க, பிசாசு, பீடை நீங்க, குழந்தைகளின்
நோய்கள் நீங்க, துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) நீங்க, வருங்காலம் உணர,  வயிற்று வலி நீங்க.

 

இன்னும் 42 முதல் 100 முடிய உள்ள ஸ்லோகங்களுக்கும்
இதே போல பலன்கள் தனித்தனியே உண்டு. இவற்றை புத்தகத்தில் காணலாம்.

ஸ்லோகங்களை குரு மூலமாக உபதேசம் பெறுதல் சிறப்பாகும்.

சௌந்தர்ய லஹரீ கூறும் மந்திர, யந்திர மகிமைகளை
வல்லார் மூலம் அறியலாம்.

எல்லையற்ற தேவியின் மஹிமையை உணர ஒரு அற்புத
நூல் சௌந்தர்ய லஹரீ!

****