ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

gold  ganesh

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-13 am

 

This is an interview given by my brother S NAGARAJAN who contributes regularly to our blogs.

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

.நாகராஜன்அறிமுகம்

 

திரு.நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தையார் திரு வெ.சந்தானம் சுதந்திரப் போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்.மணிக்கொடி திரு பி.எஸ்.ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். சிறந்த பத்திரிக்கையாளராக விளங்கிய இவர் மதுரை தினமணிப் பதிப்பின் பொறுப்பாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்.

 

தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்த திரு ச.நாகராஜன் இது வரை சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், மதிப்புரைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

விண்வெளி சாதனைகள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகள்,ஜோதிடம், வானியல்,வரலாறு, இலக்கியம்,சுற்றுலா இடங்கள்,புலன் கடந்த உணர்வியல்,கடல் வளம், மிருக இயல்,இசை, மந்திரம்,யந்திரம், சாதனையாளர்கள், உடல் ஆரோக்கியம், யோகா, வாஸ்து,ஹாலிவுட் சினிமா, தமிழ் திரை இசைப்  பாடல்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

 

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது நாடகப் படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன.ரேடியோ உரைகளும் மதுரை மற்றும் சென்னை வானொலி மூலமாக ஒலிபரப்பாகி உள்ளன.200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு உரைகளை சென்னை வானொலிக்காக இவர் படைத்துள்ளார்.ரெயின்போ வானொலிக்காக இல்லத்திலிருந்தே இணைப்பைப் பெற்று வானியலில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் அவை பற்றிய செய்திகளைத் தந்ததோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

 

இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜயா டி.வியில் சுமார் 50 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். திருப்பாவைக்கு 30 நாட்கள் விஞ்ஞான ரீதியில் இவர் அளித்த விளக்கங்கள் நேயர்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தன.ஜயா தொலைக்காட்சி இவரை காலைமலர் நிகழ்ச்சியில் பேட்டி கண்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

 

வின் டி.வியில் நேரடி ஒளிபரப்பில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் பற்றி அறிவியல் ரீதியாகக் கருத்துக்களை அளித்துள்ளார்.வசந்த் தொலைக்காட்சியில் ஹிக்ஸ்போஸன் பற்றிய அறிவியல் விளக்கம் தந்துள்ளார்.

 

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் உள்ளிட்ட புதிய உத்திகள் பற்றி உரைகள் ஆற்றியும், பயிற்சி முகாம் நடத்தியும் வந்துள்ளார். பல பொறியியல், கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்காக இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் அவர்களை மேம்பட வழி வகுத்தவை.

 

வாகன கட்டுமானத் துறையில் தென்னகத்தின் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியுள்ளார்.

 

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

 

இவரது படைப்புகள் தினமணி, தினமணி கதிர், தினபூமி, ஆனந்தவிகடன், பாக்யா,கலைமகள், மஞ்சரி, மங்கையர் மலர்,கோகுலம் கதிர், இதயம் பேசுகிறது, ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை,ஜெம்மாலஜியும் ஜோதிடமும், ஆதிபிரான், ஹெல்த்கேர், குவைத் தமிழ் அமுதம்,THE HINDU உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.

 

இவரது அறிவியல் தொடரானவிண்வெளியில் மனித சாதனைகள்’  மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது. இந்தியப் பத்திரிக்கைகளிலேயே விண்வெளி சாதனைகளைப் பற்றிய மிக நீண்ட தொடர் இவருடையதே என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

இவரதுமாயாலோகம்தொடர் 78 வாரங்கள் பாக்யாவில் தொடர்ந்து வெளி வந்தது. தற்போது அறிவியல் துளிகள் 210 வாரங்களைக் கடந்து பாக்யா இதழில் தொடர்கிறது.

இவரது படைப்புகள் வாரந்தோறும் http://www.nilacharal.com மின் இதழில் வெளிவருகிறது.

இவரது சகோதரர் திரு ச.சுவாமிநாதனின் swamiindology.blogspot.com மற்றும் tamilandvedas.blogspot.com ஆகிய தளங்களில் இவர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

 s nagarajan

Picture of S Nagarajan

இதுவரை இவர் படைப்புகளானவெற்றிக்கலை, அறிவியல் வியக்கும் ஆன்மீகம், நவகிரகங்கள்,அதிரடிமன்னன் ஜாக்கிசான்.அறிவுக்கும் அப்பால், பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும், அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயிபாபா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலம் அறிவோமா, விந்தை மனிதர்கள், சிறுவர்க்கான புராணக் கதைகள், உலகின் அதிசய இடங்கள், நாகநங்கை (சரித்திர நாவல்), விஜயதீபம் (சரித்திர நாவல்), வியப்பூட்டும் விஞ்ஞான புதுமைகள் 100, அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள், பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும், திறன் கூட்டும் தியானம் விண்வெளியில் மனித சாதனைகள், விலங்கியல் உலகம், ஆஹா! அப்படியா (விஞ்ஞான கேள்வி பதில்கள்), ஆன்மீக ரகசியங்கள் உள்ளிட்ட 23 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

 

இவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள் உலகின் தலை சிறந்த வலைத்தளமான http://www.ezinearticles.com-இல் வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளை 100184 வாசகர்கள் படித்துப் பயன்பெற்றுள்ளனர், இந்தக் கட்டுரைகளை பல நாடுகளிலும் உள்ள 1614 மின்னனு பத்திரிக்கைகள் விரும்பி மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரது ஆங்கிலப் புத்தகமான Breakthrough to Success என்ற வாழ்வியல் நூலை லண்டனிலிருந்து நிலா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நிலா பப்ளிஷர்ஸ் இவரது 52 தமிழ் நூல்களை மின்னணு நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சுமார் 10000க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச் சொற்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இவரது மொழியாக்கத் தமிழ்ச் சேவையை விரும்பிப் பெறுகின்றன.

இவர் பெற்ற பாராட்டுரைகளில் சில:

 

இயக்குநர் திரு கே.பாக்யராஜ்

வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூலாசிரியர் நேர் சிந்தனையுடனும், நியாயமாகவும், நளினமாகவும், சிறப்பாகவும், சீராகவும் வெற்றிக்கலையின் ரகசியத்தை வெளியிடும் தன் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

(வெற்றிக்கலை நூல் முன்னுரையில்)

***

திரு இராம.கோபாலன் இந்து முன்னணித் தலைவர்

பாரத நாட்டின் ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை.இதன் காரணமாக தேசீயத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம். திரு.நாகராஜனின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(அறிவியல் வியக்கும் ஆன்மீக ரகசியம் நூல் வாழ்த்துரையில்)

****

 chicago1

This picture was taken by my eldest brother S SRINIVASAN in Chicago where Swami Vivekananda addressed the World Parliament of Religions.

எழுத்தாளர் திரு அசோகமித்திரன்

பிரமிப்புஎன்ற தலைப்பில்..

திரு நாகராஜன் அவர்கள் எழுதியஆன்மீக ரகசியங்கள்என்ற நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்குப் பிரமிப்பு தான் முதலில் ஏற்பட்டது. ஆசிரியர் தான் எவ்வளவு விஷயங்களை அறிந்து அவற்றைத் தனதாக்கி இருக்கிறார்! ஒரு பெரிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விடுவது எளிது. ஆனால் அதைத் தன் அனுபவபூர்வமாக உணர்ந்து இன்னொருவருக்குக் கூறுவது மிகுந்த, பயிற்சி, சிந்தனை, சிரத்தை இருந்தால் தான் சாத்தியம். நாகராஜனின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏராளமான விஷயங்கள் இதைக் காட்டுகின்றன.

 

நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(ஆன்மீக ரகசியங்கள் நூல் முன்னுரையில்)

***

 

தமிழறிஞரும் முன்னாள் டி..ஜியுமான திரு சு. ஸ்ரீபால் அவர்கள்

அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். எனது பாராட்டுதல்கள்.

(விந்தை மனிதர்கள் நூல் முன்னுரையில்)

***

 

பிரபல விஞ்ஞானியும் DRDOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான அறிஞர் திரு K.G.நாராயணன் அவர்கள்

ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

(அறிவியல் துளிகள் நூல் முன்னுரையில்)

****

 

பிரபல விஞ்ஞானியும் ASIEOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான திரு V தேசிகன் அவர்கள்

விண்வெளியில் மனித சாதனைகள்நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய அனைத்தையும் கலந்து தரும் ஒன்று.

 

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேறுவதற்கான ஆர்வமூட்டும் சாத்தியக் கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம். இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூடத் தருகிறது.

 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால்  குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது.

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

(விண்வெளியில் மனித சாதனைகள் நூல் முன்னுரையில்)

***

 

Professor Benjamin LE BEAU    (Paris) 

If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. 

 In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

(‘BREAKTHROUGH TO SUCCESS’ ஆங்கில நூலின் முன்னுரையில்)

****

அபஸ்வரம் திரு.ராம்ஜி

திரு.நாகராஜன் எழுதிய அதிரடி மன்னன் ஜாக்கிசான் என்ற நூலைப் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த ஆராய்ச்சியுடனும் கடின உழைப்புடனும்  இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.இதன் ஆசிரியருக்கு எனது பாராட்டுதல்கள்

(அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூல் முன்னுரையில்)

*********

 

டாக்டர் திருமதி கமலி ஸ்ரீபால் (கோகுலம் கதிர் இதழ் ஆசிரியர்)

படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நூல்.ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். இறைவன் அருளால் திரு ச.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

(திறன் கூட்டும் தியானம் நூல் முன்னுரையில்)

*******

 

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

விநாயகா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் இந்த நூலில் திரு நாகராஜனின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும் தட்டுகளை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றன.அவருக்குப் பாராட்டுக்கள்.பாடத் திட்டத்திற்கும் ஏற்ற நூல் இது.

(பறக்கும் தட்டுகளும் அயல் கிரகவாசிகளும் நூல் முன்னுரையில்)

***********

 

தமிழறிஞரும் இந்திய இயல் ஆராய்ச்சியாளருமான திரு ச.சுவாமிநாதன்

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

சம்ஸ்கிருதச் செல்வம் நூல் (சுபாஷிதங்கள் தொகுப்பு) முதல் பாகம் முன்னுரையில்

***

திருமதி  மஞ்சுளா ரமேஷ் (ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்)

நமது ஆன்மீகத்தில் எத்தனை விஞ்ஞானமும் அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும் தான் ஏற்படுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச.நாகராஜன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   எங்களுடைய இன்னொரு பத்திரிகையானஶ்ரீ ஜோசியம்பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

    எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பணியாற்று வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மாநூல் முன்னுரையில்

***

 

திருவள்ளூர் N.C.ஶ்ரீதரன், MANAGEMENT CONSULTANT மற்றும் கல்வியாளர்

திரு. நாகராஜன் அவர்களின்சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

   இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் முன்னுரையில்

***

 

தற்போது குடும்பத்துடன் சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இவரது மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

*************************

swami_48@yahoo.com