மார்ச் 2021 ச.நாகராஜன் கட்டுரைகள் (Post.9450)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9450

Date uploaded in London – –  –3 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மார்ச் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

March

1-3-21    9322   பிப்ரவரி 2021 ச.நாகராஜன் கட்டுரைகள்

2-3-21    9328   இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தி மகிழ்ச்சி பொங்க எளிய  

            வாஸ்து வழிகள்  – 1 ஞானமயம் 1-3-21 உரை

3-3-21    9332    இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தி மகிழ்ச்சி பொங்க எளிய  

            வாஸ்து வழிகள்  – 2 ஞானமயம் 1-3-21 உரை

4-3-21    9337    மௌனம் சர்வார்த்த சாதனம்! (சிருங்கேரி ஆசார்யாள் உரை)

5-3-21    9342    நடந்தவை தான் நம்புங்கள் – 10 (தாடி நீளம் அறிவு, காலைப்பார்    

               பேரைச் சொல்லு, முகம் கழுவ ஒரு டாலர், குதிரையும்

                 கழுதையும் -டூமாஸ்)

6-3-21    9345   கிடைத்தற்கரிய பஞ்ச ‘ஜகாரம்’ நல்ல வாழ்க்கைக்கு வழி!

7-3-21    9349   ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல நல்ல நல்ல நல்ல பதிகம்!

8-3-21    9354   யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை!

9-3-21    9358    திருவாதிரை நட்சத்திரத்தின் பெருமை என்ன? ஞானமயம் 8-3-21

            உரை

10-3-21  9364   மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி

11-3-21  9367   சமையல் எரிவாயு வேண்டாம்; ராக்கெட் ஸ்டவ் போதும் !

            (கோகுலம் கதிர் மார்ச் 21 கட்டுரை)

12-3-21  9371   நடந்தவை தான் நம்புங்கள் – 11 ரூஸ்வெல்ட், சர்ச்சில் கிளி,

            கரைசலில் காசு கரையுமா?

13-3-21  9375   அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் உருவாக்கிய பைபிள்!

14-3-21  9378   உதவிக் குறிப்புகள் – 18 (271 – 3̀15) The Art of Conversation

15-3-21  9382    புராணத் துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 5 (15. சந்தோஷம்

             பொறுமை பற்றிய விளக்கம், 16.தமிழில் பாடுக 17. 9 தத்துவம்)

16-3-21  9386  இசையின் மஹிமை – 1 (15-3-21 ஞான மயம் உரை)

17-3-21  9391  மஹாத்மா என்பவர் யார்? (சுபாஷிதம்)

18-3-21 9394   நோய் தீரும்; இன்பம் சேரும், வினை தேயும் – திண்ணம்   

            திண்ணமே, ஞானசம்பந்தர் அருள் வாக்கு!

19-3-21 9398   கர்மா என்றால் என்ன? புத்தரின் விளக்கம்!

20-3-21 9401   நடந்தவை தான் நம்புங்கள் – 12 (கடவுளும்

           காமன்வெல்த்தும், பாடரேவ்ஸ்கி, வருத்தப்பட்டது உண்மை தான்,

           யார் போக்கிரி?!

21-3-21 9404  கீதையின் மஹிமை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!

22-3-21 9409  கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க! – வள்ளுவரின் கட்டளைகள்!

23-3-21 9413   இசையின் மஹிமை – 2 ( ஞானமயம் உரை 22-3-21)

24-3-21 9416    தசரத் மஞ்சி – மலையை நகர்த்திய மா மனிதன்! 

25-3-21  9419  மாறுகின்ற மனம் பற்றிய ரகசியம் – யோக வாசிஷ்ட கதை!

26-3-21  9422    அருமையாக இந்த நாள் கழிந்ததா?

27-3-21  9426    நடந்தவை தான் நம்புங்கள்! – 13 (மூன்று அம்மாக்கள்)

28-3-21  9429   பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா – 1

29-3-21  9434   பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா – 2

30-3-21  9436  ஹிந்து மஹிமை – 1 (ஞானமயம் 29-3-2021 உரை)

31-3-21  9441  ராகங்களும் சிவபிரானும், ராகங்களும் மலர்களும்!

 tags-  மார்ச் 2021 , ச.நாகராஜன், கட்டுரைகள்,

பிப்ரவரி 2021 வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post No.9322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9322

Date uploaded in London – –  1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

February

1-2-21    9211   உதவிக் குறிப்புகள் – 16 (211 – 230)

2-2-21    9215   மஹரிஷி தமனர், சதானந்தர், க்ரது

3-2-21    9219    கடவுளைக் காட்டு, நம்புகிறேன் என்போருக்கு இதோ, பதில்!

4-2-21    9224    தெலங்கானாவில் கோவில், மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!    

            (Truth vol 88 no 26 15-1-21)

5-2-21    9229    ஜனவரி 2021இல் ச.நாகராஜன் எழுதிய கட்டுரைகள்!

6-2-21    9235  நடந்தவை தான் நம்புங்கள் – 6

7-2-21    9237   உதவிக் குறிப்புகள் (231-250)!

8-2-21    9241   ஹிந்துக்களே, விழித்தெழுவீர்களா?

9-2-21    9246    மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!          

10-2-21  9248   நடந்தவை தான் நம்புங்கள் – 7

11-2-21  9251   திரைப்படங்களில் பாரதியார் – 2 (ஞானமயம் 8-2-21 உரை)

12-2-21  9253   புனர் ஜென்மம் உண்டா – 1 – ஞானமயம் 8-2-21 உரை         

13-2-21  9257  புனர் ஜென்மம் உண்டா -2 – ஞானமயம் 8-2-21 உரை         

14-2-21  9261   கொரானா- சில அடிப்படை உண்மைகள் (ஹெல்த்கேர் பிப்ரவரி

            2021 கட்டுரை)

15-2-21  9265    ரொபாட் குக்கர், மாஜிக் மிக்ஸி, நவீன சமையலறை சாதனங்கள்- 

             கோகுலம் கதிர் பிப்ரவரி 21 கட்டுரை

16-2-21  9270  ஜோதிடம் உண்மையா – 1 (15-2-21 ஞான மயம் உரை)

17-2-21  9274  ஜோதிடம் உண்மையா – 2 (15-2-21 ஞான மயம் உரை)

18-2-21 9278   பாகவத அபசாரம் கூடாது!

19-2-21 9281   உதவிக் குறிப்புகள் – 18 (251 – 270)

20-2-21  9284  யோகவாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!  

21-2-21 9287   மஹரிஷி கபிலர் – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

22-2-21 9293  புராணத்துளிகள் 3- அத் 4 (10- மனிதர்கள், தேவர்கள் கால அளவு,  

            11- பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள் 12- வியாஸர் எந்த  

            இடத்தில் தவம் புரிந்தார்?)

23-2-21  9298  ஜோதிடம் உண்மையா – 2 (சுவையான சம்பவங்கள் – ஞானமயம்  

            உரை 22-2-21)

24-2-21  9302  நடந்தவை தான் நம்புங்கள்! – 8 (சந்தைக்குப் போன சாக்ரடீஸ்,

            உண்மையான காதலன், அட எருமையே!)

25-2-21  9306  நமது தேசத்தின் அடையாளங்கள்!

26-2-21  9309  நடந்தவை தான் நம்புங்கள்! – 9 (ASP Ayyar)

27-2-21  9314 ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்!

28-2-21  9318  ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

***

 tags- பிப்ரவரி 2021, ச.நாகராஜன், கட்டுரைகள், 

ஜனவரி 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் INDEX(9229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9229

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

January

1-1-21     9094   மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணரின் பதில்!

2-1-21     9096   ஹிந்துக்களின் எண்ணிக்கை – 5

3-1-21    9100    டிசம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்!

4-1-21     9103    Truth Magazine – ஒரு அறிமுகம் 4-1-21 ஞானமயம் உரை

5-1-21     9105    சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சுபாஷிதம்)

6-1-21     9111  மஹரிஷி சூளி!

7-1-21    9115   காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபாலதாஸர்!

8-1-21    9119   புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத்1 (1-யோக ரகசியம்,2 –

            பரமபதம்)

9-1-21    9123    புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத் 2 (3- முக்தி அடைய

            உள்ள மூன்று யோகங்கள்)

10-1-21  9125  விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ரிகார்ட் செய்தது யார்? (Truth vol 88-2)

11-1-21  9130  பெற்றோருக்கு பணிவிடை செய் – யமனின் உபதேசம்!

12-1-21  9133  ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவின் திரண்ட வடிவமே!

13-1-21  9137  ‘ய’ என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? (11-1-21 ஞானமயம்

              உரை)

14-1-21  9141   சூரியனைப் போற்றித் துதிப்போம்! புகழும் வளமும் பெறுவோம்!

15-1-21   9145   நடந்தவை தான் நம்புங்கள் – 3 (2-8992 3-12-20200

16-1-21    9148  நல்ல ஒரு ஆங்கில இதழ் இனி வராதா? (Kalyana kalpataru)

17-1-21  9152  என்னே விதியின் கொடுமை! (சுபாஷிதம்)

18-1-21 9157   காயத்ரி மந்திரத்தின் பத்து பகுதிகள்; 24 எழுத்துக்களின் அக்ஷர 

            தேவதைகள்

18-1-21 9160   பா.கண்ணன் அறிமுக உரை – 17-1-21 உரை

19-1-21 9162  அறிவியல் வியக்கும் ஸ்ரீ சக்ர ரகசியம் (ஞானமயம் 18-1-21 உரை)

20-1-21  9166  புராணத்துளிகள் 3- அத் 3 (7-எள்,தர்ப்பையின் முக்கியத்துவம்  

          ஏன்; 8- பரீக்ஷித் பெயர் 9- திருதராஷ்டிரனுக்கு விதுரன் அறிவுரை)

21-1-21 9170  ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

22-1-21 9173 சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

23-1-21  9177 உதவிக் குறிப்புகள் – 15 (191-210)

24-1-21  9180  அன்னமும் கொக்கும் வெள்ளை நிறம்! இரண்டிற்கும் என்ன

            வித்தியாசம் (சுபாஷிதம்)

25-1-21  9184  நடந்தவை தான் நம்புங்கள்! – 4

26-1-21  9189  ஒளிவட்ட உண்மைகள்! (ஞானமயம் 25-1-21 உரை)

27-1-21  9192 தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 1 (ஞானமயம்   

           தைப்பூசம் ஆறு நாள் விழாவில் 24-1-21 அன்று பேசிய உரை!)

28-1-21  9195   தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 2

29-1-21  9199  தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 3

30-1-21 9204  ஹிந்துக்களின் எண்ணிக்கை -6 (Truth Vol 88 No 20; 4-12-20)

31-1-21 9207  நடந்தவை தான் நம்புங்கள் – 5

***

 TAGS- ச.நாகராஜன் , ஜனவரி 2021, கட்டுரைகள்

நவம்பர் 2020 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post 9003)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9003

Date uploaded in London – – 6 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நவம்பர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.

November 2020

1-11-20     8877   அயோத்யா சில உண்மைகள் – 2   

2-11-20     8879   அயோத்யா சில உண்மைகள் – 3

3-11-20     8883    அயோத்யா சில உண்மைகள் – 4   

4-11-20     8887    கிறிஸ்தவ பிரசாரத்துக்கு எதிர் பிரசாரம் – ஞானமயம்

              2-11-20 உரை

5-11-20     8891  October 2020 SNR Article Index

6-11-20     8895   கருவூர்ச் சித்தர் வரலாறு – கொங்குமண்டல சதகம் பாடல் 34

7-11-20    8889   மந்திர மலை போன்ற பாவங்கள் போக வழி உண்டா?

8-11-20    8902   ஆயுளைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

9-11-20    8905    மஹரிஷி அக்னிபர்! ஐந்து கந்தர்வ மங்கையரைக் கவர்ந்தவர்!!

10-11-20  8910  புராணங்களில் காலப் பயணம் (ஞானமயம் 9-11-20 உரை)

11-11-20  8915   மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1 (1-125)

12-11-20  8920  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2 (126-214)

13-11-20  8923  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3 (215-277)

14-11-20  8928  உடல் ஒரு மரம் – அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே

             கோயில் அப்பரின் சிந்தனை!!

15-11-20   8931   பதார்த்த குண சிந்தாமணி – நவம்பர் 2020 ஹெல்த்கேர் கட்டுரை

16-11-20  8935  விமானங்களை எப்படி அமைப்பது? வைமானிக சாஸ்திரம்

               விளக்குகிறது – 15-11-20 தமிழ் முழக்கம் உரை

17-11-20  8938  சுபாஷித நூல்களின் பட்டியல் – 2 (25873 + பாடல்கள்)

18-11-20 8943  மஹரிஷி சண்ட கௌசிகர் – ஜரா சந்தன் வரலாறு

19-11-20 8947 வரவேற்கத் தக்க ஒர் புதிய அலை உருவாகிறது – வாழ்க ஹிந்து 

              மதம்! மீண்டும் வருக தாய் மதத்திற்கு!

20-11-20  8950   நித்தம் நீலக்குடி அரனை நினை, சிவ கதி பெற, அப்பரின்

             சொந்த அனுபவம்!

21-11-20 8954  கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்! (கொங்கு மண்டல சதகம்

            பாடல் 40)

22-11-20 8957 அழகு என்பது என்ன?

23-11-20  8959  அறிவியல் வியக்கும் பாபா

24-11-20  8962  எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (22-11-20 தமிழ் முழக்கம் ஒளிபரப்பு உரை)

25-11-20  8966  ஹிந்து கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!

26-11-20  8969  மஹரிஷி சமீகர் – மஹாபாரதம் சந்தேகம் தீர்த்த பக்ஷிகள்!

27-11-20  8972  உதவிக் குறிப்புகள் – 14 (171-190)

28-11-20  8975  பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 1

29-11-20  8979 பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 2

30-11-20 8982  இலக்கியத்தில் கார்த்திகை தீபம்! 29-11-20 தமிழ் முழக்கம் 

            ஒளிபரப்பில் ஆற்றிய உரை

tags — கட்டுரைகள்,  நவம்பர் 2020 , ச.நாகராஜன்

***

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்! (Post No.5684)

 

Written by S Nagarajan

Date: 21 November 2018

GMT Time uploaded in London –7-48 am
Post No. 5684

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்!

நண்பர்களுக்கு நன்றி! எனது புத்தகங்கள் பற்றி அவ்வப்பொழுது ஆர்வத்துடன் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு கோடி நன்றிகள்!! இவை பற்றிய விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.

இவற்றில் 52 நூல்களை டிஜிடல் வடிவிலும் 18 நூல்களை அச்சுப்பதிப்பாகவும் உடனே பெற முடியும். ஏனைய நூல்களில் சில தயாரிப்பில் உள்ளன; மற்றையவை பற்றி, இனி தான் வெளியிடப்படும் முயற்சியையே ஆரம்பிக்க வேண்டும்.

 

தமிழகத்தில், பதிப்புத் தொழிலில் இப்போது ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தகுந்த பதிப்பாளர்கள் கிடைத்தால் வெளியிடப்பட வேண்டிய நூல்களை விரைவில் வெளியிட முடியும்.

இங்கு 108 நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 3000 கட்டுரைகள் உள்ளன. சுமார் பதினைந்து லட்சம் சொற்களைக் கொண்ட இந்த நூல்களில் ஆன்மீகம், யந்திரங்கள், மந்திரங்களின் மகிமை, ஹிந்து மதச் சிறப்பு, புத்த மதச் சிறப்பு, அறிவியல், அறிவியல் கேள்வி- பதில்கள், அறிவியல் அறிஞர்கள், விண்வெளியில் மனித சாதனைகள், சுய முன்னேற்றம், அதீத உளவியல், திரைப்பட நடிகர், நடிகைகள், ஆங்கில, தமிழ் திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், உலக நாடுகள், உலகின் முக்கிய இடங்கள், கணிதப் புதிர்கள், ஜோதிடம், ஜோதிட அறிஞர்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், பெண்கள் முன்னேற்றம், பறக்கும் தட்டுகள், இந்தியாவின் தேசீயத் தலைவர்கள், உலகத் தலைவர்கள், சின்னத்திரை சீரியல்கள், விலங்கு உலகம், ஆங்கில விந்தைகள், தமிழ் விந்தைகள், சம்ஸ்கிருத விந்தைகள், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள், சிறந்த நூல்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத இலக்கியம், பெங் சுயி, வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், ஆரோக்கியம் பெறுவதற்கான வழிகள்,சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் , வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், சரித்திர நாவல்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. சுமார் 18 தின, மாத, வார இதழ்களிலும், http://www.nilacharal.com, http://www.tamilandvedas.com, http://www.ezinearticles.com உள்ளிட்ட இணையதளங்களிலும் கடந்த 48 (1971-2018) ஆண்டுகளில் வெளியானவை இவற்றில் அடங்கும்.

*

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை http://www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

1) Breakthrough to Success

தமிழ் நூல்கள்

சுய முன்னேற்றம்

2) வெற்றிக்கலை

ஜோதிடம்

3) ஜோதிடம் உண்மையா?

4) ஜோதிட மேதைகளின் வரலாறு!

5) நவகிரகங்கள்

6) நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

7) திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

8) அதிரடி மன்னன் ஜாக்கிசான்

9) ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

10) உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

11) அறிவுக்கும் அப்பால்

12) பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

13) அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

14) பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

15) விந்தை மனிதர்கள்

16) மாயாலோகம்! (பாகம் 1)

17) மாயாலோகம்! (பாகம் 2)

18) மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

19) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

20) டயானாவின் கதை

சரித்திர நாவல்

21) நாக நங்கை

22) விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

23) ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

24) விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

25) உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

26) சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

27) அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

28) திறன் கூட்டும் தியானம்

29) ஆன்மீக ரகசியங்கள்!

30) அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

31) அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

32) சிறுவர் புராணக் கதைகள்

33) புராணத் துளிகள்!

34) விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

 

அறிவியல்

35) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

36) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

37) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

38) அறிவியல் துளிகள்! (பாகம் 1)

39) அறிவியல் துளிகள்! (பாகம் 2)

40) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

41) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

42) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

43) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

44) ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

45) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

46) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

47) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

48) வருவார் காந்திஜி!

புதிர்கள்

49) மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

50) ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

51) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

52) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

*

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Vinayaka pathippakam

old no 29 new no 71

muthu street

royapetta chennai – 14

Contact : Mr Swaminathan  9941352785

9380712132

அச்சுப் பதிப்பு நூல்கள்

வெற்றிக்கலை

நவகிரகங்கள்

நாக நங்கை

விஜயதீபம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

உலகின் அதிசய இடங்கள

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

ஆங்கிலம் அறிவோமா?

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

விஞ்ஞானப் புதுமைகள் 100

சிறுவர் புராணக் கதைகள்

கீழ்க்கண்ட ஒரு நூலை அச்சுப் பதிப்பாக, மணிவாசகர் பதிப்பகம் , சென்னை வெளியிட்டுள்ளது:

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

*

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

 

அறிவியல்

 1. அறிவியல் துளிகள்! (பாகம் 3)
 2. அறிவியல் துளிகள்! (பாகம் 4)
 3. அறிவியல் துளிகள்! (பாகம் 5)
 4. அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

 1. ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்
 2. மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

 1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
 2. புராணத் துளிகள் பாகம் 2
 3. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

 1. ராமாயண வழிகாட்டி பாகம் 1
 2. ஸ்வர்ண லோகம் பாகம் 1
 3. பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

 1. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

 1. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

67.இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 41 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

 1. அறிவியல் துளிகள்! (பாகம் 7)
 2. அறிவியல் துளிகள்! (பாகம் 8)
 1. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

 1. தமிழ் என்னும் விந்தை பாகம் 1
 1. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

73) வெற்றிக்கலை – இரண்டாம் பாகம்

74) அறிவியல் துளிகள்! (பாகம் 9)

75) 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸூ யுன்! (Empty Cloud தமிழாக்கம்)

76) அறிவியல் துளிகள்! (பாகம் 10)

77) அறிவியல் துளிகள்! (பாகம் 11)

78) அறிவியல் துளிகள்! (பாகம் 12)

79) அறிவியல் துளிகள்! (பாகம் 13)

80) அறிவியல் துளிகள்! (பாகம் 14)

81) அறிவியல் துளிகள்! (பாகம் 15)

82) அறிவியல் துளிகள்! (பாகம் 16)

83) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் – பாகம் 5

84) மாக்ஸ்முல்லர் மர்மம்

85) இது தான் இந்தியா!

86) கம்பன் இன் கவித் திரட்டு மற்றும் கட்டுரைகள்

87) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 1

88) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 2

89) பாரதி போற்றி ஆயிரம்

90) அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4

91) ஸ்வர்ண லோகம் (புத்த மதக் கட்டுரைகள்) (பாகம் 2)

92) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 1)

93) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 2)

94) கொங்கு மண்டல சதகம் – வரலாற்றுக் கட்டுரைகள்

95) ஹிந்து ராஷ்டிரம் தேவையா?

96) சம்ஸ்கிருதச் செல்வம் (பாகம் 3)

97) மஹாபாரத மர்மங்கள்

98) கண்ணதாசனின் காலம் வென்ற படைப்புகள்

99) மஹரிஷி ரமணர்

100) வாஸ்து சாஸ்திரமும் பெங் சுயி நன்மைகளும்

101) அதிசய கவிஞர் பாரதியார்

102) மதம் மாற்றும் பாதிரிகளும் இங்கர்சாலும்

103) வள்ளுவரிடம் வாழ்க்கை இரகசியங்களை கேட்போம்

104) உலகின் ஒப்பற்ற மேதைகள் – லிங்கன், நெப்போலியன், வால்டேர், மொஜார்ட்

105) அதீத உளவியல் ஆற்றல் மர்மங்கள்!

106) அருமையான ஹிந்தி, ஆங்கில, தமிழ் திரைப்படங்கள்

107) கிருஷ்ண தியானம் ஏன்? மேலை நாட்டு அறிஞர் வியக்கும் ஹிந்து மதம்

108) அதிசய மஹாபுருஷர்கள் வாழ்க்கையில் .. ..

—-  SUBHAM  —

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

gold ganesh

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-13 am

 

This is an interview given by my brother S NAGARAJAN who contributes regularly to our blogs.

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

.நாகராஜன்அறிமுகம்

 

திரு.நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தையார் திரு வெ.சந்தானம் சுதந்திரப் போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்.மணிக்கொடி திரு பி.எஸ்.ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். சிறந்த பத்திரிக்கையாளராக விளங்கிய இவர் மதுரை தினமணிப் பதிப்பின் பொறுப்பாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்.

 

தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்த திரு ச.நாகராஜன் இது வரை சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், மதிப்புரைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

விண்வெளி சாதனைகள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகள்,ஜோதிடம், வானியல்,வரலாறு, இலக்கியம்,சுற்றுலா இடங்கள்,புலன் கடந்த உணர்வியல்,கடல் வளம், மிருக இயல்,இசை, மந்திரம்,யந்திரம், சாதனையாளர்கள், உடல் ஆரோக்கியம், யோகா, வாஸ்து,ஹாலிவுட் சினிமா, தமிழ் திரை இசைப்  பாடல்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

 

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது நாடகப் படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன.ரேடியோ உரைகளும் மதுரை மற்றும் சென்னை வானொலி மூலமாக ஒலிபரப்பாகி உள்ளன.200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு உரைகளை சென்னை வானொலிக்காக இவர் படைத்துள்ளார்.ரெயின்போ வானொலிக்காக இல்லத்திலிருந்தே இணைப்பைப் பெற்று வானியலில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் அவை பற்றிய செய்திகளைத் தந்ததோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

 

இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜயா டி.வியில் சுமார் 50 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். திருப்பாவைக்கு 30 நாட்கள் விஞ்ஞான ரீதியில் இவர் அளித்த விளக்கங்கள் நேயர்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தன.ஜயா தொலைக்காட்சி இவரை காலைமலர் நிகழ்ச்சியில் பேட்டி கண்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

 

வின் டி.வியில் நேரடி ஒளிபரப்பில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் பற்றி அறிவியல் ரீதியாகக் கருத்துக்களை அளித்துள்ளார்.வசந்த் தொலைக்காட்சியில் ஹிக்ஸ்போஸன் பற்றிய அறிவியல் விளக்கம் தந்துள்ளார்.

 

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் உள்ளிட்ட புதிய உத்திகள் பற்றி உரைகள் ஆற்றியும், பயிற்சி முகாம் நடத்தியும் வந்துள்ளார். பல பொறியியல், கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்காக இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் அவர்களை மேம்பட வழி வகுத்தவை.

 

வாகன கட்டுமானத் துறையில் தென்னகத்தின் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியுள்ளார்.

 

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

 

இவரது படைப்புகள் தினமணி, தினமணி கதிர், தினபூமி, ஆனந்தவிகடன், பாக்யா,கலைமகள், மஞ்சரி, மங்கையர் மலர்,கோகுலம் கதிர், இதயம் பேசுகிறது, ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை,ஜெம்மாலஜியும் ஜோதிடமும், ஆதிபிரான், ஹெல்த்கேர், குவைத் தமிழ் அமுதம்,THE HINDU உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.

 

இவரது அறிவியல் தொடரானவிண்வெளியில் மனித சாதனைகள்’  மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது. இந்தியப் பத்திரிக்கைகளிலேயே விண்வெளி சாதனைகளைப் பற்றிய மிக நீண்ட தொடர் இவருடையதே என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

இவரதுமாயாலோகம்தொடர் 78 வாரங்கள் பாக்யாவில் தொடர்ந்து வெளி வந்தது. தற்போது அறிவியல் துளிகள் 210 வாரங்களைக் கடந்து பாக்யா இதழில் தொடர்கிறது.

இவரது படைப்புகள் வாரந்தோறும் http://www.nilacharal.com மின் இதழில் வெளிவருகிறது.

இவரது சகோதரர் திரு ச.சுவாமிநாதனின் swamiindology.blogspot.com மற்றும் tamilandvedas.blogspot.com ஆகிய தளங்களில் இவர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

 s nagarajan

Picture of S Nagarajan

இதுவரை இவர் படைப்புகளானவெற்றிக்கலை, அறிவியல் வியக்கும் ஆன்மீகம், நவகிரகங்கள்,அதிரடிமன்னன் ஜாக்கிசான்.அறிவுக்கும் அப்பால், பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும், அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயிபாபா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலம் அறிவோமா, விந்தை மனிதர்கள், சிறுவர்க்கான புராணக் கதைகள், உலகின் அதிசய இடங்கள், நாகநங்கை (சரித்திர நாவல்), விஜயதீபம் (சரித்திர நாவல்), வியப்பூட்டும் விஞ்ஞான புதுமைகள் 100, அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள், பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும், திறன் கூட்டும் தியானம் விண்வெளியில் மனித சாதனைகள், விலங்கியல் உலகம், ஆஹா! அப்படியா (விஞ்ஞான கேள்வி பதில்கள்), ஆன்மீக ரகசியங்கள் உள்ளிட்ட 23 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

 

இவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள் உலகின் தலை சிறந்த வலைத்தளமான http://www.ezinearticles.com-இல் வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளை 100184 வாசகர்கள் படித்துப் பயன்பெற்றுள்ளனர், இந்தக் கட்டுரைகளை பல நாடுகளிலும் உள்ள 1614 மின்னனு பத்திரிக்கைகள் விரும்பி மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரது ஆங்கிலப் புத்தகமான Breakthrough to Success என்ற வாழ்வியல் நூலை லண்டனிலிருந்து நிலா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நிலா பப்ளிஷர்ஸ் இவரது 52 தமிழ் நூல்களை மின்னணு நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சுமார் 10000க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச் சொற்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இவரது மொழியாக்கத் தமிழ்ச் சேவையை விரும்பிப் பெறுகின்றன.

இவர் பெற்ற பாராட்டுரைகளில் சில:

 

இயக்குநர் திரு கே.பாக்யராஜ்

வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூலாசிரியர் நேர் சிந்தனையுடனும், நியாயமாகவும், நளினமாகவும், சிறப்பாகவும், சீராகவும் வெற்றிக்கலையின் ரகசியத்தை வெளியிடும் தன் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

(வெற்றிக்கலை நூல் முன்னுரையில்)

***

திரு இராம.கோபாலன் இந்து முன்னணித் தலைவர்

பாரத நாட்டின் ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை.இதன் காரணமாக தேசீயத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம். திரு.நாகராஜனின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(அறிவியல் வியக்கும் ஆன்மீக ரகசியம் நூல் வாழ்த்துரையில்)

****

 chicago1

This picture was taken by my eldest brother S SRINIVASAN in Chicago where Swami Vivekananda addressed the World Parliament of Religions.

எழுத்தாளர் திரு அசோகமித்திரன்

பிரமிப்புஎன்ற தலைப்பில்..

திரு நாகராஜன் அவர்கள் எழுதியஆன்மீக ரகசியங்கள்என்ற நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்குப் பிரமிப்பு தான் முதலில் ஏற்பட்டது. ஆசிரியர் தான் எவ்வளவு விஷயங்களை அறிந்து அவற்றைத் தனதாக்கி இருக்கிறார்! ஒரு பெரிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விடுவது எளிது. ஆனால் அதைத் தன் அனுபவபூர்வமாக உணர்ந்து இன்னொருவருக்குக் கூறுவது மிகுந்த, பயிற்சி, சிந்தனை, சிரத்தை இருந்தால் தான் சாத்தியம். நாகராஜனின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏராளமான விஷயங்கள் இதைக் காட்டுகின்றன.

 

நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(ஆன்மீக ரகசியங்கள் நூல் முன்னுரையில்)

***

 

தமிழறிஞரும் முன்னாள் டி..ஜியுமான திரு சு. ஸ்ரீபால் அவர்கள்

அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். எனது பாராட்டுதல்கள்.

(விந்தை மனிதர்கள் நூல் முன்னுரையில்)

***

 

பிரபல விஞ்ஞானியும் DRDOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான அறிஞர் திரு K.G.நாராயணன் அவர்கள்

ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

(அறிவியல் துளிகள் நூல் முன்னுரையில்)

****

 

பிரபல விஞ்ஞானியும் ASIEOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான திரு V தேசிகன் அவர்கள்

விண்வெளியில் மனித சாதனைகள்நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய அனைத்தையும் கலந்து தரும் ஒன்று.

 

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேறுவதற்கான ஆர்வமூட்டும் சாத்தியக் கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம். இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூடத் தருகிறது.

 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால்  குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது.

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

(விண்வெளியில் மனித சாதனைகள் நூல் முன்னுரையில்)

***

 

Professor Benjamin LE BEAU    (Paris) 

If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. 

 In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

(‘BREAKTHROUGH TO SUCCESS’ ஆங்கில நூலின் முன்னுரையில்)

****

அபஸ்வரம் திரு.ராம்ஜி

திரு.நாகராஜன் எழுதிய அதிரடி மன்னன் ஜாக்கிசான் என்ற நூலைப் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த ஆராய்ச்சியுடனும் கடின உழைப்புடனும்  இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.இதன் ஆசிரியருக்கு எனது பாராட்டுதல்கள்

(அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூல் முன்னுரையில்)

*********

 

டாக்டர் திருமதி கமலி ஸ்ரீபால் (கோகுலம் கதிர் இதழ் ஆசிரியர்)

படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நூல்.ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். இறைவன் அருளால் திரு ச.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

(திறன் கூட்டும் தியானம் நூல் முன்னுரையில்)

*******

 

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

விநாயகா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் இந்த நூலில் திரு நாகராஜனின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும் தட்டுகளை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றன.அவருக்குப் பாராட்டுக்கள்.பாடத் திட்டத்திற்கும் ஏற்ற நூல் இது.

(பறக்கும் தட்டுகளும் அயல் கிரகவாசிகளும் நூல் முன்னுரையில்)

***********

 

தமிழறிஞரும் இந்திய இயல் ஆராய்ச்சியாளருமான திரு ச.சுவாமிநாதன்

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

சம்ஸ்கிருதச் செல்வம் நூல் (சுபாஷிதங்கள் தொகுப்பு) முதல் பாகம் முன்னுரையில்

***

திருமதி  மஞ்சுளா ரமேஷ் (ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்)

நமது ஆன்மீகத்தில் எத்தனை விஞ்ஞானமும் அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும் தான் ஏற்படுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச.நாகராஜன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   எங்களுடைய இன்னொரு பத்திரிகையானஶ்ரீ ஜோசியம்பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

    எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பணியாற்று வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மாநூல் முன்னுரையில்

***

 

திருவள்ளூர் N.C.ஶ்ரீதரன், MANAGEMENT CONSULTANT மற்றும் கல்வியாளர்

திரு. நாகராஜன் அவர்களின்சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

   இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் முன்னுரையில்

***

 

தற்போது குடும்பத்துடன் சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இவரது மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

*************************

swami_48@yahoo.com